கடவுள் Vs அறிவியல்
ஒரு நாத்திக ஆசிரியர் அறிவியல் ஏன் கடவுளை ஏற்கமறுக்கிறது என்பதை பற்றி விளக்கமளித்தார். ஒரு மாணவனை எழுப்பி கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்.
ஆசிரியர் : நீ கடவுளை நம்புகிறாயா ?
மாணவர் : ஆம்
ஆசிரியர் : உனது கடவுள் நல்லவரா?
மாணவர் : ஆம்
ஆசிரியர் : உனது கடவுள் சக்தியுள்ளவரா?
மாணவர் : ஆம்
ஆசிரியர் : எனது அண்ணன் கடவுளை வணங்கியபோதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். கடவுள் அவரை காப்பாற்றவில்லை. பிறகு எப்படி கடவுள் நல்லவராக முடியும்?
மாணவர் : (பதிலேதும் பேசவில்லை)
ஆசிரியர் : உன்னால் விடையளிக்க முடியாது. சரி வேறொரு கேள்வி கேட்கிறேன் அதற்கு பதில் சொல். சாத்தான் நல்லவனா?
மாணவர் : இல்லை
ஆசிரியர் : சாத்தான் எங்கிருந்து வந்தான்?
மாணவர் : கடவுளின் படைப்பு
ஆசிரியர் : இவ்வுலகில் தீயசக்தி உள்ளதா?
மாணவர் : ஆம்
ஆசிரியர் : அந்த தீயசக்தியை படைத்ததும் உனது கடவுள் தானே?
மாணவர் : (பதிலேதும் பேசவில்லை)
ஆசிரியர் : இவ்வுலகத்தில் வியாதி, ஒழுக்கக்கேடு, பொறாமை, வெறுப்பு ஆகிய அனைத்தும் இருக்கத்தானே செய்கின்றன? இவை அனைத்தையும் உருவாக்கியது யார்?
மாணவர் : (பதிலேதும் பேசவில்லை)
ஆசிரியர் : அறிவியல் உன்னுடைய அறிவினைக் கொண்டு ஆராய்ந்து பார்க்கச் சொல்கிறது. சரி சொல் நீ கடவுளை பார்த்திருகிறாயா?
மாணவர் : இல்லை
ஆசிரியர் : கடவுளைப் பற்றி கேள்விபட்டிருக்கிறாயா?
மாணவர் : இல்லை
ஆசிரியர் : கடவுளை உணர்ந்திருக்கின்றாயா? ருசித்திருக்கின்றாயா? நுகர்ந்திருக்கின்றாயா? எதுவும் செய்திருக்கமாட்டாய். சொல் இன்னமும் நீ கடவுளை நம்புகிறாயா?
மாணவர் : ஆம்
ஆசிரியர் : அறிவியல் கூறுகிறது கடவுளை நீ அனுபவத்தால், சோதனையால், நிரூபிக்கத்தக்க நெறிமுறையால் உண்டு என்ரு கூறமுடியாது. ஆகவே கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை. இப்பொழுது என்ன சொல்வாய்?
மாணவர் : நான் என் நம்பிக்கையை மட்டுமே கொண்டிருக்கிறேன்
ஆசிரியர் : ஆம். நம்பிக்கை. இதைதான் அறிவியல் ஏற்றுக்கொள்வதில்லை.
மாணவர் : இப்பொழுது நான் சில கேள்விகளைக் கேட்கிறேன்… நீங்கள் பதில் சொல்கிறீர்களா…?
ஆசிரியர் : கேள்.
மாணவர் : வெப்பம் என்ற ஒரு விஷயம் இருக்கிறதா?
ஆசிரியர் : ஆம்
மாணவர் : குளிர் என்ற ஒரு விஷயம் இருக்கிறதா?
ஆசிரியர் : ஆம்
மாணவர் : இல்லை. குளிர் என்ற ஒரு விஷயம் இல்லை. வெப்பம் , அதிக வெப்பம் , சிறிதளவு வெப்பம் அல்லது வெப்பமேயில்லை என்பதே சரி. குளிர் என்ற ஒன்று கிடையவே கிடையாது. வெப்பம் பூஜ்யம் டிகிரீயை (Zero degree) தொடுமானால் வெப்பம் இல்லை (No heat) என்பதே பொருள். அது குளிர் அல்ல. குளிர் என்னும் சொல் வெப்பம் இல்லாததையே குறிக்கிறது.
ஆசிரியர் : (பதிலேதும் பேசவில்லை)
மாணவர் : குளிரை நம்மால் அளவிட முடியாது. வெப்பம் என்பது ஒரு சக்தி. ஆனால் குளிர் வெப்பத்தின் எதிர்மறை கிடையாது. குளிர் வெப்பம் இல்லாததை குறிக்கிறது அவ்வளவே.
ஆசிரியர் : (பதிலேதும் பேசவில்லை)
மாணவர் : இருட்டு, இரவு என்ற ஒன்று உண்டா?
ஆசிரியர் : ஆம்
மாணவர் : தவறு. இருட்டு என்பது வெளிச்சம் இல்லாததையே குறிக்கிறது. வெளிச்சம், அதிக வெளிச்சம், வெளிச்சமில்லை என்பதே உண்மை.இருட்டு என்பது உண்டு என்றால் உங்களால் அந்த இருட்டை மேலும் இருட்டாக்க முடியுமா?
ஆசிரியர் : என்ன சொல்ல வருகிறாய்?
மாணவர் : உங்களுடைய கடவுள் பற்றிய தத்துவம் தவறு.
ஆசிரியர் : தவறா? எப்படி ?
மாணவர் : அறிவியல் மின்சாரம் மற்றும் காந்த சக்தியை பயன்படுத்துகிறது. ஆனால் அதை பார்க்க முடியாது. அதை முழுவதுமாக அறிவியலால் இதுவரை புரிந்து கொள்ளவும் முடியவில்லை. மரணம் என்பது வாழ்வின் எதிர்மறை அல்ல. நமது வாழ்வு முடிவுற்றது என்பதையே குறிக்கிறது.
ஆசிரியர் : (பதிலேதும் பேசவில்லை)
மாணவர் : நீங்கள் உங்கள் மாணவர்களுக்கு குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற பரிணாமவியல் தத்துவத்தை நடத்துவீர்களா?
ஆசிரியர் : ஆம். நடத்துவேன்.
மாணவர் : பரினாமவியல் கோட்பாட்டை நீங்கள் உங்கள் கண்களால் கண்டதுண்டா?
ஆசிரியர் : இல்லை
மாணவர் : ஆக நீங்கள் சொன்னது போலவே அறிவியலால் பரிணாமவியல் கொள்கையை நிரூபிக்க முடியவில்லை. ஆனாலும் நீங்கல் அதை கற்றுக்கொடுக்கிறீர்கள். ஆக நீங்கள் அறிவியல் பாடம் எடுக்கவில்லை என்பது தானே உண்மை.
ஆசிரியர் : (பதிலேதும் பேசவில்லை)
மாணவர் : இந்த வகுப்பில் நமது ஆசிரியரின் மூளையை யாராவது பார்த்திருக்கிறீர்களா? அல்லது உணர்ந்திருக்கின்றீர்களா? ருசித்திருக்கின்றீர்களா? நுகர்ந்திருக்கின்றீர்களா? ஆக அறிவியல் கூற்றுபடி நமது ஆசிரியருக்கு மூளையேயில்லை. மூளையில்லாதவர் நமக்கு எப்படி பாடம் எடுக்க முடியும்?
ஆசிரியர் : ஆனால் இதை நீ நம்பித்தான் ஆக வேண்டும்.
மாணவர் : இது போலவே மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவும் நம்பிகையே.
இது ஒரு உண்மை சம்பவம். அந்த மாணவர் வேறு யாருமல்ல. நமது முன்னால் குடியரசுத் தலைவர் திரு.அப்துல் கலாம் அவர்களே.
source: http://www.kiliyanur.com/allah/godvsscience.php