காலனித்துவம் என்பது ஐரோப்பாவின் மையவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். கடந்த காலங்களில் காலனித்துவம் வெற்றி பெருவதற்கு அல்லது முஸ்லீம் ஆட்சியாளர்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஐரோப்பாவின் ஆட்சி மேலோங்குவதற்குறிய அடிப்படைக் காரணம் முஸ்லீம் சாம்ராஜ்யத்தின் வெளிப்படையான இயலாமை தான் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக முஸ்லிம் நாடுகளை தனது ஆக்கிரமிப்பில் வைத்திருந்த ஐரோப்பிய நாடுகளின் தாக்கத்தினால் பல விதமான கலாசார சீர்கேடுகளுக்கும் சிந்தனா ரீதியிலான பிரச்சினைகளுக்கும் முஸ்லீம் நாடுகள் முகம் கொடுக்க வேண்டியிருந்தது.
அது மட்டுமன்றி காலனித்துவத்தில் இருந்து மீண்ட நாடுகள் மீண்டும் ஸ்திரத் தன்மையை அடைய முடியாத அளவுக்கு பின்விளைவுகளை விட்டுச் சென்றதுடன், பொருளாதாரத்தையும் தேவைக்கும் அதிகமாகவே மேற்கு நாடுகள் சூரையாடிச் சென்றன.
முஸ்லீம் உலகின் அறிவியல் பொக்கிஷங்களை திருடியர்கள் கிருத்துவத்தின் திரித்துவ சிந்தனையை முஸ்லீம் நாடுகளில் விதைப்பதற்கு முயன்று தேவாலங்களையும் அமைத்துவிட்டு சென்றார்கள்.
19-ம் நூற்றாண்டு காலப்பகுதியில் நடை பெற்ற காலனித்துவ படையெடுப்புகள் கிருத்தவ மதத்தை பரப்புவதற்காகவே மேற்கொள்ளப்பட்டது. மட்டுமன்றி ஐரோப்பிய கலை, கலாசார தினிப்புகளையும் இதன் மூலம் கட்டவிழ்த்துவிட்டார்கள்.
அரபு தேசத்தை பிளவு படுத்திய ஐரோப்பிய காலனித்துவம். – ஓர் அரசியல் நோக்கு!
முஸ்லீம் உலகை நீண்ட கால பின்னடைவுக்கு கொண்டு சென்று இஸ்லாமியநாடுகளின் வளங்கள் மற்றும் காலாசாரத்தை நூற்றாண்டுகளுக்கும் மேலாக காயப்படுத்தியவரலாறு காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு உண்டு.
இன்றைய 21ம் நூற்றாண்டிலும் அதன் தாக்கத்தை முஸ்லீம் உலகு உணர்ந்து கொண்டிருக்கிறது.
காலனித்துவம் என்றால் என்ன?
காலனித்துவம் (Colonialism) என்பது Colonia என்ற ரோம வார்த்தையில் இருந்து பிரிந்த்து. குடியமர்த்தல், பண்ணை வளர்த்தல் போன்ற பொருள்களை இவ்வார்த்தை தருகின்றது. காலனித்துவம் என்பது கிட்டத்தட்ட ஏகாதிபத்தியம் (Imperialism) எனும் வார்த்தைக்கு ஒப்பானதாகும். ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் அதிகாரத்தின் மூலம் தமது விருப்பத்திற்கேற்ப மக்களை குடியமர்த்துவது தான் இந்த வார்த்தை தரும் தெளிவான கருத்தாக்கமாகும்.
சுருக்கமாகச் சொல்வதென்றால் காலா காலமாக ஒரு இடத்தில் வாழ்ந்து வரும் மக்களை தங்கள் ஆயுத மற்றும் ஆள் பலத்தைக் கொண்டு அடக்கி ஒடுக்கி அவர்கள் வாழும் இடத்தில் வேறு ஒரு சமுதாயத்தை குடியமர்த்தும் வேலைக்குப் பெயர் தான் இந்த காலனித்துவம் என்பது.
காலனித்துவம் என்பது ஐரோப்பாவின் மையவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். கடந்த காலங்களில் காலனித்துவம் வெற்றி பெருவதற்கு அல்லது முஸ்லீம் ஆட்சியாளர்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஐரோப்பாவின் ஆட்சி மேலோங்குவதற்குறிய அடிப்படைக் காரணம் முஸ்லீம் சாம்ராஜ்யத்தின் வெளிப்படையான இயலாமை தான் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
இஸ்லாமிய சாம்ராஜ்யத்திற்குள் ஊடுருவி முஸ்லீம்களின் வளங்களை சூரையாடி, இஸ்லாமிய காலாசாரத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்ற ஐரோப்பாவின் திருச்சபைகளின் ஆழ்ந்த ஆசையை இந்த காலனித்துவ மரபு சாத்தியப்படுத்தியது. 19ம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் திருச்சபைகளின் உந்துதலுடன் இஸ்லாமிய நாடுகளை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தன.
Geodfry Jesin என்ற ஆய்வாளர் தனது The Militent Islam என்ற நூலில் காலனித்துவ சுரண்டலின் முதல் கட்டத்தை இவ்வாறு விளக்குகின்றார். மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளை ஒல்லாந்தும், துனீஷியா, மொரோக்கோ, அல்ஜீரியா போன்ற நாடுகளை பிரான்சும், சூடான், எகிப்து போன்ற நாடுகளை பிரிட்டனும் தன் வசப்படுத்தின.
வெறும் அரசியல் காரணங்களுக்காக மட்டுமன்றி காலாசாரத்திலும் மாற்றத்தை உண்டாக்க வேண்டுமென்ற நோக்கத்திற்காகவும் சேர்த்தே ஐரோப்பிய நாடுகள் முஸ்லீம் நாடுகளின் மீது தனது படையெடுப்பை நகர்த்தின.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக முஸ்லிம் நாடுகளை தனது ஆக்கிரமிப்பில் வைத்திருந்த ஐரோப்பிய நாடுகளின் தாக்கத்தினால் பல விதமான கலாசார சீர்கேடுகளுக்கும் சிந்தனா ரீதியிலான பிரச்சினைகளுக்கும் முஸ்லீம் நாடுகள் முகம் கொடுக்க வேண்டியிருந்தது.
அது மட்டுமன்றி காலனித்துவத்தில் இருந்து மீண்ட நாடுகள் மீண்டும் ஸ்திரத் தன்மையை அடைய முடியாத அளவுக்கு பின்விளைவுகளை விட்டுச் சென்றதுடன், பொருளாதாரத்தையும் தேவைக்கும் அதிகமாகவே மேற்கு நாடுகள் சூரையாடிச் சென்றன.
இஸ்லாமிய அறிஞர்கள் அறிவியல் தொடர்பாக எழுதிய ஆய்வுகள் அடங்கிய நூல்களும், தொகுப்புகளும் மேற்குலகுக்கு நகர்த்தப்பட்டு அவை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு மேற்கு நாடுகளின் அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படையாக்கப்பட்டது.
உதாரணமாக அலி இப்னு ஸீனா மருத்துவ மேதையின் புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டு மருத்துவத் துறையில் சாதனைப் பக்கத்தை திறக்க வைத்தன. அலி இப்னு ஸீனா என்ற மருத்துவ அறிஞரை அவி சென்னா என்ற மாற்றப் பட்ட புதுப் பெயரில் மேற்குலகு உலகுக்கு அறிமுகப்படுத்தியது.
முஸ்லீம் உலகின் அறிவியல் பொக்கிஷங்களை திருடியர்கள் கிருத்துவத்தின் திரித்துவ சிந்தனையை முஸ்லீம் நாடுகளில் விதைப்பதற்கு முயன்று தேவாலங்களையும் அமைத்துவிட்டு சென்றார்கள்.
19-ம் நூற்றாண்டு காலப்பகுதியில் நடை பெற்ற காலனித்துவ படையெடுப்புகள் கிருத்தவ மதத்தை பரப்புவதற்காகவே மேற்கொள்ளப்பட்டது. மட்டுமன்றி ஐரோப்பிய கலை, கலாசார தினிப்புகளையும் இதன் மூலம் கட்டவிழ்த்துவிட்டார்கள்.
ஐரோப்பாவின் அனைத்து கிருத்தவ மிஷனரிகளிலும் அல்ஜீரியா மீதான பிரான்சின் படையெடுப்பு பேசு பொருளாகவே மாறியது என்றால்அது மிகையல்ல. பிரான்ஸ் அல்ஜீரியாவை தன் வசப்படுத்திய போது திருச் சபைத் தலைவர் “அல்ஜீரிய மக்களை கிருத்தவர்களாக மாற்றுவதற்கு பிரான்சின் படையெடுப்பின் மூலம் கர்த்தர் நமக்கு வாய்ப்பளித்துள்ளார்”என்று வெளிப்படையாகவெ அறிவித்தார்.
ஐரோப்பிய நாடுகள் முஸ்லீம் நாடுகளை காலனித்துவப்படுத்தியதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு.
1. படையெடுப்பின் பெயரால் கிருத்தவ மத மாற்றம் செய்வது.
2. பிரித்தாளும் கொள்கை.
3. சிந்தனா ரீதியிலான மாற்றம் உண்டாக்குதல்.
4. கல்விக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்துதல்.
5. அரசியல் சுதந்திரத்தின் பேரால் முஸ்லீம் நாடுகளை துண்டாடுதல்.
போன்றவையே அவற்றில் மிக முக்கியமானவையாகும்.
படையெடுப்பின் பெயரால் கிருத்தவ மத மாற்றம் செய்வது.
1920களில் லெபனானை ஆக்கிரமித்த பிரான்ஸ் படைகள் அங்கிருந்த “மொரனைட்” கிருத்தவர்களை பலப்படுத்தியது. லெபானான் மக்கள் தொகையில் வெறும் 3 சதவீதத்தினர் மாத்திரம் தான் கிருத்தவர்கள். பிரான்ஸின் படையெடுப்பினால் பலம் பெற்ற இவர்களை ஆதிக்க சக்தியாக பிரான்ஸ் உருவாக்கியது. பிரான்ஸின் படையெடுப்பின் பின்னர் லெபனானில் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பின் படி லெபனால் நாட்டில் சிறுபான்மையாக வாழும் “மொரனைட்” கிருத்தவர்கள் மாத்திரம் தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட வேண்டும்.
பிரான்ஸின் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் லெபனானில் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டம் தான் இன்று வரை அங்கு நடை முறையில் இருக்கிறது. இதன் படி இன்றைக்கும் “மொரனைட்” கிருத்தவர்களை தவிர லெபனான் ஜனாதிபதியாக வேறு யாரும் தேர்வாக முடிவதில்லை.
இதே பாணியில் “கோடன்” என்ற கிருத்தவ தலபதி தனது படையினரை சிலுவை யுத்த வீரர்கள் போல் ஆடை அணிவித்து தென் சூடானை கிருத்தவ மயமாக்குவதில் வெளிப்படையாக ஈடுபட்டான். அல்ஜீரியா, மொரோக்கோ ஆகிய நாடுகளிலும் காலனித்துவ ஆட்சியாளர்கள் மத மாற்ற செயல்பாட்டில் வேகமாகவே ஈடுபட்டார்கள். சூடானின் மஹ்தி என்ற இயக்கத்தை யுத்தத்தின் மூலம் தோற்கடித்த “கோடன்” அதன் தொடரில் சூடானில் கிருத்தவ மதத்தை பரப்புவதில் அதிக ஆர்வம் காட்டினான்.
சிந்தனா ரீதியிலான மாற்றம் உண்டாக்குதல் மற்றும் கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டுவருதல்.
1980 களில் பிரித்தானியா எகிப்தை ஆக்கிரமிக்கும் போது அங்கு சுமார் 5000 க்கும் அதிகமான அறபு மற்றும் இஸ்லாமிய கல்லூரிகள் காணப்பட்டன. 1922 ல் எகிப்தை விட்டு பிரித்தானியப் படையினர் வெளியேறிய நேரத்தில் வெறும் 10 உயர் கல்வி நிலையங்களே அங்கு காணப்பட்டன.
உஸ்மானியர்களின் ஆட்சியின் கீழ் இருந்த சிரியாவில் இஸ்லாமிய கருத்தாக்கத்துடன் தொடர்புடைய கல்வி முறை நடை முறையில் இருந்தது. ஆனால் பிரான்ஸ் சிரியாவை ஆக்கிரமித்து அதில் ஐரோப்பிய கிருத்தவ சிந்தனையை புகுத்தும் கல்வி முறையை அறிமுகப்படுத்தியது.
இஸ்லாமிய ஆட்சியின் முதல் பல்கலைக் கழகமாக விளங்கும் எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக் கழகம் சுமார் 1000ம் ஆண்டுகள் பழமையானது. இதுவே முஸ்லீம்களின் உயிராக மதிக்கப்பட்டது. காலனித்துவத்தின் மூலம் எகிப்தை கைப்பற்றிய பிரித்தானிய ஆட்சியாளர்கள் அல் அஸ்ஹருக்கு பதிலாக “கெய்ரொ” பல்கலைக் கழகத்தை ஸ்தாபித்தார்கள்.
கெய்ரொ பல்கலைக் கழகத்தில் படித்து வெளியேறும் மாணவர்களுக்குத் தான் வேலை வாய்ப்பு தரப்படும் என்று அறிவித்தல் விடுத்து அஸ்ஹர் பல்கலைக் கழகத்திற்கு இருந்த மரியாதையை மக்கள் மனங்களில் இருந்து துடைத்தெரிய முற்பட்டார்கள். நவீன கல்வி முறையை அறிமுகம் செய்வதாகக் கூறி கெய்ரோ பல்கலைக் கழகத்தின் பக்கம் மக்களின் பார்வையைத் திருப்பினார்கள்.
இத்தாலியும் லிப்யாவில் இதே வழிமுறையைத் தான் கையாண்டது. லிப்யாவை இத்தாலிய மயப்படுத்த வேண்டிய அனைத்து முயற்சிகளையும் இத்தாலி மேற்கொண்டது.
இந்தோனேசியாவில் இருந்த அறபு- இஸ்லாமிய பள்ளிக் கூடங்கள் மூடப்பட்டு கிருத்தவ திருச்சபையுடன் இணைந்த கல்விக் கூடங்கள் உருவாக்கப்பட்டன. நெதர்லாந்தின் மதப் பிரச்சாரத்தின் வெற்றியா இதனை திருச்சபை கூறிக் கொண்டது.
காலனித்துவத்தின் திட்டமிட்ட செயல்பாடுகளின் படி சிந்தனைக் குழப்பத்தை உண்டாக்கும் கருத்து முகாம்கள் (School Of Thought) உருவாக்கப்பட்டன. அதே போல் பிரித்தானியாவின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்தியாவில் முஸ்லீம்களின் ஈமானை நேரடியாக ஆட்டம் காண வைப்பதற்காக பஹாயிசத்தையும், காதியானிசத்தையும் மேற்குலகு திட்டமிட்டு வளர்த்தது.
இறைவனால் உலகுக்கு அனுப்பப்பட்ட இறுதி நபியாகிய முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின் மிர்சா குலாம் காதியானி என்பவன் நபியாகியுள்ளான் என்று பொய் நபியை கற்பனையாக ஈன்ரெடுத்த பிரிட்டன் இதன் மூலம் முஸ்லீம்களுக்கு மத்தியில் பெரும் பிளவை உண்டாக்க முனைந்தது.
யுத, பாரசீக மற்றும் கிரேக்க தத்துவங்களின் கூட்டுத் தயாரிப்பான பஹாய் சிந்தனையோ பிரித்தானியாவிற்கு எதிராக யாரும் ஆயுதம் ஏந்தக் கூடாது. ஜிஹாத் என்பது இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களுக்கு உரியது இப்போதைக்கு அது பொருந்தாதது என்று பிரித்தானியாவைக் காப்பாற்றும் செயலில் ஈடுபட்டது.
சுதந்திரத்தின் பெயரால் முஸ்லிம் நாடுகளை பிரித்தாளும் கொள்கை.
கருத்தியல் ரீதியிலும், புவியியல் ரீதியிலும் ஒன்றுபட்டிருந்த முஸ்லீம் சாம்ராஜ்யத்தை துண்டு துண்டாக்கி சிதைக்க நினைத்த மேற்குலகுக்கு கிடைத்த மிகப்பெரும் பொக்கிஷம் “பிரித்தாளும் சூழ்ச்சி” அரபுலகம் 22 பகுதிகளாக பிரிக்கப்பட்டது மட்டுமன்றி, முழு இஸ்லாமிய சாம்ராஜ்யமும் 55 நாடுகளாக பிளவுபடுத்தப்பட்டது.
முஸ்லீம் உலகை துண்டாடிய West Phalia ஒப்பந்தம்.
ஐரோப்பாவை பாதுகாத்து முஸ்லீம் நாடுகளை பிரிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் West Phalia வில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் படி ஒன்றாக இருந்த முஸ்லீம் நாடுகள் தனியான வான் எல்லைகள், நில, நீர் எல்லைகளை தங்களுக்குள் அமைத்துக் கொண்டது. இதன் மூலம் சிறியளவிலான தேச அரசுகளாக (Nation States) முஸ்லீம் நாடுகள் பிரிக்கப்பட்டது.
மொத்த தேசமாக இருந்த வட ஆபிரிக்கா லிபியா, அல்ஜீரியா, மொரோக்கோ, டியுனிஷியா என்று நான்கு நாடுகளாக பிரிக்கப்பட்டது. ஆசியாவின் நஜ்த் பகுதி 10 நாடுகளாக பிளவுபடுத்தப்பட்டது. ஷாம் என்ற தனிப் பகுதி சிரியா, லெபனான் என்று இரண்டாக்கப்பட்டது.
இப்படி படிப்படியாக காலனித்துவத்தின் மூலம் முஸ்லீம் அரசுகளை தன் வசப்படுத்தி இஸ்லாமிய கலாசாரத்தை இல்லாமலாக்க முனைந்த மேற்கின் சதித்திட்டங்கள் படிப்படியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு முஸ்லீம் நாடுகள் பல போராட்டங்களுக்குப் பின் மீண்டும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்தன. அதையும் தாண்டி முஸ்லீம் பெயரில் மக்களை அடக்கியொடுக்கிய நவீன காலனித்துவ வாதிகளான லிப்யாவின் அதிபர் முஅம்மர் கடாபி, டியுனிசிய அதிபர் ஸைனுலாப்தீன் பின் அலி, எகிப்தின் முபாரக் போன்றவர்கள் மக்கள் புரட்சியின் மூலம் தூக்கியெறியப்பட்டார்கள்.
ஐரோப்பிய காலனித்துவத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட மிக முக்கிய முஸ்லீம் நாடுகளில் சில.
1820 ஓமான் மற்றும் கத்தார் ஆகியன ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் வந்தது.
1820 அல்ஜீரியாவை பிரான்ஸ் ஆக்கிரமித்தது.
1834 கவ்காஸ் பிராந்தியத்தை ரஷ்யப் படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
1839 பிரிட்டன் ஏடன் துறை முகத்தைக் கைப்பற்றியது.
1842 முஸ்லீம்களின் சிந்துப் பகுதி பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
1853 ரஷ்யா தாஷ்கந்தை கைப்பற்றியது.
1857 முகலாய மன்னர்களின் 600 வருட கால ஆட்சியை காலனித்துவ ஆட்சி முடிவுக்குக் கொண்டு வந்தது.
1873 ரஷ்யா உஸ்பகிஸ்தானை கைப்பற்றியது.
1879 பிரிட்டன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்க தொடங்கியது.
1881 பிரான்ஸ் துனீசியாவை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது.
1882 சூடானில் நடை பெற்று வந்த மஹ்தி இயக்கத்தின் ஆட்சியை பிரிட்டன் கவித்தது.
1885 இத்தாலி எரிட்ரியாவை ஆக்கிரமித்தது.
1890 பிரான்ஸ் செனகலை ஆக்கிரமித்தது.
1891 மஸ்கட்டும், ஓமானும் பிரிட்டன் வசமாகியது.
1898 சூடானை பிரிட்டன் முழுமையாக ஆக்கிரமித்தது.
1900 பிரான்ஸ் ஷாட் நாட்டை கைப்பற்றியது.
1912 லிபியாவை இத்தாலி தன் வசப்படுத்தியது.
1920 பிரிட்டன் ஈராக்கை ஆக்கிரமித்தது.
1920 பிரான்ஸ் லெபனான் மற்றும் சிரியாவை ஆக்கிரமித்தது.
1926 சோமாலியாவை இத்தாலி தன் வசப்படுத்தியது.
1948 யுதர்கள் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து இஸ்ரேல் என்றொரு புதிய நாட்டை உருவாக்கி அதனை பிரகடனப்படுத்தினார்கள்.
இன்னும் சில நாடுகளில் மக்கள் புரட்சிகள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மக்களை நசுக்கி நாட்டு சொத்தை சூரையாடி அதன் மூலம் இலாபமடைய நினைக்கும் சர்வதிகாரிகளின் அரச வீழ்ச்சியும் தூரத்தில் இல்லை என்பதைத் தான் இந்த போராட்டங்கள் நமக்கு தெளிவாக உணர்த்தி நிற்கின்றன.