93 schoolgirls molested during train journey in Bihar
Hapless students, accompanied by three women teachers, were in Patna to participate in a two-day environment conference
ரெயிலில் 93 மாணவிகள் பாலியல் பலாத்காரம்!
பீகார் வாலிபர்கள் அட்டூழியம்…!
பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த வெள்ளி, சனி 2 நாட்கள் சுற்றுச்சூழல் முகாம் நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ–மாணவிகள் அங்கு சென்று அந்த முகாமில் கலந்து கொண்டனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் உள்ள காமல் பள்ளியைச் சேர்ந்த 93 மாணவிகளும் அந்த சுற்றுச் சூழல் முகாமில் கலந்து கொண்டனர். அவர்களை 3 ஆசிரியைகள் அழைத்துச் சென்றிருந்தனர்.
சனிக்கிழமை இரவு 11.40 மணிக்கு 93 மாணவிகளும் பாட்னாவில் இருந்து தன்பாத்துக்கு திரும்ப ரெயிலில் முன்பதிவு செய்து இருந்தனர். இதற்காக அவர்கள் 9.45 மணிக்கு பாட்னா ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.
கங்கா தாமோதரர் எக்ஸ் பிரஸ் ரெயிலில் தாங்கள் முன்பதிவு செய்திருந்த 2 பெட்டிகளிலும் ஏறிய 93 மாணவிகளும், அங்கு தங்கள் இருக்கைகளில் ஏராளமான பீகார் வாலிபர்கள் உட்கார்ந்து இருப்பதை பார்த்து இந்த இருக்கைகளை நாங்கள் ஏற்கனவே முன் பதிவு செய்துள்ளோம். இடம் கொடுங்கள் என்றனர்.
ஆனால் பீகார் வாலிபர்கள் இருக்கைகளை காலி செய்து கொடுக்க மறுத்து தகராறு செய்தனர். ‘‘நாங்கள் ரெயில்வே பரீட்சை எழுதச் செல்கிறோம். நாங்கள் இந்த பெட்டியில்தான் இருப்போம்’’ என்றனர்.
உடனே இதுபற்றி 3 ஆசிரியைகளும் பாட்னா ரெயில் நிலைய போலீசாரிடம் சென்று புகார் செய்தனர். ஆனால் ரெயில்வே போலீசார் ‘‘நீங்கள் உங்கள் இருக்கைகளில் போய் உட்காருங்கள். அவர்கள் எழுந்து போய் விடுவார்கள்’’ என்று கூறி தட்டிக் கழித்தனர்.
இதற்கிடையே 12 மணி அளவில் ரெயில் புறப்பட்டது. 93 மாணவிகளும் ரெயிலில் ஏறி மீண்டும் பீகார் வாலிபர்களிடம் இருக்கையைத் தாருங்கள் என்றனர். ஆத்திரம் அடைந்த பீகார் வாலிபர்கள் 3 ஆசிரியைகள் மீது கடுமையாக தாக்கினார்கள். சக பயணிகள் யாரும் இந்த அடாவடியை கண்டுகொள்ளவில்லை.
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பீகார் வாலிபர்கள் 93 மாணவிகளிடமும் செக்ஸ் சில்மிஷம் செய்யத் தொடங்கினார்கள். இரவில் அந்த வாலிபர்களிடம் சிக்கிக் கொண்ட மாணவிகள் அழுதனர்.
ஆனாலும் பீகார் வாலிபர்கள் மிருகத்தனமாக நடந்து கொண்டனர். தங்கள் இருக்கை அருகே அமர்ந்திருந்த மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
மாணவிகளை அழைத்துச் சென்றிருந்த 3 ஆசிரியைகளால் இந்த கொடூரத்தை தடுக்க முடியவில்லை. 12 மணிக்கு தொடங்கிய பீகார் வாலிபர்களின் செக்ஸ் சில்மிஷம் சுமார் 4 மணி நேரம் நீடித்தது. இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டிருந்த மாணவிகள் மீது விழுந்து பீகார் வாலிபர்கள் அட்டூழியம் செய்தனர்.
அதிகாலை 4 மணிக்கு பீகார் வாலிபர்கள் அனைவரும் கொடர்மா ரெயில் நிலையத்தில் இறங்கி சென்றனர். அதன் பிறகே ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 93 மாணவிகளும் தங்கள் இருக்கைகளில் நிம்மதியாக இருக்க முடிந்தது. என்றாலும் வாலிபர்களின் பாலியல் பலாத்காரம் காரணமாக பெரும்பாலான மாணவிகள் அழுதபடியே இருந்தனர்.
தன்பாத் ரெயில் நிலையத்தில் இறங்கியதும் 93 மாணவிகளும் தங்களுக்கு நேர்ந்த கொடூரம் பற்றி கதறி அழுதபடி தங்கள் பெற்றோரிடம் கூறினார்கள். இதையடுத்து பெற்றோர்கள் ரெயில்வே போலீசில் புகார் செய்தனர்.
ரெயில்வே பரீட்சை எழுதச் செல்லும் பீகார் வாலிபர்கள், எந்த மாநிலத்துக்கு சென்றாலும் இத்தகைய அடாவடியில் ஈடுபடுவது வழக்கமாகி விட்டது. முன்பதிவு செய்துள்ள ரெயில் பெட்டிகளில் ஏறி இருக்கைகளை ஆக்கிரமித்துக் கொண்டு மற்ற பயணிகளை அவர்கள் படாதபாடு படுத்துகிறார்கள்.
அட்டூழியம் செய்ய பீகார் வாலிபர்களை நெறிப்படுத்தி ஒடுக்க போலீசார் தயக்கம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை. ரெயில்வே அதிகாரிகளும் பீகார் வாலிபர்களின் அட்டூழியத்தை கண்டு கொள்வதில்லை.
ரெயில்வே அதிகாரிகளும், போலீசாரும் பீகார் வாலிபர்களின் முறையற்ற பயணத்தை ஒழுங்கு படுத்தினால்தான் மற்ற பயணிகள் நிம்மதியாக பயணம் செய்ய முடியும்.
93 schoolgirls molested during train journey in Bihar
Hapless students, accompanied by three women teachers, were in Patna to participate in a two-day environment conference
Patna: As many as 93 schoolgirls were reportedly sexually molested for more than four hours by a group of men in a running train in Bihar on Sunday.
The incident was a reminiscence of the Delhi gang-rape on a moving bus in December last year. Taking the matter seriously, Bihar chief minister Nitish Kumar has asked authorities to initiate action against the culprits.
The hapless students, accompanied by their three women teachers, from Carmel School in Dhanbad and Digwadih, were returning homes by an express train which they had boarded at the Patna railway junction late on Saturday night.
They were in Patna to participate in a two-day environment conference and were returning home when the incident occurred.
As per the victims’ account, the horror began soon after they boarded the Ganga-Damodar express at the Patna junction on Saturday night. The group had their reservations in the S-1 and B-1 boggies of the train but much to their surprise, they found their seats having been occupied by a large group of men who claimed to be participants of the railway recruitment examination.
Reports said the lumpen elements passing lewd remarks refused to vacate seats despite repeated requests by the girls and the teachers, even as the cops just looked on.
Eventually, they requested the unauthorised travellers to spare only 10 of their total 93 reserved seats, which was refused by the unruly men. They also misbehaved and assaulted the women teachers who protested against their lewd comments.
With no option left, the teachers brought the harassed girls to another bogey of the train. But the culprits followed them there too and continued harassing them. The ordeal lasted until the ruffians got down from the train at the Koderma railway station in Jharkhand four hours later. All through the time, the girls remained standing in the train despite having their reserved berths. Witnesses said the girls were seen weeping bitterly when their parents reached the Dhanbad station to receive them the very next morning.
“It was a nightmare. I don’t want to travel in train anymore,” a Class IX girl told the local media yesterday (Monday). “We travelled the whole way standing and huddled together in queues as the men kept on pulling us,” she narrated the whole account of her ordeal adding those men had grabbed their seats and assaulted even their teachers when they protested.
Meanwhile, the Bihar chief minister while taking the matter quite seriously has directed the additional director general, railways to initiate action against the culprits.
“I have asked the ADG railway to initiate immediate action against the culprits and also fix responsibility as to who were responsible for this shocking incident,” Kumar told the media on Monday while releasing his government’s annual report card on his government completing eight year in power.
–By Lata Rani, CorrespondentPublished: 16:51 November 25, 2013, Gulf News
இப்படியும் ஒரு அம்மா(தாய்)!…
இவளை எந்த இனத்தில் சேர்ப்பது?…
இப்படியும் ஒரு அம்மா(தாய்)!…இவளை எந்த இனத்தில் சேர்ப்பது?…
மிருகம், பறவை, பூச்சி, தாவரங்களுக்கு கூட தாய்ப்பாசம் இருக்கிறது…
இவளை எந்த இனத்தில் சேர்ப்பது?…
திருச்சி: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்று பெயின்ட் டின்னில் அடைத்த அம்மாவுக்கு திருச்சி கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
திருச்சி அரியமங்கலம் வடக்கு உக்கடை இக்பால் தெருவை சேர்ந்தவர் சவுகத் அலி (24). இவரது மனைவி பாத்திமா மரியம் (21).
இவர்களது மகள் நூருல் ஷிபா (2). கடந்த மார்ச் 5ம் தேதி பாத்திமா மரியம், மகள் நூருல் ஷிபாவுடன் திடீரென மாயமானார்.
உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சவுகத் அலி தேடினார்.
மறுநாள் சவுகத் அலியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அப்போது வீட்டு பரணில் இருந்த பெயின்ட் காலி டின்னில் நூருல் ஷிபா உடல் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது.
இதுபற்றி அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பாத்திமா மரியத்திற்கும், அவருடன் படித்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும், அவருடன் பாத்திமா மரியம் சென்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
அதன்பின் கும்பகோணத்தில் கள்ளக்காதலனுடன் இருந்த பாத்திமா மரியத்தை போலீசார் கைது செய்தனர்..
மேலும் பதிவுகளை காண இணைந்திருங்கள் :-https://www.facebook.com/profile.php?id=100006093222009