வெகு நாட்களுக்கு மனைவியை பிரிந்து இருக்காதீர்!
வெகு நாட்களுக்கு மனைவியை பிரிந்து இருக்காதீர், மனைவியின் தனிமை அவளை வழிகெடுக்க ஷைத்தானுக்கு நல்ல சந்தர்ப்பமாக அமையும்.
உமர் ரழி அவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் இரவில் உலா வரும் போது ஒரு பெண்மணி தனது வீட்டில் தனிமையில் இருந்த வண்ணம் “இறையச்சம் மாத்திரம் இல்லையெனில் என்னுடன் படுக்கையில் இன்னுமொரு ஆண் கலந்திருப்பான்” என கவிதையொன்றை பாடக்கேட்டு, அதன் பின் உடனே தனது மகள் ஹப்ஸா நாயகியிடம் சென்று ஒரு பெண்ணுக்கு தனது கணவனை எவ்வளவு காலம் பிரிந்து இருக்க முடியும் எனக் கேட்க அவரது மகள் நான்கு மாதங்கள் என பதில் கொடுத்தார்.
உடனே கலீபா மார்க்க தேவைகளுக்காக வெளிச்சென்றிருக்கும் அனைவருக்கும் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை வீடு செல்ல கட்டளை பிறப்பித்தார்.
நமது மனைவியை நாமே பாதுகாக்க வேண்டும். நாம் மனைவியின் விஷயத்தில் அலட்சியமாக இருந்தால் ஷைத்தானின் சூழ்ச்சியினால் இன்னொருவன் நுழைந்து விடலாம். எல்லா துணைவியர்களும் இப்பெண்மணியை போன்று இருக்க மாட்டார்கள். (எண்ணறிவு கற்று எழுத்தறிவு படித்தாலும் பெண்புத்தி பின்புத்தியாகும்) என்பது ஓர் பழமொழி.
அதற்கிணங்க, பொதுவாக பெண்கள் ஒன்றை செய்யுமுன் சிந்திக்க மாட்டார்கள். செய்து அதன் விளைவை கண்ட பின்னரே ஏன் செய்தோம் என கைசேதப்படுவார்கள். அதற்காக நமது மனைவியை சந்தேககண்கொண்டு பார்த்துவிடவும் கூடாது. அதனால் வாழ்க்கையில் நிம்மதியை இழந்து விடுவீர்கள். நம்பிக்கை இருக்க வேண்டும். அதற்காக எல்லா வாசல்களையும் திறந்துவிடுவது முட்டாள்தனம். அதாவது அவள் நம்பிக்கைக்கு துரோகம் செய்வதற்கான வழிமுறைகளை நாமே ஏற்படுத்தி கொடுக்கக்கூடாது.
நமது உயிர் தோழனாக இருந்தாலும் மிகவும் அத்தியவசிய தேவைக்கன்றி நம் மீது அன்பாக இருக்கும் மனைவியுடன் அறிமுகப்படுத்தி வைப்பது கூடாது. அதனால் ஷைத்தானுடைய பின்னணியினால் நம் மீதுள்ள அன்பு குறைந்து அவன் மீது அன்பு வைக்க தொடங்குவாள்.அதனால் நம் மீதுள்ள அவளது அன்பை நாமே குறைத்துவிடுகிறோம்.
அதுவும் இன்றைய காலகட்டத்தில் திருமணமான பிறகு தனிமை என்பது கற்புக்கரசிகளையும்கூட தடுமாறச்செய்யும் சூழ்நிலைகளால் சூழப்பட்டதாக இருக்கிறது. எனவே கணவன்மார்கள் மனைவியை விட்டு தொழில் காரணமாக பிரிந்து சென்றாலும் அவ்வப்போது ஒலித்தொடர்பு (டெலஃபோன், ஸெல் போன்,போன்றவை மூலமாக) வைத்துக்கொள்ளத் தவறக்கூடாது.