பெண் குழந்தைகளை வெறுக்கும் மூடர்களே….
பெண் குழந்தைகளின் மகிமை தெரியாமலும், பெண் குழந்தைகளினால் கிடைக்கும் செல்வங்கள் மற்றும் நன்மைகளை பற்றி தெரியாமல் அவர்களை வெறுக்கும் மூடர்களுக்கான பதிவு.
பெண் குழந்தை பிறந்ததால் இறந்தது வேண்டுமானால் செல்வம் எனும் மாற்று மதத்தவராக இருக்கலாம், ஆனால் இன்று இதுபோல் அனைத்து மதத்திலும் பெண் குழந்தைகளை வெறுக்கிறவர்கள் இருக்கிறார்கள், இஸ்லாம் எனும் புனித மார்க்கத்தையும் உட்பட..
நானும் பெண் குழந்தைகளை வெறுக்கும் சில இஸ்லாமியர்களை பார்த்துள்ளேன்
காரணம் ஆணாக இருந்தால் 20 வயது ஆனவுடன் வேலைக்கு சென்று குடும்பத்துக்கு கஞ்சி ஊத்துமாம், அதுவே பெண்ணாக இருந்தால் 21 வயது ஆணவுடன் செலவு செய்து கட்டிக் கொடுக்கணுமாம்.. என்ன கொடுமையடா இது…?!
யார் ஒரு பெண் குழந்தையை பெற்று சரியான முறையில் வளர்த்து ஆளாக்குகிறார்களோ அவர்களுக்கு சுவர்க்கம் நிச்சயம் என்றும்,
ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தால் அந்த இல்லத்திற்கு இறைவன் வானவர்களை அனுப்புகிறான், பிறகு அந்த குழந்தைகளை வானவர்கள் அவர்களது சிறகுகளால் அரவணைத்து கொள்கிறார்கள் என்றும்,
அந்த நாள் முதல் அந்த பெண் குழந்தையை வளர்ப்பவருக்கு மறுமை நாள் வரை அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் என்றும் பல ஹதீஸ்களில் நம் தூய மார்க்கம் நமக்கு தெரிவிக்கிறது..
இப்படி இருந்தும் ஏன் இந்த அவல நிலை?
பெண் குழந்தைகளை வெறுக்கும் கயவர்களே உங்களை ஆணாக பெற்றெடுத்தது ஆணல்ல ஒரு பெண்தான்,
நீங்கள் உங்கள் காமத்தை அடக்குவதற்கு உறவு கொள்வது ஆணிடம் அல்ல ஒரு பெண்ணிடம் தான் புரிந்து கொள்ளுங்கள்..
திருமணம் செய்து கொள்ள பெண் தேவை, வக்கனையாக ஆக்கிப் போட பெண் தேவை, காம சுகத்துக்கு பெண் தேவை, ஆனால் பெண் குழந்தை பிறந்தால் அது மட்டும் வேண்டாமா?
அப்படி பெண் குழந்தையை வெறுக்கும் நீங்கள் உங்கள் மனைவியிடம் படுப்பதற்கு முன் யோசிக்க வேண்டியதுதானே மடையர்களே?
சிலர் குழந்தை பாக்கியமே இல்லாமல் வாழ்க்கையை சோகத்துடன் வாழ்ந்து வருகிறார்கள், ஆனால் நீங்கள் என்னவென்றால் சர்வ சாதாரனமாக வெறுத்து ஒதுக்குகிறீர்கள்,,, புரிந்து கொள்ளுங்கள் பெண் என்றாலும் சரி, ஆண் என்றாலும் சரி அல்லாஹ் நமக்கு கொடுத்த ரஹ்மத் என நினைத்து ஏற்றுக் கொள்ளுங்கள்..
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் செய்வானாக.. ஆமீன்..