மக்களின் விவகாரங்களில் பொறுப்பேற்கும்
ஒரு தலைமைத்துவம் அமைவது
கடமைகளில் மிகவும் தலையாய கடமையாகும்.
ஒரே தலைமையை அடிப்படையாக கொண்ட கிலாஃபா அரசு கட்டாயக் கடமை என்பது தொடர்பான ”அஹ்லுஸ் சுன்னா” அறிஞர்களின் கருத்துக்கள்!
நான்கு மதுஹபுகளின் சட்டங்களிலும் நிபுனத்துவம் பெற்று விளங்கிய இமாம் ஜூசைரி தனது பிக்ஹூ அலல் மதாயிபில் அர்பஅ எனும் நூலில் இவ்வாறு கூறுகிறார்
‘நான்கு மதுஹபுகளுடைய இமாம்களும் ஒரு தலைமைத்துவம் இருக்கவேண்டியதை ஃபர்ளு என்பதில் கருத்தொற்றுமை கொண்டுள்ளார்கள்.
மேலும் மார்க்க விவகாரங்களை நிலைநாட்டக் கூடிய இமாம் முஸ்லிம்களுக்கு கட்டாயம் இருந்தாகவேண்டும். ஒரே நேரத்தில் இரு தலைமைத்துவம் இருக்கக் கூடாது என்பதிலும் இவர்கள் கருத்தொற்றுமை கொண்டுள்ளார்கள்’
ஷாஃபி மதுஹபின் சட்ட மேதையான இப்னு ஹஜர் ஹைதமி ரஹ்மதுல்லாஹி அலைஹி தனது ”அஸ்ஸவாஇகில் மஹ்ரகா அலா அஹ்லிர் ரஃப்ல் வழ்ழலாலி வஸ்ஸின்தீகா” எனும் நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
‘ஸஹாபாக்கள் அனைவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப்பின் ஒரு இமாம் (கலீஃபா) ஏற்படுத்தப்படவேண்டும் என்பதில் ஒன்றுபட்டனர். நுபுவத்துடைய காலத்திற்குப் பிறகு இதனை ஸஹாபாபக்கள் ஒரு முக்கிய கடமையாகவே கருதினர். எந்தளவுக்கு என்றால் அவர்களை அடக்கம் செய்யும் பணியைவிட இந்த கடமையை முக்கிய கடமையாக கருதினர் மற்றும் அதில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர்.’
இரண்டாம் ஷாஃபி எனப்போற்றப்படும் இமாம் நவவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம் என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்கள்.
‘முஸ்லிம்கள் மீது கலீஃபாவை கட்டாயம் நியமிக்க வேண்டும் என்ற விஷயத்தில் (அறிஞர்கள்) ஒன்றுபட்டனர்’
இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது ”அல் மவ்சூஆ அல் அக்தியா” என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்:
‘இமாம் (கலீஃபா) நியமிக்கப்படாவிட்டால் மக்களுடைய விவகாரங்களில் ஃபித்னா ஏற்பட்டுவிடும்.’
இமாம் நஸஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது ”அல் அகீதா அல் நஸஃபியா” எனும் நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்!
‘முஸ்லிம்களுக்கு ஓர் இமாம் கட்டாயம் இருக்க வேண்டும் அவர் சட்டங்களை நடைமுறைப்படுத்துவார் மேலும் குற்றவியல் சட்டங்களை நிலைநாட்டுவார்’
இமாம் குர்துபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:
‘நிச்சயமாக கிலாபா என்பது மார்க்கத்தின் தூண்களில் ஒரு தூணாகும் அதைக்கொண்டுதான் முஸ்லிம்களின் ஆற்றல் உறுதிபெறும்’
இப்னு தைமியா ரஹ்மதுல்லாஹி அலைஹி தனது ”அஸ்ஸியாஸா அஷ் ஷர்இய்யா” எனும் நூலில் இவ்வாறு கூறுகிறார்கள்.
”மக்களின் விவகாரங்களில் பொறுப்பேற்கும் ஒரு தலைமைத்துவம் அமைவது கடமைகளில் மிகவும் தலையாய கடமையாகும். இல்லாவிடில் தீன் என்பது நிலைநாட்டப்பட முடியாத ஒன்றாகிவிடும்…..”
எனவே, இன்று முஸ்லிம் உம்மத் இழந்துள்ள ஒரே தலைமை இல்லாததால் குஃப்ஃபார்கள்(kuffaar) இன்றுள்ள முஸ்லிம் ஆட்சியாளர்களுடன் சேர்ந்து உம்மத்தை மேலும் பலமிழக்கச் செய்வதுடன் இஸ்லத்திற்கும் முஸ்லிம்களுக்கும் கண்ணியம் இல்லாமல் செய்துவிட்டார்கள்.
இந்த நிலை மீள உருவாகாத வரை இஸ்லாத்தின் எதிரிகள் எம்மை கூறுபோட்டுக்கொண்டு மேலும் பேரழிவையே ஏற்படுத்துவார்கள்.
இவ்வாறான நிலையில் இருந்து மீள இஸ்லாத்தில் ஒரே தலைமைதான் இருக்க வேண்டும்!