இந்து என்றபாசிச உணர்வுஎப்போதும் உழைக்கும் மக்களுக்கு எதிரானது! அது ஒரு குறிப்பிட்ட சாதியினரின் சுரண்டலுக்கும், சுக போகத்துக்கும் உருவாக்கப்பட்டது! –அருந்ததி ராய்
22, டிசம்பர் 2008-ல் வெளிவந்த, “அவுட் லுக்” இதழில் அருந்ததி ராய் “9 IS NOT 11 AND NOVEMBER ISN’T SEPTEMBER” என்ற கட்டுரையில்-ஆர்.எஸ்.எஸ்-க்கு 45000 கிளைகள் உண்டு, அதனுடைய அறக்கட்டளைகள் மற்றும் ஏழு மில்லியன் தன்னார்வ ஊழியர்கள் மூலம் இந்தியா முழுவதும் (சிறுபான்மையினர் மீது) தன்னுடைய வெறுப்புக் கொள்கையை பரப்பி வருகிறது என்கிறார்!
பாசிச இந்துத்துவம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள, அதாவது உழைக்கும் மக்களை தொடர்ந்து சுரண்டிவரவும், அவர்களை தொடர்ந்து ஒடுக்கி வரவும் பல்வேறு செயல் திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறது!
இந்துத்துவ பாசிசத்தின் இந்த செயல்திட்டங்களை நிறைவேற்ற பாசிச சக்திகள் அரசியல் பிரிவு, வன்முறைப் பிரிவு, மாணவர் பிரிவு, கல்விப் பிரிவு,சிந்தனைப் பிரிவு, எழுத்துத் துறை, மதப் பிரிவு, சமுக ஒருங்கிணைப்புப் பிரிவு தத்துவப் பிரிவு என்று பல்வேறு பிரிவுகளாக அணிதிரண்டுள்ளன.
பாசிச சக்திகளின் இத்தகைய பிரிவுகள் அனைத்தும் இந்தியாவை இந்து (பாசிச) நாடாக்க வேண்டும் என்ற பொது சிந்தனையைக் கொண்டு,செயலாற்றி வருபவைகளே!
இந்தியாவை இந்து நாடாக்க வேண்டும் என்றால், அனைவரையும் இந்துக்களாக மாட்டவேண்டும்! அது இந்தியாவின் இறையாண்மைக்கு, சமய நல்லிணக்கத்துக்கு எதியானது மட்டுமல்ல, எப்போதும் நடைபெற இயலாத ஒன்று என்பதால்தான், இந்தியாவில் இந்துவாக இல்லாத மக்களை, அதாவது முஸ்லிம்கள், கிருத்துவர்கள் போன்ற சிறுபான்மை மக்களை தொடர்ந்து எதிர்த்து வருகிறது! சிறுபான்மை மக்களை தொடர்ந்து ஒடுக்க முற்ப்பட்டு வருகிறது!
பாசிச இந்துத்துவத்தின் இந்த ஒடுக்குமுறைக்கு ஆதரவாகவே இந்தியாவில் மதகலவரங்கள் நடத்தப்படுகின்றன! மதக் கலவரங்களை பெரிய அளவில் நடத்தவும், சிறுபான்மையினரை ஒடுக்கி, அழிக்கவும் வேண்டியது பாசிச இந்துவத்தின் தேவை மற்றும் செயல் திட்டமாக உள்ளபடியால், பாசிச அணிகள் நாடொறும் சிறுபான்மை இன மக்கள் தேச துரோகிகள் என்றும், அவர்கள் தீவிரவாதிகள் என்றும் சாமானிய மக்களிடம் துவேசத்தை பரப்பியும்,வளர்த்தும் வருகிறது!
சிறுபான்மை இனத்தவர்களை நாட்டின் பொது பொது எதிரியாக காட்டி வருவதால் தங்களது சுரண்டலை தொடர முடியும் என்று பாசிச இந்துத்துவம் நம்பிவருவதுடன் மூலம் உழைக்கும் மக்களை கொண்டே சிறுபான்மை இனத்தவர்களை அகற்றிவிடவும் முடியும் என்ற உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளது! இத்தகைய நோக்கத்துக்கு பயன்படுவதே, “நாமெல்லாம் இந்து” என்பதும், “இந்துக்களே ஒன்று சேருங்கள்” என்பதுபோன்ற கோஷங்கள் பாசிச சக்திகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றன!
ஆகவே, இந்து என்ற பாசிச உணர்வு எப்போதும் உழைக்கும் மக்களுக்கு எதிரானது! அது ஒரு குறிப்பிட்ட சாதியினரின் சுரண்டலுக்கும், சுக போகத்துக்கும் உருவாக்கப்பட்டது!
இந்துத்துவம் என்ற பாசிச வெறி உள்ளவரை, அதன் ஆதிக்கம் இந்தியாவில் நீடிக்கும் வரை இந்தியா கல்வி, வேலை, பொருளாதாரம், நாகரீகம், பண்பாடு உள்ளிட்ட எதிலும் தன்னிறைவு அடைய முடியாது! உண்மையான சமத்துவமும், ஜனநாயகமும் ஏற்படாது. ஏழ்மையும், அடிமைத்தனமும் நீடிக்கும் நாடாகவே அது இருந்துவரும்! எப்போதும் சமஉரிமையும், சகோதரத்துவமும் அமைதியும் இல்லாத நாடாகவே இந்தியா இருந்து வரும்!
ஹோசூர் ராஜன்