Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வழிகேடன் அழைக்கிறான்!

Posted on November 5, 2013 by admin

வழிகேடன் அழைக்கிறான்!

  உஸ்மான் இப்னு சல்மான்   

இவ்வுலகில் முஸ்லிமாக இருக்கின்ற நமக்கு எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று அல்லாஹ் கூறவில்லை. நமக்கென கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என ஐந்து கடமைகளை வகுத்துள்ளான்: கட்டுப்பாட்டுக்குள் வாழ வேண்டுமென்றுதான் அல்லாஹ் முன்னைய நெறிநூல்களையும், குர்ஆனையும் அனுப்பி அதைக் கற்றுத் தருவதற்கு நபிமார்களையும் அனுப்பி வைத்தான். ஆனால் ஷைத்தானுடைய சூழ்ச்சியால் ஏதாவது ஒரு விஷயத்தில் ஷைத்தானுடைய வலையில் முஸ்லிம்களும் சிக்கித் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அல்லாஹ்விடம் ஷைத்தானின் வலையில் சிக்கக் கூடாது என்று பாதுகாப்பு தேடிக் கொள்ள வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “எவன் ஒருவன் அதிகமாக அவூதுபில்லாஹி மினஷ் ஷைத்தானின் ரஜீம் என்று சொல்கிறானோ அவன் ஷைத்தானிட மிருந்து பாதுகாப்புப் பெற முடியும்” என்று கூறினார்கள். ஆகவே ஷைத்தான் என்றால் யார்? அவன் எப்படிப்பட்டவன்? அவன் நம்மை எப்படி வழிகெடுப்பான்? அவனுடைய முக்கியமான சூழ்ச்சி என்ன என்பதை நாம் இக்கட்டுரையில் அறிந்து கொள்வோம்.

ஷைத்தானின் ஆரம்ப நிலை என்ன என்பதை அறிந்து கொள்வோம்.

நம்முடைய வாப்பாவான ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையே கெடுத்து அவர்களிலிருந்தே நம்மையும் வழிகேட்டில் அழைக்க ஆரம்பித்துவிட்டான்.

“இன்னும் திட்டமாக நாம் உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருவம் அமைத்தோம், அதன் பின்னர் ஆதமுக்கு சிரம் பணியுங்கள் என மலக்குகளுக்கு நாம் கூறினோம், அப்பொழுது இப்லீஸைத் தவிர மற்ற யாவரும் அவருக்குச் சிரம் பணிந்தார்கள்; சிரம் பணிந்தவர்களில் அவன் இருக்கவில்லை”. (அல்குர்ஆன் : 7:11)

ஆகவே, அல்லாஹ் இப்லீஸிடம் “”நான் உனக்கு கட்டளையிட்ட சமயத்தில், நீ சிரம் பணிவதிலி ருந்து உன்னைத் தடுத்தது எது?” என்று கேட்டான்; அதற்கு “”நான் அவரை விட மேலானவன், நீ என்னை நெருப்பால் படைத்தாய்; அவரைக் களி மண்ணால் படைத்தாய்” என்று (ஆணவத்துடன்) அவன் கூறினான். (அல்குர்ஆன்: 7:12)

இதிலிருந்து நீ இறங்கிவிடு; நீ இதில் பெருமை கொள்வதற்கு உனக்குத் தகுதியில்லை; ஆதலால் நீ வெளியேறிவிடு, (உன் பெருமையின் காரணமாக) நிச்சயமாக நீ சிறுமைப்பட்டோரில் இருக்கின்றாய் என்று (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான். (அல்குர்ஆன் : 7:13)

அதற்கு இப்லீஸாகிய அவன், “(இறந்தோர் மண்ணறைகளிலிருந்து) எழுப்பப்படும் நாள் வரையில் நீ எனக்கு அவகாசம் அளிப்பாயாக” என்று கேட்டான். (அல்குர்ஆன் 7:14)

“நிச்சயமாக நீ (அவ்வாறே) அவகாசமளிக்கப் பட்டோரில் (ஒருவனாக) இருக்கின்றாய்” என்று அல்லாஹ் கூறினான். (அல்குர்ஆன் 7:15)

“நீ என்னை வழிகெட்டவனாக ஆக்கியதன் காரணத்தால் (ஆதமுடைய சந்ததிகள்) உன்னு டைய நேரான வழியில் (செல்லாது தடை செய்ய வழி மறித்து அதில்) அவர்களுக்காகத் திட்டமாக உட்கார்ந்து கொள்வேன்” என்றும் (இப்லீஸாகிய) அவன் கூறினான். (அல்குர்ஆன் 7:16)

“பின்னர், நிச்சயமாக அவர்களுக்கு முன்னும் அவர்களுக்குப் பின்னும், அவர்களின் வலப்புறங் களிலும், அவர்களின் இடப் புறங்களிலும் அவர்க ளிடம் நான் வந்து (அவர்களை வழிகெடுத்துக்) கொண்டேயிருப்பேன்; மேலும், அவர்களில் பெரும் பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாக நீ காணமாட்டாய்” (என்றும் கூறினான்). (அல்குர்ஆன் 7:17)

இகழப்பட்டவனாகவும், விரட்டப்பட்டவனா கவும் நீ இதிலிருந்து வெளியேறி விடு; நிச்சயமாக (உன்னையும்) அவர்களில் உன்னைப் பின்பற்றிய வர்களையும் (சேர்த்து) உங்கள் அனைவரிலிருந்தும் நிச்சயமாக நரகத்தை நான் நிரப்புவேன்” என்று அல்லாஹ் கூறினான். (அல்குர்ஆன் 7:18)

மேலும், “”ஆதமே! நீரும், உம்முடைய மனைவி யும் (இச்) சுவர்க்கத்தில் வசித்திருங்கள்; பின்னர் நீங்கள் இருவரும் நீங்கள் நாடிய இடத்திலெல்லாம் (சென்று நாடியவாறு) புசியுங்கள்; இன்னும் இம்மரத்திற்கு (அருகில்) நீங்களிருவரும் நெருங்கா தீர்கள்; (அவ்வாறு சென்றால்) நீங்களிருவரும் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்கள்” (என்றும் அலலாஹ் கூறினான்) (அல்குர்ஆன் 7:19)

பின்னர், அவ்விருவருக்கும் மறைக்கப்பட்டி ருந்த அவ்விருவருடைய வெட்கத் தலங்களை அவ்விருவருக்கும் வெளிப்படுத்துவதற்காக, ஷைத் தான் ஊசாட்டத்தை அவ்விருவருக்கும் உண்டாக்கி னான். மேலும் (அதன் கனியைப் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாகி விடுவீர்கள்; தவிர (வேறெ தற்காகவும்) உங்கள் இரட்சகன் அம்மரத்தை விட்டும் உங்களிருவரையும் தடுக்கவில்லை” என்று கூறினான். (அல்குர்ஆன் 7:20)

நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் உபதேசம் செய்பவர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்” என்று அவ்விருவரிடமும் (இஃப்லீஸ்) சத்தியமும் செய்தான். (அல்குர்ஆன் 7:21)

அவ்விருவரை ஏமாற்றி கீழே இறங்கச் செய்தான்; எனவே அவ்விருவரும், அம்மரத்தை (அதன் கனி யை)ச் சுவைக்க அவ்விருவரின் வெட்கத் தலங்களும் அவ்விருவருக்கும் வெளியா(கித் தெரியலா)யிற்று; அச்சுவனத்தின் இலைகளைக் கொண்டு அவ்விரு வரும் தங்களை மூடிக் கொள்ளவும் ஆரம்பித்தனர். மேலும் அவ்விருவரின் இரட்சகன் அவ்விருவரை யும் அழைத்து, “”இம்மரத்தை விட்டும் உங்களிரு வரையும் நான் தடுக்கவில்லையா?” நிச்சயமாக ஷைத்தான் உங்கள் இருவருக்கும் பகிரங்கமான பகைவன் என்றும் நான் உங்களுக்குக் கூற வில்லையா?” (என்று கேட்டான்) (அல்குர்ஆன் 7:22)

“”எங்கள் இரட்சகனே எங்களுக்கு நாங்களே அநீதம் இழைத்துக் கொண்டோம்; நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள்புரியாவிடில் நிச்சய மாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகி விடு வோம்” என்று அவ்விருவரும் (பிரார்த்தித்துக்) கூறினார். (அல்குர்ஆன் 7:23)

(அதற்கு அல்லாஹ் இதிலிருந்து) நீங்கள் இறங்கி விடுங்கள். உங்களில் சிலர் சிலருக்குப் பகைவர்களா வீர்கள்; பூமியில் உங்களுக்குத் தங்ககுமிடமும் உண்டு. (அதில்) ஒரு காலம் வரை சுகம் அனுபவித் தலும் உண்டு” என்று கூறினான். (அல்குர்ஆன் 7:24)

ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும் அவ்விருவரின் மானத்தை அவ்விருவருக்கும் காண்பிப்பதற்காக வேண்டி அவ்விருவரின் ஆடையை அவ்விருவரை விட்டும் அவன் களைந்து (அவர்கள் இன்பமுடன் வசித்த வந்த) சொர்க்கத்திலிருந்த வெளியேற்றி (சோத னைக்குள்ளாக்கியது) போன்று உங்களையும் அவன் சோதனைக்குள்ளாக்கிவிட வேண்டாம். (அல்குர்ஆன் 7:27)

அடுத்ததாக,

ஷைத்தான் அல்லாஹ்வுக்கு பயப்படுவானா என்பதை நாம் அறிவோம்.

ஷைத்தான் பயப்படுவது போல் நடிப்பான்; நயவஞ்சகர்கள் எப்படி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமும் அவர்களுடைய சஹாபாக்களிடமும் இருக்கும் போது நான் அல்லாஹ்வை வணங்குகிறேன் என்றும் ஷைத்தான்களுடன் இருக்கும் போது நான் உங்களையே பின்பற்றுகிறேன் என்றும் கூறுவர். அதே போல் ஷைத்தானும் நம்மை வழிகெடுத்து விட்டு அல்லாஹ்விடம் நான் உன்னையே வணங்கு கிறேன் என்று கூறுவான். இதற்கு சான்றாக அல்குர்ஆன் 59:16 பார்க்கவும்.

அடுத்ததாக ஷைத்தானின் முக்கியமான சூழ்ச்சி என்ன என்பதைப் பார்ப்போம்.

ஷைத்தான் பல வழிகளில் முஸ்லிமான நம்மை வழிகெடுத்துக் கொண்டு இருக்கிறான். அதிலேயே முக்கியமான சூழ்ச்சி என்ன என்பதை திருகுர் ஆனில் பார்ப்போம்.

“”என் இரட்சகனே! நீ என்னை வழிகேட்டில் விட்டு விட்டதால், இவ்வுலகில் (தீயவற்றை) அவர்களுக்கு அழகாகத் தோன்றுமாறு செய்து அனைவரையும் வழிகெடுப்பேன். (அல்குர்ஆன் 15:39)

முக்கிய குறிப்புகள்:

ஆகவே, நம்மால் அவனை பார்க்க முடியாது. ஆனால் அவன் நம்மைப் பார்ப்பான். அல்லாஹ் சிலரை ஷைத்தானுக்கு நண்பனாக ஆக்கிவிடுவான்.

அவனை(ஷைத்தானை) நண்பனாய் எடுத்துக் கொள்பவரை அவன் வழிகெடுத்து எரிகிற நரக வேதனையின் பாலே அவருக்கு வழிகாட்டுகிறான் என அவனைக் குறித்துப் பதியப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 22:4)

அல்லாஹ் அவனுடைய திருப்பொருத்தத்திற்காக அமல் செய்யக்கூடியவர்களை ஷைத்தான் வழி கெடுக்க முடியாது என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 15:40)

ஷைத்தான் நம்மை வழிகெடுக்கத் தூண்டும் விஇயங்கள்: அல்லாஹ் அல்லாதவர்களுக்கு வழி பட்டு கொடிய ஒர்க்கில் மூழ்கச் செய்வான்.

உலகத்தில் வழிகேடாக இருக்கும் விஇயங்களை அழகாகக் காண்பிப்பான். அல்லாஹ் படைத்த உறுப்புக்களை மாற்றி அமைக்கத் தூண்டுவான் (உதாரணமாக, பிளாஸ் டிக் சர்ஜரி, மூக்கு நீட்டாக இருக்க அதை மாற்றி அமைத்தல்)

தாடியை வழித்துவிடச் சொல்லுவான், தாடியை ட்ரிம் செய்யச் சொல்லுவான், சவுரி முடி வைக்கத் தூண்டுவான். அவனுடைய வேலையை அவன் செய்து கொண்டேதான் இருப்பான் கியாமத் நாள் வரை. நாம் தான் அல்லாஹ்வை நினைவு கூர்வதன் (திக்ரு) மூலமாகவும், அதிகம் அதிகமாக அவூதுமில் லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்று சொல்லியும் ஷைத்தானின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடியும் நம் வாழ்நாளைக் கடத்த வேண்டும்.

அதற்கு அல்லாஹ் நாம் அனைவருக்கும் உதவி செய்வானாக! வழிகேடனான அந்த ஷைத்தானின் தீங்கிலிருந்து நம் அனைவரையும் காப்பாற்ற அல்லாஹ் மிகவும் ஆற்றலுடையவன் எனக் கூறி முடித்துக் கொள்கிறேன்.

source: http://annajaath.com/?p=6231

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 7 = 2

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb