”மோடியைப் போல ஒரு பொய்யரைப் பார்த்ததே இல்லை- குஜராத் வளர்ச்சி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கே, ஏழைகளுக்கல்ல.” -சமூகப் போராளி மேதா பட்கர்
“பொதுவாக நரேந்திர மோடி செய்தியாளர்களைச் சந்திப்பதே இல்லை. பொதுக்கூட்டங்களில் மட்டுமே பேசுவார். அப்போதுதான் அவர் கூறும் பொய்கள் குறித்து யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள். -மத்திய அமைச்சர் கபில் சிபல்:
மோடியின் பொய்புரட்டுகளை பட்டியலிடும் பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார்:
இருதினங்களுக்கு முன்பு பாட்னா பொதுகூட்டத்தில் பேசிய நரேந்திரமோடி பல பொய்களையும், வரலாற்று பிழைகளையும் உளறிகொட்டினார்.அதில் முக்கியமானவை சில…..
o இந்திய அரசியல் இதிகாசத்தில் முக்கியபங்குவகித்தவர் சந்திரகுப்தர்.அவரை குப்தவம்சத்தை சேர்ந்தவர் என்று மோடி குறிபிட்டார்.ஆனால் சந்திரகுப்தர் மோரையா வம்சத்தை சேர்ந்தவர்.
o உலகபுகழ்பெற்ற “தக்ஷ்ஷீலா”என்ற பல்கலைகழகம் பிகாரில் அமைந்துள்ளது பெருமைப்பட வேண்டியதாகும் என்று மோடி கூறினார்.ஆனால் “தக்ஷ்ஷீலா”அமைந்துள்ள இடம் பாகிஸ்தான்.
o பிகாரிகளின் வீரத்தை பாராட்டிய மோடி உலகின் பல நாடுகளை கைப்பற்றிய மன்னன் சிகந்தர் இந்தியாவிற்கு படையெடுத்தபோது பிகாரிகள் கங்கைநதிக்கரையில் வைத்து அவரை மண்ணைகவ்வ செய்தனர் என்று குறிபிட்டார்.ஆனால் உண்மை என்னவெனில் சிகந்தர் பிகாருக்கு வருவதற்கு முன்பே பஞ்சாபில் போரஸ் என்பவருடன் போர்செய்து அவரை வெற்றி பெற்றார்.ஆனாலும் தோல்வியுற்ற போரசை மன்னித்து அவரை பஞ்சாபின் பொறுப்புதாரியாக நியமித்துவிட்டு நாடு திரும்பிவிட்டார்.சிகந்தர் பிகாருக்கு வரவேயில்லை.
o நானும், நிதீஷ்குமாரும் பிரதமர் அழைத்த விருந்தில் ஒரே டேபிளில் அமர்ந்து சாப்பிட்டோம் என்று மோடிகூரினார்.இதற்க்கு மறுப்பு தெரிவித்த நிதீஷ் மோடிஅலை என்பது எப்படி பொய்யோ அதேபோல் இதுவும் கடைந்தெடுத்த பொய்யாகும் என்று குறிப்பிட்டார்.
ஒரு பிரதமர் வேட்பாளராக தன்னை பிரபலபடுத்தி கொள்ளும் நபர் வரலாற்று மகத்துவங்களை இப்படி தவறாக பேசுவது அவரது பக்குவமின்மையை காட்டுவதாக நிதீஷ்குமார் கேளிக்கைசெய்தார்.
நமதுநாடு நான்குபுறமும் எதிரிகளால் சூழப்பட்டுள்ள நிலையில் மத அடிப்படையில் மக்களை பிரித்தாள முயற்சிக்கும் மோடி போன்றவர்கள் ஆட்சிக்கு வந்தால் அது மேலும் இந்தியாவை பலவீனப்படுத்தும் என்றும் எச்சரித்தார்.
பொய்யின் மறு உருவம் மோடி
o எந்த சமூக வலைதளங்களைக் கொண்டு தன் வளர்ச்சி பொய்களை எல்லாம் பரப்பினாரோ, அதே சமூக வலதளங்கள் தான் மோடியின் கோரமான நிஜ முகத்தையும் உரித்துக் கொண்டிருகின்றன என்பதை அறியாமல் மேலும் மேலும் பொய்களை பரப்பி கையும் களவுமாக மாட்டிக் கொள்வதையே வழக்கமாய் வைத்திருக்கிறார்.
o வர வர மோடி சொன்னது உண்மையா பொய்யா என்று ஆராயவேண்டிய. அளவுக்கு பொய்யா சொல்லி சொல்லி மக்களை குழப்புகிறார்.
உதரணத்துக்கு சில, 1. சோனியா அமெரிக்காவில 1880 கோடி மருத்துவ செலவு செய்தார்கள் என்றார். அது உண்மை இல்லை எனில் மன்னிப்பு கேட்க தயார் என்றார். இது ஒரு சின்ன பொது அறிவு, உலகத்துல எந்த மருத்துவமனையாவது எந்த வியாதிக்காவது இவ்வளவு charge பண்ணுவாங்கள? இதுக்குட சிந்திக்க தெறியாதவர் பிரதமாராக அசைபடுகிறார்.
o அது போல் பாகிஸ்தான் பிரதமர் மன்மொஹனை “கிராமத்து பெண்” என்று கூறினார், என்றார். அதை அப்போதே NDTV பத்திரிகையாளர் மறுத்தார். பலரும் மறுத்தனர். உடனே பிஜேபி இது தவறான தகவல் கிடைத்து விட்டது என்றனர்.
o NDA ஆட்சி காலத்தில் GDP 8.4% என்றார், ஆனால் உண்மையில் 5.9% தான். அது போல் UPA ஆட்சி காலத்தில் 4.8% என்றார், உண்மையில் UPA 1: 8.4, UPA 2 :7.3% இப்படி பல சொல்லிகொண்ட போகலாம். இதைவிட கொடுமை இவர் சொல்லும் பொய்யை பலர் வக்காலத்து வாங்குவார்கள் அவர்களை நினைத்து சிரிப்பதா அழுவாத..
o மோடி RSS என்ற அமைப்பின் வுன்மையான முகத்தை இந்த வுலகுக்கு தெரிய செய்யும் கருவியாக இருப்பார் என்பது தெளிவாகிறது. நமது நாட்டுக்கோ , சமூகத்துக்கோ எந்த ஆக்கப்பூர்வமான பலனும் இந்த மதவாத இயகக்கங்களினால் ஆகப்போவது இல்லை. கலவரங்களும், இழப்புக்களும், பிரிவினைக்களும்தான். அமைதி, வளர்ச்சி விரும்பும் மக்கள் இந்த இயக்கங்களை புறக்கணிக்க வேண்டும். வுலகம் போற்றிய அண்ணல் காந்தி வுயிரிழப்பு மறக்கப்படக்கூடியதா? மோடியை முன்னிறுத்தி பிஜேபி பெரிய தவறை செய்கிறது.
o குஜராத் அரசின் சார்பில் ‘படேலின் முழு உருவச் சிலை’ நிறுவப்படுதல் தொடர்பான முழுப்பக்க விளம்பரம் ஒன்று நேற்று (31-10-2013) தமிழ் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டிருந்தது. சங் பரிவார அமைப்புகளின் ‘அகண்ட பாரத’ கனவுடன் படேலை சம்பந்தப்படுத்தி அதில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உண்மை வரலாறோ…..! அகண்ட பாரதக் கனவு கண்டவர் தேசப் பிரிவினையை ஆதரித்திருப்பதற்கு எள்ளளவும் வாய்ப்பில்லை.
ஆனால், அன்றைய சூழலில் மவுண்ட்பேட்டன் முன்வைத்த தேசப்பிரிவினைத் திட்டத்தை ஆதரித்த முதல் காங்கிரஸ் தலைவர் ‘படேல்’ தான். காங்கிரஸும், காந்தியும், நேருவும் படேலின் முடிவை கடுமையாக எதிர்த்தனர். ‘ஒரு பிரிவினையை ஏற்க மறுத்தால்…நாடு பல பிரிவினைகளை சந்திக்க வேண்டி வரும்’ – என அவர் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு காந்தியும் நேருவும் பட்டேலின் கருத்திற்கு ஒப்புதல் தெரிவித்தனர். இத்தகைய ஒரு தீர்க்கதரிசனத்துடன் உறுதியாக செயல்பட்ட ‘இரும்பு மனிதரை’ அகண்ட பாரத கனவு கண்டவராக சித்தரிப்புது……..கடைந்தெடுத்த வரலாற்று திரிபு வாதம், அரசியல் அநாகரீகம்.
படேலை வைத்து அரசியல் செய்ய முயன்ற அத்வானியை நாடு நம்பவில்லை. மோதியை மட்டும் நம்புமா! மிகக் குறுகிய காலத்தில் தெரிந்துவிடும்.
மோடி பொய் சொல்வதில் கிண்ணஸ் சாதனையை நோக்கி. பயணிப்பதை நிரூபிக்கும் வண்ணம் நேற்று (31 10 2013) ”தமிழ் இந்து” வில் வெளியான தலையங்கம் இதோ…
வரலாற்றோடு விளையாடாதீர்கள் மோடி!
சில வார்த்தைகளால் வரலாற்றை மாற்றி எழுதிவிட முடியுமா? பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் போக்கைப் பார்க்கும்போது, முடியும் என்று அவர் நம்புவதாகத் தோன்றுகிறது.
உலகின் மிகப் பெரிய சிலையை சர்தார் வல்லபாய் படேலுக்கு நிர்மாணிக்கும் முயற்சியில் மோடி இறங்கியபோது, அவருடைய நோக்கம் படேலை குஜராத்தின் பிரதிநிதியாக்குவதாக இருக்கும் என்று தோன்றியது. இப்போது இன்னும் ஒருபடி மேலே போய் அவரை மறைமுகமாக இந்துத்துவப் பிரதிநிதியாக்க முற்படுகிறார் மோடி.
அகமதாபாதில் நடைபெற்ற படேல் அருங்காட்சியகத் தொடக்க விழாவில், பிரதமர் மன்மோகன் சிங்கை வைத்துக்கொண்டு, ‘‘இந்தியாவின் முதல் பிரதமராக படேல்தான் ஆகியிருக்க வேண்டும்; அப்படி படேல் பிரதமராகி இருந்தால், நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும்’’ என்று பேசியதன் மூலம் நேரு, படேல் இரு ஆளுமைகளின் வரலாற்றையும் திரிக்கிறார் மோடி.
இந்திய விடுதலைப் போராட்டத்திலோ, சுதந்திர இந்தியாவைக் கட்டமைத்ததிலோ வேறுபடுத்திப் பார்க்க முடியாத அர்பணிப்பு நேரு, படேல் இருவருடையதும். காந்தியைப் போலவே படேலும் ஒரு குஜராத்தி. நேருவைவிட 14 வயது மூத்தவர். படேலுக்குப் பின், சில ஆண்டுகளுக்குப் பிறகே காந்தியின் படையில் வந்து சேர்ந்தார் நேரு. ஆனால், நேருவைத்தான் காந்தி தன்னுடைய வாரிசாகப் பிரகடனப்படுத்தினார். நேருவுக்கும் படேலுக்கும் இடையே போட்டி இருந்தது; பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனாலும், நேருவை ஏற்றுக்கொண்டார் படேல்.
1950-ல் இறப்பதற்குச் சில மாதங்கள் முன் இந்தூரில் காந்தி ஜெயந்தி விழாவில் பங்கேற்ற படேல், ‘நேருவே நம் தலைவர். பாபுஜி தன் வாரிசாக நியமித்தவர் அவர். பாபுஜியின் மரண சாசனத்தை நிறைவேற்றுவது நம் கடமை. பாபுஜியின் அஹிம்சா படையில் நானும் ஒரு வீரன். நான் விசுவாசமற்றவன் அல்ல’ என்று பேசியதையும் நேருவுடனான கடைசி சந்திப்புகளின்போது ‘நீங்கள் என் மீது நம்பிக்கையை இழந்துவருகிறீர்களோ என்று வருந்துகிறேன்’ என்று பகிர்ந்துகொண்ட வேதனையையும் நாடு இன்னும் மறந்துவிடவில்லை.
சிறுபான்மையினரைக் கையாளும் விஷயத்தில் நேருவுக்கும் படேலுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கலாம்; இந்து அமைப்புகளிடம் படேல் பரிவுகாட்டியிருக்கலாம். ஆனால், ஒருபோதும் அவர் மத அடிப்படைவாதி அல்ல; நேருவை எந்த அறநெறிகள் வழிநடத்தினவோ அதே காந்திய அறநெறிகள்தான் படேலையும் வழிநடத்தின. இருவரின் முதன்மை நோக்கும் காந்தியின் கனவு இந்தியாவைக் கட்டியெழுப்பவதுதான்.
விருப்பம் இருந்தால், தன்னை இன்றைய படேலாக மாற்றிக்கொள்ள மோடி முயலலாம் நாட்டுக்கு அது நல்லது. ஆனால், படேலை ஒருபோதும் அன்றைய மோடியாக்கிவிட முடியாது!
பொய்க்கு துணை போகும் பொய்யர்கள்
மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என்னவென்றால் மோடியின் பொய்களுக்கு ஒத்து ஓதும் ஜால்ராக்களாக இன்றைய ஊடகங்கள் பலவும் விலை போயுள்ளதை குறிப்பிடலாம். ஒரு பொய்யரை முன்னிலை படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த ஊடகங்கள் சமூகச்சீர்கேட்டை ஏற்படுத்தி அதில் குளிர்காய நினைக்கும் நச்சுகள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். அதுவும் விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ள இக்காலத்தில் அவர்களை ஏமாற்றுவது அவ்வளவு எளிதல்ல.
“உலகிலேயே மிக மோசமான ஒரு சொல்…. குடிகாரன், பெண்பித்தன், கொலைகாரன் என்பதைவிட “பொய்யன்” எனும் சொல்தான். அவ்வாறு இருக்கையில் ஒரு நாட்டின் பிரதமராக வருகின்றவர் பொய்யராக இருக்கும் பட்சத்தில் அந்த நாடு எந்த அளவுக்கு மோசமான நிலைக்குத்தள்ளப்படும் என்பதை சிந்தித்துப்பாருங்கள்.”-adm. nidur.info