கொலையில் முடிந்த “கள்ளக்காதல்”!
ஓர் உண்மை சம்பவத்தை பற்றி விவரமாக காண்போம்… கூத்தாநல்லூர் வட்டம் லெச்சுமாங்குடியை சார்ந்த ஓர் ஆசிரியை அறிவியல் ஆசிரியராய் பணியில் இருக்கிறார் அவரின் கணவரும் ஓர் ஆசிரியர் அவர் வேறு பள்ளியில் தலைமை ஆசிரியராய் பணிபுரிகிறார். அறிவியல் ஆசிரியைக்கு தான் பணிபுரியும் அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் மேல் ஓர் ஈர்ப்பு அவரின் நகைச்சுவை பேச்சு, சரளமாக பழகும் தன்மை, இவைகள் பெண் ஆசிரியைக்கு பிடித்துப்போக நட்பு நாள் ஆக காதலாய் [ கள்ளக்காதல் ] மாறிப்போக மனதை பறிகொடுத்தவருக்கு தன்னையும் கொடுத்து விட்டாள்! இந்த தொடர்பு 7 வருடங்கள் தொடர்ந்தன.
கணவனாகிய தலைமை ஆசிரியருக்கோ இந்த நடவடிக்கைகள் எதுவும் தெரியாமல் போனது காரணம் காலையில் எட்டு மணிக்கு வீட்டை விட்டு சென்றால் இரவு 6 மணிக்குத்தான் திரும்ப வீடு வந்து சேர்வர். இருவரும் வேலை நேரத்தில் மனைவி வேலைக்கு சென்று வருகிறாள் என்று கணவன் நினைக்க அந்த ஆசிரியையோ திசைமாறி இருக்கிறாள் திசைமாரியதோடு மட்டுமல்லாது நிலை தடுமாறி கொலைகாரியாக இன்று சிறையில்.
தன் கணவரை கொலை செய்த குற்றத்திற்காக தானே அப்ரூவராக மாறி தான் செய்த குற்றத்தை அவரே ஒப்புவிக்கிறார் கேளுங்கள் கொடுமையை. கள்ளக்காதலர்கள் இருவரும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்பே காரை ஏற்றி கொலை செய்துவிடலாம் என்று செயல் படுத்த அதில் தலைமை ஆசிரியருக்கு காலில் முறிவோடு தலை தப்பியது.
அடங்காத கள்ளக்காதலன் இரண்டு வருடம் கழித்து பெண் ஆசிரியையிடம் கூறுக்கிறான் நாம் இருவரும் சேர்ந்து வாழவேண்டுமானால் உன் கணவன் உயிரோடு இருக்க கூடாது என்று அடுத்த சதித்திட்டம் தீட்டுகிறான் கள்ளக்காதலியும் சம்மதிக்க தோசை மாவில் தூக்க மாத்திரை கலக்கப்பட கணவர் ஆழ்ந்த உறக்கம் கொள்ள விச ஊசியால் கொலை செயப்பட திட்டம் ! ஊசியும் ஒடிந்து போக அடுத்த முயற்ச்சி வாயில் விஷ மருந்து செலுத்தப்பட்டு இறக்கிறார் அப்பாவி கணவன்.
நான்கு மாதங்கள் கழிகிறது கொன்ற கொலைகாரிக்கு மனசாட்சி உறுத்த தானே வந்து சரண்டர் ஆகிறாள் காவல் நிலையத்திற்கு. அந்த ஆசிரியையின் மற்றொரு வாக்கு மூலம் தன் பிள்ளையையும் கள்ளக்காதலன் கொலை செய்து விடலாம் என்ற பயமும் அப்ரூவர் ஆக காரணம் ஆகும் ஆட்டை வேட்டை ஆடிய ஓநாய்கள் தங்களுக்குள்ளே மூர்க்க குணத்தை வெளிப்படுத்தி விட்டதுதான் இந்த செயல்
இவைகள் இப்படி இருக்க ஆடுகளால் வேட்டையாடப்பட்ட ஓநாய் கதையும் நடந்தேறி இருக்கிறது மூன்று மாணவர்கள் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு கல்லுரியின் முதல்வரையே ஓட ஓட விரட்டி வெட்டி சாய்த்த அவலம் ஒழுக்கம் சொல்லிக்கொடுக்க வேண்டிய பள்ளிகள் கவுண்டர்கள் திறந்து பணத்தை சேர்க்கையில் “யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் பாட வேண்டியதுதான்”
1. மனிதாபிமானம், அன்பு, பாசம், குழந்தைகள், அவர்களின் எதிர்காலம் என்று எதையுமே பொருட்படுத்தாமல் சுயநலம், சபலம், காமம், துரோகம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் கேடு கெட்ட மனிதர்கள் ஒரு வகையாகவும்…
2. கணவன் எங்கோ போய் குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கையில் இங்கே கள்ளக்காதலனோடு தொடர்பு ஏற்படுத்தி அவர்களின் போலியான அன்பையும், பாசத்தையும் உண்மை என நம்பி தனது குடும்ப அந்தரங்க ரகசியங்களைச் சொல்லி அவர்களிடம் ஏமாந்து போனவர்கள் மற்றொரு வகையாகவும்…
3. பிள்ளைகள் கல்வி கற்க வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம். காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங் கிளாஸ், ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, கிளப், பப், சுற்றுல்லா என்று போகும் இடங்களில் அவர்கள் “காதல்” வலையில் சிக்கிக்கொண்டு இந்த இனம்புரியாத வயதில் சின்னாபின்னமாகி போனவர்கள் ஒரு வகையாகவும்..
4. பொழுதைப் போக்குகின்ற விழாவில் ஏற்பட்ட சந்திப்பு, தொலைத்தொடர்புகள் மூலம் ஏற்பட்ட தொடர்பு போன்றவற்றால் வீட்டை விட்டு ஓடிப் போனவர்கள் இன்னொரு வகையாகவும்………………..
5. குடும்ப உறுப்பினர்கள், அக்கம்பக்கத்தினர் சிலரால் ஏற்பட்ட முறையற்ற தொடர்பைக் கொண்டுள்ளவர்கள் மற்றொரு வகையாகவும்…
என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்
source: http://nijampage.blogspot.in/2013/10/blog-post_29.html