மூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா?
நான் போன மாதம் என் வேலை விஷயமாக ஒருவரை சந்தித்தேன். அவர் ஒரு ஹிந்து. நன்கு படித்து ஈரோட்டில் சொந்தமாக ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியும் ஒரு ஸ்கூலும் நடத்தி வருபவர். என் கணவரின் உடல்நிலை பற்றியும், மூளையில் ஹெமரேஜ் ஆனது பற்றியும் வலது கை இயக்கம் சரியாக மருந்தே இல்லை என்றும் சொன்னேன். அதற்கு அவர் சொன்ன விஷயங்கள் அப்படியே அவரின் மொழியில் தருகிறேன்:
”உங்க பெற்றோர் வீடு இருப்பதாக சொல்லும் கந்தசாமி வீதியில் குடியிருக்கும் முஹம்மத்அலி-யை உங்களுக்கு தெரியுமா?”
“தெரியும் ஆனால் அவ்வளவாக பழக்கம் இல்லை”
“மேடம்… அவருடைய பேரன் 3 வயது குழந்தை. பிறந்ததில் இருந்து ஹார்ட்டில் சின்னதாக ஒரு பிரச்சினை இருந்து வந்தது. அவர்கள் குடும்பம் இருப்பது சவூதியில். அவர்கள் அக்குழந்தையை அழைத்துக் கொண்டு ஹஜ்ஜுக்கும் சென்று வந்தனர். அக்குழந்தை கிராஅத் ஓதும் அழகைக் கண்டு சவூதிகளே வியந்து பாராட்டி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அந்த குழந்தை இந்தியாவில் இருந்த போது திடீரென்று சுயநினைவை இழந்து விட்டது. அக்குழந்தையை ஒரு ஹாஸ்பிடலில் சேர்த்து சிகிச்சை அளித்தார்கள்.
என்ன செய்தும் குழந்தைக்கு சுயநினைவு மட்டும் வரவே இல்லை. இதற்கும் மேல் இதற்கு ட்ரீட்மெண்ட் இல்லை என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள்.
சுமார் 2 மாதங்கள் அக்குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் செயற்கை சுவாசத்தில் இருந்தது. ஒரு நாள் டாக்டர்கள் “இந்த குழந்தைக்கு மூளைச்சாவு ஏற்பட்டு விட்டது. உயிர்காக்கும் கருவிகளையும் செயற்கை சுவாசத்தையும் அகற்றி விட்டால் அக்குழந்தை இறந்து போகும். இதே நிலையில் இனி வைத்திருக்க முடியாது. உடலைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டார்கள்.
மனதை ஒருவாறு தேத்திக் கொண்ட பெற்றோர் உடலை பெற்றுக் கொண்டு அவர்கள் சொந்த ஊரான மேட்டுப்பாளையம் செல்ல முடிவு செய்தார்கள். மேட்டுப்பாளையத்தில் குழந்தையின் உடலை அடக்கம் செய்ய குழியும் தோண்டி விட்டார்கள். எந்த அசைவும் இல்லாத அக்குழந்தையை கனத்த இதயத்துடன் பெற்றுக் கொண்டு வேனில் மேட்டுப்பாளையம் செல்ல, அசைவில்லாத அந்த குழந்தை திடீரென்று சுவாசிக்க தொடங்கியது. அது அவர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தைத் தர, அக்குழந்தையை கோயம்புத்தூர் கொண்டு சென்று இன்னொரு பிரபல ஹாஸ்பிடலில் அட்மிட் செய்திருக்கிறார்கள்.
இப்போது மூச்சு மட்டுமே வந்து கொண்டிருக்கிறது மற்றபடி வேறு எந்த அசைவும் இல்லை. உணவுகள் எல்லாம் ட்யூப் வழியாக. இப்படி ஒரு சில மாதங்கள் அவதியுற்ற பின்னால், டாக்டர்கள் குழந்தை பிழைக்க வாய்ப்பே இல்லை என்று முடிவு செய்தார்கள். இப்போது இக்குழந்தைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். உணவு செலுத்துவதையும் உயிர்காக்கும் கருவிகளையும் நிறுத்தினால் உயிர் தானாக பிரிந்து விடும். இதற்கு இருதரப்பு பெற்றோரிகளிடமும் பேசி சம்மதம் வாங்கித் தரவேண்டும் என்று இரு குடும்பத்துக்கும் நன்கு பழக்கமான என்னை (சபாநாயகம் என்ற அந்த ஹிந்துவை) அழைத்தார்கள்.
நானும் கோவை சென்று நிலைமைகளை பார்த்தேன். இக்குழந்தை பலரின் பாராட்டை பெற்ற குழந்தை. உயிரை வாங்கும் உரிமை நமக்கு இல்லை. படைத்தவன் ஒருவன் தான்… அது ஹிந்துவாக இருந்தாலும் சரி… முஸ்லிமாக இருந்தாலும் சரி… பரம்பொருள் ஒன்று தான்… உயிரை எடுப்பது பற்றி அந்த கடவுள் தான் முடிவு எடுக்க வேண்டும்… நாம் முடிவு எடுக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை. அதனால், நான் அது குறித்து பெற்றோரிடம் சமரசம் பேச மாட்டேன் என்று சொல்லி விட்டேன்.
சரி இப்போது என்ன செய்வது என்று யாருக்குமே புரியவில்லை. மாற்று மருத்துவத்தில் முயன்றால் என்ன? ஒரு இரண்டு மாதங்கள் பார்ப்போம்… முடியாவிட்டால் யோசிப்போம் என்று அக்குழந்தையை அழைத்துக் கொண்டு திருச்சூர் மாவட்டத்தில் இருக்கும் வைத்தியரிடம் சென்றோம். மிகவும் குறைந்த கட்டண சிகிச்சை தான்.
ஒரு மாதகால சிகிச்சைக்கு பின்னால், அக்குழந்தை கண்விழித்து பார்த்தது… தொடர் சிகிச்சையில் மேலும் இரண்டு மாதம் கழிந்த பின்னால், இப்போது தான் கைகால்களை அசைக்கிறது. இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. சிகிச்சை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ”
இவ்வாறு சொன்ன அவர், ஏன் நீங்களும் உங்கள் கணவரை அங்கு அழைத்துச் செல்லக் கூடாது என்று சொல்லி அந்த வைத்தியரின் அட்ரெஸ்ஸை எனக்கு மெசேஜ் செய்தார்.
அந்த முகவரி:
ATHREYAM AYURVEDIC HOSPITAL AND RESEARCH CENTER
SREE SANKARA TAPOVANAM
359/A PAMPADY WEST,
THIRUVILWAMALA,
THRISSUR DISTRICT – 680597
PH: 04884281166
CONTACT: DR. SREEJITH – 954222267