மன்மோகன்சிங்கின் மைனஸ்ஸும் ப்லஸ்ஸும்
இவருடைய ஆட்சிகாலத்தில் பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாகி உலக பணக்காரர்களின் வரிசையில் இடம் பெற்றார்கள். ஏழைகள் மிகவும் ஏழைகளாகி விட்டனர். விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்துகொண்டனர். விவசாயத்தை அடியோடு புறக்கணிக்க செய்தார். இந்திய பொருளாதரத்தை அந்நியநாடுகள் சுரண்டுவதற்கு வழிசெய்தார். ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்திற்கு விழ 1991லியெ அடித்தளம் அமைத்தார். வரலாறு காணாத ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, ஆசியா விளையட்டு மற்றும் பல ஊழல்களுக்கு காரணமானார் என்பது உண்மையே. அதே சமயம் அவரால் விளைந்த நன்மைகளையும் கணக்கில் கொள்ளாமல் இருக்க முடியாது.
நமது பிரதமர், இன்றைய உலக தலைவர்களில் கண்ணியமானவர்களில் முதன்மையானவர் என்பேன். இவர் நாட்டின் நலனுக்கு எது சரியோ அதை எப்பாடுபட்டினும் செய்து முடிப்பார் என்பதை அணு சக்தி மசோதா வில் உறுதியுடன் செய்து காட்டினார்.
தொன்னூர்களில் தனியார் மயமாக்கலை இந்த நாட்டிற்கு அறிமுகம் செய்து, இந்த நாட்டின் வறுமையை பாதியாக குறைத்து, மறு பாதி மக்களை மேல் நிலைக்கு கொண்டுவந்ததை, இன்று நன்றியுடைய எந்த இந்தியனும் மறக்க முடியாது.
தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப புரட்சி நமது பிரதமரையும் அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியையுமே சாரும். உலகம் முழுதும் இந்தியர்களின் தொழில் நுட்ப அறிவுக்கு வரவேற்பும், அங்கீகாரமும் கிடைத்தது இந்த கால கட்டத்தில்தான்.
அவை இந்த நாட்டிற்கு அறிமுகபடுத்த பட்ட வேளையில், “தொழிலாளர்களின் வேலை இழப்பிற்கு, பலர் வேலையை ஒரே மெஷினே செய்யும், இந்த கம்ப்யூட்டர் யுகம் வழி வகுக்கும். வறுமை இன்னும் பரவும்” என்று பி.ஜே.பியின் வாஜ்பாயீயும், கம்யுனிஸ்ட் தலைவர்களும் ஒப்பாரி வைத்தனர். மதவாத மோதலையும் இரண்டாம் தர அரசியலையும் செய்வதே பி ஜே பியின் வேலை.
நமது பிரதமரின் அருமையை நாம் உணராது இருப்பது அவரது துரதிர்ஷ்டமே, நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் தனக்கிருக்கும் குறைந்தபட்ச அதிகாரத்தைக் கொண்டு அவர் திறமையாகவே செயல்பட்டிருக்கிறார். இன்றைக்கு இணையத்தில் அவரை ஏக வசனத்தில் ஏசிக் கொண்டிருக்கும் பலருடைய வாழ்வாதாரம் அவருடைய தொலைநோக்கு திட்டத்தின் பலன் தான் என்பதை உணராதிருக்கின்றனர்.
பிரதமர் சொல்வதைப் போல காலம் கடந்த்த பின்னரே அவருடைய அருமையை நாம் உணர்வோம். அப்போது அவர் நம்மிடையே இருக்க மாட்டார். பாரதியில் இருது வல்லபாய் பட்டேல் வரைக்கும் இதுதான் நடந்திருக்கிறது. வாழும் காலத்தில் அவர்களுக்கான அங்கீகாரத்தை நாம் தரத் தவறிவிட்டு பின்னாளில் அவர்களை கொண்டாடிக் கொண்டிருப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்.
இந்தியா வறுமையில் இருப்பதாகக் கூறும் கருத்தை வாசகர்கள் ஏற்பார்களா என்று தெரியவில்லை. காடும், மேடும் கிடந்த மண்ணில் இன்று எங்குபார்த்தாலும் பள்ளி- கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களாக காணப்படுகின்றனவே… மிக ஏழை குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் படித்து வேலைக்குப் போய், அடுத்த தலைமுறை ஏழ்மையில் இருந்து விடுதலையாகி இருக்கின்றனவே… ஊருக்கு ஊர் நீங்கள் வங்கிகளைப் பார்த்தாலே தெரியுமே… மக்கள் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
20 வருடத்திற்கு முன்பு ரேஷன் கடை முன்பு மிகப் பெரிய கூட்டம் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். ஆனால், இன்று அப்படி இருக்கிறதா? பால், பேருந்து, மின்சாரம், போன் விலை கடுமையாக உயர்ந்தும் எல்லாக் குடும்பத்தினரும் வாங்குகிறார்களே… கிராமங்களில் வசதிகள் கொஞ்சம் கொஞ்சமாக பெருகிக் கொண்டுதான் இருக்கின்றன. இனியும் முன்னேறும்..
இவரை இந்தியாவின் காமராஜரை போல் தான் பார்க்கிறேன். காமராஜர் ஆற்றிய தொண்டு ஏறலாம் ஆனால் அவர் என்றுமே விளம்பரபடுத்தவே இல்லை. அதுதான் அவர் செய்த தவறு. ஆனால் இன்று அவரை போல் ஒருத்தர் வர மாட்டாரா என்று பார்க்கிறோம். இதே கருணாநிதி, அன்று காமராஜர் ஊழல் செய்தார், பல பெண்களுடன் தொடர்பு, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம், இதை செய்வோம், என்று கட்டு கதைகளை கட்டிவிட்டு, மக்களை நம்ப வைத்து, அவரை தோற்கடித்தார். இன்றும் ஒருத்தர்(மோடி) கருணாநிதி போல் கட்டு கதைகளோடு வந்து இருக்கிறார். அதை செய்வேன் இதை செய்வேன் என்று. காலம்தான் அவருக்கு பதில் சொல்ல வேண்டும்.
நன்றி: தமிழ் ஹிந்து