பொய்யை மக்கள்மீது திணிக்கும் ஊடக உரிமையாளர்கள் கடும் தண்டணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
நமது நாடு உண்மையான சந்தோஷத்தையும் நிம்மதியையும் பெற வேண்டுமானால் வரம்பு மீறுவதையே தொழிலாகக்கொண்ட ஊடகங்கள் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முஸ்லிம்கள்மீது பொய்யை இட்டுக்கட்டுவதில் முதலிடத்தில் இருப்பது ஊடகங்களே! ஒருவிதத்தில் பார்க்கப்போனால் ஒட்டுமொத்த இந்தியாவின் நிம்மதியை கெடுத்துக் கொண்டிருப்பவர்களும் இவர்களே.
நிச்சயமாக இவர்கள் சமூக சீரழிவை ஏற்படுத்தி அதில் சுயலாபம் காணும் ஈனப்பிறவிகளே ஒழிய சமூக நலன்விரும்பிகள் அல்ல.
இந்திய அரசு முதன்முதலில் கைது செய்து கடுமையான தண்டனை வழங்குவதற்கு மிகவும் தகுதியானவர்களும் இவர்களே!
காவல் துறையை மறைமுகமாக வழிநடத்துவதும் இவர்களே… ஆம்! ஒரு சம்பவம் நடந்துவிட்டால் அது குறித்து காவல்துறை அதனை கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே அவர்களின் மீது தங்கள் கருத்தை திணிப்பதில் எமகாதர்கள் இவர்கள் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.
ஒருபக்கம் தங்களை சமூக சீர்திருத்த பாதுகாவலர்கள் போல் காண்பித்துக்கொண்டு உள்ளுக்குள் அத்தனை சீர்கேட்டையும் உருவாக்குவதும் இவர்களே! நல்லதை கெட்டதாகவும் கெட்டதை நல்லதாகவும் கூட மக்களை மூலை சலவை செய்வதில் இவர்களுக்கு இட்டு இணையில்லை என்றே சொல்லலாம்.
நமது நாடு உண்மையான சந்தோஷத்தையும் நிம்மதியையும் பெற வேண்டுமானால் வரம்பு மீறுவதையே தொழிலாகக்கொண்ட ஊடகங்கள் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்..
இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகத்துறை முடமாகி போனது ஏன்? முஸ்லிம்கள் விஷயத்தில் மௌனம் காப்பது ஏன்?
உதாரணத்திற்கு….
கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் குற்றவாளிகள் இல்லை – பெங்களூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று அப்பாவி முஸ்லிம்களான பீர் முகைதீன் (மேலப்பாளையம்), சதாம் ஹுசைன் (கோவை) ஹனிபா ஆகியோரை எந்த குற்றமும் இல்லை என்று பெங்களூரு நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு கூறி விடுவித்துள்ளது.
அப்படியென்றால்…
குண்டு வைத்த குற்றவாளிகள் யார்?
ஒவ்வொரு குண்டுவெடிப்பையும் நிகழ்த்தி விட்டு, அப்பாவி முஸ்லிம்கள் மீது பழியை மட்டும் போட்டுவிட்டு தப்பித்து கொண்டிருக்கும் தொடர் தீவிரவாதிகள் யார்?
சாதாரண செய்தியை கூட கண், காது, மூக்கு வைத்து செய்தி வெளியிடும் ஊடகங்கள்…
இது பற்றி வாய் திறக்காதது ஏன்?
இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகத்துறை முடமாகிப் போனது ஏன்? முஸ்லிம்கள் விஷயத்தில் மௌனம் காப்பது ஏன்?
நீங்கள் வாய் திறக்காவிட்டாலும்…
உண்மையை அறிந்து கொள்ள கூடியவர்களுக்கு இந்த செய்தி செல்லட்டும்…
இந்தியாவில் நிகழ்ந்த அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் மூன்று முறை தடை செய்யப்பட்ட காவி தீவிரவாத இயக்கமான RSS தான் காரணம்.
இதை நான் சொல்லவில்லை… மத்திய அரசு தான் சொல்கிறது. மத்திய அரசு சொன்னால் என்ன, மாநில அரசு சொன்னால் என்ன…? எங்கள் விருப்பப்படி தான்… நடப்போம் என்றுதானே பொறுப்பற்று இதுபோன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இந்த ஊடகங்கள் கண்ணை மூடிக்கொள்கின்றன!
www.nidur.info