Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ரஷ்யாவை நோக்கி சரிகிறதா சவுதி அரேபிய அரசு?

Posted on October 28, 2013 by admin

ரஷ்யாவை நோக்கி சரிகிறதா சவுதி அரேபிய அரசு?

Al Mukhabarat Al A’amah. என்பது சவுதி அரேபியாவின் உளவு ஸ்தாபனம். மன்னரிற்கு விசுவாசமாக செயற்படும் இரகசிய அமைப்பு. இதன் ஆங்கில கருத்து (GIP – General Intelligence Presidency).

உளவறிதல், சவுதி அரசர் இடும் கட்டளைகளை இரகசியாமாக செயற்படுத்தல் போன்ற வேலைத்திட்டங்களை இது செய்கிறது.

1956-ல் கிங் அப்துல் அசீஸ் அல் சவுத்தினால் தேசிய தேவை கருதி இது உருவாக்கப்பட்டது. மபாகித் எனப்படும் (General Investigation Directorate) மபாகித்ல் (சவுதி உளவு ஸ்தாபனம்) இருந்து இந்த அமைப்பு தனியாக பிரிக்கப்பட்டு மன்னரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இதன் இயக்குனராக சவுதி ரோயல் குடும்பத்தை சார்ந்த ஒருவரே இருந்து வருவது வழக்கம். அவ்வகையில் தற்போது “பந்தர் பின் சுல்தான்” அதன் தலைவராக இருந்து வருகிறார்.

1983-ல் இருந்து 2005 வரையான காலப்பகுதியில் அமெரிக்காவிற்கான சவுதி அரேபிய அம்பாஸிடராக கடமையாற்றியவர் இந்த பந்தர் பின் சுல்தான். ரொனால்ட் ரீகன், பில் கிளின்டன், ஜோர்ஜ் புஷ் போன்ற அமெரிக்க அதிபர்களுடன் கடமையாற்றியவர். 2012-ரீல் அல் முக்பராத் அல் ஆமாஃவின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார்.

மன்னராட்சிக்கு எதிரான அனைத்துவிதமான பயங்கரவாத நடவடிக்கைகளையும் ஒழிக்கும் பொருப்பினை மன்னர் அப்துல்லாஹ் இவரிடம் கையளித்திருந்தார். ஜித்தாவை தளைமாக மாற்ற அல்-காயிதாவினர் எடுக்கும் அனைத்து பிரயத்னங்களையும் முடியடிப்பதில் கணிசமான வெற்றியையும் இவர் பெற்றுள்ளார்.

அமெரிக்க உளவமைப்பான சீ.ஐ.ஏ.யுடன் சவுதி அரேபியா சார்பாக இராணுவ, உளவு விவகாரங்களை இவரே கவனித்தும் வருகிறார்.

இவர் சவுதி ரோயல் எயார் போஸில் கடமையாற்றியவர். அமெரிக்க மக்ஸ்வெல் எயார் பேஸில் சிறப்பு பயிற்ச்சிகளை மேற்கொண்டவர். இவர் ஒரு பைலட். அதுவும் சண்டை விமானங்களை ஓட்டும் பயிற்ச்சி பெற்ற பைலட். ஆயுத படைகளை கையாளும் பயிற்ச்சியையும் முடித்துள்ளார்.

அண்மை காலங்களில் இவர் அமெரிக்க செயற்பாடுகள் குறித்து பல அதிருப்தி தரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். சிரிய சமர்களத்தில் அமெரிக்க சடுதியாக பின்வாங்கியுள்ளதாகவும், சிரிய அரசுடன் பேச்சுக்களை அது ஆரம்பிக்க முற்பட்டுள்ளதாகவும் இதனால் சவுதி அரேபியா ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

பஹ்ரைன் கிளற்ச்சியின் போது சவுதி அரேபியா பஹ்ரைனிற்கு ஆதரவாக தனது படையை அனுப்பியது. ஷியாக்கிளின் புரட்சியை அடக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா சவுதி அரேபியாவிற்கு உதவவில்லை என்பதும் இவரது குற்றச்சாட்டாகும். அங்கே தான் அமெரிக்காவின் 5வது கடற்படை பிரிவு தளமமைத்துள்ளது. பலஸ்தீன விவகாரங்களில் அமெரிக்கா இரட்டை வேடம் பூண்டுள்ளது என அவர் அண்மையில் வெளிப்படையாகவே குற்றம் சாட்டியிருந்தார். ஈரானுடன் அமெரிக்கா உறவுகளை வளர்பதும் சவுதி அரேபியாவிற்கு அது செய்யும் துரோகம் என்பது அவரது கருத்து.

அமெரிக்கா தொடர்பான கொள்கைகளில் சவுதி அரேபிய அரசு சில மாற்றங்களை கொண்டு வருவதுடன் ஒட்டுமொத்த கொள்கையில் மீளாய்வுகள் செய்யப்படல் வேண்டும் என அவர் மன்னரிற்கு தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

அண்மைக்காலமாக அவரது ரஷ்ய விஜயங்களும் அதிபர் விளாடிமிர் புட்டினுடனான சந்திப்புக்களும் இந்த மாற்றங்களிற்கு காரணமாக அமைந்துள்ளதா என சில கேள்விகள் அமைந்துள்ளன. இரண்டு இராஜதந்திரிககளின் சந்திப்பு என்பதனையும் விட சவுதி அரேபிய உளவமைப்பின் தலைவரும் ரஷ்யாவின் முன்னாள் கே.ஜீ.பீ. உளவமைப்பின் தலைவரும் சந்திப்பது என்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

source: http://khandaqkalam.blogspot.ae/2013/10/blog-post_5462.html?spref=fb

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 81 = 90

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb