இஸ்லாமிய இளைஞர்கள் ISI தொடர்பு பற்றிய ராகுல் காந்தியின் பேச்சின் கருத்தென்ன?
உபியின் லக்னோ வில் ராகுல் காந்தி தனது பிரசாரத்தின் போது பேசியதாவது:
நான் கலவரம் பாதித்த முஜாஃபர் நகருக்கு சென்று அங்குள்ள ஹிந்துக்களை சந்தித்தேன். அங்குள்ள முஸ்லிம்களை சந்தித்தேன். பெண்களிடம் கேட்டேன். குழந்தைகளிடம் கேட்டேன். ‘பையா…உங்களுக்குள் என்ன பிரச்னை? ஏன் இத்தனை கலவரங்கள்?’ என்று கேட்டேன். இரு தரப்பிலும் எனக்கு கிடைத்த பதில் ‘எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் அண்ணன் தம்பிகளாகத்தான் பழகி வருகிறோம்.
சிறு பிரச்னையும் வலிந்து பெரிதாக்கப்படுகிறது வெளியிலிருந்து வந்த ஒரு சிலர் தான் பிரச்னைகளை பெரிதாக்கி இந்த அளவு கொண்டு வந்து விட்டுள்ளனர்’ என்று கூறுகின்றனர். இந்த பிரச்னையில் இந்து முஸ்லிம்களுக்குள் பிரிவினையை உண்டு பண்ணி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய பிஜேபி முயல்கிறது. இது சாதாரண அரசியல் முயற்சி என்று அவர்கள் நினைக்கின்றனர். இந்து முஸ்லிம் பிரிவினையில்தான் உங்களின் அரசியல் வாழ்வு பிரகாசிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
ஆனால் இதனால் விளைந்த பலன் என்ன? இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு சீனியர் ஆபிஸர் எனது அறைக்கு வந்தார். ‘என்ன விஷயம்?’ என்று கேட்டேன். அதற்கு அந்த போலீஸ் ஆபிசர் ‘ராகுல்ஜி…நான் என்ன சொல்வது? முஜாஃபர் நகரில் தனது தாயை இழந்த, தனது சகோதரனை இழந்த, தனது தந்தையை இழந்த 10க்கு மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்களிடம் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தொடர்பு கொண்டு பேசியது தெரிய வருகிறது.
இந்தியாவுக்கு எதிராக அவர்களை பயன்படுத்த முயற்சிக்கிறது’ என்று கூறினார். பிஜேபி செய்த அரசியல் நிகழ்வுகள் நமது நாட்டு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை எந்த அளவு ஆபத்தான வழிக்கு கொண்டு செல்கிறது என்பதை பார்த்தீர்களா? இதற்கு என்ன பதிலை பிஜேபி வைத்துள்ளது? அந்த இளைஞர்கள் தவறான வழிக்கு சென்றால் அதற்கு யார் காரணம்?
நான் அந்த இளைஞர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். பாகிஸ்தானின் சதி வலையில் வீழ்ந்து விடாதீர்கள். உங்களுக்குரிய நியாயம் கண்டிப்பாக இந்த நாட்டில் கிடைக்கும்.’ என்று கூறிக் கொள்கிறேன்.
இது தான் ராகுல் காந்தி பேசிய பேச்சின் தமிழாக்கம். ஆனால் இதனை ஏதோ இஸ்லாமிய இளைஞர்களுக்கு எதிரான பேச்சாக பிஜேபியின் தலைவர்களும், சில உபி மௌலவிகளும் திசை திருப்ப முயற்சிக்கின்றனர். அந்த இளைஞர்களை பாகிஸ்தான் நெருங்க யார் காரணம்? பிஜேபி அல்லவா? அந்த கலவரத்துக்கு தூபம் இடாமல் முஸ்லிம்களை கொல்லாமல் இருந்திருந்தால் அந்த இளைஞர்களிடம் பேசுவதற்கு பாகிஸ்தானுக்குத்தான் தைரியம் வந்திருக்குமா?
நமது நாடு செழிப்புற, இந்துவும் முஸ்லிமும் ஒற்றுமையாக வாழ வேண்டுமானால் முதலில் இந்துத்வாவை இந்த நாட்டை விட்டு முற்றிலுமாக துடைக்க வேண்டும். அதன் சாரம் தான் ராகுலின் பேச்சு. தற்போது மிகச் சிறந்த பேச்சாளராக வளர்ந்து விட்டார். மோடிக்கு சரியான போட்டியாக வருங்காலத்தில் பரிணமிப்பார். மோடி தனது தவறுகளுக்கு தண்டனை பெற ராகுல் காந்தி பிரதமராக அமர வேண்டும். ஒரு சில குறைகள் காங்கிரஸிடம் இருந்தாலும் பாசிச சக்திகளிடமிருந்து நமது நாட்டை காக்க, வர்ணாசிரம சட்டம் நமது நாட்டை ஆளாமல் காக்க தற்போது உள்ள ஒரே வழி ராகுலை பிரதமராக்குவதுதான். ஏனெனில் ஊழல் பிஜேபி வந்தாலும் நடக்கத்தான் போகிறது. ஊழலை விட மிகப் பெரும் ஆபத்து பன்முகம் கொண்ட நமது நாட்டுக்கு மோடி போன்ற கயவர்கள் அதிகாரத்துக்கு வராமல் தடுப்பதே…நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் அதனைத்தான் செய்வார்கள்.
source: http://suvanappiriyan.blogspot.in/2013/10/blog-post_2232.html
ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சாரங்களை கூர்ந்து கவனித்தால்…
Ashiq Ahamed
ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சாரங்களை கூர்ந்து கவனித்தால் அவரின் மிக நுட்பமான அசைவுகளை புரிந்துக்கொள்ள முடிகின்றது. அலங்காரமான வார்த்தைகள் இல்லை, அதே நேரம் எதிர் அணியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றார். மத்திய பிரதேசத்தில் அவர் பேசிய பேச்சிற்காக அவர் மீது நடவடிக்கை தேவை என்று பாஜக தேர்தல் கமிஷனை அணுகியுள்ளது.
அதுபோல முஸாபர் நகரில், முஸ்லிம்களையும் ISI-யையும் தொடர்புபடுத்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக கூறியுள்ளது. ஆட்டுக்குட்டியின் மீது ஓநாய்க்கு என்ன கவலை? அப்படி என்ன தவறாக பேசினார் ராகுல்? ‘சங்பரிவாரங்கள் மத கலவரங்களை ஏற்படுத்தி முஸ்லிம்களுக்கு அநீதி இழைப்பதால், பாதிக்கப்பட்ட இளைஞர்களை ISI அணுக முயற்சிக்கின்றது’ என்று கூறியதில் என்ன தவறை காண முடியும்? பாதிக்கப்பட்ட மக்களை, அவர்களின் கோபத்தை பயன்படுத்திக்கொள்ள எதிர் சக்திகள் முயற்சிக்கும் என்பது தவறான வாதம் இல்லையே.
முஸாபர் நகர மக்களே இதனை பெரிதுபடுத்தாத போது பாஜகவிற்கு என்ன வந்தது? உண்மையில் ராகுலை மட்டம் தட்டவே பாஜக நினைக்கின்றது. கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக்கொள்ளவும் முயற்சிக்கின்றது. ஆனால் இதற்கு நேர்மாறாக ராகுலின் பேச்சு மெதுவாக ஆனால் வலுவாக மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தி வருவதை காண முடிகின்றது.