Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மனிதகுல விரோதி “நவநாகரீகம்”

Posted on October 21, 2013 by admin

மனித குல விரோதி “நவ நாகரீகம்”

  கீழை நிஷா புதல்வன்  

முதலில் நாகரீகம் பழகிக்கொள்!   ஆம், இதுதான் தற்போது மனிதர்களுக்கு மத்தியில் தாரக மந்திரமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நாகரீகம் என்ற வார்த்தை ஏதோ 10 அல்லது 20 ஆண்டுகளுக்கிடையில் தான் மனிதர்களின் வாழ்வியல் புழக்கத்தில் வந்திருக்குமோ?என்ற எண்ணம் நிச்சயமாக இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஏற்பட்டிருக்கும். காரணம் அந்த அளவுக்கு ஒவ்வொரு விஷயத்திலும் இன்றைய இளைஞர், இளஞிகள் நாகரீகம் என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர்.

இங்கே ஒரு விஷயத்தை ஆழமாக பதிவு செய்ய விரும்புகிறேன். நாகரீகம் என்ற வார்த்தை 1434 ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ்வின் இறைத்தூதரான அண்ணல் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் மக்கமா நகரத்தில் சொல்லாலும் செயலாலும் அறிமுகப் படுத்தப்பட்ட ஒரு விஷயமாகும்.

அப்படியானால், நாகரீகம் என்ற வார்த்தையை மனிதகுல விரோதி என்று தலைப்பிட்டது ஏன்? என்ற கேள்வி எல்லோருக்கும் எழும்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காண்பித்து தந்த நாகரீகம் மனிதனுக்கு அழகையும்,ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடியது.தற்போது இன்றைய காலத்து இளைஞர்கள் பின்பற்றும் நாகரீகமென்பது அசிங்கத்தையும்,அழிவையும் கொடுக்கக் கூடியதாகும்.இதனால் தான் இன்றைய இளைஞர்கள் விரும்பும் நாகரீகத்தை மனிதகுல விரோதி என்று தலைப்பிட்டுள்ளேன்.

உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் ஆடை வரைக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த நாகரீகம் இப்போது நம்மிடையே இருக்கிறதா?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் ”ஆண்கள் அவர்களுக்குரிய ஆடைகளையும்,பெண்கள் அவர்களுக்குரிய ஆடைகளையும் அணியுங்கள்.ஒரு ஆண் பெண்ணைப்போன்றோ,அல்லது ஒரு பெண் ஆணைப்போன்றோ உடை அணிவதை வெறுக்கிறேன்” என்றார்கள்.

ஹஜ்ரத் அபூ ஹுரைராரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்; ”பெண்களின் ஆடைகளை அணிந்து கொள்ளும் ஆண்களையும்,ஆண்களின் ஆடைகளை அணிந்து கொள்ளும் பெண்களையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளார்கள்.” (நூல்: அபூ தாவூது)

இன்றைய மக்களின் எண்ணவோட்டம் எப்படி இருக்கிறது?ஆண்கள் பெண்களைப் போன்று இறுக்கமாக உடை அணிந்து கொள்வதும்,காதில் கடுக்காய் போட்டுக்கொள்வதும், கழுத்தில் செயின்,விரல்களில் தங்கமோதிரம்,கையில் பிரேஸ்லெட், முகத்தில் மேக்கப் என்று பார்ப்பதற்கு பெண்ணைப்போலவே காட்சித்தரும் ஆண்கள் ஒரு பக்கமென்றால்,

பெண்கள் ஆண்களைப்போல இறுக்கமான ஜீன்ஸ்பேண்ட்,டீசர்ட் அணிந்து கொண்டு, ஆண்கள் அணியும் வாட்சை கையில் கட்டிக்கொள்வதும் தான் நாகரீகம் எனக்கருதுவது சரியா?

இன்றைய இளம்பெண்களின் ஆடை விஷயம் மிகவும் மோசமானதாகவே இருக்கிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த “பர்தா” என்னும் ஒழுக்கமுள்ள ஆடைகள் அணிந்து வந்த காலத்தில் பாலியல் பலாத்காரம் என்ற வார்த்தைக்கு உயிரோட்டம் கிடையாது!

ஆனால் நாகரீகம் என்ற பெயரால் அரைகுறை ஆடை அணிய ஆரம்பித்த பிறகு தான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பொழுதும் ஏதாவதொரு இடத்தில் யாராவதொரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு சில நேரத்தில் காமுகர்களால் கொலையும் செய்யப்பட்டு விடுகிறாள்.

அரைகுறை ஆடை என்ற நாகரீகம் மனிதகுல விரோதியாகி விட்டதே!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்;

இரு கூட்டத்தினர் நரகவாசிகளாக ஆவர். அவர்களை நான் பார்த்ததில்லை. (பிற்காலத்தில் வருவர்) அதில் ஒரு கூட்டம்,ஆடைகள் திறந்து (அரைகுறை)நிர்வாணமாக இருக்கும் பெண்களாவர்.

அவர்கள் பிறரை தங்களின் பக்கம் கவர்ந்திழுப்பர்.பிறராலும் கவரப்பட்டு அவர்களின் பக்கம் சாய்வர். அவர்களின் கூந்தல்கள் ஒட்டகையின் சாய்ந்த திமிள்களைப் போன்றிருக்கும்.

அத்தகைய பெண்கள் சுவர்க்கத்தில் நுழையமாட்டார்கள். மேலும் சுவர்க்கத்தின் வாடையைக் கூட நுகரமாட்டார்கள். சுவர்க்கத்தின் நறுமணம் வெகுதூரத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளப்படும். அப்படியிருந்தும் வெகுதூரத்திலிருந்து கிடைக்கும் வாடையைக் கூட பெறமாட்டார்கள். (நூல்: முஸ்லிம்)

நான் சமீபத்தில் கண்ட ஒரு நாகரீக நிகழ்வு;

பதினோராம் வகுப்பு படிக்கும் எனது நண்பரின் பதினைந்து வயது மகளுக்கு கண்ணில் கிட்டப்பார்வை கோளாறாம், அருகில் உள்ள கண்மருத்துவமனையில் காண்பித்துள்ளார்கள்.

முழுபரிசோதனையும் முடிந்த பிறகு கண்மருத்துவர் கண்கண்ணாடி அணிய சொல்லியுள்ளார்.எனது நண்பரின் மனைவி மருத்துவரை பார்த்து எனது மகளுக்கு கண்ணாடி போட்டால் அசிங்கமாக இருக்கும்.அதனால் நாகரீகமா(ஸ்டைலா)க இருக்கும் வகையில் காண்டாக்ட் லென்ஸ் பொருத்தி விடுங்கள் எனது மகளும் அதைத்தான் விரும்புகிறாள் எனக்கூறியதும் மருத்துவரும் மறுப்பு தெரிவிக்காமல் காண்டாக்ட் லென்ஸ் பொருத்தி விட்டார்.

கண்ணில் லென்ஸ் பொருத்தியவர்கள் குளிக்கும் போது லென்ஸை கழட்டி வைத்து விட்டுதான் குளிக்க வேண்டுமாம்.

எனது நண்பரின் மகள் ஞாபக மறதியாக லென்ஸை கழட்டாமலேயே குளித்து விட்டார்.அதன் விளைவு, ஒரு கண்ணில்மட்டும் சிலதுளி தண்ணீர் லென்ஸுக்குள் இறங்கி விட்டது.இதை அறியாத அந்த இளம்பெண் குளித்து முடித்து விட்டு லென்ஸை எடுக்க முயற்சிக்கும் போது கருவிழியோடு ஒட்டிக்கொண்டு வெளியில் வரவில்லை.

இதை தாயிடம் சொன்னால் குளிக்கும் போது லென்ஸை கழட்டாத விஷயம் தெரிந்து ஏசுவாள் எனப்பயந்து வீட்டில் யாரிடமும் சொல்லாமல் அப்படியே விட்டுவிட்டார்.

சிலநாட்களுக்குப் பின்னால் கண் பார்வை மங்கலாகியதும் பயந்து போய் தாயிடம் நடந்ததையெல்லாம் விபரமாக கூறியுள்ளார் அந்த இளம்பெண்.தாயும் பதறியடித்து பிள்ளையை கண்மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

மீண்டும் கண்ணை பரிசோதித்த மருத்துவர் லென்ஸ் கருவிழியுடன் ஒட்டி விட்டது.அதை ஆபரேஷன் மூலமாகத்தான் எடுக்க வேண்டும்.அப்படியே லென்ஸை எடுத்தாலும் கண்பார்வை எப்படி இருக்கும்? என்று உறுதியாக சொல்ல முடியாது எனக்கூறியதும்,அலறியடித்துக் கொண்ட அந்தத்தாய் உடனே சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்குள்ள பிரபலமான ஒரு கண்மருத்துவமனையில் ஆபரேஷன் மூலம் லென்ஸை அகற்றுவதற்கு இரண்டு லட்சம் ரூபாய் செலவாகும் எனக்கேட்டுள்ளனர்.

எனது நண்பரிடம் அந்தளவுக்கு வசதி இல்லாததால் மீண்டும் சொந்த ஊருக்கே மகளை அழைத்து வந்து மதுரையில் உள்ள ஒரு பிரபல கண்மருத்துவமனையில் 75 ஆயிரம் ரூபாய் செலவில் ஆபரேஷன் செய்து லென்ஸை அகற்றிவிட்டனர்.

ஆனால் பார்வை மட்டும் கடைசி வரைக்கும் கிடைக்காமலேயே போய்விட்டது.

லென்ஸ் என்ற நாகரீக மோகத்தால் சீரும் சிறப்புமாக வாழவேண்டிய 15 வயது இளம்பெண் ஒரு கண் பார்வை பறிபோய் மற்றொரு கண் பார்வை துணையுடன் கருப்பு கண்ணாடி அணிந்து தற்போது நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார்.

இதை நினைத்து அனுதாபப் படுவதா?அல்லது நாகரீகம் என்ற வார்த்தையின் மீது கோபப்படுவதா?ஒன்றுமே புரியவில்லை இந்த பாழாய்ப்போன உலகத்திலே!

இப்போது சொல்லுங்கள் இன்றைய இளந்தலைமுறை விரும்பும் நாகரீகம் மனிதகுல விரோதியா? இல்லையா?

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 3 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb