Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஆர்.எஸ்.எஸ். எனும் தேச துரோக அமைப்பு – தமிழருவி மணியன்

Posted on October 20, 2013 by admin

ஆர்.எஸ்.எஸ். எனும் தேச துரோக அமைப்பு – தமிழருவி மணியன் (இன்று புதிதாய் பிறப்போம்)!

நேருவின் தலைமையில் நடந்து முடிந்த லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் ‘பரிபூரண சுதந்திரமே காங்கிரசின் குறிக்கோள்.

இந்த இலட்சியத்தை அடையும் வரை ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதியை சுதந்திர நாளாக கொண்டாடுவது’ என்று தீர்மானிக்கப்பட்டது. இதை வரவேற்று எழுத்து மூலம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பும் பழக்கமில்லாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ‘இந்திய தேசிய காங்கிரஸ் நமது சுதந்திர கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருப்பதில் நமக்கு மகிழ்ச்சி. சுதந்திரக் கோரிக்கை வலியுறுத்தும் எந்த அமைப்பாக இருந்தாலும் அதற்கு ஒத்துழைப்புத் தருவதே நமது கடமை’ என்று சுற்றறிக்கை அனுப்பியதன் நோக்கம் தங்களுக்கும் தேச பக்தி இருக்கிறது என்பதைக் காட்டிக் கொள்வதற்காகவே.

இந்திய தேசிய காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் 26.01.1930 அன்று ‘சுதந்திர நாள்’ கொண்டாடப்பட்டது. மக்கள் ஊர்வலமாகச் சென்று தேசியக் கொடியாகிய மூவர்ணக் கொடிக்கு வணக்கம் செலுத்தினர். ஆனால், அன்று ஊர்வலம் நடத்திய ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய ‘பக்வா ஜந்தா’ கொடிக்கு வணக்கம் செலுத்தியது. நாட்டு மக்கள் ஏற்று கொண்ட மூவர்ணக் கொடியை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்து ராஸ்டிர விடுதலையை வேண்டிய ஆர்.எஸ்.எஸ். அனைத்து சமயங்களை சார்ந்தவர்களும் விடுதலை பெறுவதை விரும்பவில்லை. 1930-ல் சுதந்திர நாளை கொண்டாடிய ஆர்.எஸ்.எஸ் அதன் பின்பு நாடு விடுதலை பெறும் வரை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று காங்கிரஸ் இயக்கத்தை போன்று சுதந்திர நாளை கொண்டாடவில்லை.

அண்ணலின் தலைமையில் 1942 ஆம் ஆண்டு வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை காங்கிரஸ் தொடங்கியது. நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் இயக்கத்தின் போராட்டத்தில் பங்கேற்று இளைஞர்கள் சிறை கூடங்களை நிரப்பிய நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இந்த மகத்தான சுதந்திர வேள்வியில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளவில்லை. 

காந்திய போர் களத்தில் ஆர்.எஸ்.எஸ் தீரத்துடன் நின்று போராடவில்லை என்பதை விட, வெள்ளையருக்கு ஆதரவாக பிரிட்டிஷ் இராணுவத்தில் இளைஞர்களை சேர்த்து விடும் மலினமான தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுப்பட்டது என்பது தான் அதிர்ச்சி தர கூடிய வரலாற்று உண்மையாகும்.

டிரேவர் டிரய்பர்க் என்ற பத்திரிக்கையாளர் இந்த தேச விரோதச் செயலை “FOUR PHASE OF SUBVERSION” என்ற நூலில் தெளிவாக விளக்குகிறார். பல ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பிரிட்டிஷ் இராணுவத்திற்கு வேண்டிய இராணுவ எந்திரங்களை விநியோகிக்கும் ஒப்பந்தங்களை பெற்றனர். 1943 ஆம் ஆண்டு கிழக்கு வங்கத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்ட போது, இருந்த உணவுப் பொருள்களையெல்லாம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அள்ளிக் கொண்டு போய் பிரிட்டிஷ் இராணுவத்திற்கு கொடுத்தனர்.

பஞ்சத்தால் பரிதவித்த மக்கள் மேலும் துன்புற்றனர். ஆர்.எஸ்.எஸ் ஒப்பந்தகாரர்களிடம் ஏராளமாக பணம் குவிந்தது. பிரிட்டிஷ் இராணுவ நிதிக்கு அவர்கள் பணத்தை அள்ளி வீசினர். ஆர்.எஸ்.எஸ் செய்திதாள்களுக்கும் அதனுடைய மற்ற பத்திரிக்கைகளுக்கும் பிரிட்டிஷ் அரசு பேருதவி செய்தது. ஏராளமான அரசு விளம்பரங்கள் வழங்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் தேசியப் போராட்டத்தில் பற்கேற்றவர்கள் என்ற மாயையை உடைத்து காட்டுகின்றன.

கோல்வால்கரின் தலைமையில் இயங்கிய ஆர்.எஸ்.எஸ் பிரிட்டிஷ் அரசுக்கு இசைவாகவே நடந்து கொண்டது. 1942 ஆம் ஆண்டிலிருந்து 1947 வரை கொழுந்து விட்டெரிந்த விடுதலை வேள்விலிருந்து ஆர்.எஸ்.எஸ் விலகியே நின்றது. நாக்பூரில் தலைமையகத்தை உருவாக்குவதிலும், பயிற்சி முகாம்களை நடத்துவதிலும் முஸ்லீம்களுக்கு எதிரான வகுப்புக் கலவரங்கள வளர்ப்பதிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயற்பாடுகள் அமைந்தன.

முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களும் உள்துறை அமைச்சர் அத்வானி அவர்களும் தேச விடுதலை போரில் தியாகத் தழும்புகளை ஏற்றவர்கள் இல்லை. பதினைந்து வயதிலேயே வாஜ்பாய் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் 1941-ல் தன்னை இணைத்துக் கொண்டார். இந்திய தேசிய காங்கிரஸ் மாணவர் அமைப்பில் தான் இணைந்து செயற்பட்டதாக வாஜ்பாய் அவர்கள் அறிவித்த போதிலும் அவர் ஆற்றிய சுதந்திர போராட்ட சரித்திரச் சாதனைகள் என்று எதனையும் குறிப்பிடுவதற்கு இல்லை.

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் 1942- ல் நடைபெற்ற போது வாஜ்பாயும் அவருடைய நண்பர்களும் அதில் பங்கேற்றுச் சிறை சென்றனர். அவர்கள் மீது வன்முறை சம்பவம் தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ‘புரட்சியாளர்’ வாஜ்பாய் அந்த வழக்கிலிருந்து தன்னை விடுவித்து கொள்ள அதுவரை சிறை பிடிக்கப்படாத தன்னுடைய நண்பர்களின் பெயர் பட்டியலை பிரிட்டிஷ் காவல் துறையிடம் கொடுத்து தானும் மன்னிப்பு கேட்டு விடுதலையான வீர வரலாற்றுக்குரியவர்.

கோல்வால்கர் தொடங்கி வாஜ்பாய் வரை இந்திய விடுதலை போரில் எந்த மகத்தான பங்களிப்பையும் தந்துவிடவில்லை. அடிமை இருளில் சிக்கிக் கிடந்த இந்தியத் தாயை விடுவிப்பதற்கு எந்த முனைப்பையும் காட்டாத இந்து மகாசபையும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இந்திய தாயின் துயர் துடைக்க வந்த தேசபக்திப் பாசறைகள் என்று தங்களுடைய தோள்களுக்கு தாங்களே மாலை சூட்டி கொள்வது போலித்தனத்தின் மகுடம்.

–ஊடகங்கள் சரியான செய்திகளை தருகிறதா? பக்கதிலிருந்து…..

நாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பில் இருந்தே, தன் இனத்தை இந்தியாவில் தக்க வைத்துக் கொள்வதற்காக தொடங்கப்பட்டவை என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை…என்றாலும் வரலாறுகள் திரிக்கப்பட்டு மக்களை மடையர்களாக்கி வெளியிட வேண்டிய செய்திகளை மறைத்து, மக்களை பிரித்தெடுக்கும் ஊடகங்கள் இவைகளை பெரிதாக வெளியிடுவதில்லை.

காவி பயங்கரவாதம் சிறுபான்மை இனத்திற்கு நேர் எதிராக அமைய, இந்துக்கள் என்று கூறிக் கொள்ளும் அனைவரையும் சிறுபான்மை இனத்திற்கு எதிராக தூண்டக் கூடிய காரணிகளை தெளிவாக காவி ஊடகங்கள் செய்து வருவதை சிந்திப்போர் அறிவர். நாட்டை ரணகளமாக மாற்றத் துடிக்கும் காவி ஊடகங்களை இனம் காணுவதுடன், தங்களின் பங்களிப்பையும் இப்பக்கத்தில் அளிக்க இணைவீர்!

நன்றி: PUTHIYAVOICE

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 11 = 20

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb