அன்பிற்கினிய உலமாப் பெருமக்களே, ஜாமிஆ மற்றும் மதரஸாக்களில் மார்க்கக்கல்வி கற்றுவரும் மாணவக் கண்மணிகளே!
அல்லாஹ்வின் தூதர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், அவர்களின் குடும்பத்தார்களையும் நினைவுகூறும் இந்த ஈதுல்-அள்ஹா தியாகத்திருநாளில்….
அந்த மகத்துவமிக்க அல்லாஹ்வின் திருத்தூதர், திருத்தோழர் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வை முழுமையாக நம்பி அல்லாஹ்விடம் மட்டுமே பிராத்தனை செய்ததை நினைவு கூர்ந்து உங்கள் வாழ்விலும் அந்த ஏக வல்ல ஓரிறைவனாம் அல்லாஹ்விடம் மட்டுமே பிராத்தனை செய்வோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள்.
ஏனெனில் நல்லதை ஏவுவதற்கு பதிலாக தீமையின் உச்சக்கட்டமான ‘ஷிர்க்’ மற்றும் ‘பித்அத்து‘களை ஏவுவதில் நீங்களே முதன்மையானவர்களாக இருக்கிறீர்கள்.
இதன் காரணமாகவே ஒவ்வொரு ஊரும் பிளவுபட்டு, ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டுவதற்கும், தவறான நிர்வாகிகளின் தான்தோன்றிதனமான காட்டுதர்பாருக்கும் நீங்களே மறைமுக காரணியாக இருக்கிறீர்கள்.
இது எவ்வளவு கொடுமையான பாவம் என்பதை எவராலும் மறுக்க முடியாதே…! முஸ்லிம்களுக்குள் முஸ்லிம்களை வெறுப்புகொள்ளச்செய்யும் இச்செயல் எவ்வளவு இழிவானது என்பதை எண்ணிப்பாருங்கள்.
இன்றைய தலைமுறை சிந்திக்கக்கூடிய, கல்வியறிவில் சிறப்புமிக்க தலைமுறையாக உருப்பெற்று வரும் வேளையில் உங்களது நம்பகதன்மைக்கு நீங்களே வேட்டு வைத்துக் கொள்ளாதீர்கள்.
அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக, ஆமீன். -adm. nidur.info