இறையன்பர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சிறப்புகள்
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, “படைப்பினங்களிலேயே மிகவும் சிறந்தவரே!” என்று அழைத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அது இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தான்” என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. – மேற்கண்ட ஹதீஸ் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர் களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் “ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே…’ என்று கூறினார்” என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. – மேற்கண்ட அதே ஹதீஸ் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது எண்பதாவது வயதில் வாய்ச்சியினால் விருத்த சேதனம் செய்துகொண்டார்கள். இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: (இறந்துவிட்டவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால்) நாமே இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைவிடவும் சந்தேகம் கொள்ள அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். (ஆகவே, சந்தேகப்பட்டு அவர்கள் அப்படிக் கேட்கவில்லை.) இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், “என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக” என்று கேட்ட போது, “(அதை) நீர் நம்பவில்லையா?” என (அல்லாஹ்) கேட்டான். அதற்கு அவர் “அவ்வாறன்று (நம்பியிருக்கிறேன்); எனினும், எனது உள்ளம் நிம்மதியடைவதற்காகவே (கேட்கிறேன்)” என்று கூறினார். (அல்குர்ஆன் 2:260)
லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக! அவர்கள் வலுவான ஓர் ஆதரவாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள்.
யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சிறையில் கழித்த அளவுக்கு நீண்ட காலத்தை நான் கழிக்க நேர்ந்திருந்தால், (விடுதலையளிக்க) அழைத்தவரிடம் (அவரது அழைப்பை ஏற்று விடுதலையாகிச் செல்ல) நான் ஒப்புக்கொண்டிருப்பேன். இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. – மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பா ளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: “லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் பாவமன்னிப்பு அருள்வானாக. வலுவான ஓர் ஆதரவாளனிடமே அவர்கள் தஞ்சம் புகுந்தார்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் ஒருபோதும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத் தின் நலன் காக்கும்) விஷயத்தில் சொன்னவை யாகும். அவை:
1. (இணைவைக்கும் திருவிழாவுக்கு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை மக்கள் அழைத்தபோது) “நான் நோயுற்றிருக்கிறேன்” என்று (அதில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியது.
2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடரியை மாட்டிவிட்டு, மக்கள் “இப்படிச் செய்தது யார்?’ என்று கேட்டபோது) “ஆயினும், இவர்களில் பெரியதான சிலைதான் இதைச் செய்தது” என்று கூறியது.
3. இன்னொரு பொய் (தம் துணைவி) சாரா விஷயத்தில் அவர்கள் சொன்னதாகும்: (அதன் விவரம் வருமாறு:) (ஒரு நாள்) இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (தம் துணைவியார்) சாரா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய நாட்டுக்குச் சென்றார்கள். சாரா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மக்களிலேயே மிகவும் அழகிய பெண்மணியாக இருந்தார்கள்.
அப்போது இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சாரா அவர்களிடம், “இந்தக் கொடுங்கோல் மன்னன், நீ என் துணைவி என அறிந்து கொண்டால் உன்னை என்னிடமிருந்து கைப்பற்றிக்கொள்வான். (நீ யார் என) அவன் உன்னிடம் கேட்டால் “நீ என் சகோதரி’ என்று கூறிவிடு. ஏனெனில், இஸ்லாத்தில் நீ என் சகோதரிதான். மேலும், பூமியில் உன்னையும் என்னையும் தவிர முஸ்லிம்கள் வேறெவரும் இருப்பதாக நான் அறியவில்லை” என்று கூறினார்கள்.
பிறகு அவர்கள் அந்த நாட்டுக்குள் நுழைந்தபோது, அந்த மன்னனுக்கு வேண்டிய வர்களில் ஒருவன் சாரா அவர்களைப் பார்த்து விட்டு மன்னனிடம் சென்று, “(மன்னா!) உங்கள் நாட்டுக்குப் பெண்ணொருத்தி வந்துள்ளாள். உங்களுக்குரியவளாக இருப்பதைத் தவிர வேறெதுவும் அவளுக்குத் தகாது” என்று சொன்னான். ஆகவே, மன்னன், சாரா அவர்க ளிடம் ஆளனுப்பினான். சாரா அவனிடம் கொண்டுசெல்லப்பட்டார்கள்.
அப்போது இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தொழுவதற்காக நின்றுகொண்டார்கள். சாரா மன்னனி டம் சென்றபோது, அவன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளாமல் சாராவை நோக்கித் தனது கையை நீட்டினான். உடனே அவனது கை (வலிப்பு நோயால்) கடுமையாக இழுத்துக்கொண்டது. உடனே அவன் சாரா அவர்களிடம், “அல்லாஹ்விடம் (என் கைகளை) விடுவிக்கும்படி எனக்காகப் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கிழைக்கமாட்டேன்” என்று சொன்னான். அவ்வாறே அவர்கள் பிரார்த்தித்தார்கள். (அவன் குணமடைந்ததும்) மீண்டும் அவன் (அவர்களை நோக்கி) கையை நீட்டினான்.
அப்போது முன்பைவிடக் கடுமையாக அவனுடைய கை இழுத்துக்கொண்டது. அவன் முன்பு போன்றே மீண்டும் (பிரார்த்திக்கும்படி) கூறினான். அவ்வாறே சாராவும் பிரார்த்தித்தார்கள். (குணமடைந்ததும்) மறுபடியும் அவன் கையை நீட்டியபோது முந்தைய இரு தடவைகள் இழுத்துக்கொண்டதைவிட மிகக் கடுமையாக அவனது கை இழுத்துக்கொண்டது. அப்போது அவன் எனது கையை விடும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். உனக்கு அல்லாஹ்வே சாட்சி. (இனி) உனக்கு நான் தீங்கிழைக்கமாட்டேன்” என்று கூறினான். அவ்வாறே சாரா அவர்கள் பிரார்த்தித்தார்கள். அவனது கை விடுவிக்கப்பட்டது.
சாராவை அழைத்து வந்தவனை மன்னன் அழைத்து, “நீ ஒரு மனுஷியை என்னிடம் கொண்டுவரவில்லை. ஒரு ஷைத்தானையே என்னிடம் கொண்டுவந்துள்ளாய். இவளை எனது நாட்டிலிருந்து வெளியேற்றி விடு. இவளுக்கு ஹாஜர் எனும் (அடிமைப்) பெண்ணை அன்பளிப்பாகக் கொடுத்துவிடு” என்று கூறினான்.
சாரா தம்மை நோக்கி நடந்துவருவதை இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கண்டபோது (தொழுகையை முடித்துத்) திரும்பினார்கள். அவரிடம் “என்ன நடந்தது?” என்று கேட்டார் கள். சாரா அவர்கள், “நல்லதே நடந்தது. அத் தீயவனின் கையை இறைவன் தடுத்துவிட் டான். ஒரு பணியாளரையும் கொடுத்தான்” என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: “மாஉஸ் ஸமாஉ’ (வான் மழை) குலத்தாரே! அவர் (ஹாஜர்)-தான் உங்கள் தாயார்.110 (Sahih muslim hathees 4722 – 4726)
source: http://kulasaisulthan.wordpress.com