Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இந்நிலைக்கு நாம் வெட்கப்பட வேண்டாமா?

Posted on October 10, 2013 by admin

இறைவனைப் பற்றிய எண்ணம் மனிதர்களிடத்தில் மறைந்து வருவது வன் புணர்வுகளுக்கு காரணம்

இறைவனைப் பற்றிய எண்ணம் மனிதர்களிடத்தில் மறைந்து வருவது வன் புணர்வுகளுக்கு காரணம் எனலாம்.

தன்னைப் பெற்ற தாயும் பெண்தான். தனது மனைவியும் பெண்தான். தன் உடன் பிறந்தவர்களும் பெண்தான்.

தனக்கு பிறந்தவர்களும் பெண் இனம் தான்.

இந்த பெண்மக்களை வழி நடத்திச் செல்ல ஆண்களுக்கு சில சிறப்பியல்புகளை இறைவன் கொடுத்துள்ளான்.

அந்த சிறப்பியல்புகளை இந்த மனிதன் இறைவன் எதற்காக கொடுத்துள்ளான் என்ற சிந்தனா சக்தி தனக்கு இல்லாததால் அந்த பெண்ணை அடக்கி ஒடுக்கப் பார்க்கிறான்.

தனது பேச்சுக்கு மதிப்பு தரவில்லை என்றால் கொலை செய்து விடுகிறான்.

காதலிக்க மறுத்தால் வன் புணர்வு செய்து விடுகிறான். அல்லது முகத்தில் ஆசிட் ஊற்றி விடுகின்றான்.

இன்னும் சிலர் அந்த பெண்ணின் நடத்தையில் களங்கத்தை அபாண்டமாக சுமத்தி சமூகத்தால் ஓரம் கட்ட வைக்கப்படுகின்றனர்.

இதை எல்லாம் நம்மைப் படைத்த இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். இறப்புக்குப் பிறகு நாம் செய்யும் இது போன்ற குற்றங்களுக்கு பதில் சொல்ல வேண்டி வரும் என்ற எண்ணம் மேலோங்கினால் மனதளவில் தவறுகளிலிருந்து திருந்த வாய்ப்புள்ளது.

இந்நிலைக்கு நாம் வெட்கப்பட வேண்டாமா?

பெண்களுக்கான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. நமது நாட்டில் தினமும் ஏதாவது ஒரு செய்தி வந்த வண்ணமே உள்ளது. மக்கள் அனைவரும் படித்து விட்டால் பெண் கொடுமை ஒழிந்து விடும் என்று சொன்னோம். ஆனால் படித்த மக்களிடத்திலேதான் பெண் கொடுமை அதிகமாக உள்ளது.

பெண் சிசுவை கருவிலேயே ஸ்கேன் செய்து பார்த்து அழிப்பதும் பெரும் பாலும் படித்தவரகள் தான். அதே போல் நான் டாக்டர், நான் பொறியாளர், நான் இத்தனை லகரம் சம்பளம் வாங்குகிறேன். எனக்கு இத்தனை லட்சம் வரதட்சணையாக கொடுத்தாலே போச்சு என்று வீம்பு பண்ணுவதும் படித்த மக்கள்தான். மருமகளை உயிரோடு எரித்தவர்களும் அதிகம் படித்தவர்கள் தான்.

அழகில்லாத ஆண். பொருளாதார வசதியில்லாத ஆண். இவனை ஒரு பெண் விரும்பா விட்டாலோ அல்லது வோறொருவனை விரும்பினாலோ கோபம் வெறியாக மாறி கொலை செய்வதோ, வன் புணர்வில் ஈடுபடுவதோ, முகத்தில் ஆசிட் வீசுவதோ நடந்து விடுகிறது. நமது சினிமாக்களால் ஒரு இளைஞன் என்று இருந்தால் அவன் யாரையாவது காதலித்தே தீர வேண்டும் என்ற எண்ணம் பரவலாக்கப்பட்டதும் ஒரு காரணமாகச் சொல்லலாம்.

பெண்ணை வன்புணர்ச்சி செய்வதற்கும் காமத்திற்கும் தொடர்பு கிடையாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பெண்ணிடமிருந்து இன்பத்தை அனுபவிக்க எண்ணம் உள்ளவன் இது போன்ற அரக்கத்தனங்களில் ஈடுபட மாட்டான். டெல்லி பெண்ணை அந்த கயவர்கள் இரும்பு பைப்பினால் குடலையும் கிழித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

காலம் காலமாக ஒடுக்கப்பட்ட தலித் இளைஞர்கள் மற்ற சாதி பெண்களை விரும்புவதையும தொடர்ந்து பார்த்து வருகிறோம். அங்கும் காமம் என்பது பின்னால் சென்று ஆதிக்க சாதிகளுக்கு சரிசமமாக நாமும் நிற்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. ஒரு வகையில் இதனை அவர்கள் பார்வையில் தவறு என்றும் சொல்ல முடியாது.

ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண்ணை ஒரு இளைஞன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 3 வயது சிறுமியை ஒருவன் பலாத்காரம் செய்துள்ளான் என்றால் இவை எல்லாம் மன நோயின் அறிகுறிகள். இவர்களுக்கு மனநல சிகிச்சை செய்யப்பட வேண்டும். தக்க தண்டனையையும பெற்றுத் தர வேண்டும்.

இறைவனைப் பற்றிய எண்ணம் மனிதர்களிடத்தில் மறைந்து வருவதும் இது போன்ற வன் புணர்வுகளுக்கு காரணம் எனலாம். தன்னைப் பெற்ற தாயும் பெண்தான். தனது மனைவியும் பெண்தான். தன் உடன் பிறந்தவர்களும் பெண்தான். தனக்கு பிறந்தவர்களும் பெண் இனம் தான். இந்த பெண்மக்களை வழி நடத்திச் செல்ல ஆண்களுக்கு சில சிறப்பியல்புகளை இறைவன் கொடுத்துள்ளான். அந்த சிறப்பியல்புகளை இந்த மனிதன் இறைவன் எதற்காக கொடுத்துள்ளான் என்ற சிந்தனா சக்தி தனக்கு இல்லாததால் அந்த பெண்ணை அடக்கி ஒடுக்கப் பார்க்கிறான்.

தனது பேச்சுக்கு மதிப்பு தரவில்லை என்றால் கொலை செய்து விடுகிறான். காதலிக்க மறுத்தால் வன் புணர்வு செய்து விடுகிறான். அல்லது முகத்தில் ஆசிட் ஊற்றி விடுகின்றான். இன்னும் சிலர் அந்த பெண்ணின் நடத்தையில் களங்கத்தை அபாண்டமாக சுமத்தி சமூகத்தால் ஓரம் கட்ட வைக்கப் படுகின்றனர். இதை எல்லாம் நம்மைப் படைத்த இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இறப்புக்குப் பிறகு நாம் செய்யும் இது போன்ற குற்றங்களுக்கு பதில் சொல்ல வேண்டி வரும் என்ற எண்ணம் மேலோங்கினால் மனதளவில் தவறுகளிலிருந்து திருந்த வாய்ப்புள்ளது. சந்தர்ப சூழ்நிலைகள் ஒருவனை தவறு செய்ய வைத்தால் அதற்கு கடுமையான தண்டனையும் பெண்களின் ஆடை விஷயங்களில் கவனமாக இருப்பதும் பெருமளவு குற்றங்களை குறைக்கலாம்.

பாலியல் ஒழுக்கங்களை பேணுவதில் முஸ்லிம் நாடுகள் முன்னணியில்

அமெரிக்கன் சோசியலாஜிக்கல் ரிவியூ நடத்திய ஆய்வில்,31 வளர்ச்சியடைந்த நாடுகளில் 15-59 வயது வரையிலான ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்ற ஆய்வில் பொதுவாகவே பாலியல் ஒழுக்கங்களை பேணுவதில் முஸ்லிம் நாடுகள் முன்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அனைத்து மதங்களும் திருமண உறவிற்கு வெளியே உள்ள முறைகேடான பாலியல் உறவுகளை ஊக்கப்படுத்துவதில்லை. ஆனால், அனைத்து மத நம்பிக்கையாளர்களும் ஒன்றுபோல் இல்லை என்று இந்த ஆய்விற்கு தலைமை தாங்கிய ஆமி ஆடம்ஸிக் சுட்டிக்காட்டுகிறார்.

முஸ்லிம் நாடுகளில் எய்ட்ஸ் நோய் மிகக் குறைவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்காவின் கத்தோலிக் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த சோசியாலஜிஸ்ட் ரெவ.பால் சுல்லின்ஸ் கூறுகையில், “இந்த ஆய்வின் முடிவுகள் ஆச்சரியமானதல்ல. ஏனெனில் இவை பாரம்பரிய இஸ்லாமிய நாடுகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. புர்கா(உடலை மறைக்கும் ஆடை) உண்மையிலேயே இவ்விஷயத்தில் நன்றாக வேலை செய்கிறது. ஆண்களிலிருந்து முற்றிலும் வேறுபடுத்தி உடல் முழுவதும் மறைத்தால் பெண்களை அவர்களது திருமணம் முடியும் வரை முந்தைய முறைகேடான பாலியல் உறவுகளில் இருந்து பாதுகாக்க முடியும்” என கூறுகிறார்.

சூசி இஸ்மாயில், இவர் திருமணம் மற்றும் விவகாரத்துக்கான அதிகாரி ஆவார். இவர் கூறுகையில், “திருமணத்திற்கு முந்தையை, பிந்தைய முறைகேடான பாலியல் உறவுகள் முஸ்லிம்களிடம் குறைவாக இருப்பதற்கு அவர்களது மார்க்க ரீதியான வேர் காரணமாகும் . இஸ்லாம் விபச்சாரத்தை தடைச் செய்கிறது. இளம் வயதில் இருந்தே முஸ்லிம்கள் பாலியல் ஒழுக்கம் குறித்து பயிற்றுவிக்கப்படுகின்றார்கள்.” என தெரிவித்துள்ளார்.

தவறு செய்யும் மன நிலையில் உள்ள ஒரு ஆணையோ பெண்ணையோ எந்த சட்டங்கள் போட்டாலும் கட்டுப் படுத்த முடியாது. ஆனால் தவறு செய்யும் மன நிலையில் இல்லாத எத்தனையோ பெண்கள் வலுக்கட்டாயமாக இது போன்ற செயல்களில் ஈடுபடுத்தப்படவதை எந்த சமூகமும் அங்கீகரிக்காது.

இஸ்லாமிய சடடங்களில் உள்ள நியாயங்களை புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் சட்டம் இயற்ற நமது அரசு முயல வேண்டும். ஒரு நல்ல காரியம் இஸ்லாம் சொல்வதாலேயே அதனை கண்ணை மூடிக் கொண்டு வெறுப்பதும் ஒரு வகை மன நோயே. மதுரை ஆதீனம் சொன்ன ஒரு கருத்துக்கு வந்த எதிர்ப்புகளும் அந்த வகையைச் சார்ந்ததே! எனவே யார் நல்லது சொன்னாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் என்று வருகிறதோ அன்று தான் சமூகம் அமைதியுறும். பெண்கள் பாதுகாப்பாக வெளியிலும் வருவர்.

source: http://suvanappiriyan.blogspot.in/2013/09/blog-post.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

77 − 72 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb