அல்லாஹ்வின் உறுதியான வாக்குறுதி
1. “…முஃமின்களைக் காப்பாற்றுவது நம்மீது கடமை!” (10:103)
2. “…முஃமின்களை நிச்சயம் அல்லாஹ் பாதுகாக்கிறான்” (22:38)
3. “…முஃமின்களுக்கு உதவி செய்வது அல்லாஹ்வின் கடமை!” (30:47)
4. “அல்லாஹ் வாக்குறுதி மீறவே மாட்டான்” (3:9,194, 13:31, 39:20)
நான்கு இடங்களில் அல்லாஹ் வாக்குறுதியை மீறவே மாட்டான் என்று உறுதிபட வாக்களித்த நிலையில் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு உதவி செய்யாதது ஏன்? காப்பாற்றாதது ஏன்? பாதுகாக்காதது ஏன்? மிகக் கடுமையான முறைகளில் முஸ்லிம்கள் உலகம் முழுவதும் துன்புறுத்தப்படக் காரணம் என்ன?
10:103, 22:38, 30:47 மூன்று வசனங்களையும் கவனமாகப் படித்துப் பாருங்கள். இந்த வாக்குறுதிகள் அனைத்தும் ஈமானை உள்ளத்தில் சுமந்து கொண்டிருக்கும் முஃமின்களுக்கே அல்லாமல், 49:14 வசனம் கூறுவது போல் உள்ளத்தில் ஈமான் நுழையாத முஸ்லிம்களுக்கு இல்லை.
ஈமானை உள்ளத்தில் சுமந்து இறையச்சத்துடன் இருப்பவர்கள், தொழுகையற்றவர்களாகவோ, பேணுதலற்ற தொழுகையாளிகளாகவோ அதாவது விட்டு விட்டுத் தொழுபவர்களாகவோ, மக்களுக்குக் காட்டத் தொழுபவர்களாகவோ ஒருபோதும் இருக்க மாட்டார்கள். அதற்கு மாறாக2:43,83:110, 4:77, 103, 6:72, 10:87, 22:78, 24:56, 30:31, 58:13, 73:20 ஆகிய 12 இடங்களில் அல்லாஹ் “அகீமுஸ்ஸலாத்” என்று கட்டளையிடுவது போல் ஒரு நேரத் தொழுகையைக் கூட விடாது தவறாது தொழுது தொழுகையை நிலைநாட்டுவார்கள். இதுதான் ஈமானுடையவர்களின் அதிமுக்கிய அடையாளம்.
இந்த அளவுகோளின்படி பார்த்தால் முஸ்லிம்களில் ஒரு சதவிகிதமும் தேறமாட்டார்கள். இந்த நிலையில் 10:103, 22:38, 30:47 இறைவாக்குகள், கூறும் அல்லாஹ்வின் வாக்குறுதிகள் முஸ்லிம்களுக்குப் பொருந்துமா? இதோ இன்றைய முஸ்லிம்க ளின் நிலையை 19:59 இறைவாக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. படித்துச் சிந்தித்து விளங்குங்கள்.
“”இவர்களுக்குப் பின்னர் உள்ள சந்ததியினர் இவர்களின் இடத்திற்கு வந்தனர். அவர்கள் தொழுகையை வீணாக்கினர். மன இச்சைகளைப் பின்பற்றினர். எனவே அவர்கள் கேட்டைச் சந்திப்பார்கள். (19:59)
பெரும்பாலான தொழுகையாளிகளும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த சரியான முறைப்படி தொழுவதில்லை. அவரவர்கள் நம்பிக்கை வைத்துள்ள இமாம்கள், மவ்லவிகள், மத்ஹபுகள், இயக்கங்கள் காட்டும் தவறான வழிகளிலேயே தொழுகின்றனர். தொழுகையை வீணாக்குகின்றனர்.
2:186, 7:3, 33:36, 50:16, 56:85, 59:7 இறைக் கட்ட ளைகளைப் புறக்கணித்துவிட்டு, அல்லாஹ்வுக்கும் தங்களுக்குமிடையில் செத்த, உயிரோடுள்ள மனிதர்களை இடைத்தரகர்களாகப் புகுத்துகிறவர்களாகவே இருக்கிறார்கள். இதை 9:31 இறைவாக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு, 12:106 இறைவாக்கு முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையினர் இணை வைக்காத நிலையில் ஈமான் கொள்ள வில்லை என்று நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் அடித்துக் கூறுகிறது.
பெரும்பான்மை முஸ்லிம்கள் நம்பிக்கை வைத்துள்ள மவ்லவிகள் குர்ஆனில் அல்லாஹ் நேரடியாகக் கூறியுள்ள நடைமுறை விளக்கங்களை 2:159 வசனம் கூறுவது போல் திரித்து வளைத்து மறைத்து அர்த்தத்தை அனர்த்தமாக்கி சுயவிளக்கம் கொடுப்பதை ஏற்று நடப்பதால், 4:140, 6:68, 7:37, 10:36, 22:8, 40:4,35 போன்ற பல இறைவாக்குகள் கூறுவதை சிறிதளவும் மதிக்காது நிராகரிக்கின்றனர்.
17:41, 45-47,89, 22:72, 39:45 குர்ஆன் வசனங்கள் கூறுவது போல் இம்மவ்லவிகளுக்கு இவை வெறுப்பையே அதிகப்படுத்துகின்றன. இந்த மவ்லவிகளுக்குப் பின்னால் கண்மூடிச் செல்லும் பெருங்கொண்ட முஸ்லிம்கள் 4:78 இறைவாக்குக் கூறும் “”இந்தச் சமூகத்திற்கு என்ன நேர்ந்தது? எதையும் சிந்தித்து விளங்கிப் புரிந்து கொள்ளத் தயாரில்லையே! என்று வருந்திக் கூறும் நிலையிலேயே இருக்கிறார்கள்.
அது மட்டுமா? 3:182, 4:62, 8:51, 30:41, 42:30 இறைவாக்குகள் கூறுவது போல் இன்று முஸ்லிம்கள் அடைந்து வரும் அனைத்து வகைத் துன்பங்களும் அவர்கள் தங்கள் கைகளால் தேடிக்கொண்டவையே என உறுதிப்படுத்துகின்றன. மேலும் இந்தக் கடும் வேதனைகள் மறுமையிலும் தொடரும் என்கின்றன இவ்வசனங்கள்.
முஸ்லிம்கள் 9:31, 39:17 இறைவாக்குகள் கூறுவது போல் தாஃகூத்களான இந்த மவ்லவிகளை வணங்குவதைத் தவிர்த்து, குர்ஆனைப் பற்றிப் பிடித்து 3:103 இறைவாக்குக் கூறுவது போல் ஒரே ஜமாஅத்தாக ஒன்றுபட்டு நடக்க முன்வராவிட்டால், முஸ்லிம்களை அல்லாஹ் முற்றிலும் புறக்கணித்து விட்டு, வேறொரு சமுதாயத்தை அவர்களுக்குப் பகரமாகக் கொண்டு வருவதாக 47:38 குர்ஆன் வசனத்தில் மிகக் கடுமையாக எச்சரிக்கிறான். முஸ்லிம்கள் உணர்வு பெறத் தயார் இல்லையா? அழிவு நிச்சயம்! காரணம், எந்தச் சமுதாயமும் தனது நிலையை மாற்றாதவரை அல்லாஹ் அவர்களின் நிலையை மாற்றப் போவதில்லை என்று 8:53, 13:11 இறைவாக்குகளில் கடுமையாக எச்சரிக்கிறான்.
குர்ஆனின் முஹ்க்கமாத் வசனங்கள் நேரடியாகக் கூறும் உண்மைக் கருத்துக்களை 2:159 இறைவாக்குக் கூறுவது போல் திரித்து வளைத்து மறைப்பவர்கள் அல்லாஹ்மீது கற்பனை செய்பவர்களே! இவர்கள் பற்றி 7:37 இறைவாக்கு “”அல்லாஹ்வின் மீது கற்பனை செய்பவனை (அல்லது வேறு பொருள் கொடுத்து) அவனது வசனங்களைப் பொய்ப்பிப்பவனை விடப் பெரும் அக்கிரமக் காரன் யார்? ஸ..” என்று கேட்டு அல்லாஹ் எச்சரிக்கிறான்.
ஆனால் கைசேதம், அவர்கள் எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து குஃப்ரிலாகி, ஹராமான உணவு, உடை, இருப்பிடம் கொண்டு வாழ்வதால் அவர்களது உள்ளங்கள் 2:74,174, 5:13, 6:43,125, 57:16 குர்ஆன் வசனங்கள் கூறுவது போல் கடும் கற்பாறைகளை விட மிகக் கடினமாக இறுகி விட்டன. எனவே மேலே எழுதப்பட்டுள்ள குர்ஆன் வசனங்கள் அவர்களை உணர்வு பெறச் செய்யாது. மாறாக 17:41, 45-47,89, 22:72, 39:45, குர்ஆன் வசனங்கள் கூறுவது போல் அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்தும்.
3:186 இறைவாக்குக் கூறுவது போல், நிராகரிப்பாளர்கள், யூதர்கள், கிறித்தவர்கள், நாத்திகர்கள் போன்றோர் தொடுக்கும் பல நிந்தனைகளையும், காது, மனம் கொதிக்கக் கேட்டாலும் முஸ்லிம்களின் பொருள்களிலும், உயிர்களிலும் சோதிக்கப்படும் போதும் முஸ்லிம்கள் பொறுமையோடும், இறையச்சத்தோடும் இருப்பதுவே செயல்களில் உறுதி மிக்கதாகும் என்ற அறிவுரையை அப்படியே ஏற்று நடப்பதுவே முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தரும். 41:34, 23:96 குர்ஆன் வசனங்கள் அறிவுரைக் கூறுவது போல் நன்மையைக் கொண்டு தீமைகளைத் தடுக்க முற்பட வேண்டுமே அல்லாது, தீமையைப் பிரிதொரு தீமையைக் கொண்டு தடுக்க முற்படுவது ஒருபோதும் வெற்றியைத் தராது. மேலும் மேலும் அழிவையே தரும். அப்படிப்பட்டப் பரிதாப நிலையிலேயே முஸ்லிம்கள் மேலும் மேலும் துன்பங்களைச் சந்தித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் முஸ்லிம்கள் மீது இவர்களை விட மாபெரும் அநியாயக்காரர்கள் சாட்டப்பட்டு முஸ்லிம்கள் இவ்வுலகில் அழிவின் விளிம்பிற்கே செல்வது ஆச்சரியப்படும் ஒன்றல்ல.
முஸ்லிம்களே எச்சரிக்கை! நாம் எமது சொந்தக் கருத்தை இங்கு திணிக்கவில்லை. அனைத்திற்கும் குர்ஆன் வசனங்களை உங்களுக்குத் தெரிந்த மொழியிலுள்ள குர்ஆன் மொழிபெயர்ப்பை எடுத்து நேரடியாகப் படித்துப் பார்த்து அவற்றைப் பற்றிப் பிடித்து நடக்க முன்வந்தால் மட்டுமே இவ்வுலகிலும், மறு உலகிலும் வெற்றி பெற முடியும்.
உலக முழுவதுமுள்ள 120 கோடி முஸ்லிம்களும் அப்படியே குர்ஆனைப் பற்றிப் பிடித்து நடக்க வேண்டும் என்று நாம் சொல்லவில்லை. 32:13, 11:118,119 இறைவாக்குகள் கூறுவது போல் அது ஒரு போதும் நடக்காது. ஆயினும் இந்த 120 கோடியில் சில சதவிகிதத்தினர் குர்ஆனைப் பற்றிப் பிடித்து ஒற்றுமையாக ஒரே ஜமாஅத்தாக நடக்க முன் வந்தாலும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன், தனது அளவிலாக் கருணை கொண்டு அதலபாதாளத்தில் அமிழ்ந்து கிடக்கும், இவ்வுலகிற்கு ஒரு பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவான் என்பதில் ஐயமில்லை. இதுவே அல்லாஹ்வின் அழகிய நடைமுறையாக இருக்கிறது. அல்லாஹ் அருள்புரிவானாக.
அல்குர்ஆனை முழுமையாகப் பொருள் அறிந்துப் படித்து வருகிறவர்கள், ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது காலத்திலிருந்து இன்று வரை மனித குலத்தைப் பெரும் வழிகேட்டில் இட்டுச் சென்று நரகை நிரப்பத் துடியாகத் துடிப்பவர்கள். அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்குமிடையில் 2:186, 7:3, 50:16, 56:85 இறை வாக்குகளுக்கு முரணாக இடைத்தரகர்களாக, மத குருமார்களாகப் புகுந்துள்ளவர்களே! அவர்களின் இழி நிலையை 2:159-162, 4:27, 5:48, 6:157, 7:175-179, 18:57, 45:23, 47:25 ஆகிய குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து அறியலாம்.
மேலும் இவ்வுலகில் பெரும் பாதிப்புக்கு ஆளாவது மட்டுமில்லாமல், நாளை மறுமையில் நரகில் கிடந்து வெந்து கரியாவதுடன், இம்மதகுருமார்களும் அவர்கள் பின்னால் கண்மூடிச் சென்றப் பெருங்கொண்ட மக்களும், உன்னால்தான் நான் கெட்டேன், என்னால்தான் நீ கெட்டாய் என்ற பாங்கில் அழுது பிரலாபிப்பதை 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 போன்ற எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்துச் சிந்தித்து விளங்குகிறவர்கள் நிச்சயமாக அறிந்து கொள்ள முடியும்.
34:31-33, 40:47,48 இறைவாக்குகள் கூறும் பெருமையடித்தவர்கள் இந்த மதகுருமார்களே!
நாங்கள்தான் நேர்வழிகாட்டுகிறோம் என்பவர்கள் கோணல் வழிகளைக் காட்டுபவர்களே! சுவர்க்கத்திற்கு இட்டுச் செல்கிறோம் என்பவர்கள் நரகிற்கு இட்டுச் செல்பவர்களே!
நாங்கள்தான் இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்போர் ஷைத்தானுக்கு நெருக்கமானோர் என்பதை எல்லாம் அறிந்து அவர்களின் வசீகர, சூன்ய, உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு நேரடியாக, குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் வழிகாட்டல்படி நடப்பவர்களே நேர்வழி நடந்து சுவர்க்கம் புகமுடியும்.
ஆயினும் அவர்கள் மிக மிகச் சொற்பமானவர்களே! (பார்க்க: அல்குர்ஆன் 6:116, 32:13, 11:118,119)
source: http://annajaath.com/?p=6632#more-6632