[தற்போது அனைத்துப் பகுதிகளிலும் வறுமையில் திருடுபவனை விட வசதியான வாழ்க்கை வாழ்வதற்காகவே திருட்டு,மோசடி போன்ற குற்றம் செய்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாக உயர்ந்து கொண்டு இருக்கிறது.
மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் இத்தகைய குற்றம் செய்பவர்கள் சிறிதும் வெட்கப்படாமல் பயமில்லாமல் சமுதாயத்தாருடன் சகஜமாக பழகுவதுதான் மிக ஆச்சரியத்திற்க்குரிய விசயமாக இருக்கிறது.
ஆட்டையை போட்டுவிட்டு ஆடம்பர செலவு செய்யும் ஆசாமிகளே நேர்மையாக சம்பாரிக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்பதை உணர்ந்து பிற இல்லாத ஏழை எளியோரின் சூழ்நிலையையும் சற்று சிந்தித்து ஆடம்பரத்தைக் குறைத்துக் கொள்வதுடன் ஆட்டையைப் போடுவதையும் நிறுத்திக் கொண்டால் நாம் மேன்மக்கள் என்று போற்றப் படுவதுடன் நம் சன்னதியர்களுக்கும் முறையான வாழ்க்கை வாழ ஒரு வழிக்காட்டியாய் அமையும்..!!!]
ஆட்டையை போட்டுவிட்டு ஆடம்பர செலவு செய்யும் ஆசாமிகளே!
நாகரீகம் வளர வளர மனிதனின் அத்தியாவசியத்தேவையை விட ஆடம்பரத்தேவைகளே அதிகமாகிட்டது. அதை பூர்த்திசெய்ய மனிதனால் தனது நேர்மையான வருமானத்தில் தேவைகளை ஈடு செய்ய முடியவில்லை. ஆகவே மனசாட்சிக்கு விரோதமான பல மோசடி வேலைகளை செய்கின்றனர். அது ஒருபுறமிருக்க நாட்டில் தற்போது வின்னைத் தொடுமளவுக்கு விலைவாசியின் ஏற்றம் ஒருபுறம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
அவசியமற்ற ஆடம்பரத் தேவைகளை மனிதன் அவசியமாகிக் கொண்டதன் காரணமாகவும், உழைப்பில்லாமல் ஆடம்பரவாழ்க்கைக்கு அடிமையாகியதன் விளைவினாலும் தனது வறட்டு கௌரவத்தினால் இத்தகைய சூழ்நிலையை மனிதன் உருவாக்கிக் கொண்டதால் மனசாட்சி, நீதி, நேர்மை, நியாயம் ஆகியவை செத்துக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்லமுடியும்.
வருமானத்தை வேறு நல் வழியில் பெருக்கிக் கொள்ள தெரியாத சோம்பேறிகள் குறுக்கு வழியில் குறுகிய காலத்தில் பெரும் பணக்காரனாகிவிட வேண்டும் என்ற வக்கிர எண்ணங்களை மனதில் வளர்த்துக் கொண்டு விட்டதால் நம்பிக்கைத் துரோகம் நயவஞ்சகம் கொள்ளை இலாபம் மோசடி,கொடுஞ்செயல்,பிராடு பித்தலாட்டம் என்று குற்றச் செயல்கள் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர்.
தற்போது அனைத்துப் பகுதிகளிலும் வறுமையில் திருடுபவனை விட வசதியான வாழ்க்கை வாழ்வதற்காகவே திருட்டு,மோசடி போன்ற குற்றம் செய்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாக உயர்ந்து கொண்டு இருக்கிறது.
நாம் அன்றாடம் இணையத்திலும் தினசரி நாளிதழ்களிலும் தொலைகாட்சி போன்ற ஊடகங்களிலும் இது பற்றிய செய்திகளை வாசித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் இத்தகைய குற்றம் செய்பவர்கள் சிறிதும் வெட்கப்படாமல் பயமில்லாமல் சமுதாயத்தாருடன் சகஜமாக பழகுவதுதான் மிக ஆச்சரியத்திற்க்குரிய விசயமாக இருக்கிறது.
ஒரு காலத்தில் திருடன்,மோசடிப் பேர்வழி என்று சொல்லும் வார்த்தை தனது மானம் மரியாதை குடும்ப கௌரவத்திற்கு களங்கத்தை ஏற்ப்படுத்தும் வார்த்தையாகவும் சமுதாயத்தினரால் ஒதுக்கி வைக்கப்படும் நபராகவும் இருந்தது.இத்தகைய நபருடன் யாரும் நெருங்கிப் பேசக் கூட யோசிப்பார்கள்.
ஆனால் இன்றோ அதற்க்கு நேர்மாறாக மோசடி செய்து குறுக்கு வழியில் பணக்காரர்களாய் ஆனவர்களும், நம்பிக்கை மோசடி செய்து அடுத்தவர்கள் சொத்து,பணத்தை ஆட்டையை போட்டவர்களும், பணிபுரியும் இடத்தில் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு வந்தவர்களும் இத்தகையோர்களே சமுதாயமக்களால் மதிக்கப்படும் மனிதர்களாக இருக்கின்றனர்.
நேர்மையாக உழைக்கும் மனிதனுக்கு இவனுக்கு அந்த துணிச்சல் இல்லை, பிழைக்கத்தெரியாதவன், என்ற பட்டம் தான் சூட்டப் படுகிறது. போலிமுகம் கொண்டு அனைத்து பிராடு பித்தலாட்டமும் செய்து திருட்டு மோசடி போன்றவை செய்து குறுக்கு வழியில் அடுத்தவன் வயற்றில் அடித்து ஆட்டையை போட்டுவிட்டு வந்தவனை ஊரே புகழ்ந்து பேசி அவன் திறமையானவன் என்று உயர் நிலையில் மதிக்கப்படும் மனிதனா போற்றப்படுகிறது. நாகரீகமாய் உடையணிந்து நல்லோர்களாய் நகர்வலம் வரும் இப்படிப்பட்ட மனிதர்கள் பார்ப்பதற்கு துளியளவும் சந்தேகம் தோன்றாத அளவுக்கு இனிக்க இனிக்க பேசி அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தில் நாம் மயங்கி விழுந்து விடுவோம்.
இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் அந்த நபருக்கு இவ்வளவு காசுபணம் இக் குறுகிய காலத்தில் எப்படி வந்தது என்று ஆராய்வதில் யாரும் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை.மாறாக அவரைப் புகழ்வதையும் அவரிடம் போய் உதவி கேட்பதிலுமே கவனம் செலுத்துகின்றனர்.
இன்றைய சூழ்நிலையில் அதிக எண்ணிக்கையில் இப்படிப்பட்ட பணக்காரர்களே உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.என்பதை யாரும் மறுக்க இயலாத உண்மையாகும்.
இப்படிப்பட்ட கௌரவத்திருடர்களால் மற்ற நடுத்தரவாதிகளும் ஏழை எளியோரும் ரொம்ப பாதிப்புள்ளாகிறார்கள். உதாரணத்திற்கு மோசடி செய்து பணக்காரர்களாக ஆனவர்கள் ஆசைப்பட்ட ஒரு பொருளை எவ்வளவு அநியாய விலையானாலும் கொடுத்து விட்டு வாங்கிச் செல்கிறார்கள்.நேர்மையாக சம்பாரித்து செலவு செய்யும் ஒருவன் இப்படி அநியாய விலை கொடுத்து எந்தப் பொருளும் ஒருபோதும் வாங்க மாட்டான்.! வாங்கவும் முடியாது.
விலைவாசி பன்மடங்கு பெருத்து விட்ட இந்தக் காலத்தில் மேலும் அதிக விலைகொடுத்து வாங்க ஆள் இருப்பதால் தான் பணவசதி இல்லாதவனால் ஆசைப்பட்ட எதையும் வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது.
ஆட்டையை போட்டுவிட்டு ஆடம்பர செலவு செய்யும் ஆசாமிகளே நேர்மையாக சம்பாரிக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்பதை உணர்ந்து பிற இல்லாத ஏழை எளியோரின் சூழ்நிலையையும் சற்று சிந்தித்து ஆடம்பரத்தைக் குறைத்துக் கொள்வதுடன் ஆட்டையைப் போடுவதையும் நிறுத்திக் கொண்டால் நாம் மேன்மக்கள் என்று போற்றப் படுவதுடன் நம் சன்னதியர்களுக்கும் முறையான வாழ்க்கை வாழ ஒரு வழிக்காட்டியாய் அமையும்..!!!
அதிரை மெய்சா
மனிதன் மனிதனாக வாழ்வதற்குத்தான் மதங்களும், மார்கங்களும் தோன்றின. ஆனால் இவனோ அவைகளை தன் வசிதிக்கேர்ப்பவே பயன் படுத்துகின்றான். இவன் இறைநம்பிக்கை அதனை ஒரு பழக்கவழக்கம் போல்தான் அதனை பாவிக்கின்றான். காரணம் இவனில் மிகப்பெரும்பான்மை மக்கள் இறைவனை அறிந்து கொள்ளவில்லை. அதனால் அவனின் பயம் இவனிடம் இல்லை.
வெறும் வாயால் இறைவன் மகாப் பெரியோன், மகா வல்லமையுள்லோன் போன்ற வார்த்தைகளைதான் சொல்கிறான். உண்மையில் அறிய முயற்சிப்பதில்லை. அதற்குண்டான வழிகளையும் உண்டானாலும் உலக அற்ப மனிதரின் பயத்திற்காகவும், அறியாமைனாலும் தடுத்துக்கொள்கிறான்.
அறியாமைகள் அராஜாகமாகத்தான் இருக்கும். அதற்காக உண்மைகளை மறைப்பது, மறைக்க காரணமாக இருப்பது தருமம் அல்ல என்றாலும் அதிலும் அறியாமையே காரணமாக இருக்கின்றது. தன் அறிவை கொண்டு அறிந்தவனின் அறிவை அளக்கின்றான்.
எவ்வாறு அறிந்தவன் என்பதை அறிவது கேள்வியாக எழலாம். தன் அறிவைக்காட்டிலும் அடுத்தவர் அறிவில் தனக்கு தெளிவு கிடைத்தால் அவர் அறிவாளி தானே. எவ்வாளவோ எழுத தூண்டுகிறது. ஆனாலும் ஒத்துழைப்புகள் இல்லை.
முடிவாக மனிதன் நாகரீக மிருக வாழ்கையை நோக்கித்தான் போய்கொண்டு உள்ளான். அதனை இயற்கை சீற்றங்கள் அடிக்கடி நினைவு படுத்ததான் செய்கிறது. ஆனாலும் இவன் அறியவில்லை !