குழந்தைகளும் பாலியலும் (4)
50% குழந்தைகள் கட்டிளமைப்பருவத்திற்கு முன்பேயே பாலியல் விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர். 34% குழந்தைகள் மற்றப் பாலின விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.
பாலின்ப விளையாட்டு
பாலின்ப விளையாட்டு (Sexual Play) வெளித்தெரியும் பாலுறுப்பு வளர்ச்சி அடிப்படையான மறுபால் தெரிவு, கரமைதுனம் போன்ற ஒன்றே. ஒரு பாலினர் அடுத்த பாலினை அறியும் ஆவல், அடுத்த பாலினை ஆடையின்றிப் பார்ப்பதற்கும் தொடுவதற்கும் இட்டுச் செல்கின்றது. பெரும்பாலும் பெரும்பாலும் மருத்துவர் நோயாளி விளையாட்டு, வாப்பா உம்மா விளையாட்டு, மாப்பிள்ளை பெண் விளையாட்டு போன்ற குழந்தைப் பருவ விளையாட்டுக்களில் அவதானிக்கலாம்.
ஓரளவு குழந்தை வளர்ந்ததும் மலங்களிக்கும் போது வளைத்து வட்டமாக ஒவ்வொருவரும் குந்திக் கொள்வார்கள். அல்லது களிப்பறையில் பாடிக் கொண்டு மலங்களிப்பார்கள். அடுத்தவரின் களிப்புப் பெட்டியை பார்க்க விரும்புவார்கள். அவர்கள் களித்திருக்கும் அளவை அறிய விரும்புவர்கள். அவர்கள் எவ்வாறு முக்கி முனகிக் கொண்டு களிக்கிறார்களோ அதேபோன்று தாமும் முக்குவார்கள்.
இதில் நாம் எல்லை கடந்த கண்கானிப்பையும் கண்டிப்பையும் காட்டக்கூடாது. இது ஒரு நகர்வுக்கட்டம் இதை சாதாரணமாக அவதானித்தாலே போதுமானது. இது குழந்தை கழிவகற்றும் நடத்தையோடு தொடர்பானது. அதைச் செய்ய அது சிரமப்படுகிறது. இதை நாம் பிரச்சினையாகக் கருதக்கூடாது. இச்சந்தர்ப்பங்களில் அதட்டுவதோ, அடிப்பதோ கூடாது. கட்டிளமைப் பருவத்திற்கு முன்னதான குழந்தைப் பாலியல் நடத்தை அதன் தேவையோடு சம்பந்தப்பட்டதாகும். அது பார்த்தல், தொடுதல், அசைத்தல் போலச்செய்யும் பாலியல் விளையாட்டுக்களைப்போல உறுப்பைத் தூக்குதல், பற்றிப்பிடித்தல், மற்றப்பாலினரை அறிதல் எனப் பலதரப்பட்டதாகும்.
Kinsey என்ற உளவியலாளரின் அறிக்கைப்படி 50% குழந்தைகள் கட்டிளமைப்பருவத்திற்கு முன்பேயே பாலியல் விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர். 34% குழந்தைகள் மற்றப் பாலின விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். பெண் குழந்தைகளிடம் பாலின்ப விளையாட்டுக்கள் குறைவாகவே காணப்படுகின்றன. ஆனால் வயது ஏற ஏற அவர்களிடமும் பாலின்ப விளையாட்டுக்கள் அதிகரிக்கின்றன. ஒரே பாலின் பாலின விளையாட்டுக்கள் பிறப்புறுப்புக்களை மாறி மாறித் தொடுவதாகும். தகாப் புணர்ச்சியோடு தொடர்பான இந்த நிலை மாறுகட்டம் தான் எதிர்கால சமப்பாலுறவுக்கு இட்டுச் செல்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
பாலின்ப விளையாட்டுக்கு குழந்தையைத் தூண்டும் காரணிகள், அடுத்தவரை அறியவேண்டும் என்ற ஆவல், இருண்மை, பால்நிலையுடன் தொடர்பான தடை, சகபாடியின் அழுத்தம், வீட்டில் பெற்றோரின் பாலியல் நடத்தையைக் காணுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். பாலின்ப தூண்டியைப் பொறுத்தவரையில் கட்டிளமைப் பருவத்திற்கு முன் குழந்தை பாலின்ப ஊக்க பலமான ஒன்றாக இருப்பதில்லை.
உங்கள் குழந்தை பாலின்ப விளையாட்டுக்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அதை உற்சாகப்படுத்துங்கள், பாராட்டுங்கள் என்று நாம் சொல்வதாக நினைத்துவிடாதீர்கள். மாறாக இந்த விடயங்களை மிக நிதானமாக அவதானியுங்கள். உணர்ச்சிவசப்படாதீர்கள். குழந்தையின் ஏனைய நடவடிக்கையைப் போல இதனையும் அவதானியுங்கள். குழந்தையின் நடத்தைகளுக்கு நீங்கள் போட்டுவைத்திருக்கின்ற வரையறைகளின் அளவை இதற்கும் நீங்கள் வழங்குங்கள். அதில் கூடுதலோ குறைவோ காட்டாதீர்கள். நீங்கள் அவ்வாறு நடந்து கொண்டால்தான் குழந்தையும் அதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்காமல் நடந்து கொள்ளும். காலப்போக்கில் அதிலிருந்து விடுபடவும் வழிவகுக்கும்.
ஆறுவயதுக் குழந்தையின் பாலின்பச் செயற்பாடு சாதாரணமானது. ஆனால் பத்து வயதாகும்போதும் தொடர்ந்தால் கவனிக்க வேண்டும். அதே நேரம் அதிரடி நடவடிக்கைகளிலும் இறங்கிவிடக்கூடாது. ஆரம்பத்தில் ஒன்றிரண்டு நபரோடு ஆரம்பித்து பின்னர் படிப்படியாக பல குழந்தைகளுக்கு மத்தியில் பரவ ஆரம்பித்துவிடும். இத்தகைய பாலியல் கிசுகிசுக்கு பதினொன்று பன்னிரெண்டு வயதுப் பிள்ளைகளிடம் மிக உற்சாகமாகக் காணப்படும். இது பிரச்சினையாக மாறும் போது பின்வரும் காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
1). Confrontation – எதிர்கொள்ளல் : அதாவது பாலியல் நடத்தையானது வளர்ந்தவர்களுக்கே உரியது. அதுவரை குழந்தைகள் பொறுமையாக இருக்க வேண்டும் எனக்கூறித் தெளிவுபடுத்த வேண்டும். அதற்கு மாறாக இது மாபெரும் குற்றச்செயல், கடும் குற்றம் என்று குற்றவுணர்ச்சியை குழந்தைக்கு ஏற்படுத்திவிடாதீர்கள். பாலியல் நடத்தைகளில் ஈடுபட விரும்புவது, ஈடுபடுவது எல்லாம் இறைவன் படைத்த மனித இயல்புதான். ஆனால் தற்போதைக்கு அவற்றைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் இரண்டாவது தடவையாகவும் இதில் ஈடுபட்டால் உன்னோடு நான் பேசப்போவதில்லை என்று ஒருபோதும் கூறாதீர்கள். அதே நேரம் நீண்ட உபன்னியாசங்களையோ தெளிவுரைகளையோ குழந்தையிடம் செய்யப்போகாதீர்கள்.
2) Substitute Activities – பதிலி செயற்பாடுகளை உருவாக்குதல் :வீட்டிலோ, அயலிலோ குழந்தைகள் கவனத்தைப் பெறக்கூடிய செயற்பாடுகள் காணப்படுகின்றன. எப்போதும் அவர்கள் பாலியல் நடத்தையில் ஈடுபடுவார்கள் என்றில்லை. எனவே அவர்களை மகிழ்ச்சிப்படுத்தக் கூடிய வேறு விளையாட்டுக்களின் பக்கம் கவனத்தைத் திருப்பலாம்.
3) Sexual Education – பாலியல் கல்வி வழங்கல் : பாலியல் நாட்டமுள்ள குழந்தையிடம் அதனைத் தனிப்பதற்கு வீட்டில் பெற்றோர் அதனுடன் பாலியல் பற்றிக் கதைக்கலாம். குழந்தையின் கேள்விகளுக்கு தெளிவாகவும் அறிவுபூர்வமாகவும் பதிலளிக்கலாம். கட்டிளமைப் பருவத்திற்கு முன்பு பாலியல் தொடர்பான அறிவு 65% குழந்தைகளிடம் குறைவாகக் காணப்படுகின்றன. 13% குழந்தைகள் செவிவழித் தகவல்களைப் பெற்றுள்ளனர். 5% குழந்தைகள் பாலியல் பற்றி எந்த அறிவும் அற்றவர்கள் என ஒர் ஆய்வறிக்கை கூறுகின்றது. தமது பாலியல் கேள்விகளுக்கு மிகச் சரியான பதில்களைப் பெற்றுக் கொண்ட பிள்ளைகளிடம் பாலின்ப செயற்பாடுகள் மிகவும் குறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக அவர்களிடம் பாலியல் குறித்த மயக்கங்கள் இருப்பதில்லை.
4) Parental Model – முன்மாதிரியான பெற்றோர் : பெற்றோருடைய பாலியல் நடவடிக்கைகளை குழந்தைகள் முழுவதுமாக அவதானிக்கின்றார்கள் என்றில்லை. அதாவது ஒன்பது பத்துவயதுக்குட்பட்ட பிள்ளைகள் பாலியல் நடத்தைகளை ஒழுக்காற்று விதிகள், வரன்முறைகள் முழுவதுமாக அறிந்திருக்கிறார்கள் என்று கூறுவதற்கில்லை. எனவே பெற்றோர் முன்மாதிரியாக விளங்கினால் பிள்ளைகளும் அவற்றைப் பின்தொடர்வர்.
நன்றி: மைமதர்லேன்ட்
source :http://idrees.lk/?p=565