Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஆசாராம் பாபு மீது பாலியல் புகார் – கற்பழிக்கப்பட்ட சிறுமி கூறுபோடப் படுகிறாளா?!

Posted on September 20, 2013 by admin

கற்பழிக்கப்பட்ட சிறுமி கூறுபோடப் படுகிறாளா?!

சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் பலாத்கார வழக்கில், கற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு மனநிலை சரியில்லை? வினோதமான ஆண்களை இழுக்கும் நோய் உள்ளது? என‌ இந்தியாவின் முன்னாள் சட்டமந்திரியும் தற்போதைய பி.ஜே.பி யின் ராஜ்ய சபா உறுப்பினருமாவார் பிரபல கிரிமினல் வழக்கறிஞர் 90 வயது ஜெத்மலானி அதிரடி!

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மொத்தம் 400 ஆசிரமங்கள் உள்ள ஆசாராம் பாபு மீது பாலியல் புகார் கூறியுள்ள 16 வயது சிறுமி, ஆசாராமின் ஆசிரமத்தில் தங்கியிருந்து, அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார்

16 வயது சிறுமியைக் கற்பழித்ததாக 72 வயது ஆசாராம் பாபு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

(தாத்தா) ஆசாராம் மீது புகார் கூறிய பெண்ணுக்கு மன நிலை சரியில்லை..

வினோதமான ஆண்களை இழுக்கும் நோய் உள்ளது – ஆசாராமின் வழக்கறிஞரான ஜெத்மலானி அதிரடி!!!!

ஜோத்பூர் :  ஆசாராம் பாபு தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் ஜோத்பூர் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசாராம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வாதிடுகையில், சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் பலாத்கார புகார் கூறிய சிறுமிக்கு மன நிலை சரியில்லை .வினோதமான ஆண்களை இழுக்கும் நோய் அச்சிறுமிக்கு உள்ளது என்று ஆசாராமின் வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி (இவரும் ஒரு தாத்தா தான்) கூறி சுமார் ஒரு மணி நேரம் வாதாடினார்

  அசாரம் பாபு மீது சிறுமி குற்றச்சாட்டு   

.மத குருவான அசாரம் பாவுக்கு(72) சொந்தமான மத்திய பிரதேசத்தில் உள்ள ஆசிரமத்தில் தங்கி படித்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி அவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

கடந்த 15ம் தேதி இரவு 10 மணிக்கு அந்த சிறுமியை அவரது பெற்றோர்கள் ஜோத்பூரில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள அசாரம் பாபு ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றனர். சிறுமியை தீய சக்திகள் தீண்டியதாக நினைத்த அவர்கள் தங்கள் மகளை குணப்படுத்துமாறு கேட்டுள்ளனர்.

சிறுமியை தனி அறைக்கு அழைத்துச் சென்ற அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் டெல்லி போலீசார் அசாரம் பாபு மீது வழக்குப் பதிவு செய்தனர்.

அசாரம் பாபு மீதான வழக்கு விசாரணை விவரங்களை அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்கம் டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

  ஆசாராம் பாபுவின் ஆசிரமத்திலிருந்து ஆபாச வீடியோ பறிமுதல்?  

ஜோத்பூர் : சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையின்போது ஒரு ஆபாச எம்.எம்.எஸ் வீடியோ சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஆபாச வீடியோவில், ஒரு பெண்ணின் உடல் மீது தனது கைகளால் சாமியார் தடவுவது போல இருக்கிறதாம்.

இந்த வீடியோவை எடுத்தவர் ஆசாராமின் உதவியாளர் சிவா என்று ஆஜ்தக் செய்தி கூறுகிறது.

இந்த ஆபாசப் படத்தை வைத்துப பார்க்கும்போது ஆசிரமத்தில் பெருமளவில் செக்ஸ் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகிறார்கள்.

இதற்கிடையே, ஆசாராம் ஆசிரமத்தில் வார்டனாக வேலை பார்த்து வந்த சஞ்சிதா குப்தா என்ற பெண் தலைமறைவாக இருக்கிறார். அவர் மகாராஷ்டிராவில் மறைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர்தான் ஆசாராம் மீது புகார் கொடுத்துள்ள 16 வயது சிறுமியை, ஆசிரமத்திற்குப் போய் சிறப்பு சிகிச்சை பெறுமாறு அவரது பெற்றோருக்கு யோசனை கூறியவர் என்று கூறப்படுகிறது.

சிவா தற்போது போலீஸ் பிடியில் உள்ளார். சிவா, ஆசாராம் குறித்த பல ரகசியங்களை போலீஸாரிடம் தெரிவித்துள்ளாராம். இரவு நேரங்களில்தான் ஆசாராம் சேஷ்டைகளில் ஈடுபடுவாராம். இதற்காக தனியாக குடில் ஒன்றும் உள்ளதாம். அங்கு வைத்துத்தான் அத்தனையும் நடக்குமாம்.

தனது பெண் ஆதரவாளர்கள், சிஷ்யைகளுக்கு ஆபாசப் படம் போட்டுக் காட்டி அவர்களைத் தூண்டி விடுவாராம் ஆசாராம். பின்னர் பாலியல் ரீதியாக அவர்களைப் பயன்படுத்திக் கொள்வாராம்.

  குஜராத் கோவிலில் ஆசாராம் பாபுவின் படங்கள் நீக்கம் 

சூரத் : குஜராத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த சாமியார் ஆசாராம் பாபுவின் படங்களை கிராம மக்கள் கும்பலாக வந்து நீக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழமையான வைஜ்நாத் மகாதேவ் சிவன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த ஆசாராமின் புகைப்படங்களை தூக்கி வெளியே போட்டனர்.

பின்னர் கோவிலில் தங்கியிருந்த ஆசாராமின் ஆதரவாளர்களும் ஊர் மக்களால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்

ஆசாராம் பாபுவுக்கு சிறுமிகள், பெண்களை சப்ளை செய்த ம.பி. ஹாஸ்டல் வார்டன்

ஜோத்பூர்: மதகுருவான ஆசாராம் பாபு மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா குருகுல் விடுதியின் வார்டனுடன் உறவு கொண்டதாக அவரது உதவியாளர் சிவா தெரிவித்துள்ளார்.

அவரது உதவியாளர் சிவா பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். போலீசார் சிவாவை கைது செய்து விசாரித்தபோது தான் இந்த தகவல்கள் கிடைத்துள்ளது.

வார்டனுடன் உறவு ஆசாராம் பாபு மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா குருகுல் விடுதியின் வார்டன் சில்பியுடன் உடல் உறவு கொண்டதாக சிவா தெரிவித்துள்ளார். இந்த குருகுல் விடுதி ஆசாராம் பாபுவுக்கு சொந்தமானது.

2 வீடுகள் ஆசாராம் ஷில்பிக்கு டெல்லி மற்றும் அகமதாபாத்தில் 2 பிளாட்டுகள் வாங்கிக் கொடுத்துள்ளாராம். ஷில்பி ஆசாராமுக்காக பல சிறுமிகள் மற்றும் பெண்களை ஆசிரமத்திற்கு அனுப்பி வைப்பாராம்.

மெத்தை, ஸ்பெஷல் உணவு, குளிக்க கங்கை நீர்: சிறையில் ஆசாராம் பாபுவுக்கு ராஜ மரியாதைதான்

பாலியல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மதகுரு ஆசாராம் பாபுவுக்கு சிறையில் ராஜ மரியாதை அளிக்கப்படுகிறதாம். சிறையில் அவருக்கு கட்டில், மெத்தை அளித்துள்ளார்களாம். மேலும் சிறை அதிகாரிகளின் வீட்டில் ஸ்பெஷலாக சமைக்கப்படும் உணவை தான் அவர் சாப்பிடுகிறாராம். 2 பேர் அவருக்கு பணிவிடை செய்கிறார்களாம். மேலும் அவரது வேண்டுகோளின்படி அவர் குளிக்க கங்கை நீர் கொடுக்கப்படுகிறதாம்.

  ஆசாராம் பாபு மீது  ‘பாக்சோ’  சட்டம் பாய்கிறது…!  

ஜெய்ப்பூர்: சாமியார் ஆசாராம் பாபு மீது கடுமையான பிரிவுகளைக் கொண்ட பாக்சோ சட்டத்தைப் பிரயோகிக்க ஜோத்பூர் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

சமீபத்தில்தான் இந்த சட்டம் அமலுக்கு வந்தது நினைவிருக்கலாம். குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் தடுப்புச் சட்டமான பாக்சோ, கடுமையான சட்டப் பிரிவுகளைக் கொண்டதாகும்.. தனது பொறுப்பில் இருந்த மைனர் பெண்ணை பாலியல் ரீதியாக தாக்கும் பிரிவாகும் இது.

பல ஆண்டுகளுக்கு முன்பு 25 வயது பெண்ணுடன் ஆசாராம் பாபு கசமுசா: மாஜி ஊழியர் தகவல்

அகமதாபாத்: மதகுருவான ஆசாராம் பாபுவிடம் 15 ஆண்டுகளாக வேலை பார்த்த ஒருவர் அவரின் ரகசியங்களை வெளியிட்டுள்ளார்.

அவரது ஆசிரமத்தின் ஆயுர்வேத மருத்துவ பிரிவில் 15 ஆண்டுகளாக தொழில்நுட்ப அதிகாரியாக பணிபுரிந்த அம்ருத் பிரஜபதி பல்வேறு ரகசியங்களை தெரிவித்துள்ளார்.

15 ஆண்டுகள் அம்ருத் பிரஜபதி கடந்த 1986ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தின் ஆயுர்வேத மருத்துவ பிரிவில் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு அவர் தனியாக கிளினிக் வைக்க சென்றுவிட்டார்.

சூரம் விற்றார் நான் வரும் முன்பு ஆசாராம் பாபு தனது ஆசிரமத்தில் தயாரிக்கப்பட்ட சூரங்களை முறையான உரிமம் இன்றி விற்பணனை செய்து வந்தார். அவர் மோதேரா ஆற்றங்கரை அருகே சிறிய குடில் அமைத்து அங்கு தான் இருந்தார். பின்னர் அந்த இடத்தில் ஆசிரமம் கட்டப்பட்டது என்று பிரஜபதி தெரிவித்துள்ளார். தற்போது ஆசாராம் பாபுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மொத்தம் 400 ஆசிரமங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  25 வயது பெண்ணுடன் கசமுசா  

ஒரு நாள் ஆசாராம் பாபுவுக்கு உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவரை பார்க்க அவரது அறைக்கு சென்றேன்.

அவரது பாதுகாவலர்களுக்கு என்னை நன்றாக தெரியும் என்பதால் என்னை அறைக்குள் செல்ல அனுமதித்தனர்.

உள்ளே சென்றபோது அங்கு ஆசாராம் தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த 25 வயது பெண்ணுடன் கசமுசாவில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்துவிட்டேன். அதன் பிறகே அங்கிருந்து வெளியேறினேன் என்று பிரஜபதி தெரிவித்தார்.

   ஆசாராம் பாபுவுக்கு  ஆண்மைப் பரிசோதனை செய்த  டாக்டர்கள் ஆச்சரியம்!!   

ஜோத்பூர்: மருந்து கொடுக்காமல்தான் ஆசாராம் பாபுவுக்கு ஆண்மைப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவருக்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரது ‘வீரியம்’ பார்த்து ஆச்சரியமடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

16 வயது சிறுமியைக் கற்பழித்ததாக 72 வயது ஆசாராம் பாபுக்கு 3 டாக்டர்கள் கொண்ட குழு ஆண்மைப் பரிசோதனையை நடத்தியது.

முதல் டெஸ்ட்டிலேயே ஆசாராம் பாஸ்… அவருக்கு முதலில் உடல் தூண்டுதல் physical stimulation பரிசோதனை செய்யப்பட்டது. அதிலேயே அவருக்கு உறுப்பு எழுச்சி சிறப்பாக இருந்ததாக ஜோத்பூர் மதுரா தாஸ் மாத்தூர் மருத்துவமனையைச் சேர்ந்த 3 டாக்டர்கள் கூறியுள்ளனர்.

முதலில் பரிசோதனைக்கு ஆசாராம் மறுத்தாராம். ஆனால் டாக்டர்கள் அவரை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்தனராம். பின்னர் எனது உடல் கல் போன்றது. அதை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று சோதனைக்கு சம்மதித்தாராம் ஆசாராம்.

   ஆசிரமத்தில் அடைத்து வைத்து  பெண் கற்பழிப்பு…  இன்னொரு தாத்தா சாமியார் கைது!   

செஹோர், மத்தியப் பிரதேசம்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சாமியார் ஆசாராம் பாபு, 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிக்கிய நிலையில் மத்தியப் பிரதேசத்தில் இன்னொரு சாமியார் பலாத்கார சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஆசாராம் பாபுவுக்கு 72 வயதாகிறது. இப்போது புதிதாக கைதாகியுள்ள சாமியார் இவரை விட இளையவர்தான். அதாவது 65 வயதாகிறது. இவரது பெயர் மகேந்திர கிரி என்கிற துன்னு பாபா.

இவர் மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் கிராமத்தில் ஆசிரமம் வைத்துள்ளார். அந்த ஆசிரமத்திற்கு வந்த 24 வயதுப் பெண்ணை அங்கு அடைத்து வைத்து பல மாதங்களாக இவர் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக புகார் கிளம்பியது.

அந்த 24 வயதான மணமான பெண்ணை தனது ஆசிரமத்தில் கடந்த 4 மாதங்களாக இவர் அடைத்து வைத்திருந்தாராம். அங்கு வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாராம். இதுகுறித்து போலிஸில் புகார் தரப்பட்டது. இதையடுத்து போலீஸார் ஆசிரமத்திற்குச் சென்று ரெய்டு நடத்தி அந்தப் பெண்ணை மீட்டனர். சாமியாரும் கைது செய்யப்பட்டார்.

2 வயது சிறுமியை பலாத்காரம் செய்து ரத்தம் கொட்டக் கொட்ட சாலையில் போட்ட பரிதாபம்

லூதியானாவில் 2 வயது சிறுமி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாள். ரத்தம் கொட்டிய நிலையில் அந்த சிறுமியை சாலையோரத்திலிருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிறுமி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக கிடந்த நிலையைப் பார்த்து அதிர்ந்து போன ஒருவர் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து சிறுமியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.

அந்த சிறுமியின் பெற்றோர் கூலித் தொழிலாளர்கள் ஆவர். அங்குள்ள குடிசைப் பகுதியில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று அதிகாலை 2 மணியளவில் சிறுமியின் தந்தை எழுந்துள்ளார். அப்போது தனது மகளைக் காணாமல் திடுக்கிட்டு அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். ஆனால் காணவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தகவல்கள் அனைத்தும் http://tamil.oneindia.in/news லிருந்து எடுக்கப்பட்டது.

Thanks to –  http://vanjoor-vanjoor.blogspot.in/2013/09/blog-post_7682.html

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

28 + = 29

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb