நாடு முழுவதும் தற்போது
வல்லுறவு வழக்கில் ஈடுபடுவோரில்
பாதிக்கும் மேற்பட்டோர்
இளம் சிறார்களாக இருப்பது
அதிகரித்துவருகிறது.
காரணம் என்ன?
ஊடகம், சமூக வலைதளங்களில் காமக்கிளர்ச்சி தரும் படங்கள், காட்சிப்பதிவுகள், கட்டுப்படுத்தப்படாமல், அனைத்து வயதினரும் திறந்து பார்க்கும் விதத்தில் இருக்கின்றன.
திரைப்படங்கள் காதல் தீயை வளர்க்கின்றன.
வளர்இளம் சிறார்கள் அசாதாரண பாலியல் தூண்டுதலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
புதுப்புது சேனல்கள் பார்வையாளர்களை ஈர்க்க, அழகான பெண்களையே வேலைக்கு அமர்த்துகின்றன.
ஆடைகளையும் தீர்மானிக்கின்றன. இதனை எந்தப் பெண்ணியவாதியும் எதிர்ப்பதாகத் தெரியவில்லை.
காசு கொடுத்தால் எந்த விளம்பரத்தையும் ஒளிபரப்ப முடியும்.
அரசு எந்தத் தணிக்கையும் இல்லாமல் அவற்றை அனுமதிக்கிறது.
மதுவுக்கும் வயது ஒரு தடையில்லை.
இந்தக் காரணிகளைக் கட்டுப்படுத்தாதவரை, தூக்குதண்டனையால் மட்டுமே பாலியல் குற்றங்களையோ, வல்லுறவு நிகழ்வுகளையோ கட்டுப்படுத்திவிட முடியாது.
உணர்வுபூர்வமாக மட்டுமே சிந்திக்காமல், அறிவுபூர்வமாகவும் அணுகினால் இது புரியும்.
கொலை செய்தவனைப் போலவே, கொலை செய்யத் தூண்டியவனுக்கும் அதே தண்டனையை சட்டம் பரிந்துரைக்கிறது.
என்னசெய்ய, ஊடகங்களையோ, அரசையோ தண்டிக்க முடியாதே…
-ஆசிரியர், தினமணி