Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டது எப்படி? இம்ரான்கானின் ஒப்புதல் வாக்குமுலம் (2)

Posted on September 18, 2013 by admin

[மேலே: தனது தாயாரின் நினைவாக இம்ரான் கான் நிறுவியுள்ள கேன்ஸர் மருத்துவமனை]

முதலில் எனது தலைமுறை சுவீகரித்துக் கொண்ட தாழ்வு மனப்பான்மை நான் ஒரு உலக தரம் வாய்ந்த விளையாட்டு வீரனாக ஆகியபோது எனது மனதை விட்டு வெளியேறியது. அடுத்து இரண்டு கலாச்சாரங்களுக்கு இடையில் வாழும் ஒரு அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதன் காரணமாக இரண்டு சமூகங்ககளின் நன்மை மற்றும் தீமைகளை எடைபோடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

மேற்கத்திய உலகில் நிறுவன அமைப்புகள் வலுவாக இருந்தன. ஆனால் நமது நாடுகளில் அவை வலுவிழந்து வந்தன. ஆனால் ஒரு அம்சத்தில் மட்டும் நாம் அன்றும் இன்றும் வலுவாக இருக்கின்றோம். அது நமது குடும்ப வாழ்வியல் ஆகும். மேற்கத்திய உலகின் மிகப்பெரும் இழப்பு இந்த துறையில் உள்ளது என்பதை நான் உணர்ந்தேன்.

மதக்குருமார்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட முயன்ற அவர்கள் தங்கள் வாழ்வில் இருந்து இறைவனையும், மதத்தையும் அப்புறப்படுத்தி, விட்டார்கள்.

அறிவியல் துறையில் மிகப்பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் அது பல கேள்விகளுக்கு பதில்களை அளித்தாலும் அதனால் இரண்டு கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது.

முதலாவது கேள்வி நமது படைப்பின் நோக்கம் என்ன?

இரண்டாவது கேள்வி நாம் இறந்த பிறகு என்ன நடைபெறுகின்றது?

இந்த கேள்விகளுக்கு பதில் இல்லாதது ஏற்படுத்திய இடைவெளி தான் உலகா தாய மற்றும் சிற்றின்பத்தில் மூழ்கும் கலாச்சாரத்தை மேற்கத்திய உலகில் உருவாக்கியது என்று நான் கருதுகிறேன்.

இந்த உலக வாழ்க்கை மட்டுமே நிஜம் என்ற நம்பிக்கையின் காரணமாக காற்றுள்ள போதே துற்றிக்கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மை ஏற்பட்டு இதற்காக பணத்தை நாடும் நிலை ஏற்பட்டது. இத்தகைய கலாச்சாரம் ஒரு மனிதனுக்கு மனோதத்துவ பாதிப்புகளை ஏற்படுத்தும். இதன் காரணமாக அமெரிக்காவில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் மனநல மருத்துவர்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தனைக்கும் அமெரிக்கா பொருளா தாரத்தில் மிகப்பெரும் முன்னேற்றத் தை கண்டுள்ள தனது குடிமக்களுக்கு எண் ணற்ற உரிமைகளை வழங்கிய நாடாக திகழ்கின்றது. இத்தகைய சூழல் ஏற்பட்ட போதிலும் நவீன மனோதத்துவ இயஇல் மனித ஆன்மா குறித்து எந்தவொரு ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. சுவீடனும், சுவிட்சர்லாந்தும் தங்கள் குடிமக்களுக்கு மிக அதிகமான நலத் திட்டங்களின் பலன்களை அளித்துள்ளன. இருப்பினும் இந்த இரு நாடுகளில் தான் மிக அதிக அளவில் தற்கொலைகள் நடைபெற்று வருகின்றன. மனிதனுக்கு செல்வம் மட்டும் திருப்தியை அளிக்காது. அதை விட மேலான ஒன்றை அவன் நாடுகிறான் என் பதை இது எடுத்துக் காட்டுகின்றது.

ஒழுக்க நலன்களுக்கு அடிப்படையாக மதம் விளங்குகின்றது. மதத்தை வாழ்வில் இருந்து நீக்கிய பிறகு 1970கள் முதற்கொண்டு ஒழுக்கக்கேடு வேகமாக வளர்ந்து வந்துள்ளது. இதன் நேரடி தாக்கம் குடும்ப வாழ்வின் மீதே ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில் விவாகரத்து விகிதம் 60 சதவிகிதமாக உள்ளது. கணவர் இல்லாத தாய்களின் எண்ணிக்கை 35 சதவிகிதம் என மதிப்படப்பட்டுள்ளது. அனைத்து மேற்கத்திய சமூகங்களிலும் குற்ற எண்ணிக்கை பெருகி வருகின்றது. இதில் திகில் அடைய செய்யும் நிகழ்வு என்னவெனில் இனவெறியும் இந்த சமூகங்களில் வேகமாக அதிகரித்து வருவது தான். மனிதர்கள் சமமானவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் தகவல் களை அறிவியல் தந்த போதினும் (வெள்ளையர்களை விட கறுப்பர்கள் மரபு ரீதியாக அறிவாற்றல் குறைவானவர்கள் என்று சமீபத்திய அறிவியல் ஆய்வு ஒன்று கூறுகின்றது) மதம் மட்டுமே மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் என்பதை போதிக்கின்றது.

1991-க்கும், 1997-க்கும் இடையே ஐரோப்பாவிற்குள் 5,20,000 நபர்கள் வெளி நாடுகளில் இருந்து வந்து குடியமர்ந்து உள்ளார்கள். இச்சூழல் பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி என பல மேலை நாடுகளில் இனவெறி தாக்குதல்கள் நடைபெற்றன. ஆப்கான் போர் நடைபெற்ற காலத்தில் பாகிஸ்தானில் 40 லட்சம் அகதிகள் வந் தனர். அந்த மக்கள் பரம ஏழைகளாக இருந்த போதினும் எவ்வித இன பதட்டமும் அங்கு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1980 களில் தொடர்ச்சியாக நடைபெற்ற சில நிகழ்வுகள் என்னை இறைவனின் பால் அழைத்துச் சென்றது. திருக்குர்ஆன் கூறுவது போல்: சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமை யையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன. (2:165) இவற்றில் ஒன்று கிரிக்கெட் ஆகும். நான் அந்த விளையாட்டின் மாணவன் என்ற முறையில் அந்த விளையாட்டு நுட்பத்தை மென்மேலும் அறியும் போது ஒரு உண்மையை உணர்ந்தேன். நான் தற்செயலானது என கருதியவை அல்லாஹ்வின் நாட்டம் என்பதை உணர்ந்தேன். காலம் செல்ல, செல்ல இது மேலும் உறுதியானது. ஆனால் சல்மான் ருஷ்தியின் சாத்தானிக் வெர்சஸ் நூல் வெளிவந்த பிறகு தான் இஸ்லாத்தைப் பற்றிய எனது புரிதல் விரிவடைந்தது.

கட்டுரையின் தொடர்ச்சிக்கு  “Next” ஐ “கிளிக்” செய்யவும்.

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 44 = 53

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb