Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டது எப்படி? இம்ரான்கானின் ஒப்புதல் வாக்குமுலம் (3)

Posted on September 18, 2013 by admin

[ பிற மக்களுக்குரிய கடமைகளை ஆற்றுவதையும் இஸ்லாம் விதியாக்கியுள்ளது என்ற நம்பிக்கை என்னை மேம்பட்ட ஒரு முஸ்லிமாக உருவாக்கியது. சுயநலமாக எனக்காக மட்டும் வாழாமல் இறைவன் எனக்கு அருளியுள்ளவற்றை இல்லாதோருக்கும் அளிக்க வேண்டும் என்ற சிந்தனை எனது செயல்களுக்கு வடிவம் அளித்தது. இஸ்லாத்தின் அடிப்டைகளை பின்பற்றியதின் மூலம் நான் இந்த வழியை தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.

நான் ஒரு சகிப்புத்தன்மையுள்ள மனிதனாகவும் ஏழைகளின் நிலையை உணர்ந்தவனாகவும் மாறினேன். வெற்றிகளை குவித்தது எனது திறமையினால் அல்ல அல்லாஹ்வின் நாட்டத்தினால் தான் வெற்றி கிடைத்தது என்பதை நான் புரிந்து கொண்டேன்.

சமீபத்தில் இளவரசர் சார்லெஸ் மேற்கத்திய உலகு இஸ்லாத்திடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒத்துக் கொண்டார். ஆனால் எந்தவொரு குழு மிக சிறப்பான முறையில் இஸ்லாத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் நிலையில் உள்ளதோ அந்த குழுவே மேற்கத்திய மனப்போக்கில் முழ்கி இஸ்லாத்தை பிற்போக்கானது என்று கருதினால் இளவரசர் சார்லெஸ் சொன்னதை எப்படி நடைமுறைக்கு கொண்டு வர இயலும்.

இஸ்லாம் மனித குலம் முழுமைக்குமான மார்க்கமாகும். இதனால் தான் நமது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மனித குலத்திற்கு ஒரு அருட்கொடை என்று வர்ணிக்கப்பட்டர்கள். இதனை உணர்ந்து செயல்பட வேண்டும்.]

மனம் திறக்கும் இம்ரான் கான் 

இந்த நூலுக்கு முஸ்லிம் உலகம் காட்டிய எதிர்ப்பின் காரணமாக, உருவாகிய முஸ்லிம்களுக்கு எதிரான பார பட்ச எதிர்விளைவுகளை மேற்கத்திய உலகில் வாழ்ந்து வந்த என்னைப் போன்றோர் தான் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. எங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் தான் இருந்தன. ஓன்று எதிர்த்து போராடுவது அல்லது மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறுவது.

இஸ்லாத்திற்கு எதிரான இந்த தாக்குதல் அநியாயமானது என்பதை உணர்ந்த நான் எதிர்த்து போராடுவது என்று முடிவெடுத்தேன். அப்போது தான் போராடுவதற்கு தேவையான தயாரிப்புகள் என்னிடம் இல்லை என்பதை உணர்ந்தேன். ஏனெனில் இஸ்லாத்தைப் பற்றிய எனது அறிவாற்றல் மிக குறைவாக இருந்தது. 

இஸ்லாத்தை படிக்கத் தொடங்கினேன். எனது வாழ்வில் மிகப் பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டது. இந்த காலக்கட்டத்தில் தான் ஷரிஅத்தி முஹம்மது அஸத் இக்பால் கய் ஈத்தன் முதலிய அறிஞர்களின் நூல்களை படித்தேன். திருக்குர்ஆனையும் கற்க தொடங்கினேன்.

உண்மையை கண்டுபிடித்தது எனக்குள் எத்தகைய உணர்வை ஏற்படுத்தியது என்பதை சுருக்கமாக விளக்க விரும்புகிறேன்.

திருக்குர்ஆன் நம்பிக்கையாளர்களை அழைத்து செய்திகளை கூறும் போதெல்லாம் எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகிறார்களோ என்றே குறிப்பிடுகின்றது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் ஒரு முஸ்மிற்கு இரண்டு கடமைகள் உள்ளன. ஓன்று இறைவனுக்கு செலுத்த வேண்டிய கடமை மற்றொன்று மனிதர்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள்.

இறைவன் மீதான நம்பிக்கை என் மீது ஏற்படுத்திய மிகப் பெரும் தாக்கம் மனிதர்கள் மீதான அச்சத்தை என் உள்ளத்தில் இருந்து முற்றிலும் நீக்கியது. மனிதர்கள் வேறு ஒரு மனிதருக்கு அடிமைப்பட்டு இருப்பதிஇருந்து அவர்களுக்கு விடுதலை அளிக் கின்றது திருக்குர்ஆன். வாழ்வும் மரண மும், கண்ணியமும் இழிவும் இறைவன் நாட்டத்தினால் ஏற்படுபவை என்பதை நிலைநாட்டுவதின் மூலம் பிற மனிதர்களுக்கு நாம் சிரம் பணிய தேவையில்லை என்பதை நிலை நாட்டுகின்றது திருக்குர்ஆன்.

நிரந்தர உலகிற்கு நம்மை தயாரிக்கும் நிகழ்வு தான் தற்போதைய உலக வாழ்வு என்பதை உணர்ந்தேன். இதன்பின் நானே உருவாக்கிக் கொண்ட அடிமைத்தளைகளை நான் உடைத்துக் கொண்டேன். வயதாவதை மறைக்கும் விதமாக செயற்கையான உபாயங்களை பயன்படுத்துதல் (இன்றைய மேலை நாடுகளில் இந்த போக்கு அதிகம் காணப்படுகின்றது. இதன் காரணமாக பிளாஸ்டிக் சர்ஜன்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது) உலகாதாய மனப்பான்மை, நானே பெரியவன் என்ற தன்முனைவு பிறர் சொல்லுக்கு அஞ்சி நடப்பது போன்ற அடிமைத்தளைகளை நான் உடைத்துக் கொண்டேன். உலக ஆசைகளிஇருந்து நாம் முற்றிலுமாக விடுபட முடியாது. ஆனால் அந்த ஆசைகள் நம்மை கட்டுப்படுத்தாமல் நாம் அவற்றை கட்டுப் படுத்தும் நிலைக்கு வரவேண்டும்.

பிற மக்களுக்குரிய கடமைகளை ஆற்று வதையும் இஸ்லாம் விதியாக்கியுள்ளது என்ற நம்பிக்கை என்னை மேம்பட்ட ஒரு முஸ்லிமாக உருவாக்கியது. சுயநலமாக எனக்காக மட்டும் வாழாமல் இறைவன் எனக்கு அருளியுள்ளவற்றை இல்லாதோருக்கும் அளிக்க வேண்டும் என்ற சிந்தனை எனது செயல்களுக்கு வடிவம் அளித்தது. இஸ்லாத்தின் அடிப் டைகளை பின்பற்றியதின் மூலம் நான் இந்த வழியை தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.

நான் ஒரு சகிப்புத்தன்மையுள்ள மனிதனாகவும் ஏழைகளின் நிலையை உணர்ந்தவனாகவும் மாறினேன்.

வெற்றிகளை குவித்தது எனது திறமையினால் அல்ல அல்லாஹ்வின் நாட்டத்தினால் தான் வெற்றி கிடைத்தது என்பதை நான் புரிந்து கொண்டேன்.

இதன் காரணமாக எனது மனதிற்குள் அகந்தைக்கு பதிலாக தன்னடக்கம் குடியமர்ந்தது. பொது மக்களை ஏளனமாக பார்க்கும் பழுப்பு துரைகளின் மனப்போக்கிற்கு பதிலாக பலவீனமான மக்கள் மீது பரிவும் இரக்கமும் எனக்குள் ஏற்பட்டது. குழப்பம் விளைவிப்பது கொலையை விட கொடூரமானது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. உண்மையில் இப்போது தான் நான் இஸ்லாத்தின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொண்டேன். அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந் தால் மன அமைதி கிடைக்கும் என்பதை நான் அனுபவித்தேன்.

இந்த நம்பிக்கையின் காரணமாக எனக்குள் இருக்கும் பலத்தை நான் உணர்ந்தேன். இந்த பலத்தை நான் முன்பு அறியவில்லை.  வாழ்வின் வளங்களை உணர இது எனக்கு உதவியது. பாகிஸ்தானில் இஸ்லாம் ஒரு தலை பட்சமாக பின்பற்றப்படுகின்றது என்று நான் கருதுகிறேன். இறைவன் மீது நம்பிக்கை வைத்து சில சடங்குகளை நிறைவேற்றுவது மட்டும் போதுமானது அல்ல என்று நான் கருதுகிறேன். ஒருவர் நல்ல மனிதராக வாழ வேண்டும். பாகிஸ்தானில் வாழும் நம்மை காட்டிலும் குறிப்பிட்ட சில மேலை நாடுகளில் வாழ்வோரிடம் வளமான இஸ்லாமிய பண்பாடுகள் உள்ளன. குறிப்பாக தங்கள் குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்பதிலும் நீதி பரிபாலனத்திலும் இதனை காண முடிகின்றது. உண்மையில் எனக்கு தெரிந்த சில உன்னதமானவர்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.

ஆனால், அவர்களிடம் எனக்கு பிடிக்காதது அவர்களது இரட்டை அளவு கோலாகும். அவர்களது குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அதே நேரத்தில் பிற நாட்டு குடிமக்களை அவர்கள்இழிவான மனிதர்களாக கருது கிறார்கள். உதாரணமாக விஷம் நிறைந்த கழிவுகளை அவர்கள் மூன்றாம் உலக நாடுகளில் கொட்டுகிறார்கள். மேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட சிகரெட்களை மற்ற நாடுகளில் விளம்பரம் செய்து விற்பனை செய்கிறார்கள். இதே போல் மேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகளையும் அவர்கள் பிற நாடுகளில் விற்பனை செய்து வருகிறார்கள்.

இரண்டு பிற்போக்கு குழுக்களின் சிந்தனை பிளவுக்குள் சிக்குண்டுள்ளதே தற்போது பாகிஸ்தான் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந் துள்ளன. ஒரு பக்கம் மேற்கத்திய சிந்தனையில் ஊறிப்போன ஒரு குழுவினர். மேற்கத்தியர்களின் பார்வையில் இஸ்லாத்தை அணுகும் இவர்களுக்கு தேவையான அளவு அறிவாற்றல் இல்லை. சமுதாயம் இஸ்லாத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று யாராவது கூறினால் அதற்கு இந்த குழுவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஒரு சில அம்சங்களில் மட்டுமே இஸ்லாத்தை பின்பற்ற வேண்டும் என்பது இவர்களது கருத்து. இதற்கு எதிர்மறையாக உள்ளது மற்றொரு குழு. மேற்கத்திய சிந்தனையாளர்களை எதிர்கின்றோம் என்ற பெயரில் இந்த குழுவினர்  இஸ்லாத்தின் தோற்றங் களுக்கு முரணான சகிப்புத்தன்மையற்ற  வன்மையான போக்கை கடைபிடிக்கின்றனர்.

இப்போது என்ன செய்ய வேண்டு மெனில் இரு துருவங்களாக இருக்கும் இந்த குழுக்களுக்கு மத்தியில் கருத்து பரிமாற்றம் நிகழ வழிவகை காண வேண்டும். இது நடைபெற வேண்டுமெனில் நமது நாட்டின் கல்வி வளம் எந்த குழுவினருக்கு அதிகமாக பயன்படுகிறதோ (அதாவது மேற்கத்திய சிந்தனை குழுவினருக்கு)  இஸ்லாத்தை சரிவர கற்பிக்க ஆவன செய்ய வேண்டும்.

அவர்கள் இஸ்லாத்தை கடைபிடிக்கும் முஸ்லிம்களாக மாறுகின்றார்களா அல்லது இறைநம்பிக்கை கொள்கிறார்களா என்பது அவர்களது தனிப்பட்ட விருப்பம். ஏனெனில் திருக்குர்ஆன் மார்க்கத்தில நிர்பந்தம் இல்லை என்று கூறுகின்றது. ஆனால் அவர்கள் தீவிரவாதத்தை எதிர்கொள்ள வேண்டுமெனில் அவர்களுக்கு மார்க்க அறிவு மிக அவசியமாகும். வெறும் தோரணையாக தீவிரவாதத்தை எதிர்கின்றோம் என்று சொல்வதால் அதனை எதிர்கொள்ள இயலாது.

திருக்குர்ஆன் முஸ்லிம்களை நடுநிலை சமுதாயம் என்று அழைக்கின்றது. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு, அதை எடுத்துரையுங்கள். மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா இல்லையா என்பதை பற்றி கவலை வேண்டாம் என்று இறைவன் அறிவுறுத்துகிறான். எனவே நமது கருத்தை பிறர் மீது திணிக்க இஸ்லாம் நிர்பந்திக்கவில்லை என்பதை உணர வேண்டும்.

மேலும் பிற மதத்தினரை அவர்களது வழிப்பாட்டுத் தலங்களை மற்றும் அவர்களது மதத்தலைவர்களை மதிக்குமாறு நமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலேசியாவிற்கோ அல்லது இந்தோனேசியாவிற்கோ எந்தவொரு முஸ்லிம் பிரச்சார குழுவோ அல்லது இராணுவமோ செல்லவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். முஸ்லிம் வர்த்தகர்களின் அப்பழுக் கற்ற நடத்தைகளும் மேன்மை மிக்க பண்பாடு களும் தான் அந்நாடுகளின் மக்களை இஸ்லாத் தின் பக்கம் கவர்ந்தன. தற்சமயம் இஸ்லாத்தை மிக மோசமாக சித்தரிப்பது  இஸ்லாத்தை அரைகுறையாக பின்பற்றும் நாடுகள் தான். குறிப்பாக மக்களின் உரிமைகளை பறிப்பதற்காக மதத்தை பயன்படுத்தும் நாடுகள் இந்த மோசமான சித்தரிப்பிற்கு பெரிதும் காரணமாக இருக்கின்றன. உண்மையில் இஸ்லாத்தின் அடிப்படைகளை பின்பற்றும் சமுதாயம் தாராளப் போக்குடைய சமுதாயமாக தான் இருக்க முடியும்.

பாகிஸ்தானில் வாழும் மேற்கத்திய சிந்தனையாளர் வர்க்கம் இஸ்லாத்தை படிக்கத் தொடங்கினால் அதன் பயனாக தீவிரவாதத்தையும், பிரிவினை வாதத்தையும் முறியடிப்பதுடன் மட்டுமில்லாமல் இஸ்லாம் எவ்வளவு முற்போக்கானது என்பதை அவர்கள் உணர முடியும். மேற்கத்திய உலகு இஸ்லாத்தின் கோட்பாடுகளை உணர்வதற்கும் இது உதவிடும்.

சமீபத்தில் இளவரசர் சார்லெஸ் மேற்கத்திய உலகு இஸ்லாத்திடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒத்துக் கொண்டார். ஆனால் எந்தவொரு குழு மிக சிறப்பான முறையில் இஸ்லாத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் நிலையில் உள்ளதோ அந்த குழுவே மேற்கத்திய மனப்போக்கில் முழ்கி இஸ்லாத்தை பிற்போக்கானது என்று கருதினால் இளவரசர் சார்லெஸ் சொன்னதை எப்படி நடைமுறைக்கு கொண்டு வர இயலும்.

இஸ்லாம் மனித குலம் முழுமைக்குமான மார்க்கமாகும். இதனால் தான் நமது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மனித குலத்திற்கு ஒரு அருட்கொடை என்று வர்ணிக் கப்பட்டர்கள். இதனை உணர்ந்து செயல்படுவோமாக!

 

www.nidur.info 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

74 − = 67

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb