வக்ஃப் சொத்துகளை அபகரிப்பது ஜாமீன் இல்லா குற்றம்!
[ அங்கங்கே சில ஊர்களில் உள்ள ”ஜமாஅத்” நிர்வாகிகளே தங்கள் இஷ்டத்திற்கு வக்ஃப் சொத்தை வலைத்துப்போடும் இழிசெயலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இறையில்லத்தின் பொறுப்புதாரிகளாக இருந்துகொண்டு வக்ஃப் சொத்தை தங்களுக்கு உடமையாக்கிக்கொள்வது பெருங்குற்றமாகும்.]
சிலதினங்களுக்கு முன் வக்ஃப் சொத்துகளை பாதுகாப்பதற்கும், வளர்ச்சிக்குமான வக்ஃப் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.
முன்னர் இம்மசோதாவை மாநிலங்களை அங்கீகரித்திருந்தது. குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டால் இம்மசோதா அமலுக்கு வரும். சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரஹ்மான் கான் தாக்கல் செய்த மசோதாவை பா.ஜ.க., இடது சாரிகள் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் ஆதரித்தனர்.
வக்ஃப் சொத்துகளை விற்பது, தானமாக அளிப்பது, அடகு வைப்பது ஆகியன தடை செய்யப்பட்டுள்ளன. வக்ஃப் சொத்துகளை அபகரித்தல் ஜாமீன் இல்லாத குற்றமாகும்.
ஆனால், வக்ஃப் சொத்துகளை 30 ஆண்டுகளுக்கு கல்வி தேவைகளுக்காகவும், 15 ஆண்டுகள் வர்த்தகத்திற்காகவும் குத்தகைக்கு வழங்கலாம்.
புதிதாக உருவாக்கப்படவிருக்கும் வக்ஃப் வளர்ச்சி கார்ப்பரேஷன் மூலம் வக்ஃப் சொத்துகள் குத்தகைக்கு விடப்படும். ஒவ்வொரு பத்து ஆண்டுகள் கழியும்போதும் வக்ஃப் சொத்துகள் மீது சர்வே நடத்தப்படும். வக்ஃப் சொத்துகளை பாதுகாப்பதற்கும், வளர்ச்சிக்குமான வக்ஃப் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.
சில ஊர்களில் உள்ள ”ஜமாஅத்” நிர்வாகிகளே தங்கள் இஷ்டத்திற்கு வக்ஃப் சொத்தை வலைத்துப்போடும் இழிசெயலும் அங்கங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. இறையில்லத்தின் பொறுப்புதாரிகளாக இருந்துகொண்டு வக்ஃப் சொத்தை தங்களுக்கு உடமையாக்கிக்கொள்வது பெருங்குற்றமாகும்.
ஒரு ஜாண் அளவு நிலத்தை அபகரித்தால்…!
”ஒரு ஜாண் அளவு நிலத்தை அநியாயமாக ஒருவன் அபகரித்தால் இறுதி நாளில் அவன் ஏழு பூமிக்கடியில் அமிழ்த்தப்படுவான்” என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி.)
”ஒருவன் ஒரு ஜாண் நிலத்தை அநியாயமாக அபகரித்தால்
மறுமையில் அதை ஏழு பூமிகளின் இறுதிவரை தோண்டும்படி அல்லாஹ் அவனை ஏவுவான்.
பின்னர் மக்களிடையே தீர்ப்புச் செய்யப்படும் வரை
(அவன் அபகரித்த) அந்த நிலத்தை அவனுடைய கழுத்தில் மாலையாக அணிவித்து விடுவான்” என்பதும்
நபிமொழி. (அறிவிப்பவர்: யஃலா பின் முர்ரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத்.)
‘தப்ரானி’யின் அறிவிப்பில் ”மறுமையில் அதை ஏழு பூமிகளின் அடிப்பாகம் வரைக் கொண்டு வரும்படி அல்லாஹ் அவனை ஏவுவான்” என்று உள்ளது.
நில அடையாளைக் கல்லை, நிலத்தின் எல்லைகளை மாற்றி அண்டை வீட்டாரின் நிலத்தை தன் நிலத்தோடு சேர்த்து விசாலப்படுத்திக் கொள்வதும் இதில் அடங்கும். பின்வரும் நபிமொழியும் இதையே சுட்டிக் காட்டுகிறது.
”நில அடையாளக் கல்லை மாற்றுபவனை அல்லாஹ் சபிப்பானாக!” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அலீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்.)
www.nidur.info