Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சுய இன்பம் செய்யவில்லை என்றால், ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்… என்ன செய்ய?!

Posted on September 15, 2013 by admin

ஈமானின் உறுதி எங்கெல்லாம் ஒளிந்திருக்கிறது…!!!

 ஐயம் :  நேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வேன். இதை செய்யவில்லை என்றால், ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும். எனக்கு விரைவில் திருமணம் ஆக இருக்கிறது. திருமணமானவுடன் மனைவியை ஊரில் விட்டு விட்டு அரபு நாடுகளுக்கு வரலாமா?

 தெளிவு :  “மனிதன் நன்மையைக் கோருவது போலவே தீமையையும் கோருகிறேன். (ஏனெனில்) மனிதன் அவசரக்காரனாக இருக்கிறான்”. என அல்லாஹ்(ஜல்) பரிசுத்த நெறி நூலின் 17:11 வசனத்தில் தெரிவிக்கிறான். ஹராமான செயல்களில் ஈடுபடும்படி ஆகிவிடும் என்பதற்காக, தங்கள் அவசரப்பட்டு விட்டீர்கள் எனத் தெரிகிறது.

“இதைச் செய்ய்வில்லையென்றால், ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்” என தாங்கள் கூறுவதிலிருந்து தங்களின் (Will – Power) மன உறுதியில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனத்தெரிகிறது.

ஹராமானதில் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக, தங்கள் மேற்கொண்ட வழி மட்டும் ஹலாலானதா என ஒரு விநாடி சிந்தித்துப் பாருங்கள். பொருளீட்டுவதற்காக, வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டவன் அது பாவனம் என்பதை உணர்ந்த பின், வீடுகளில் கொள்ளையடிக்க முயல்வானா? உழைத்து பொருளீட்டவே முயல்வான். அது போல சுய இன்பம் தேவைப்பட்ட உடனே, திருமணம் செய்திருக்கலாமே!

“உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவருக்கு திருமணம் செய்து வையுங்கள்” என்பது அல்லாஹ்வின் கட்டளை. (அல்குர்ஆன் 24:32)

“திருமணம் செய்யாதவர்கள் ஒழுக்கம் பேணட்டும்”. (அல்குர்ஆன் 24:33)

என்று அல்லாஹ் கட்டளையிட்டிருக்கும்போது, தாங்கள் ஒழுக்கத்தைப் பேணாமல் இருந்து விட்டீர்கள்.

அது மட்டுமின்றி, ஹராமானதைத் தடுக்க ஹலாலானதை தேடிக் கொண்டதைப் போலல்லவா நியாயம் கற்பிக்கிறீர்கள். “மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள்” எனும் 10:44 ஆம் வசனம் நமக்கு படிப்பினைத் தரவேண்டும்.

“எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும், அதனை அவர் கண்டு கொள்வார். எவன் ஓர் அணுவளவு பாவம் செய்திருந்தாலும், அதனையும் அவன் (மறுமையில்) கண்டு கொள்வான்”. (அல்குர்ஆன் 99:7,8)

இந்த இறை வசனங்களின்படி, சுய இன்பம் நன்மையான காரியமாக கணக்கெடுக்கப்படுமா அல்லது பாவமான காரியமாக கணக்கிடப்படுமா? என வினவினால், சாதாரண அறிவுள்ளவன் கூட அதை பாவமான காரியம் என கலபமாகக் கூறிவிடுவான். அமல்களை பதிவு செய்து கொண்டிருக்கும் வானவர்கள் சுய இன்பம் செய்வதை நன்மையில் பதிவாரா? பாவமான பதிவார் என சிந்தித்துப் பாருங்கள்.

காமத்தை மனைவியின் துணையோடு மட்டுமே தணித்துக் கொள்ள வேண்டும் என்றும், திருமணம் செய்ய வசதியற்றவர்கள் நோன்பு நோற்கட்டும் என்றும் இஸ்லாம் அறிவுறுத்துகிறது தாங்கள் விரைவில் மணம் முடிக்க இருக்கிறீர்கள்.

“அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்ஸ..”  (அல்குர்ஆன் 16:72)

என்ற இறைவசனத்தில் மனைவியரை அல்லாஹ் உங்களுக்காகத் தந்திருப்பதாகக் கூறும்போது, அந்த மனைவியை விட்டுவிட்டு வெளிநாடு செல்லும்போது, பிரிந்திருக்கும் கணவனும் ஒழுக்கக்கேட்டை அடையலாம். அப்பிரிவால் மனைவியும் வழி தவறலாம். எனவே ஒருவருக்கொருவர் தத்தமது ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளின் அடிப்படையில், பரஸ்பரம் ஒப்புக்கொள்ள முடியுமேயானால், பிரிவு பாதிப்பை ஏற்படுத்தாது. அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லாத இடங்களில், வரம்பு மீறல்கள் நடந்து கொண்டிருப்பதை கேள்விப்பட்டுக் கொண்டுதானிருக்கிறோம். எனவே, பிரிவு கணவன்-மனைவி இருவரில் பரிபூரண சம்மதத்துடுனே அமைய வேண்டும்.

நாங்கள் தேடிக்கொண்ட மாற்று வழி ஹராமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தொழாதவர்கள் சுய இன்பம் செய்தால், அவர்களுக்கு இறையச்சம் இல்லை என்று கூறிவிடலாம். ஆனால் தாங்கள் தொழகிறீர்கள். தங்களது தொழுகையைக் கொண்டு தங்களுக்கு ஒரு பயனும் ஏற்படவில்ல என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்தியிருப்பதைப் பாருங்கள். சிறந்த தொழுகைக்கான அளவு கோலாக அல்லா1் வர்ணிப்பதைப் பாருங்கள்.

“தொழுகை மானக்கேடானவற்றையும், பாவத்தையும் விட்டும் (மனிதர்களைத் தடுக்கும்)” என்ற 29:45 இறை வசனத்திற்கு பயந்து, “சுய இன்பம்” எனும் மானக் கேடான ஹராமான வழியை உடனே விட்டுவிடுங்கள்.

source:http://annajaath.com/?p=373

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

22 + = 32

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb