“யார் முஸ்லிம்களின் விவகாரத்தில் கவனம் செலுத்தவில்லையோ அவர் அவர்களைச் சார்ந்தவரல்ல” என்ற பிரபலமான ஹதீஸை நாம் கேள்விப்பட்டிருப்போம். இன்று இலங்கையை எடுத்துக் கொண்டாலும் முஸ்லிம்களும் பள்ளிவாயல்களும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் நிலை, அதுபோன்று இந்தியாவை எடுத்துக்கொண்டாலும் அங்கும் முஸ்லிம்கள் விவகாரம் பிரச்சினைக்குள் காணப்படுகின்றது.
கஷ்மீரை எடுத்தாலும் மிக அழகிய பிரதேசம் அலங்கோலமாக்கப்படுகின்றது. பாகிஸ்தானிலுள்ள மக்களை தீவிரவாதிகள் என அடக்கி யொடுக்கும் நிலை, பலஸ்தீன், ஈராக், சிரியா, லிபியா, எகிப்து என முஸ்லிம்களுக்கெதிரான அடக்குமுறையின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.
நாம் நமது உம்மத்துக்காக என்று வாழ வேண்டும். அவர்கள் விடயத்தில் நமது கவனத்தை செலுத்த வேண்டும். அவர்களுக்காக நமது துஆக்களை கேட்க வேண்டும். எனவேதான் நபியவர்கள் தமது உம்மத் விடயத்தில் மிகவும் கரிசனையோடு காணப்பட்டனர். எனவேதான் அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது:
“(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார். இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.” (09:128)
நபியவர்கள் தமது சமூகத்தின் மீதுள்ள அக்கறையின் விளைவாக பிஃரு மஊனா எனுமிடத்தில் 70 அல்குர்ஆன் ஹாபிழ்களை கொலை செய்த றிஃல், தக்வான், உஸைய்யா கோத்திரங்களுக்கு எதிராக முப்பது நாட்கள் பிரார்த்தனை செய்தார்கள். (புகாரி)
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இது விடயமாக பின்வருமாறு கூறுகிறார்: நபியவர்கள் இந்த சம்பவத்துக்காக கோபப்பட்டதைப் போல வேறு எதற்காக கோபப்பட்டதையும் நான் கண்டது கிடையாது.
எனவேதான், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்:
“அன்பு கொள்வதிலும் இரக்கம் காட்டுவதிலும் முஃமின்கள் ஒரு உடம்மைப் போன்றவர்கள். உடம்பின் ஒரு பகுதி வருத்தத்தினால் கஷ்டப்பட்டால் உடம்பின் அனைத்து பகுதிகளும் விழித்திருந்து, வருத்தப் பட்டுக்கொண்டிருக்கும்.” (முஸ்லிம்)
இன்று நமது சமூகத்தில் இருக்கும் சில மேற்கெத்தேய ஊடகங்களின் அடிவருடிகள் எமது சமூகத்திற்கு பல பிழையான தகவல்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். எகிப்து விடயம் சம்பந்தமான பல பிழையான தகவல் இணையத்தளங்கள் ஊடாக பரப்பப்படுவதனை நாம் அவதானிக்கலாம். எகிப்து இராணுவத்திற்கு சார்பான- அதாவது இந்த மார்க்கம் ஆட்சிக்கு வருவதற்கு எதிரான- இணையத்தளங்களின் அடிவருடிகளாக இருப்பவர்களும் தமது சுய காழ்ப்புணர்வுகள் காரணமாகவும் எகிப்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு மாற்றமான தகவல்களை சிலர் சந்தோசமாக பரிமாறிக் கொண்டிருக்கின்றனர்.
நபியவர்களின் காலத்தில் ஒரு ஸஹாபி பிழையான ஒரு தகவலை நகர்த்தியதற்காக அல்குர்ஆன் அவரை “பாசிக்” (பாவி) என்று அழைத்தது நாமனைவரும் அறிந்ததே. ஆனால், எமது சில இஸ்லாமிய சகோதரர்கள் உண்மைக்கு புறம்பான, அவர்களுக்கு விருப்பமான கருத்துக்களை இணையத்தளங்களில் பரவ விடுகின்றனர். இவர்கள் அல்குர்ஆன் எப்படி அழைக்குமோ தெரியாது?!
“முஃமின்களே! ஃபாஸிக் (பாவி) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம். பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படு பவர்களாக) ஆவீர்கள்.” (49:06)
“எகிப்திலே நடைபெற்றது இரத்தவெறி கொண்ட ஒரு இராணுவப் புரட்சி மட்டுமல்ல, மாற்றமாக எகிப்தை விட்டும் இஸ்லாத்தை அப்புறப்படுத்தும் ஒரு முயற்சியும் கூட.” என்ற கருத்துக்கள் பேசப்படுவதனை அவதானிக்க முடியும்.
இன்று மறுபக்கத்தில் இலங்கையைச் சேர்ந்த நமது உலமாக்கள் எகிப்து மக்களின் அமைதிப் போராட்டத்துக்காக துஆக் கேட்குமாறு வேண்டிக்கொண்ட குறுஞ் செய்திகளையும் அவதானிக்க முடியுமாகவும் இருந்தது சந்தோசத்துக்குரியது.
இறுதியாக அஷ்ஷஹீத் அப்துல்லாஹ் அஸாமின் கருத்தோடு முடித்துக்கொள்ளலாம் என நினைக்கிறோம்- ‘இஸ்லாமிய தேசமொன்று இரத்தங்கள் பாய்ச்சப் படாமல், உடல்கள் சிதறடிக்கப் படாமல், பெண்கள் விதவைகளாக்கப்படாமல், குழந்தைகள் அநாதைகளாக்கப்படாமல் உருவாகமாட்டாது என்பது இறை நியதியாகும். அப்படி எந்தவொரு இழப்பும் இல்லாமல் அது உருவாகுமென்றால் றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உருவாக்கிய இஸ்லாமிய அரசு அவ்வாறு உருவாயிருக்க வேண்டும். ஆனால், அல்லாஹ்வின் தூதர் காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், அவை இன்றி இஸ்லாமிய ஆட்சி சாத்தியமில்லை என்பதற்கு போதுமான ஆதாரமாகும்.’
எனவே நாம் இந்த இஸ்லாமிய நகர்வுகளுக்காக தொடர்ந்தும் பிரார்த்தனையில் ஈடுபடுவோம், எமது சுய விருப்பு வெறுப்புகளை மறந்து இஸ்லாத்தை விரும்புவோம்.
source: http://www.meelparvai.net/2013-04-25-04-12-56/697-2013-08-27-07-11-07.html