Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நேற்று லிபியா, இன்று சிரியா!

Posted on September 11, 2013 by admin

  நேற்று லிபியா, இன்று சிரியா! 

வியட்நாம், ஆப்கானிஸ்தான், இராக், லிபியா வரிசையில் அடுத்ததாக அமெரிக்க ராணுவத்தின் தலையீட்டால் தவிக்க இருப்பது சிரியா. இராக்கிலும், லிபியாவிலும் முன்வைக்கப்பட்ட அதே காரணங்களைத்தான் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளான சில அரபு நாடுகளும் சிரியாமீது ராணுவத் தாக்குதலில் ஈடுபடுவதற்கும் காரணம் கூறுகிறார்கள்.

பொறுப்பற்ற ஆட்சி, பொதுமக்களை அழிப்பதற்காக ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துதல், மனிதாபிமானமில்லாத படுகொலைகள் என்று அதிபர் பஷார் அல் அஸாத் அரசின் மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்கள்.
சிரியா பிரச்னையின் பின்னணி ஒன்றும் புரிந்து கொள்ள முடியாதது அல்ல.

எப்படி இராக்கின் எண்ணெய் வளங்களைக் குறிவைத்து, அதற்கு முன்னோடியாக ஆப்கானிஸ்தானின் தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் சாக்கில் சவூதி அரேபியாவில் தங்கள் ராணுவ தளத்தை அமைத்துக் கொண்டார்களோ, அதேபோல அடுத்ததாக ஈரானைத் தாக்குவதற்காக இப்போது சிரியாமீது ராணுவப் படையெடுப்பு நடத்த முயற்சிக்கிறார்கள். லிபியாவில் தங்களது நோக்கம் நிறைவேறாத நிலையில் இப்போது சிரியா குறிவைக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவே!

சிரியாவில் உள்நாட்டுப் பிரச்னை இருந்தது என்னவோ உண்மை. அதை பயன்படுத்தி, சிரியாவிலுள்ள ஸன்னி முஸ்லிம்களுக்கு ஆதரவாக அரபு நாடுகள் ஆயுத உதவி செய்து, பஷார் அல் அஸாத் ஆட்சிக்கு எதிராகப் போராட்டத்தை முடுக்கி விட்டன. இதுவரை ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் இந்தப் போராட்டத்தில் சிரியாவில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி போராட்டக்காரர்களுக்கும் அஸாத் ஆதரவு ராணுவத்திற்கும் இடையே நடந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் மரணமடைந்தனர். இவர்கள் ராணுவத்தின் ரசாயன ஆயுதங்களால் தாக்கப்பட்டனர் என்பது போராட்டக்காரர்கள் சார்பில் அவர்கள் ஆதரவாளர்களான அரபு நாடுகள் மற்றும் அமெரிக்காவின் குற்றச்சாட்டு.
ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதே போராட்டக்காரர்கள் என்பதும், தங்களது அரசுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்க அதன் மூலம் காரணம் ஏற்படுத்துகிறார்கள் என்பதும் பஷார் அல் அஸாத் தலைமையிலான அரசுத் தரப்பின் கூற்று. அதில் உண்மை இல்லாமல் இல்லை.

கடந்த மே மாதம் ஐ.நா. சபையால் நியமிக்கப்பட்ட கார்லாடெல் போன்ட்டே குழுவின் விசாரணை அறிக்கை, போராளிகள்தான் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கிறது. அதுமட்டுமல்ல, துருக்கி எல்லையில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களிடமிருந்து 2 கிலோ “சரின்’ வாயு கைப்பற்றப்பட்டிருக்கிறது.

இராக்கிலும் சதாம் ஹுசேன் அரசின் மீது இதேபோலக் குற்றம்சாட்டித்தான் ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டது. சதாம் ஹுசேன் கொல்லப்பட்டதும், அமெரிக்காவுக்கு ஆதரவான ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. குற்றச்சாட்டு பொய் என்பதை அமெரிக்காவே ஒத்துக் கொண்டது. அதேபோல, இப்போது சிரியாவிலும் ஒரு பொய்க்காரணம் கூறப்படுகிறது என்பது தெளிவு.
கத்தார் மற்றும் அரேபிய நாடுகளின் நேரிடையான, மறைமுகமான ஆதரவுடனும், அமெரிக்காவின் ஆசியுடனும் போராளிகள் ஆயுதமும், பண உதவியும் வழங்கப்பட்டு அஸாத் அரசுக்கு எதிராகப் போராடத் தூண்டப்படுகிறார்கள். அவர்களை எதிர்கொள்ள ஈரான் அஸாதின் படைகளுக்கு உதவுகிறது. ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் ஆதரவு, அஸாத் அரசுக்கு இருக்கிறது. இதுதான் சிரியா பிரச்னைக்குக் காரணம்.

ஐ.நா. சபைத் தீர்மானம், போராட்டக்காரர்களுக்கு ஆயுத உதவி, கடைசியாக அமெரிக்காவின் நேச நாட்டுப் படையின் நேரடி ராணுவத் தலையீடு – இவைதான் லிபியாவில் கடாபி அரசைப் பதவியிலிருந்து அகற்ற அமெரிக்கா கையாண்ட உத்தி. அதையேதான் சிரியாவிலும் நடைமுறைப்படுத்த நினைத்தது அமெரிக்கா. ஆனால், லிபியா அனுபவமும், ரஷியா மற்றும் சீனாவின் எதிர்ப்பும், சிரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ஆதரிக்க முடியாமல் ஐ.நா. சபையைத் தடுத்து விட்டது.

அமெரிக்காவுக்கு சிரியாவில் தலையிடுவதில் இன்னொரு தர்மசங்கடமும் இருக்கிறது. பஷார் அல் அஸாதின் அரசுக்கு எதிராகப் போராடும் ஸன்னி பிரிவு இஸ்லாமியப் போராளிகளில் பலர் அல்- கொய்தா ஆதரவாளர்கள் என்பதுதான் அது. போராளிகளுக்கு வலிமையான ஆயுதங்களை அளித்து பலப்படுத்தினால், அதுவே தங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு விடுமோ என்கிற அச்சம் அமெரிக்காவை பயமுறுத்துகிறது.

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் புரட்சியாளர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கினால், அஸாத் அரசு உடனடியாக அடிபணிந்து விடப் போவதில்லை. மிகப்பெரிய போராட்டம் வெடித்து 1999 கோசோவோ பிரச்னைபோல, அக்கம்பக்கத்து நாடுகளுக்கு அகதிகள் ஆயிரக்கணக்கில் தஞ்சம் அடைய நேரிடும். ஈரான், சீனா, ரஷியா நாடுகளின் ஆதரவுடன் வியட்நாம் போல போர் நீளும். அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும்.

அமெரிக்காவும் நட்பு நாடுகளும் ஐ.நா. சபையின் அனுமதி இல்லாமல் லிபியாவைப் போல சிரியாமீதும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால், அதுவே தவறான முன்னுதாரணமாகி உலகிலுள்ள ஏனைய நாடுகளுக்கும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் அச்சுறுத்தலாகக் கூடும்.

சிரியா பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண அமெரிக்காவோ, ரஷியாவோ தயாராக இல்லை. காரணம், அன்னிய நாடுகளின் அக்கறை பக்கத்திலிருக்கும் ஈரானின் எண்ணெய் வளத்தின் மீதுதானே தவிர சிரிய நாட்டு மக்களின் நல்வாழ்வில் அல்ல.
இந்திய அரசுக்கு பண்டித ஜவகர்லால் நேருவுக்கு இருந்ததுபோல உலக அமைதியில் அக்கறை இருக்குமேயானால், சிரியா பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்கிற தீர்மானத்தை ஐ.நா. சபையில் முன்மொழிந்து ஆதரவு திரட்டி நிறைவேற்ற வேண்டும். நமக்கு அந்தக் கடமை உண்டு!

அமெரிக்கா என்றுமே நேர்மைக்காகவோ அல்லது அநீதிக்கு எதிராகவோ போர் தொடுப்பதே இல்லை. அவர்களுக்கு ஆதரவாக யார் இல்லையோ அவர்கள் எல்லாம் எதிரிகள், அவர்கள் மீது போர் தொடுத்து அவர்களை அடிமை படுத்தி அங்கு உள்ள வளங்களை கொள்ளை அடிப்பதே அமெரிக்காவின் நோக்கம். பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது போல உலக நாடுகள் அமெரிக்காவை இந்த விசயத்தில் எதிர்த்தால்தான், அமெரிக்காவின் நாட்டாமை தனத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வரும்.

source: http://dinamani.com/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

53 − 49 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb