Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

குர்ஆன் தர்ஜுமாவைப் பாருங்கள்

Posted on September 2, 2013 by admin

ஐயம் :  10.7.2013 அன்று ஸஹர் நேரத்தில் ஜெயா டி.வி.யில் ஆலிம் பைஜி ஒருவர் உரையாற்றினார். அதில் குர்ஆன் தர்ஜுமாவைப் பார்க்காதீர்கள். உங்களால் விளங்கிக் கொள்ள முடியாது. உதாரணத்திற்கு நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் மரம் பேசியது. நானே அல்லாஹ் என்னையே வணங்குங்கள் என்றது. நபியவர்கள் அதனை ஏற்கவில்லை. அறிந்தவர்களிடமே கேட்டு விளக்கம் பெறவேண்டும் என்றார். இவ்வாறு மரம் பேசியதாக நிகழ்ச்சி குர்ஆனில் உள்ளதா?

தெளிவு :  இப்படிப்பட்ட மவ்லவிகள் பற்றித்தான் குர்ஆன் லுக்மான் : 31:6ல் “”மனிதர்களில் சிலர் இருக்கிறார்கள். அவர் அறிவின்றி இறைவழியிலிருந்து (மக்களை) வழிகெடுக்கவும், இறைவழியைப் பரிகாசமாக்கவும், வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்குகிறார்கள். இத்தகையோருக்கு இழிவான தண்டனையுண்டு” என்று தெளிவாகக் கூறி அல்லாஹ் எச்சரிக்கிறான். மேலும் இவர்களைப் போன்றவர்களையே 62:5ல் “”ஏடுகளைச் சுமக்கும் கழுதைகள்” என்றும் அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யாக்கும் இப்படிப்பட்டவர்களின் உதாரணம் மிகவும் கெட்டதாகும். அக்கிர மக்கார சமூகத்தை அல்லாஹ் நேர்வழி நடத்த மாட்டான் என்றும் இதே 62:5ல் அல்லாஹ் கூறுகிறான்.

இன்னும் இப்படிப்பட்டவர்களையே அல்லாஹ் தாஃகூத் அதாவது மனித ஷைத்தான்கள் என்று 2:256,257, 4:51,60,76, 5:60, 16:36, 39:17 ஆகிய 8 இடங்களிலும், தாஃகூன்-வரம்பு மீறுகிறவர்கள் என்று 51:53, 52:32 ஆகிய 2 இட்களிலும் மிக வன்மையாக அடையாளம் காட்டி மக்களை எச்சரிக்கிறான். காரணம் என்ன? அல்லாஹ்வே தெள்ளத் தெளிவாக நேரடியாக நேர்வழியையும், தெளிவான ஆதாரங்களையும் கொடுத்த பின்னர், அல்லாஹ் விளக்கியதற்கு மேல் விளக்கம் கொடுக்கும் தகுதி மவ்லவிகளாகிய எங்களுக்கே இருக்கிறது என்று ஆணவம் பேசும் இவர்கள், அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக்கொடுக்கும் (49:16) ஆசானாகி (நவூதுபில்லாஹ்) 42:21 கூறுவது போல் அல்லாஹ்வுக்கே இணையாளர்கள் ஆகி நாளை நரகம் புகுவார்கள் என்பதில் சந்தேகம் உண்டா?

நாஸ்-மனிதர்கள் என்று 241 இடங்களிலும், 2:21, 168, 4:1,170, 10:23, 10:57, 104,108, 22:1,5,73, 31:33, 35:3,5,15, 49:13 ஆகிய பல இடங்களில் “”ஓ மனிதர்களே” என்று முழு மனித சமுதாயத்தையும் அழைத்து மார்க்கத்தை விளக்கி இருப்பது போல், நபி என்று 43 இடங்களிலும், நபிய்யன் என்று 9 இடங்களிலும்,

8:64,65,70, 9:73, 33:1,28, 45,50,59, 60:12, 65:1, 66:1,9 ஆகிய பல இடங்களில் “”ஓ நபியே” என்று அழைத்து மார்க்கத்தை விளக்கி இருப்பது போல், ஒரே ஒரு இடத்திலாவது ஓ மவ்லவிகளே, அல்லது ஓ ஆலிம்களே, அல்லாமாக்களே, மவ்லானாக்களே என்று அழைத்து மார்க்கத்தை விளக்கி இருப்பதாகக் காட்ட முடியுமா?

அதற்கு மாறாக அரபி மொழி கற்ற மவ்லவிகள் அல்ல, அல்லாஹ்வை அஞ்சி, அவனுக்கு முற்றிலும் வழிபட்டு குர்ஆனில் உள்ளதை உள்ளபடி எவ்வித சுய விளக்கமும் கொடுக்காமல் எடுத்து நடப்பவர்களே உலமாக்கள் என்று 35:28 இறைவாக்கிலும்,

அரபி கற்ற மவ்லவிகளுக்கு மட்டுமல்ல, 36:21 இறைவாக்குக் கூறுவதுபோல், ஹராமான முறையில், சாப்பிடாமல், ஹலாலாக உழைத்துச் சாப்பிடுவதன் மூலம் பயபக்தியுடன் நடப்பவர்களுக்கே அல்லாஹ் மார்க்கத்தைக் கற்றுக் கொடுப்பதாக 2:282 இறைவாக்கிலும் கூறுகிறான்.

மேலும் 2:213 இறைவாக்கில் மார்க்கத்தை விளக்கும் அதிகாரம் நபிமார்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்ததாகவும், குறிப்பாக இறுதி நெறிநூல் குர்ஆனை விளக்கும் அதிகாரம் இறுதித் தூதர் அவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருந்ததாக 16:44,64 இறைவாக்குகள் தெளிவாக அறிவிக்கின் றன. குர்ஆனின் தெளிவான வசனங்களுக்கு, இறு தித் தூதரின் தெளிவான விளக்கங்களுக்கு மாறாக மேல்விளக்கம் கொடுப்பவர்கள் பகிரங்கமான வழி கேட்டில் இருப்பதாக 33:36 இறைவாக்குக் கடுமையாக எச்சரிக்கிறது. அதையும் மீறி குர்ஆனுக்கும், ஹதீஃத்களுக்கும் மேல் விளக்கம் கூறி மக்களை வழிகேடுகளில் இட்டுச் செல்கிறவர்களும், அவர்க ளைக் கண்மூடிப் பின்பற்றும் பெருங்கொண்ட மக்களும் நாளை நரகில் கிடந்து வெந்து கரிகிக் கொண்டு வேதனை தாங்க இயலாமல் ஒருவரை ஒருவர் சபிப்பதையும், அழுது பிரலாபிப்பதையும் 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:54-64, 40:47-50, 41:29, 43:36-45 போன்ற எண்ணற்ற இறைவாக்குகளும் படம் பிடித்துக் காட்டுகின்றன.

ஓ மனித வர்க்கமே எச்சரிக்கை! அல்லாஹ்வின் புரத்திலிருந்து வஹி மூலம் பெற்ற மார்க்கமாகிய குர்ஆன் வசனங்களுக்கும், அந்த குர்ஆன் வசனங்களுக்கு நடைமுறை (Practicle) விளக்கம் கொடுத்த இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தை உள்ளது உள்ளபடி விளக்கும் மிகமிக ஆதாரபூர்வமான ஹதீஃத்களுக்கும் மேல் விளக்கம் கொடுக்கும் அதிகாரம் கலீஃபாக்க ளுக்கோ, நபிதோழர்களுக்கோ, தாபியீன்களுக்கோ, தபஅ தாபியீன்களுக்கோ, இமாம்களுக்கோ, அவுலியாக்களுக்கோ, அன்றைய இன்றைய மவ்லவிகளுக்கோ, மனிதர்களில் எவருக்குமோ அணுவல்ல, அணுவின் முனை அளவும் இல்லவே இல்லை என்பதைத் திட்டமாகத் தெரிந்து, 3:103 இறைக்கட்ட ளைப்படி குர்ஆனைப் பற்றிப் பிடித்து, எண்ணற்ற இறைக்கட்டளைக்கு அடிபணிந்து இறுதித் தூதரின் வழிகாட்டலைப் பற்றிப் பிடிப்பவர்களே வெற்றியாளர்கள். அவர்களே நேர்வழி பெற்றவர்கள், அறிவுடையவர்கள், அல்லாஹ்வின் நன்மாராயம் பெற்றவர்கள் என்று புகழ்ந்து கூறுவதை 39:17,18 இறை வாக்குகளைப் படித்து விளங்கிக் கொள்ளுங்கள்.

39:17 இறைவாக்குக் கூறும் தாஃகூத் எனும் மனித ஷைத்தான்கள், நாங்கள்தான் மார்க்கம் கற்ற மேதைகள், எங்களுக்குத்தான் குர்ஆன் விளங்கும். மொழி பெயர்ப்புகளைப் பார்த்து அவாம்களாகிய நீங்கள் குர்ஆனை விளங்க முடியாது என்று கூறும் இந்த மவ்லவிகளையே சுட்டிக் காட்டுகிறது. அவர்களின் இப்படிப்பட்ட வழி கெட்டப் போதனைகளை வேதவாக்காக எடுத்து நடப்பவர்கள் 9:31 இறைவாக்குக் கூறுவது போல் அவர்களை ரப்பாக ஏற்று அவர்களை வணங்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். தூய இஸ்லாமிய மார்க்கத்தில் ஆலிம் என்ற ஒரு தனி வர்க்கம்-பிரிவு இல்லவே இல்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

source: http://annajaath.com/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

20 + = 26

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb