அஸர் வக்து நேரமும் தவறான வரட்டுப் பிடிவாதமும்!
[ சில ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேல்யிலிருந்து வெளி வரும் (சுன்னத் வல் ஜமா அத்தைச்சார்ந்த) “ஜமா அத்துல் உலமா” எனும் மாத இதழில் மவ்லவீ, லியாகத் அலீ மன்பஈ அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் ஹனஃபீ மத்ஹபின்படி ‘‘அஸர் வக்த்” நேர ஆரம்பம் என்பது ”சூரியனின் நிழல் ஒரு பொருளின் உயரத்தை அதே அளவு அடைந்து விடும் நேரமே சரியான அஸருடைய நேரமாகும்” என்பதே உண்மை. ஹனஃபி மத்ஹபின் மிக பிரசித்திபெற்ற துர்ருல் முக்தார் போன்ற நூல்களில் இவ்வாறு தான் காணப்படுகிறது என்றும், சூரியனின் நிழல் இரு மடங்கு விழுந்தவுடன் தான் ஆரம்பமாகிறது என்பது இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் தனிப்பட்ட கருத்து என்றும், அது தவறான கருத்து என்று ஹனஃபி மத்ஹபைச்சார்ந்த இமாம் முஹம்மத் ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் யூஸூஃப் ரஹ்மதுல்லாஹி அலைஹி போன்ற ஏனைய மற்ற இமாம்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்றும் எழுதியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அதே திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் “ரஹ்மத்” எனும் மாத இதழில் அதன் ஆசிரியர் தலையங்கத்தில் “ஹா! உங்களைப்பற்றி எனக்குத்தெரியாதா… எனும் தோரணையில் வாய்ச்சவடாலைத்தான் பதிலாகக் கொட்டியிருந்தாரே தவிர சரியான பதிலை அளிக்கவில்லை. அவரால் முடிந்ததெல்லாம் மவ்லவீ லியக்கத் அலீ மன்பஈ அவர்களை “நஜாத்” காரர் என்று முத்திரை குத்தியதுதான்.
இதற்கு பதில் அளித்த்த மவ்லவீ லியாக்கத் அலீ மன்பஈ அவர்கள், “நான் நஜாத் காரனல்ல, நீங்கள் வேண்டுமானால் மதரஸாக்களில் உள்ள அத்தனை ஹனஃபி மத்ஹபு கிதாபையும் எடுத்து பாருங்கள், நான் சொன்னது போல் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுகொள்வீர்கள்” என்று பதிலளித்திருந்தார்.
அதுமட்டுமின்றி “அஸர் வக்து வந்த பிறகும் அதனை உடனே தொழாமல் காலதாமதம் செய்து தொழுவது எவ்வளவு பெரிய கைசேதம்…?!” என்றும் தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார். ஆக உண்மை எது என்று தெரிந்திருந்தும் அதனை மூடி மறைப்பதில் மார்ர்க்க அறிஞர்களிடம் இருக்கும் பிடிவாதம் வியக்க வைக்கிறது.
அல்லாஹ்வை விட அவனது தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைவிட இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி சொன்னதை உண்மை படுத்த வேண்டும் எனும் வரட்டுப் பிடிவாத பொய்யில் இவர்கள் உழன்று கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.]
கேள்வி : அஸர் தொழுகையில் ஷாஃபி மத்ஹபிற்கும், ஹனஃபி மத்ஹபிற்கும் இடையே ஒரு மணி நேரம் வித்தியாசம் இருக்கிறது. இதில் மத்ஹபை சாராதவர்கள் எந்த நேரத்தை எடுத்துத் தொழுவது? அஸருக்குரிய சரியான நேரம் எது?
தெளிவு : ஒரு பொருளின் உயரத்தை அதே அளவு அதன் நிழல் அடைந்து விடும் நேரமே சரியான அஸருடைய நேரமாகும். அந்த வகையில் ஷாஃபி மத்ஹபினர் கடைபிடிக்கும் நேரமே மிகச் சரியான அஸருடைய நேரம். ஹனஃபி மத்ஹபினர் அதிலிருந்து ஒரு மணி நேரம் கழித்து தொழுதாலும் காலம் தாழ்த்தித் தொழும் தவறே அல்லாமல் அஸருடைய நேரம் சூரியன் மறையும் வரை இருக்கிறது. எனவே இச்செயலைப் பாராதூரமான குற்றமாகக் கொள்ள முடியாது. ஆயினும் தொழுகையில் ஹனஃபி மத்ஹபினர் கடைபிடிக்கும் இதர சில முறைகள் தொழுகையையே பாழாக்கும் நிலையில் உள்ளன.
மரியாதைக்குரிய நான்கு இமாம்களின் காலம் ஹிஜ்ரி 80லிருந்து 241 வரையாகும். இந்த நான்கு இமாம்களும் தெள்ளத் தெளிவாக-திட்டமாக எங்களை தக்லீது செய்யாதீர்கள், எங்கள் பேரால் மத்ஹபுகள் அமைக்காதீர்கள்; குர்ஆன், ஹதீஃத் வழியே எங்கள் வழி; எங்களுக்கென்று தனி வழி இல்லை; குர்ஆன், ஹதீஃதுக்கு முரணாக நாங்கள் எது சொல்லி இருந்தாலும் அதைத் தூக்கி எறிந்து விடுங்கள் என்று சொன்னவை இன்று மதரஸாக்களில் காணப்படும் நூல்களிலேயே காணக் கிடைக்கின்றன.
36:21 இறைவாக்கை நிராகரித்து மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட இம்மவ்லவிகள் எப்படி எண்ணற்ற குர்ஆன் வசனங்களையும், எண்ணற்ற ஆதாரபூர்வமான ஹதீஃத்களையும் தங்களின் அற்ப உலக ஆதாயம் காரணமாக 2:39, 25:30 இறைவாக்குகள் கூறுவது போல் நிராகரிக்கிறார்களோ அது போல் இந்த நான்கு இமாம்களின் நேரடியான போதனைகளையும் நிராகரித்து, அந்தப் போதனைகளுக்கு நேர் முரணாக மத்ஹபுகளைக் கற்பனை செய்து மக்களை வஞ்சித்து நரகில் தள்ளுவதோடு, அவர்கள் வயிறு வளர்க்கிறார்கள்.
மத்ஹபுகள் கற்பனைச் செய்யப்பட்டக் காலம் அந்த மரியாதைக்குரிய இமாம்களின் காலமான ஹி.80-241க்குப் பிறகு 200 ஆண்டுகள் கழித்து ஹிஜ்ரி 400ல் ஆகும். இந்த மத்ஹபுகளைக் கற்பனை செய்து முதன் முதலில் நடைமுறைப்படுத்தியவர் கள் யார் என்று மேற்படி 4 மத்ஹபுகளைக் கண் மூடிப் பின்பற்றுபவர்களுக்கே தெரியாது. அப்படியானால் இந்த நான்கு மத்ஹபுகளும் எந்த அளவு வழிகேடுகளைப் போதிக்கின்றன என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இந்த நான்கு மத்ஹபுகளிலும் பெருத்த வழிகேட்டைப் போதிப்பது இமாம் அபூஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பெயரால் அவர்களுக்கும் 250 ஆண்டுகளுக்குப் பின்னர் சுய நல யூதர்களாக இருந்து இஸ்லாத்தைத் தழுவிய மத குருமார்களால் கற்பனை செய்யப்பட்ட ஹனபி மத்ஹபாகும்.
ஹனஃபி மத்ஹபின் பெரும்பாலான சட்டங்களுக்கு குர்ஆன் ஹதீஃத் ஆதாரம் அறவே இல்லை. உதாரணமாக ஜனசா தொழுகையின் முதல் தக்பீரில் அல்ஹம்து சூரா ஓதாமல், தனா ஓதுவதற்கு எந்தவித ஹதீஃத் ஆதாரமும் இல்லை. அதனால் தான் ஹனஃபி மத்ஹபின் சட்டங்கள் குர்ஆன், ஹதீஃதில் இல்லாவிட்டாலும், குர்ஆன், ஹதீஃதுக்கு முரணாக இருந்தாலும், ஹனஃபி மத்ஹபு சட்டங்களையே பின்பற்ற வேண்டும் என்று அவர்களின் பிக்ஹு நூல்களில் எழுதப்பட்டுள்ளது.
அதற்கு மாறாக சூராஃபாத்திஹா இல்லாமல் எந்தத் தொழுகையும் இல்லை என்பதற்கு ஹதீஃத் ஆதாரம் உண்டு. ஃபர்ழு, சுன்னத், நஃபில், ஜனாசா எந்தத் தொழுகையாக இருந்தாலும் ஃபாத்திஹா சூரா இல்லாவிட்டால் அது தொழுகையே இல்லை என்ற தெளிவான ஹதீஃத் ஆதாரங்களுக்கு முரணாக ஜனாசா தொழுகையில் ஃபாத்திஹா சூராவைப் புறக்கணித்து தனா ஓதுவதில் பிடிவாதமாக இருக்கிறார்கள் ஹனஃபி மத்ஹபினர். அது மட்டுமல்ல; ஹனஃபிகள் தொழும் ஐங்காலக் கடமையான தொழுகைகள் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதும் சந்தேகமே!
தொழுகையின் பிரதான அம்சம் சூரத்துல் ஃபாத்திஹா. சூரத்துல் ஃபாத்திஹா இல்லாமல் தொழுகை இல்லை என்பது நபி (ஸல்) அவர்களின் தெளிவான எச்சரிக்கை. தொழுகையின் ஒவ்வொரு ரகாஅத்திலும் ஃபாத்திஹா சூரா ஓதியே ஆக வேண்டும். அதே சமயம் ஜமாஅத் தொழுகையில் இமாம் சப்தமிட்டு ஓதும்போது முக்ததிகள் வாய் மூடி காது தாழ்த்திக் கேட்பது கடமை என 7:204 இறைவாக்கு நேரடியாகக் கூறுகிறது. இமாம் ஓதுவதை முக்ததிகள் வாய்மூடி செவி தாழ்த்திக் கேட்டாலே அவர்களும் ஓதியதாகத்தான் பொருள்.
உதாரணமாக இன்றைய செய்தித் தாளிலுள்ள ஒரு முக்கியச் செய்தியை ஒருவர் சப்தமிட்டுப் படிக்க மற்றவர்கள் அச்செய்தியை காது தாழ்த்தி கேட்டால் அவர்களும் அதைப் படித்தது போல் அச் செய்தியை அறிந்து கொள்வார்கள். அதற்கு மாறாகப் படிப்பவர் சப்தமிட்டுப் படிக்காமல் வாய்க்குள் படித்தார் என்றால் பக்கத்திலிருப்பவர்கள் அச் செய்தியை அறிய முடியாது. அறிய அவர்களும் படிக்க வேண்டும். இது அனைவரும் ஏகோபித்து ஒப்புக் கொள்ளும் உண்மை. இந்த நிலையில் இமாம் சப்த மிட்டு ஓதும்போது முக்ததிகள் வாய்மூடி செவி தாழ்த்திக் கேட்பது 7:204 இறைக் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிவது முற்றிலும் சரி.
இமாம் ஓதும் சூரா ஃபாத்திஹாவை காது கொடுத்துக் கேட்டதால் அவர்களும் ஓதியதாகி விடும்; அவர்கள் ஓத வேண்டியதில்லை என்பதும் சரிதான். அதே சமயம் இமாம், முக்ததிகள் கேட்கமுடியாத நிலையில் வாய்க்குள் ஓதும் ரகாஅத்களிலும் முக்ததிகள் சூராஃபாத்திஹா ஓதக் கூடாது, வெறுமனே நிற்க வேண்டும் என்பது எந்த ஆதார அடிப்படையில்? ஹனஃபி மவ்லவிகள் சுயவிளக்கம் விட்டு குர்ஆன், ஹதீஃத் ஆதாரம் தரமுடியுமா?
இது போலவே இன்னும் சிலர் இமாம் சப்த மிட்டு குர்ஆன் ஓதுவதை 7:204 இறைவாக்குக் கட்டுப்பட்டு அதைக் கேட்காமல், முக்ததிகள் அதைப் புறக்கணித்து இவர்களும் ஃபாத்திஹா சூரா ஓத வேண்டும் என்று சொல்வதும் பெரும் தவறாகும்.
இமாம் ஓதுவதை கேட்க முடியாத நிலையிலும், இவர்களும் சூராஃபாத்திஹா ஓதாவிட்டால் அவர்கள் எப்படி தொழுதவர்களாக ஆகமுடியும். சூரா ஃபாத்திஹா இல்லாவிட்டால் தொழுகை இல்லை என்பதுதானே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தெளிவான வழிகாட்டல். முக்ததிகளின் தொழுகையைப் பாழாக்கும் இக்குருட்டுச் சட்டத்தை இயற்றியவர்கள் யார் என்று ஹனஃபிகளால் கூற முடியுமா? இதில் இன்னும் வேதனையான விஷயம், ழுஹர், அஸர், இஷா தொழுகைகளில் கடைசி இரண்டு ரகாஅத்திலும், மஃறிபில் கடைசி ஒரு ரகாஅத்திலும் இமாமும் சூராஃபாத்திஹா ஓதாவிட்டாலும் தொழுகை நிறைவேறும் என்ற குர்ஆன், ஹதீஃதுக்கு முற்றிலும் முரணான சட்டமாகும். அதனால் தான் ஹனஃபி இமாம்கள் பின்னால் தொழும் முக்ததிகளில் மார்க்கம் அறிந்து தொழுபவர்கள் இந்த ரகா அத்களில் சூராஃபாத்திஹா ஓத முடியாமல் திணறுகிறார்கள்.
இந்தப் பெரும் குறையுடன் இன்னொரு பெரும் தவறையும் ஹனஃபி இமாம்கள் செய்கின்றனர். ருகூவிலிருந்து எழும்பி நிலைக்கு வந்தார்களோ இல்லையோ சிறு நிலையில் தாமதிக்காமல் சுஜூதுக்குச் செல்கிறார்கள். “”சமிஅல்லாஹுலிமன்ஹமிதா அல்லாஹு அக்பர்” என்று சிறிதும் சிறு நிலையில் நிலைக்காமல் சுஜூதுக்குச் செல்கின்றனர். முதல் சுஜூதுக்கும் இரண்டாவது சுஜூதுக்கும் இடையிலுள்ள சிறு இருப்பிலும் தாமதிக்காமல் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என உடனடியாக இரண்டாம் சுஜூதுக்குச் செல்கின்றனர். இந்தத் தவறான செயல்களை எந்த குர்ஆன் வசனம், ஹதீஃத் ஆதார அடிப்படையில் செய்கிறார்களோ அவர்களுக்கே வெளிச்சம். ஹனஃபி இமாம்கள் பின்னால் தொழும் விஇஷயம் அறிந்தவர்கள் அந்த இமாம்களைக் கடுமை யாக வெறுக்கும் நிலையிலேயே தொழ வைக்கின்றனர். இல்லை கூலி-சம்பளத்திற்காக மாரடிக்கின்றனர். ஆம்! தங்கள் தொழுகையை அற்பக் காசுக்கு விற்கின்றனர். அவர்கள் தொழுவிக்கும் முறை அல்குர்ஆன் 107:4,5,6 வசனங்களையும், தொழுகையில் திருடுபவர்கள் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கடுமையான எச்சரிக்கையையும் நினைவு படுத்துகிறது.
இதில் இன்னும் வேதனைக்குரிய விஷயம் என்ன வென்றால் தங்களை ஹனஃபிகள்-சுன்னத் ஜமாஅத்தினர் எனப் பெருமை பேசுபவர்களும் தொழுகையில் திருடும் இத்தொழுகையையே விரும்புகின்றனர். வாய்மூடி மெளனமாக இமாமுக்குப் பின்னால் நின்று, கடகடவென குனிந்து நிமிர்ந்து சுஜூதுகளை வேகவேகமாக முடிப்பதையே விரும்புகின்றனர். மார்க்கம் அறிந்த மார்க்க ஞானமுள்ள இமாம் நிறுத்தி நிதானமாக எல்லா நிலைகளையும் பேணித் தொழுவதை அவர்கள் விரும்புவது இல்லை. இமாம் தொழுகையின் சிறு நிலைகளில் தாமதிக்கிறார் எனக் குற்றம் சாட்டுகின்றனர். அப்படிப்பட்ட இமாம்களை ஹனஃபி மத்ஹப் தொழுகையாளிகள் விரும்புவதில்லை. அந்த அளவு தவறான வழியில் அவர்கள் வழி நடத்தப்படுகிறார்கள்.
தொழ வைக்கும் இமாம் எப்படிப்பட்டக் குறைகளைச் செய்தாலும், அவரது தொழுகை சுருட்டி அவரது முகத்திலேயே எறியப்பட்டாலும் அவர் பின்னால் தொழுபவர் சரியான முறையில் தொழுதால் அவரது தொழுகைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதற்கே எண்ணற்ற குர்ஆன் வசனங்களும், ஹதீஃத்களும் இருக்கின்றன.
பின்னால் நின்று தொழுபவர்களின் வெறுப்புக்கிடையே தொழ வைக்கும் இமாம் பெரும் பாவத்தைச் சுமக்க நேரிடும் என்பதே உண்மையாகும். அதே சமயம் சமுதாயத்தை ஒன்றுபடுத்துவதற்கு மாறாக மேலும் மேலும் பிளவுபடுத்துகிறவர்கள் மாபெரும் வழி கேடர்கள், நரகம் புகுகிறவர்கள் என்பதற்கே எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் தெள்ளத் தெளிவான ஆதாரமாக இருக்கின்றன. எல்லாம் வல்ல அல்லாஹ் மார்க்கத்தைத் தெளிவாக, சரியாக விளங்கி அதன்படி நடக்க அருள்புரிவானாக! (source: http://annajaath.com/?p=6596)
தவறான வரட்டுப் பிடிவாதம்….
சில ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேல்யிலிருந்து வெளி வரும் (சுன்னத் வல் ஜமா அத்தைச்சார்ந்த) “ஜமா அத்துல் உலமா” எனும் மாத இதழில் மவ்லவீ, லியாகத் அலீ மன்பஈ அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் ஹனஃபீ மத்ஹபின்படி ”அஸர் வக்த்” நேர ஆரம்பம் என்பது ”சூரியனின் நிழல் ஒரு பொருளின் உயரத்தை அதே அளவு அடைந்து விடும் நேரமே சரியான அஸருடைய நேரமாகும்” என்பதே உண்மை. ஹனஃபி மத்ஹபின் மிக பிரசித்திபெற்ற துர்ருல் முக்தார் போன்ற நூல்களில் இவ்வாறு தான் காணப்படுகிறது என்றும் சூரியனின் நிழல் இரு மடங்கு விழுந்தவுடன் தான் ஆரம்பமாகிறது என்பது இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் தனிப்பட்ட கருத்து என்றும், அது தவறான கருத்து என்று ஹனஃபி மத்ஹபைச்சார்ந்த இமாம் முஹம்மத் ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் யூஸூஃப் ரஹ்மதுல்லாஹி அலைஹி போன்ற ஏனைய மற்ற இமாம்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்றும் எழுதியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அதே திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் “ரஹ்மத்” எனும் மாத இதழில் அதன் ஆசிரியர் தலையங்கத்தில் “ஹா! உங்களைப்பற்றி எனக்குத்தெரியாதா… எனும் தோரணையில் வாய்ச்சவடாலைத்தான் பதிலாகக் கொட்டியிருந்தாரே தவிர சரியான பதிலை அளிக்கவில்லை. அவரால் முடிந்ததெல்லாம் மவ்லவீ லியக்கத் அலீ மன்பஈ அவர்களை “நஜாத்” காரர் என்று முத்திரை குத்தியதுதான்.
இதற்கு பதில் அளித்த்த மவ்லவீ லியாக்கத் அலீ மன்பஈ அவர்கள், “நான் நஜாத் காரனல்ல, நீங்கள் வேண்டுமானால் மதரஸாக்களில் உள்ள அத்தனை ஹனஃபி மத்ஹபு கிதாபையும் எடுத்து பாருங்கள், நான் சொன்னது போல் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுகொள்வீர்கள்” என்று பதிலளித்திருந்தார்.
அதுமட்டுமின்றி “அஸர் வக்து வந்த பிறகும் அதனை உடனே தொழாமல் காலதாமதம் செய்து தொழுவது எவ்வளவு பெரிய கைசேதம்…?!” என்றும் தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார். ஆக உண்மை எது என்று தெரிந்திருந்தும் அதனை மூடி மறைப்பதில் மார்ர்க்க அறிஞர்களிடம் இருக்கும் பிடிவாதம் வியக்க வைக்கிறது;
அல்லாஹ்வை விட அவனது தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைவிட இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி சொன்னதை உண்மை படுத்த வேண்டும் எனும் வரட்டுப் பிடிவாத பொய்யில் இவர்கள் உழன்றுகொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. -adm. nidur.info
www.nidur.info