[ புகழ் பெற்ற அரபு வசந்தத்தின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட ஹுஸ்னி முபாரக்கை ‘மேற்கின் பணிவுள்ள நாய்’ என கண் பார்வையில்லாத எகிப்திய மார்க்க அறிஞர் ஷெய்க் அப்துல் ரஹ்மான் வர்ணித்திருந்தார். அப்படிப்பட்ட முபாரக் கூட தற்போது அல்-ஸிஸி இழைத்து வருகின்ற கொடுமைகளைப் புரிவதற்குத் துணியவில்லை.
அறுபது ஆண்டுகள் கழித்து, நீதியும், நேர்மையானதுமானதொரு தேர்தலின் மூலமாக தெரிவான அதிபர் மூர்ஸி, அல்- ஸிஸியை நம்பி, அவரை இராணுவத் தளபதியாகவும், பாதுகாப்பமைச்சராகவும் நியமித்தார். ஆனால், நாட்டிற்கும், ஜனாதிபதிக்கும் விசுவாசமாக இருப்பதை விட, ஸியோனிஸ எஜமானர்களுக்கு விசுவாசமாக இருப்பதே அல்-ஸிஸிக்குப் பிரதான முன்னுரிமையாக இருந்தது.
எகிப்தின் தற்போதைய எகிப்தின் மோசமான நிலை எந்தளவுக்கென்றால், புகழ் பெற்ற அரபு வசந்தம் மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட ஹுஸ்னி முபாரக் விடுதலையாகி இருக்கிறார். ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட முர்ஸி சிறையில் வாடுகிறார். இதுதான் எகிப்தின் கவலை தருகின்ற நிலை.
அனைத்துக்கும் மேலாக, எகிப்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ‘பயங்கரவாதத்திற்கு’ எதிராகப் இராணுவம் போராடுவதாகக் (?) கூறு, எகிப்திய இராணுவத்திற்கான தனது பூரண ஆதரவை சஊதி அரேபியா மன்னர் வெளிப்படுத்தி இருக்கிறார்..
இஸ்லாமிய இயக்கத்தைக் கருவருப்பதற்கு, ஜனநாயகத்தைக் கோரும் மக்களைப் படுகொலை செய்யும் இராணுவ நிர்வாகத்திற்கு சவூதி மன்னர் வழங்குகின்ற தாராளமான உதவி, அவரது இஸ்லாமிய முக மூடியைக் கிழித்து, அவரது உண்மையான ஸியோனிஸ முகத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளது.
சவூதி மன்னரின் இவ்விழி செயலை வர்ணிக்கும் மூத்த பிரித்தானிய ஊடகவியலாளர் ரொபர்ட் ஃபிஸ்க் ‘எகிப்திய இராணுவ நிர்வாகத்திற்கான அப்துல்லாவின் ஆதரவு முஸ்லிம் உலகு வெட்கப்படுகின்ற விடயமாகும்’ எனத் தெரிவித்துள்ளார்.
ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். எகிப்திய இராணுவ நிர்வாகிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் திறந்து விட்டுள்ள இந்த இரத்த வெள்ளமும், வன்முறையும் அரபு நாடுகளின் சிம்மாசனங்களில் அமர்ந்திருக்கின்ற சர்வதிகார முல்லாக்கள் பதவி கவிழ்க்கப்படும் வரை நிற்கப் போவதில்லை.]
முல்லாக்கள், ஸியோனிஸ்டுகளின் கூட்டுச் சதியில் எகிப்தில் கருவருக்கப்படும் சகோதரத்துவ அமைப்பு
லதீஃப் ஃபாரூக்
‘கொல், அழி, ஈவிரக்கமின்றிப் படுகொலை செய். என்ன விலை கொடுத்தாவது முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை கருவருத்துவிடு’. எகிப்திய இராணுவத் தளபதி அப்துல் ஃபத்தாஹ் அல்-ஸிஸிக்கு வழங்கப்பட்டுள்ள தெளிவான அறிவுறுத்தல் இதுதான்.
ஸியோனிஸ, அமெரிக்க, ஐரோப்பிய எஜமானர்களினதும், இராணுவப் புரட்சிக்கு நிதியுதவி வழங்கிய சவூதி, ஐக்கிய அரபு இராச்சியம், குவைத் போன்ற நாடுகளின் பாசிச முல்லாக்களினதும் மோசமான சாத்தானிய நிகழ்ச்சி நிரலை முன்கொண்டு செல்லும் வகையில், அல்-ஸிஸி இவ்வுத்தரவுகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றி வருகிறார் என்பதையே தற்போதைய எகிப்திய நிகழ்வுகள் பறைசாற்றுகின்றன.
ஏழாயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வரலாற்றையும், மத்திய கிழக்கில் மிக அதிக மக்கள்தொகையையும் கொண்ட எகிப்தை அவர் ஒரு கொலைக்களமாகவே மாற்றி வருகின்றார்.
புகழ் பெற்ற அரபு வசந்தத்தின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட ஹுஸ்னி முபாரக்கை ‘மேற்கின் பணிவுள்ள நாய்’ என கண் பார்வையில்லாத எகிப்திய மார்க்க அறிஞர் ஷெய்க் அப்துல் ரஹ்மான் வர்ணித்திருந்தார். அப்படிப்பட்ட முபாரக் கூட தற்போது அல்-ஸிஸி இழைத்து வருகின்ற கொடுமைகளைப் புரிவதற்குத் துணியவில்லை.
அறுபது ஆண்டுகள் கழித்து, நீதியும், நேர்மையானதுமானதொரு தேர்தலின் மூலமாக தெரிவான அதிபர் மூர்ஸி, அல்- ஸிஸியை நம்பி, அவரை இராணுவத் தளபதியாகவும், பாதுகாப்பமைச்சராகவும் நியமித்தார். ஆனால், நாட்டிற்கும், ஜனாதிபதிக்கும் விசுவாசமாக இருப்பதை விட, ஸியோனிஸ எஜமானர்களுக்கு விசுவாசமாக இருப்பதே அல்-ஸிஸிக்குப் பிரதான முன்னுரிமையாக இருந்தது.
மூர்ஸியின் அரசாங்கத்தை மாத்திரம் அவர் கவிழ்க்கவில்லை. ஜனநாயகத்திற்கு எகிப்து மீளச்செல்ல வேண்டும் எனக் கோரும் பொது மக்களையும் தனது மனசாட்சியை அடகு வைத்து விட்டு அவர் கொன்று குவித்து வருகிறார்.
பயங்கரவாதத்தை எதிர்க்கின்ற போர்வையில், அமெரிக்காவையும், ஐரோப்பாவையும் கட்டுப்படுத்துகின்ற யூதர்கள், இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பெரும் அழிவுகரமானதொரு சக்தியாகத் தவறாக சித்தரித்து, முஸ்லிம் நாடுகளை அழித்தொழிக்கின்ற கைங்கர்யங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது ஒரு பொதுவான உண்மை. கடந்த பதிநான்கு நூற்றாண்டுகளில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
எகிப்திய நெருக்கடியின் பின்னணியிலும் புதைந்திருக்க மிகத் தெளிவான நோக்கம், சகல சர்வதேச சட்டங்கள், ஒழுங்குகளுக்கும் முரணாக கொள்ளையிடப்பட்ட பலஸ்தீனிய நிலத்தின் நிறுவப்பட்டுள்ள பாஸிச இஸ்ரேலிய அரசாங்கத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதும், பிராந்திய சக்தியாக அதன் வல்லமையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதும், தொடர்ந்தும் மேற்குலகு பிராந்தியத்தை சுரண்டுவதற்கு அனுமதியை வழங்குவதும்தான்.
இதனை சாதிப்பதாக இருப்பின் மத்திய கிழக்கில் உறுதியற்ற நிலையைத் தோற்றுவிக்க வேண்டும். எகிப்தில் இஸ்லாமிய ஜனநாயகம் தளைத்தோங்குவது, பிராந்தியத்தில் தமது சாத்தானிய இலக்குகளுக்கு அடிக்கின்ற சாவு மணியாகும் என்பதை மேற்கு நன்கு அறிந்திருக்கிறது. அத்தோடு இஸ்ரேல், அமெரிக்க, ஐரோப்பியப் பாதுகாப்போடு எண்ணெய் வளம் நிரம்பிய வளைகுடா நாடுகளின் ஆட்சிப் பீடங்களில் வீற்றிருக்கின்ற மன்னர்களின் இருப்பிற்கும் அது அத்துனை சாதகமான அம்சமல்ல.
இப்பூகோள திட்டத்தின் கீழ் அவர்கள் ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் பல முஸ்லிம் நாடுகளை அழித்தொழித்து விட்டார்கள். பொஸ்னியாவில் இருந்து பர்மா வரை முஸ்லிம்களின் இரத்த ஆறு பீரிட்டு ஓடுகின்றது. மில்லியன் கணக்கில் படுகொலை செய்யப்பட்டும், காயமடைந்தும், தமது சொந்த இடங்களில் இருந்து விரடப்பட்டு வறுமை தாண்டவமாடுகின்ற அகதி முகாம்களுக்குள் விரட்டப்பட்டும் இருக்கிறார்கள். உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களைக் கொலை செய்வது என்பது மேற்குலகத் தலைவர்களுக்கும், அவர்களது மத்திய கிழக்கு அடிவருடிகளுக்கு ஒரு பொழுதுபோக்கு.
இஸ்ரேலுக்கு பாரிய அச்சுறுத்தலைப் பிராந்தியத்தில் வழங்கிவந்த ஒரே நாடு எகிப்துதான். ஆகவே, எகிப்தில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டு விட்டதால், அது அழித்தொழிக்கப்பட வேண்டும். அதுவும் எகிப்தில் இஸ்லாமிய ஜனநாயக சக்திகள் நிலை கொண்டிருந்ததோடு, இஸ்ரேலுக்கு சவால் விடுகின்றதொரு சக்தியாகவும் எகிப்து வளர்ந்து வந்தது.
எனவே, அல்-ஸிஸி என்ற மற்றொரு பணிவுள்ள நாயை, முர்ஸி அரசாங்கத்தைக் கவிழ்க்கின்ற அசிங்கமான வேலைக்காக ஸியோனிஸ்டுகள் தேர்ந்தெடுத்தார்கள். இராணுவ ஆட்சியை நிறுவி, முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை சிதைத்தார்கள். இஸ்லாமிய விழுமியங்கள், ஒத்துப் போகின்ற தன்மை, சமாதானம், மற்றும் பொதுப்படையாக சிறந்த ஒழுக்கத்தை வெளிப்படுத்தி வருகின்ற முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பிற்கு எதிராக, கொரூரமான வன்முறையை அல்- ஸிஸி கட்டவிழ்த்து விட்டார்.
அவனது உயர்ந்தபட்ச குற்றம் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஆன்மீகத் தலைவர் முஹம்மத் பதி அவர்களை கைது செய்துள்ளமையாகும். அரச தொலைக்காட்சி இவரை ஒரு பொதுவான குற்றவாளியாக சித்தரித்து வருகிறது. முஹம்மத் பதி அவர்களைக் கைது செய்தமை எத்துனை முட்டாள்த்தனமானது என்பதைக் காலம் தீர்மானிக்கும். உண்மையில் அல்- ஸிஸி முழு நாட்டுடனும்தான் யுத்தம் செய்கிறார். கூலி கொடுத்து அழைத்து வரப்படுகின்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், சிறுபான்மை கோப்துக்கள், முபாரக் காலத்தில் எகிப்தின் அரசியல், பொருளாதாரம், மற்றும் சமூக ஸ்திரத்தன்மை என்பவற்றை அடகு வைத்து வயிறு வளர்த்து வந்தவர்கள் தவிர, முழு நாட்டுடனும் அல்-ஸிஸி யுத்தம் தற்போது புரிகிறார் என்பதே உண்மை.
இராணுவப் புரட்சிக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் காட்டிய துலங்கல் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் என்று ஒரு சில கபட நாடகங்களை ஆடியதைத் தவிர வேறு எதுவும் இல்லை. அவர்கள் இராணுவத்திடம் இராணுவப் புரட்சியை முடித்துக் கொண்டு, ஜனாதிபதி மூர்ஸியைப் பதவியில் அமர்த்துமாறு கோரவே இல்லை. பதிலாக ஐரோப்பாவும் அமெரிக்காவும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை இரணுவ அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ளச் செய்யும் வகையில், சகோதரத்துவ அமைப்பிற்கு ஊக்கம் அளிப்பதற்கு முயற்சி செய்தன.
மில்லியன் கணக்கானவர்களின் கொலைக்குப் பின்புலத்தில் இருப்பதன், மூலம் பிழைக்கின்ற ஆயுதக் கம்பனிகளால் உரிமை கொள்ளப்பட்டுள்ள, யூதர்களால் கட்டுப்படுத்தப்படுகின்ற மேற்கு ஊடகங்களும், அல்- ஸிஸியின் இராணுவ நிர்வாகத்தை உத்தியோகபூர்வமான அரசாங்கம் போல் தமது அறிக்கைகளில் குறிப்பிட்டு வருவதோடு, உத்தியோகபூர்வமற்ற அரசாங்கம் என்பதைக் காட்டுவதற்கும் வெளிப்படுத்துவதற்கும் தவறி வருகின்றன. தாம் விரும்புகின்ற பூலோக ஒழுங்குக்கு சார்பான வேலையை அல்- ஸிஸி மேற்கொள்வதால், இம்மீடியாக்களின் செயற்பாடுகளில், தாம் வழமையாக உச்சரிக்கின்ற ஜனநாயகம் மறைந்து போயிருக்கிறது.
அனைத்துக்கும் மேலாக, எகிப்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ‘பயங்கரவாதத்திற்கு’ எதிராகப் இராணுவம் போராடுவதாகக் (?) கூறு, எகிப்திய இராணுவத்திற்கான தனது பூரண ஆதரவை சஊதி அரேபியா மன்னர் வெளிப்படுத்தி இருக்கிறார்..
இஸ்லாமிய இயக்கத்தைக் கருவருப்பதற்கு, ஜனநாயகத்தைக் கோரும் மக்களைப் படுகொலை செய்யும் இராணுவ நிர்வாகத்திற்கு சவூதி மன்னர் வழங்குகின்ற தாராளமான உதவி, அவரது இஸ்லாமிய முக மூடியைக் கிழித்து, அவரது உண்மையான ஸியோனிஸ முகத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளது. இஸ்லாமியப் புனிதத் தளங்களின் காவலர்களாகத் தம்மைக் கருதிக் கொள்வதற்கு எந்தவிதமான தகுதியும் இல்லாத இவர்களுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு வெடித்துக் கிளம்புவதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை.
சவூதி மன்னரின் இவ்விழி செயலை வர்ணிக்கும் மூத்த பிரித்தானிய ஊடகவியலாளர் ரொபர்ட் ஃபிஸ்க் ‘எகிப்திய இராணுவ நிர்வாகத்திற்கான அப்துல்லாவின் ஆதரவு முஸ்லிம் உலகு வெட்கப்படுகின்ற விடயமாகும்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பும் சவூதி அரச குடும்பத்தின் செயல்பாடுகள் அனைத்துமே முஸ்லிம் உலகிற்கு வெட்ககரமானதாகவும், தலை குனிவை ஏற்படுத்தக் கூடியதாகவும், அபாயகரமானதாகவுமே இருந்து வந்திருக்கிறது. ரகசியமாகவும், பகிரங்கமாகவும் உலகளாவிய ரீதியான முஸ்லிம் விரோத நடவடிக்கைகளில் அவர்கள் கைகோர்த்திருக்கிறார்கள்.
எவ்வாறாயினும், வளர்ந்து வரும் இஸ்லாத்தைக் கருவருக்கும் கைங்கர்யங்களில் ஈடுபட்டு வரும் இராணுவ நிர்வாகத்திற்குத் தமது நாடுகளின் சர்வதிகாரிகள் உதவி புரிந்து வருவதை ஒரே குரலில் வளைகுடா நாடுகளில் வாழ்கின்ற மக்கள் நிராகரித்திருக்கிறார்கள்.
எகிப்தின் தற்போதைய எகிப்தின் மோசமான நிலை எந்தளவுக்கென்றால், புகழ் பெற்ற அரபு வசந்தம் மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட ஹுஸ்னி முபாரக் விடுதலையாகி இருக்கிறார். ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட முர்ஸி சிறையில் வாடுகிறார். இதுதான் எகிப்தின் கவலை தருகின்ற நிலை.
ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். எகிப்திய இராணுவ நிர்வாகிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் திறந்து விட்டுள்ள இந்த இரத்த வெள்ளமும், வன்முறையும் அரபு நாடுகளின் சிம்மாசனங்களில் அமர்ந்திருக்கின்ற சர்வதிகார முல்லாக்கள் பதவி கவிழ்க்கப்படும் வரை நிற்கப் போவதில்லை. அநேகமாக இதற்குப் பல ஆண்டுகள் செல்லலாம்.
– meelpaarvai