உம்மத் எனும் சிந்தனை
இன்று உம்மத் எனும் சிந்தனைக்கு தடைக்கற்களாக இருப்பது தேசியவாதச் சிந்தனை. இதன் விளைவாக இன்று முஸ்லிம் உம்மத்தினது இராணுவ பலம் துண்டாடப்பட்டுள்ளதுடன் மேற்கின ஏஜன்ட்களாக முஸ்லிம் ஆட்சியாளர்கள் இருப்பதால் இன்று முஸ்லிம் இராணுவம் முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்ற துர்பாக்கி நிலைக்கு உம்மத்தை இட்டுச் சென்றுள்ளது. இது எதிரிகளுக்கு மேலும் பலம்சேர்த்துள்ளது.
அத்துடன் தேசியவாதச் சிந்தனையின் காரணமாகவே முஸ்லிம் உம்மத்தினது வளங்கள் மேற்கினால் சுரண்டப்படுவதுடன் அது மேற்கினது முஸ்லிம் ஆட்சியாளர்களால் துஷ்பிரயோம் செய்யப்படுகிறது. இதனால்தான் சோமாலியா மற்றும் எதியோப்பியாவில் பட்டினியால் வாட சவூதி போன்ற அரபிய நாடுகள் செல்வச் செழிப்பில் இருப்பதனை காணலாம்.
முழு உலகிற்கும் தேவையான எரிபொருள், கேஸ் ,தங்கம், இரும்பு போன்றவை பெரும்பாலும் முஸ்லிம்நாடுகளில் காணப்பட்ட போதிலும் தேசியவாதச் சிந்தனையின் காரணமாக இவ்வளங்கள் அத்தேசத்தின் சொத்தாக கணிக்கப்படுவதால் அதில் முஸ்லிம் உம்மத்திற்கு பங்கில்லாமல் இருப்பதனை நாம் காணலாம்.
அதேவேளை இன்று ஈமான் அடிப்படையில் முழு உலகில்வாழும் முஸ்லிம்களும் சகோதரத்துவ பிணைப்பால் இணைக்கப்பட்டிருந்தும் அவர்கள் தேசியவாதச் சிந்தனைக்கு ஆட்பட்டிருப்பதால் இன்று முஸ்லிம் நாடுகளில் ஏற்படும் மேற்கினது படையெடுப்பினால் அல்லலுறும் போதும் இந்த தேசியவாதப்பிணைப்பு இந்த சகோதரத்துவப் பிணைப்பை நலிவடையச் செய்துள்ளது.
அத்துடன் தேசியவாதம் மனிதாபிமானமற்றதும்
இனவாதத்திற்கு வழி கோலுவதும் தரக்குறைவான சிந்தனையின் வெளிப்பாடுமாகும்.
இஸ்லாத்திற்கு முரணான ஒரு கருத்து ஆகும்.
ஆகவே இத்தகைய இழிநிலையில் இருந்து உம்மத்தை விடுவிக்க முஸ்லிம்களது பலம் ஓங்கிட தேசியவாதச் சிந்தனையை களைந்து உம்மத் எனும் சிந்தனையை விதைத்திடுவோம். அதுவே இஸ்லாம் உலகில் மீள ஆட்சி நிலைக்குவருவதற்கும் முஸ்லிம்கள் கண்ணியம் மற்றும் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதற்கும் வழிவகுக்கும்.
source: http://islamicuprising.blogspot.in/2013/08/blog-post_1311.html