Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தன் அடையாளமென்ன…?

Posted on August 23, 2013 by admin

     தன் அடையாளமென்ன…?    

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத் வழிமுறை கடைப்பிடித்தலில் பிரதானமானது, பேணவேண்டியது தத்தமது அடையாளம். ஏற்ற கொள்கையில் நேராக நின்று அடையாளப்படுவோர் ஒரு வகை. தாமாக விரும்பி ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வோர் மற்றோர்வகை.

தனது செயல்களால் மக்களது புரிதலுக்கேற்ப அடையாளமானோர் வேறோர் வகை. அடையாளத்தை சரியாக நிறுவுவோர் மக்களால் ஜீரணிக்கப்படுகின்றனர். பேசப்படுகின்றனர். அடையாளச் சிக்கலில் சறுக்கியோர் குழியில் விழுந்த ‘களிற’£க ஆகுகின்றனர். ஒவ்வொரு மனிதரும் தம்மைப் பொருத்தமாக அடையாளப் படுத்த வேண்டும். அதனில் அக்கறை செலுத்தவேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்துல் முத்தலிப் பேரராக விருந்தார்கள். ஆடு மேய்த்தார்கள் அவை அவர்களது அடையாளமல்ல. அப்துல்லா – ஆமீனா அன்னை மகனாகவிருந்தார்கள் அதுவும் அவர்களது அடையாளமல்ல!

பெரும் செல்வந்தர், வணிகர் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அம்மையாரின் கணவராக, பாத்திமா ரளியல்லாஹு அன்ஹா தந்தையாக விருந்தார்கள் இந்த அடையாளங்களுக்குள்ளும் சிக்கவில்லை. மாறாக தனித்து அடையாளப்பட்டார்கள். “அன அப்துஹூ” நான் அடிமை என்றார்கள் இறுதி வரை அவ்வடையாளத்துடன் வாழ்ந்தார்கள். உலகச் சமூககங்கள் அங்கீகரித்தன. உம்மத்துகள் தமது அடையாளமென்ன? உரசிப்பார்க்கலாம்.

வாழும் பலர் இன்று அடையாளச் சிக்கலில் சிக்கியிருக்கின்றனர். அவரவருக்குரிய பணியை சிரத்தையுடன் ஆளுமையுடன் செய்வதில்லை. தமக்குப் பொருந்தாக, சாராத, ஒட்டாத ஒன்றில் மூக்கை நுழைத்து வீணாக்குகின்றனர். தாமும் வீணாகின்றனர். “இதனை இவன் கண்விடல்” தரத் தயாராக இல்லை. மதவாத மேற்றவர் அரசியல் புரளி பேசுகின்றார். டவுசர் போட்டகாலத்திலிருந்து செவி மடுத்த திராவிட பாணி மேடைப்பேச்சு கைகொடுக்கிறது. அரசியல் பிழைப்பாளர் ஓட்டுக்கு ஊடுருவ மதவாதம் உரைக்கின்றார். உரைக்கக் கூடிய கருத்தில் இயல்பிலேயே ஒவ்வாமையிருந்தும் போலித்தனமான சொற்களை தேடியெடுத்துத் தெளிக்கின்றார்.

84 மாதங்கள் கற்ற கல்வியை கொண்டு செலுத்தி திணிக்கும் முயற்சியில் ஈடுபடனும். வேற்று கொள்கையாளர் வாழ்வை முஸ்லிமுக்குக் கூறக் கூடாது. பாமர தினசரிகளில் வருபவற்றை வரிவிடாமல் வாசித்து. மனப்பாடம் செய்து மதமேடை, நிக்காஹ் மேடை, பீடங்களில் ஒப்புவித்தல் போட்டி நடக்கின்றது.

மதத்தை, இறையை வாழ்நாள் முழுதும் நிராகரித்த “தரியா” நாத்திகவாதி பெருமை, வாழ்வுப்போக்கு முஸ்லிம் தம்பதிகளுடைய எதிர்கால வாழ்வுக்கு மேற்கோளாகக் காட்டப்படுகிறது மணவிழா மேடைகளில். காட்டுபவர் அரசியல் வாதியல்ல, மதவாதி, கொடுத்த பீடத்துக்குத் தக்க பொருந்திக் கொள்ளாமல் பொடு போக்குச் செயல்பாடிருக்கிறது. ஆளுக்குத்தக்க கருத்து! கைதட்டலுக்கேற்ற செய்தி! மேடைக்கேற்ப உரை! இவை இதயத்துள் ‘நுரானிய்யத்’ ஒளியேற்படுத்த உதவாது.

முஸ்லிம் நகைச்சுவையாளரல்ல, நோக்க முடையவர். இலக்குடையவர். முஸ்லிம் அசட்டையாளரல்ல, தாக்கம் ஏற்படுத்துபவர். முஸ்லிம் சொல்லுக்கு ‘இஜ்ஜத்’ கண்ணியம் உருவாக்குபவர் மூஃமீன், முஸ்லிம். இவ்வார்த்தைகளுக்குத்தக்க வார்ப்பாகத் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

மனிதரனைவரும் இறைப்பிரதி நிதிகள். ‘கலிபத்துல்லா’. இவ்வுண்மையை உணராதிருப்போருக்கு உரைப்பவர், எடுத்துரைப்பவர் ‘கைர உம்மத்தீ’. சுய தேவைக்காகப் படைக்கப்பட்டவரல்ல கைர உம்மத்தீ. மனித நன்மைகளுக்காகப் பணி செய்து தேவைகளைப் பூர்த்தி செய்பவர் கைர உம்மத்தீ. இறைவணக்கம் கடமைக்குள் வருகிறது. பணியாக ஆகாது. அதையும் தாண்டி பயணித்தலே இறையிட்டுள்ள கட்டளை. ‘தலைமை’ ‘துணை’ சொற்களுக்குள் சிக்குவதால் ‘முகாஷீஃபா’ அறிவுத் தெளிவு கிட்டாது. பெருமைக்கு மட்டுமே வித்திடும். ‘மு அல்லிம்’ பணியில் முழுமையிருக்கனும். தாயீ ஆனாலும், தாலீம் செய்தாலும் காமிலாவது அவசியம்.

“மன்யுரீதில்லாஹ§ பிஹீ கைரன் யுஃபக்கிஹ§ ஃபித்தீன்” யாருக்கு அல்லாஹ் நன்மை நாடுகிறானோ அவருக்கு தீனைப் புரிவதில் துடிப்பிருக்கும் இது ஹதீஸ்.துன்யா, ஆகிரத் எந்த நோக்கத்திற்காக உழைக்கிறோமோ அந்த நோக்கத்தை அல்லாஹ் வழங்கி விடுகிறான். ‘ ஹல் ஜஸாவுல் இஹ்சான்” நபிமொழி.

-ஜெ. ஜஹாங்கீர், முஸ்லிம் முரசு ஜூலை 2013

source:http://jahangeer.in/?paged=3

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 6 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb