மத்ரசாவுக்கு எதிரான நச்சு பிரச்சாரம்!
மௌலானா காலித் சைபுல்லாஹ் ரஹ்மானி
பொதுச் செயலாளர், இஸ்லாமிக் ஃபிக்ஹ் அகாடமி
உலகின் பல பகுதிகளில் முஸ்லிம்களின் ஆட்சியதிகாரம் உச்சத்தை தொட்டது. பின்னர் வீழ்ச்சியை தழுவியது.
ஆசியா கண்டம், ஐரோப்பா கண்டம் இரண்டுக்கும் இது பொருந்தும். அமல்களின் குறைகளே காரணம். சில நாடுகளில் இஸ்லாமிய ஒளி மங்கிவிட்டது. இன்னும் சில நாடுகளில் காணாமல் போனது. இஸ்லாமிய அறிவுரை தஃலிமாத் குறைந்து மெட்டிரீயலிசம் உலகாயுத வாதம் முன் சரணடைந்தனர்.
ஸ்பெய்ன், மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பிய பகுதிகள், ரஷ்யா, சீன மெஜாரிட்டி பகுதிகள் இதில் அடக்கம்.
கலை, கலாச்சாரத்தின் சென்டர்கேந்திரமாக ஸ்பெய்ன் விளங்கியது. ஆட்சி வீழ்ந்ததும் இஸ்லாமிய கலாச்சார அடையாளம் மூட்டைகட்டப்பட்டு தூக்கியெறியப்பட்டது. உயிரற்ற சில கட்டிடங்கள் இன்று உண்டு.
இந்தியாவின் நிலை வேறுபட்டது. உமர் ரளியல்லாஹு அன்ஹு காலத்திலேயே இந்தியாவின் கடற்கரை பகுதிகளில் இஸ்லாமிய வெளிச்சம் ஆட்கொண்டது. பரவியது.
சிந்து பகுதிகளில் எண்ணூறு ஆண்டுகள் ஆட்சியும் நடைபெற்றது. அஹதே ஜரீன். சமூக, அரசியல் நிலையில் பொற்காலம். கவைலக்குரிய விஷயம் தாவா நடைபெறவில்லை. அரசியலில் மட்டும் முஸ்லிம்கள் கவனம் செலுத்தினர். இந்த பெரிய தவறுக்கு பரிகாரம் காண முடியாது. இன்று முஸ்லிம் படும் அவதிகளுக்கு இதுவும் ஒரு காரணம்.
முஸ்லிம்கள் ஆட்சியை இழந்த பிறகும் அடையாளத்தை இழக்கவில்லை. முஸ்லிம்களின் மதப்பற்று அளவுக்கு வேறெந்த மதத்தை சார்ந்தவர்களுக்கும் ஒப்பீடு பெறமுடியாது.
இன்று மிக மோசமான காலத்திலும் பள்ளிவாசல் தொடர்பு, ரமலான் நடவடிக்கை, ஹஜ் உம்ரா பயணம், நிக்காஹ், தலாக் சட்ட அமுல், ஜக்காத், தான தர்மம் முஸ்லிம் சமுதாயம் பின்பற்றுகிறது. இதர மத பிரிவினர் ஒரு சதவீதமும் மதத்தை பின்பற்றுவதில்லை.
ஹலால் ஹராம் தெளிவு தரும் மத நிறுவனங்கள் முஸ்லிம் சமூகத்தில் மையமான இடம் வகிக்கின்றன. ஆனால் இதர மத சமூகங்களில் மைய கேந்திரம் இல்லை.
கடந்த நூறு ஆண்டுகளில் உருவான இஸ்லாமிய இயக்கங்கள், இயக்கவாதிகளை கணக்கிட்டால் அவர்களின் மூல ஊற்று, பிறப்பிடம் இந்துஸ்தான் ஆகும்.
மத்ரசா கட்டமைப்பு மத ரீதியான வளர்ச்சிக்கு முக்கிய காரணி. ஆங்கிலேயர் காலத்தில் உலமாக்களுக்கு பதவி ஆசை, வெறி இல்லை. கலாச்சார தாக்குதலை சமாளிக்க மத பாடத்திட்டம் தயாரித்தனர். குடிசை வீடு, பாமரன், ஏழை, வறியவரையும் தொடும் நீண்ட கால திட்டம்.
எளிய வாழ்வு ஆசிரியர், சாதாரண கட்டிடம், வசதியற்ற மாணவர்கள், பக்கீர் தோற்றம் அடிப்படையில் பாடத்திட்டம் துவங்கியது. முஸ்லிம்களின் இரண்டு ரூபாய், ஒரு ரூபாய் நன்கொடை தியாகத்தில் மத்ரசா இயங்கியது. இவ்வளவு சாமானியர்களால் எத்தகைய சாதனையும் நிகழ்த்த முடியாது. மத்ரசா கட்டமைப்பை பார்த்தவர்கள் வியந்து போனார். இரண்டு ரக்அத் இமாம் இழிவு சொல்லாட்சியும் உச்சரித்தனர். தோரக் அத்கா இமாம் அடைமொழி கொடுக்கப்பட்டது.
தர்வேஷ் இஸ்லாமிய செடியை பாதுகாத்தனர். இன்ப வாழ்வையும் அர்ப்பணித்தனர். இஸ்லாமியக் கலாச்சாரத்தை வலிமையாக்கினர். முஸ்லிம் சமுதாய தொடர்பை அதிகப்படுத்தினர். முஸ்லிம் நாடுகளிலும் இவ்வளவு பிடிப்பு இல்லை. அரபுலகில் இல்லை. முஸ்லிம் அரசாட்சிகளில் மத வேர் பிடிப்பு இல்லை.
மத்ரசாக்களின் தொண்டுள்ளத்தால் ஆட்சிப் பறிபோன பின்னரும் இஸ்லாம் இந்தியாவில் தழைத்தது.
கடந்த 150 ஆண்டுகளில் ஏற்பட்ட ஜமாத்கள், இயக்கங்கள், அமைப்புகளின் நிறுவனர்கள் மத்ரசாவிலிருந்தே பெரும்பாலும் உருவானவர்கள்.
எளிமை காரணமாக மத்ராசாவின் பங்கு உணரப்படவில்லை. ஆனால் இன்று நட்பு வட்டம், எதிரி இருவருடைய பார்வையிலும் மத்ரசா நடவடிக்கைகள் கவனிக்கப்படுகின்றன.
கடந்த 65 ஆண்டுகளாக வகுப்புவாத சக்திகள் இஸ்லாமிய அடையாளத்தை அழிக்க பாடுபடுகின்றன. பெரும்பான்மை சமூகத்துடன் இரண்டறக் கலந்து விடுமாறு மிரட்டுகின்றனர். தேசியவாதிகள் செக்குலர் போர்வையில் முஸ்லிம்களை தேசிய மைய நீரோட்டத்தில் பங்கேற்குமாறு வலியுறுத்தினர்.
முஸ்லிம் அடையாளத்தை இழக்க வேண்டும். இதுதான் இவர்களின் உள்நோக்கம். தீமையை மத்ரசா நிர்வாகம் தடுத்து நிறுத்தியது. ஐ.எஸ்.ஐ. சென்டர், தீவிரவாத பயிற்சி, தாலிபான் தொடர்பு போன்ற பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இதில் உண்மையில்லை. வதந்தி நோக்கம் மத்ரசா குறித்து தவறான கண்ணோட்டத்தை பரப்புவதாகும்.
முஸ்லிம்கள் விழிப்புணர்வுடன் நச்சு பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும். இஸ்லாமியக் கலாச்சாரக் கோட்டையை பாதுகாக்க வேண்டும்.
-மௌலானா காலித் சைபுல்லாஹ் ரஹ்மானி
பொதுச் செயலாளர், இஸ்லாமிக் ஃபிக்ஹ் அகாடமி -தமிழில் : ஆரெம்
-முன்சிப் நாளிதழ், முஸ்லிம் முரசு ஏப்ரல் 2013
source: http://jahangeer.in/?paged=6