காதலுக்கும் காமத்திற்கும்
வித்தியாசம் தெரியாமல்
சினிமாவைப் பார்த்து
ஏமாறும் இளைஞர்கள்!
படிப்பதற்காகப் பெண்கள் வெளியே செல்கிறர்கள். கல்லுரிகளில் ஆண்-பெண்கள் சேர்ந்து படிப்பது என்பது சாதாரணமாகிவிட்டது. அதேமாதிரி, படித்த / வேலைக்குச் செல்லும் பெண்களும் தைரியமாக வெளியே வருகிறர்கள்.
தமது ஆண் நண்பர்களுடன் பேசுகிறர்கள், ரிசப்ஸன், கல்யாணம், விருந்து, பார்ட்டி, பிரிவு-உபசாரம் போன்ற காரணங்களுக்காக சத்திரத்திற்கு, ஓட்டல்களுக்குச் செல்கிறர்கள், சாப்பிடுகிறார்கள்.
அதாவது ஆண்கள் / பெண்கள் எப்படி ஆண்கள் / பெண்கள் கூட சாதாரணமான நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கிறார்களே, அதேமாதிரி இப்பொழுது ஆண்கள்-பெண்கள் சேர்ந்து செய்துவருகிறர்கள். சில நேரங்களில் நெருக்கம் கிருக்கத்தைக் கொடுத்து நட்பு பிணைத்து காதலாகலாம்.
வெலைசெய்யும் பெண்களின் காதல் / கல்யாணம்:
வேலைசெய்யும் பெண்களுக்கு மற்ற பிரச்சினைகள் உள்ளன. அவர்களுக்கு தைரியம் வந்து “சம்பாதிக்கிறோமே” என்ற நிலையில் பெற்றொர்கள் ஒப்புக்கொள்ளமலேயே வீடைவிட்டு தெரிந்தோ / தெரியாமலோ சென்றுவிட்டு தனியாக குடித்தனம் நடத்தலாம் என்ற எண்ணமெல்லாம் தைரியமாக வரலாம். ஆனால், அதில் அவர்களுக்கு மற்ற கடமைகள் உள்ளதை அவர்கள் மறக்கக் கூடாது. குடும்பம் என்பது ஒரு பந்த-பாச சுழற்ச்சியில் இயங்குவது. குறிப்பாக பெண்களை மட்டும் பெற்ற பெற்றோர்கள் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமது பெண்களை நம்பிதான் சாகும் வரை இருக்கவேண்டியுள்ளது. மற்ற உறவினர்கள் பார்த்துக் மொள்வார்கள் என்று சொல்லமுடியாது.
காதலில் இறங்கும் இளசுகள் :
இனி தொடர்ந்து, அக்காதலை அலசும்போது, இதில் பெரும்பாலும், அதிகமாக ஆண்களுக்கும், சில பெண்களுக்கும் காம-இச்சை / மோகம் / ரோமாஞ்சகம்தான் முன்னிற்கின்றதேத் தவிர காதலும் இல்லை, நட்பும் இல்லை. அங்கங்கு தெருமுனைகளில் / இருட்டாக அல்லது யாரும் பார்க்க மாட்ட்டர்கள் என்பது போன்ற இடங்களிலும் பேசுவதும், விவாதிப்பதும், சண்டைபோடுவதும் சகஜமாகிவிட்டன. முன்பெல்லாம் யாராவது பெரியவர்கள் அவர்களை விரட்டுவதுண்டு. இப்பொழுதோ “உங்களுக்கு என்ன? இது எங்கள் சமாச்சாரம்” என்று ஆணவத்துடன், அகம்பாவத்துடன் பேசுவதால், “இப்படியாவது ஒழிந்து போங்கள்” என்று அவர்களும் ஒதுங்கிவிடுகிறர்கள்.
சினிமா காதல் செய்து பெண்களை வதைக்காதீர் :
ஆனால் பெற்றொர்கள் அதுமாதிரி சொல்லமாட்டார்கள். அவர்களுக்குத் தெரியும்போதுதான் பிரச்சினை வருகிறது. ஆகவே, ஆண்கள் பெண்களை காதலிக்கும் முன் இதையெல்லாம் கருத்தில் கொண்டு காதலியுங்கள், அப்பொழுதுதான் வாழ்க்கை நன்றக இருக்கும், பைத்தியக்காரத்தனமாக “சினிமா காதலில்” இறங்கி பெண்களை வதைக்காதீர்கள் / பெண்களின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள்.