அல்லாஹ்வின் நியதி என்றும் மாறாது
படைப்பினங்களின் தேவை அல்லாஹ்வுக்கு எதுவுமில்லை. அவனை கொண்டே இயங்கும். “அதம்” சூன்யத்திலிருந்து படைத்தான்.
சூரா முஹம்மது அத்தியாயம் 47, வசனம் 38 “வல்லாஹ§ல் கனிய்யு வ அன்துமுல் ஃபுகராஉ”
அல்லாஹ் தேவையற்றவன். நீங்கள் தேவையுள்ளோர்.
உலகின் படைப்புகள் அனைத்தும் மனிதனின் தேவையை பூர்த்தி செய்கின்றன. மனிதன் இறைவனுக்கு கட்டுப்படும்போது படைப்புகள் தொண்டாற்றும். மனிதன் இறைவிருப்பத்தை மதிக்க வேண்டும். இல்லையேல், படைப்பு பயமுறுத்தும். நெஞ்சில் அச்ச உணர்வு வந்துவிடும்.
இதயத்தில் இறையச்சமிருந்தால் படைப்பு பயனளிக்கக் கூடியதாக பங்காற்றும். மீறினால் தொல்லை தரும்.
அப்துல்லா இப்னு உமர் காட்டில் சிங்கத்தை விரட்டினார். அல்லாஹ்வின் பயம் மனதில் நிறைந்திருந்தது. சிங்கம் பயமுறுத்தவில்லை. மக்கள் கூட்டத்தை விட்டும் சிங்கத்தை அப்புறப்படுத்தினார். சஹாபிகள் அல்லாஹ்வின் பயம், மாண்பு, மகத்துவத்தை இதயத்தில் தேக்கினர். படைப்பு, சேவை செய்தது. இது அல்லாஹ்வின் சுன்னத் நியதி. மெதட். வழிமுறை இறை பாணி தரீக்கா எப்போதும் மாறாது.
சூரா ஃபத்ஹ் அத்தியாயம் 48, வசனம் 23. “வலன் தஜித லி சுன்னத்தில்லாஹி தப்தீலா”. அல்லாஹ்வின் சுன்னத்தில் எவ்வித மாறுதலையும் காணமாட்டீர்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு உத்தரவுக்கு மலை, ஆறு, நிலம் கட்டுப்பட்டது. நைல் நதி வரண்டது. உமர் உத்தரவால் செழித்தது. பூமி குலுங்கியது. சாட்டையால் அடித்து அமைதிப்படுத்தினார். பூகம்பம் நின்றது. சேதம் தவிர்த்தார். இன்று நமது உத்தரவுக்கு மகன், மகள், உடன் பிறந்தோர் கீழ்ப்படிவதில்லை.
இதற்கான வழியை குர்ஆன் கற்பிக்கிறது. குர்ஆனை படிக்கும்போது அல்லாஹ் பேசுகிறான்.
சூரா யூசுப் அத்தியாயம்12, வசனம் 108.
குல் ஹாஜிஹ§ சபீலி அதுவ்வூ இலல்லாஹி அலா பசீரத்தின் அனா வமனித்தப அனீ.
“இதுவே என்வழி.” அல்லாஹ்வின்பால் அழைக்கிறேன். தெளிவான ஞானத்தின் மீது நாங்கள் நிற்கிறோம்.
அரபிமொழியில் “வழி” சொல்லை குறிக்க இரண்டு வகையில் எழுதுவர்.
“தரீக்”, “சபீல்”.
வசனத்தில் சபீல் குறிப்பு வந்துள்ளது.
மேகத்திலிருந்து மழை கொட்டுகிறது. பூமியை தொடுவதற்கு முன் உள்ள நிலை சபீல். வேர்ச் சொல் “சபல்”, சுத்தமாயிருக்கும் வேகம் கூடியிருக்கும். பூமிக்கு உயிரூட்டும். நேராக திசை மாறாமலிருக்கும். நேர்திசை. சுற்றி வளைத்து போகாது. ஹைவே போன்றது, ஜம்ஜம் நீருக்கு அடுத்து சுவை, தரம், சுத்தமான நீர். மழை நீரை போல தாவத் பணியாளர்கள் திகழ வேண்டும். வேகமாக முன்னெடுத்து செல்பவர்களாயிருக்க வேண்டும். பாவங்களை விட்டு சுத்தமான வராயிருக்க வேண்டும். மழைபெய்தவுடன், மரணித்திருந்த பூமி உயிர்பெறும்.- விளைச்சல் கொடுக்கும். மக்கள் பயன்பெறுவர். மக்களின் இதயங்கள் மவுத் ஆகியிருக்கும். “தாவத்” மழை பொழிந்தால் கல்பு உயிர்பெறும்.
இபுராஹ¤ம் நபி விட்டு சென்ற மார்க்க போதனை மக்காவில் எஞ்சியிருந்தது. ஆனால் மக்களுடைய நப்ஸ் மரணித்திருந்தது. நபிகளார் தாவத் செய்தார். அதே மக்களிடமிருந்து அபுபக்ர், உமர், உஸ்மான், அலி கிடைத்தனர். சிறந்த அழைப்பாளர்கள் “தாயீக்கள்” உருவானார்கள்.
தாவத் பரக்கத்தில் இர்பான் மெய்ஞ்ஞானம், சபர் சகிப்புத்தன்மை நமக்கு கிடைக்கும். மழையில் வானவில் தோன்றும். வானத்தில் குளிர்ச்சி இருக்கும். தாவுத் செய்தால் ஹிதாயத் நேர்வழி, கலர் பல வண்ணம் காட்சி தரும்.
என் தங்கையிடம் குடிநீர் கேட்டால் சின்ன வயதில் சண்டை போடுவார். நான் உன் வேலைக்காரியல்ல. நீயே சென்று குடிநீர் அருந்து.
இப்போது அவருக்கு குழந்தை பிறந்து விட்டது. தூக்கத்தை கெடுத்துக் கொண்டு மழலைக்கு வாரிசுக்கு பணிவிடை செய்கிறார். ஏற்கெனவே, முஹப்பத் அன்பு இதயத்தில் இருந்தது. உழைப்பு, வலி ஏற்பட்ட பிறகு அன்பு வெளிப்படுகிறது. தப்லீக் பணி செய்ய சிரமப்படுகிறோம். துனியா விவகாரம் மணிக்கணக்கில் பேசுகிறோம். தப்லீக் உணர்வை தோழர்களிடம் நபிகளார் ஏற்படுத்தினார். அனைத்து தியாகங்களும் புரிய தயாரானார்கள்-. கேள்வி கேட்கவில்லை.
தீன், உழைப்பு இரண்டும் பின்னிப் பிணைந்தது.
மார்க்கத்துக்கு உழைப்பதை நாம் மறந்தோம்.
மறதியையும் நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
கூண்டுக்குள் பறவை வளர்க்கிறோம், வளர்ந்து விட்டால் நீண்டதூரம் பறக்கவும் இயலாது.
இறைபணி செய்ய தயங்குகிறோம். சிரமமாயுள்ளது. நபித்தோழர்கள் வெளியில் புறப்படுவர். நாட்கள் நீளும். நபிகளார் அழைத்தால் மட்டுமே ஊருக்கு திருப்பி வருவார்கள்.
இஸ்லாமிய உணர்வை மீண்டும் முஸ்லிம்களிடம் ஊடுருவச் செய்வதே நமது நோக்கம்.
– மஸ்ஜிதே ஆமினா மர்கஸ் உரை, முஸ்லிம் முரசு மே 2013.
source:http://jahangeer.in/?paged=3