கல்வி நல்லோர்களின் சொத்து
கீழை ஜஹாங்கீர் அரூஸி
கல்வி செயலை கூவி அழைக்கிறது; அது பதில் தந்தால் நின்றுவிடுகிறது; இல்லையேல் துள்ளி ஓடி விடுகிறது. (நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்)
கல்வி நபிமார்களின் சொத்தாக இருக்கிறது; ஆனால் பொருள் நிராகரிப்போர்(காஃபிர்கள்) ஃபிர் அவ்ன், காரூன் போன்றோருடைய சொத்தாயிருக்கிறது! (அபூபக்கர் சித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்)
கல்வி கற்க விரும்புவோருக்கு கல்வியை கற்றுக் கொடுப்பது வழிகாட்டியின் கரத்தில் வாளைக் கொடுப்பது போலாகும்! (உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்)
கல்விமான்கள் குறைந்த அளவிலிருந்தும் வறியவர்களாகவே வாழ்கின்றனர்; காரணம், முட்டாள்கள் அதிகமாயிருந்தும் கல்விமான்களின் மதிப்பை உணருவதில்லை” (அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்)
கல்வி நம்மை பாதுகாக்கிறது; நாமோ செல்வத்தை பாதுகாக்கிறோம்” (அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்)
“அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்படுபவரின் இரத்தத்தைவிட கல்விமானின் பேனா மை அதிக கனமாயுள்ளது” (முஜத்தித் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்)
ஒரு தடவை ஹழ்ரத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தோழர்களை பார்த்து எல்லாக்கொடையாளிகளுக்கும் யார் கொடையாளி என்று உங்களுக்குத் தெரியுமா? எனக்கேட்டார்கள்.
அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வும் அவனது ரசூலும் தான் நன்கறிவர் என பதில் கூறினர்;
பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதலில் அல்லாஹ், அவனுக்குப்பிறகு ஆதமுடைய மக்களில் நானாக இருக்கிறேன்; எனக்குப்பிறகு சாதாரண மக்களில் கல்வியை கற்று பிறகு அக்கல்வியை நல்ல விதமாக பிறருக்கு எடுத்துரைத்தாரே அவராக இருக்கிறார். இத்தகைய மனிதர் மறுமை நாளில் தனித்தலைவராக விளங்குவார்” எனக்கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல்-மிஷ்காத்)
கல்வியின் சிறப்பை உணர்ந்து நாமும் கற்போம்;பிறர் கற்பதற்கும் துணை நிற்போம்!அல்லாஹ் நம் அனைவரையும் கல்வியாளர்களின் கூட்டத்தில் சேர்ப்பானாக ஆமீன்!