மசூதியை இடித்ததற்காக தண்டிக்கப்பட்டிருப்பவரை ஹீரோவாக்காதீர்கள்!
உ.பி.யில் பள்ளிவாசலை இடித்த விவகாரத்தில் சஸ்பென்டு செய்யப்பட்ட பெண் அதிகாரி துர்காவுக்காக வரிந்து கட்டிககொண்டு வரும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு பதிலடியாக, “அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொள்ளட்டும். அவர்களின் சேவை எங்களுக்குத் தேவையில்லை என சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் அதிரடி யாக அறிவித்துள்ளார்.
10 பக்க குற்றப்பத்திரிக்கை துர்காவுக்கு 10 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை நேற்று மாலை மாநில அரசால் அனுப்பி வைக்கப்பட்டது. அதில்,
ரமலான் மாதத்தில் மசூதி சுவரை இடிக்க உத்தரவிட்டது தவறு.
துர்காவுக்கு நிர்வாகத் திறமை இல்லை. ரமலான் முடியும் வரை காத்திருந்து அதன் பிறகு அவர் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும் மசூதியின் சுற்றுச் சுவரை இடிக்கும் முன்பு நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். இப்படி புனித மாதமான ரமலானில் மசூதியின் சுற்றுச் சுவரை இடித்து அப்பகுதியில் சமூக நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் துர்கா நடந்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து துர்கா 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.
மசூதியை இடித்ததற்காக தண்டிக்கப்பட்டிருப்பவரை ஹீரோவாக்காதீர்கள்!
இதுகுறித்து உத்தரப் பிரதேச அமைச்சர் அகமது ஹசன் (சமாஜ்வாதி கட்சி) செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
ஐ.ஏ.எஸ் அதிகாரி பணியிடை விவகாரத்தை
ஊடகங்கள் தேவையில்லாமல் ஊதிப் பெரிதாக்குகின்றன.
அவர் மசூதியை இடித்ததற்காக தண்டிக்கப்பட்டிருப்பவர்.
அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டியவர்.
அவருக்காக வரிந்து கட்டிக்கொண்டு வருவதால் ஊடகங்கள் மற்றும் அதிகாரிகளின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகியுள்ளது என்று அகமது ஹசன் கூறியுள்ளார்