Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வெறுப்பின் உச்சம்

Posted on August 3, 2013 by admin

Image result for janaza islam

வெறுப்பின் உச்சம் – கதையல்ல நிஜம்

ஒரு முறை எங்கள் ஊர், கடல் கரையில், ஐம்பது வயது மதிக்க தக்க ஒரு ஆண் பிணம் கிடக்கிறது?. யார் என்று தெரிய வில்லை!.என்று ஊரில் உள்ள பலரும்! கூறினார்கள்?. ஆனால் ஒரு அம்மா வந்து அது என் கணவர்தான் அவர் ஜனாஸாவை தூக்கிட்டு வந்துடுங்க?. என்று கூறினார்.

நாங்கள் ஒரு பத்துப் பேர் ஒரு மரக்கட்டிலை எடுத்துக் கொண்டுபோய். ஜனாஸா கிடந்த இடத்தில் போய் பார்த்தால் இறந்து ஒரு மூன்று நாட்கள் ஆகி இருக்கும். அடையாளமும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. ஜனாஸா கண்டிஷனும் சரி இல்லை அதனால், நாங்கள் திரும்பி வந்து விட்டோம்!.

ஆனால் அந்த அம்மா மீண்டும் வந்து?. அவரின் கணவரின் சில அங்க அடையாளங்களை, சகோ மர்ஹும் இக்பால் அவர்களிடம் மட்டும், கூறினார்கள். நாங்கள் மீண்டும்! கட்டிலை தூக்கிக் கொண்டு ஜனாஸா கிடந்த இடத்திற்குப் போனோம்?. ஜனாஸா அழுகியிருந்தாலும், சில அடையளங்கள், பொருந்திப் போனது. ஜனஸாவை தூக்கிக் கொண்டு வந்தால் ஜனாஸா, நாற்றம் எடுக்க ஆரம்பித்து விட்டது.

அந்த ஜனாஸா குளிப்பாட்டும், நிலையிலும் இல்லை? என்பதால், ஜனாஸா மேலே கொஞ்சம் தண்ணீரை தொளித்து கப்னிட்டு, ஜனாஸா தொழுகைக்கு பள்ளிவாசலுக்கு, எடுத்துச் சென்றோம். ஜனாஸா அழுகி, நாற்றம் எடுப்பதால், பள்ளிவாசலுக்கு வெளியேயே, வைத்து ஜனாஸா தொழுகை, நடத்தி விட்டு தூக்கிச் சென்று ஜனாஸாவை அடக்கம், செய்து விட்டு வந்து விட்டோம்.

அந்த ஜனாஸாவை தூக்கி வந்ததில் இருந்து, அடக்கம் செய்து விட்டு வரும் வரை ஒரு மனிதர்? எனக்காக காத்திருப்பதாக கூறினார். அவரிடம் சொல்லுங்கள்!, என்ன விஷயம் என்றேன். நீங்கள் அந்த ஜனாஸாவை அடக்கம் செய்து விட்டு வருகிறீர்களே?, இந்த மனிதர் வாலிப வயதில் ஒரு வெளியூரில் இருந்து, நமது ஊருக்கு வியாபாரம் செய்ய வந்த, ஒரு பெண்ணை மானபங்கம், படுத்தி விட்டார்,

அந்தப் பெண்ணுகு!, நீதி வழங்கும் விதமாகவும். இவருக்கு தண்டணை வழங்கும், விதமாகவும், அன்று இருந்த நமது ஊர்!, ஜமாத்தார்கள், இவரை அந்தப் பெண்ணிடம், மன்னிப்பும்,கேட்கவும் இவருக்கு, ஐம்பது ரூபாய் அபதாரமும், விதித்தார்கள் இவரோடு சேர்ந்து அந்த ஈனச், செயல் புரிந்த இரண்டு பேர் மன்னிப்பும் அபராத தொகையும் அப்போதே, கட்டி விட்டார்கள்.

ஆனல் இவர் மட்டும் மன்னிப்பும் அபரதாம், கட்ட முடியாது. என்று வீராப்பு பேசினார். அப்போது சில பேர் நீங்கள் ஜமாத்துக்கு கட்டுப்படுங்கள், நாளைக்கு பள்ளிவாசலுக்கு வந்தால், ஜமாத்தார்கள், முகத்தில்தான் முழிக்க வேண்டும், என்று கூறினார்கள், அதற்கு இவர் நான் பள்ளிவாசலுக்கே! இனி வரமாட்டேன் என்று, கூறிவிட்டு சென்று விட்டார், அதற்கு பிறகு ஒருநாள் கூட இவரை, நான் பள்ளிவாசலில் வைத்து பார்த்ததே இல்லை என்றார்!. 

மேலும் அவரே கூறினார் அன்று இவர் பள்ளிவாசலுக்கே வரமாட்டேன்!? என்று கூறிவிட்டுச் சென்றார், ஆனால் இன்று அவரை பற்றி இது எதையுமே, அறியாத ஊர் மக்கள் அவரின் ஜனாஸாவை, கூட பள்ளிவாசல் உள்ளே, வைத்து ஜனஸா தொழுகை நடத்தக் கூடா வில்லை, அன்று அவர் கூறியதை, அல்லாஹ் ஏற்றுக் கொண்டு விட்டான் போல தம்பி என்றார்!. அதிர்ச்சி ஏற்படுத்தியது அவரின் கடந்த கால சம்பங்கள்!.

மேலே உள்ள நிகழ்வுகள் பின்னே வரும் கருத்துக்கு, நலமாக, இருக்கும். என்று கருதுகிறேன். சில பள்ளிவாசல்களில் மார்க்க அறிவு துளியும் இல்லாதவர்கள்!?, நிர்வாகிகளாக இருப்பார்கள் அங்கு மார்க்கத்தை கொஞ்சமே கற்று நிறைய சம்பாத்திக்க! வேண்டும், என்று ஆசைபடும் ஆலிம்கள்!, சிலர் இருப்பார்கள், அங்குள்ள எவனையாவது ஒரு பணக்காரனை மண்டய தடவி!, தனது உம்ரா, ஹஜ் போன்ற கிரிகைகளை நிறைவேற்றி கொண்டவர்கள், பலர் இருக்கிறார்கள். இது போன்ற ஆலிம்சாக்கள் தூண்டுகோளின், அடிப்படையில், பள்ளி வாசல்கள் தோறும்!?.

தொப்பி!? (தொப்பி எங்க ஊர்லா எவனையாவது ஏமாற்ற பயண்படுத்தும் வார்த்தை) போடமல்? இங்கு யாரும் தொழக்கூடாது, என்று ஒரு போர்டும்!, நான்கு மத்கப்களை! சார்ந்தவர்கள், மட்டுமே இங்கு தொழமுடியும், என்று தனியாக ஒரு போர்டும் தொங்கும். இவ்வாறு தொங்கும் எந்த போர்டையும் நான் கண்டு கொள்வதே இல்லை. ஏன்னா பள்ளிவாசல்கள்! எல்லாம் அல்லாஹ்வுக்கே, உரியது  என்று நினைப்பவன் நான், அப்படியே யாரவது வந்து கேட்டால், நான் மாலிக் மத்கப் போன்று, தொழுதால் விட்டு விடுவீர்களா!?, என்று கேட்பேன் சிலர் திரு திரு என முழிப்பார்கள், வேறு என்ன அவர்களால் செய்ய முடியும்!. இது போன்ற போர்டுகள் தொங்கும்!? பள்ளிவாசல், நிர்வாகிகளும், ஆலிம்சாக்காளும். ஷாபி, ஹணபி, தவிர மேலும் இரண்டு மத்கப்காரர்கள் எவ்வாறு தொழுகுவார்கள்!, அவ்வாறு தொழுதல் போலி வேடம் போடும் நீங்கள், விடுவீர்களா!?.

உங்கள் நிர்வாகத்தில் இருக்கும், பள்ளியில் தொங்கும் போர்டை பார்த்து விட்டு ஒருவன் தொழாலமல் போய் விட்டால்? அந்தப் பாவத்தை நீங்கள், வெளிப்படையாக செய்யத் தூண்டியுள்ளீர்கள், இந்தப் பாவத்திற்கு நீங்களே பொறுப்பாளிகள்!.

“அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து. அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார் பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை .அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும் மறுமையில் கடுமையான வேதனையும் முண்டு. ” திருக் குர் ஆன்  2:114.

“தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்க வில்லையா?. அவர் நேர் வழியில் இருப்பதையோ, அல்லது இறையச்சத்தை ஏவுவதையோ அவன் பொய்யெனக் கருதி  செய்வதை நீர் கவணித்தீரா? அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அறிய வில்லையா? அவ்வாரில்லை அவன் விலகிக் கொள்ள வில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்து பொய் கூறிய முன் நெற்றி. அவன் தனது சபையோரை அழைக்கட்டும். நாம் நரகின் காவலர்களை அழைப்போம். எனவே, அவனுக்கு கட்டுப்படதீர்! ஸஜ்தாச் செய்வீராக! நெருங்குவீராக!”. (திருக்குர்ஆன் 96:9)

source: http://www.kaleel.net.in/2013/07/blog-post_24.html

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb