பணம் – ஓர் இஸ்லாமிய பார்வை!
அஷ்ஷெய்க் நாஸிர் அலி உமரி
பணம் என்றால் என்ன?
எல்லாருடைய வாழ்க்கையிலும் பணம் என்பது இன்றியமையாதது. பணத்தை பெறுவதற்காக மனிதன் எதையும் செய்யத் துணிந்து விடுகின்றான்.
எதார்த்தத்திலே பணத்தை நாம் எதற்கு பயன் படுத்துகிறோம்?
வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு பயன்படுத்துகிறோம். ஆரம்ப காலத்திலே பண்டமாற்றுமுறை என்பதுதான் இருந்து வந்தது.
தன்னிடம் உள்ள பொருட்களை கொடுத்து வேறு பொருளை வாங்கிக் கொள்வார்கள். கல்லையும் மண்ணையும் குழைத்து வீடு கட்டினார்கள். தென்னை ஓலையிலே கூரை மேய்ந்து கொண்டார்கள். பருத்திச் செடியிலே இருந்து பயன்பெற்று பருத்தியாடைகளை அணிந்து கொண்டார்கள்.
அவ்வளவுதான் மனிதனுடைய தேவை முடிந்தது. எனவே அப்போது மக்களுக்கு பணத்துடைய தேவைக்கும் அவ்வளவாக முக்கியம் ஏற்படவில்லை. யாரும் பணம் வைத்திருக்கவில்லை. தங்கம் வெள்ளி உலோகங்கள் பூமியிலிருந்து கண்டெடுத்த பிறகு மக்கள் தங்கத்தையும் வெள்ளியையும் பணமாக பயன்படுத்த ஆரம்பித்தார்கள். தங்க நாணயங்கள் உருவாக்கப்பட்டன. பதினாறாம் நூற்றாண்டில் இங்கிலாந்திலே மக்களிடம் தங்க நாணயங்கள் கையிருப்பு இருக்க ஆரம்பித்தன.
பாதுகாப்பு கருதி தங்க நாணயங்களை பொற் கொல்லனிடம் கொண்டு போய் கொடுத்து வைத்தார்கள். அத்தாட்சிக்காக அவன் மக்களிடம் ஒரு காகித்தில் ஐ.ஓ.யு என்று ஒழுதிக் கொடுத்தான். ஐ.ஓ.யு என்றால் “நான் உனக்கு இவ்வளவு தர வேண்டும். அந்தளவு கடன் பட்டிருக்கிறேன்” என்பது அந்த வாசகத்தின் பொருள். தேவைப்படும்போது அந்த காகிதத்தை பொற்கொல்லனிடம் கொண்டு வந்து கொடுத்து தங்க நாணயங்களை பெற்றுக் கொண்டார்கள்.
காலப் போக்கிலே என்ன ஆகிற்று என்றால் அந்த எழுதிக் கொடுக்கப்பட்ட காகிதத்தை பொற்கொல்லனிடம் கொண்டு வந்து கொடுத்து பணத்தை பெருவதற்கு பதிலாக அந்த காகிதத்தை வியாபாரியிடம் கொண்டு சென்று இவ்வாறு எனக்கு இவ்வளவு தங்கம் இருக்கின்றது. அதற்கு இந்த காகிதம் அத்தாட்சி. இதை பெற்றுக் கொண்டு எனக்கு பொருளைத் தரவும். இந்த காகிதத்தை நீ பொற் கொல்லனிடம் கொண்டு போய் கொடுத்தால், தங்க நாணயம் பெற்றுக் கொள்ளலாம். என்று சொல்ல ஆரம்பித்தார்கள். அதுவே காலப் போக்கில் சாதாரண பழக்கமாகப் போய்விட்டது.
நாகரீகமும் நாடுகளும் வளரவளர அந்த சாதாரண காகிதம் அரசாங்க முத்ததிரையோடு அச்சடிக்கப்பட்ட பணமாக வெளியிடப்பட்டது. என்றாலும் கூட அந்த பழைய பழக்கம் அப்படியேதான் இருக்கின்றது. பொற்கொல்லனிடம் எந்தளவு தங்க நாணயம் கொடுத்தோமோ அந்தளவுக்குத்தான் அவன் காகிதம் எழுதிக் கொடுப்பான். அது போலத்தான் ஒரு நாடு எவ்வளவு தங்கம் கையிருப்பு வைத்திருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அந்த நாட்டில் பணம் அச்சடித்து வினியோகம் செய்ய முடியும். அதற்கென்றே எல்லா நாடுகளிலும் ரிஸர்வ் வங்கிகள் இருக்கின்றன. அந்த வங்கிகள் கரன்சிகளை பணத்தை கட்டுப்படுத்தக் கூடியவைகளாக இருக்கின்றன. நாம் ஒரு இலட்ச ரூபாயை கையில் வைத்திருக்கிறோம் என்றால் அதற்கு நிகரான தங்கத்தை ரிஸர்வ் வங்கி தன்னிடம் கையிருப்பாக வைத்திருக்கிறது என்பது தான் உண்மை நிலை . ஆனால் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஒரு ஹதீஸின் அடிப்படையில் தங்கம் மட்டுமல்ல இன்னும் வேறு சில பொருட்களையும் வைப்பு நிதியாக வைத்துக் கொள்ளலாம் என்று தெரிகின்றது.
தங்கத்தை வைத்துக் கொள்ளலாம் வெள்ளியை வைத்துக் கொள்ளலாம். கோதுமை, பார்லி, உப்பு இதுபோன்ற பொருட்களையும் நாம் வைப்பு நிதியாக வைத்துக கொண்டு நாம் “”மீடியம் ஆஃப் எக்சேன்ஜ்- பரிவர்த்தன சாதனமாக” பயன்படுத்திக் கொள்ளலாம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்றைக்கே சொல்லியிருக்கிறார்கள். சரி, ஒரு நாட்டிலே தங்கம் கிடைக்கவில்லை அரிசிதான் விளைகிறது என்று சொன்னால் அந்த அரிசியை ரிஸர்வாக -வைப்பு நிதியாக வைத்து அதை தங்கமாக பயன்படுத்தலாம் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்றைக்கே நமக்கு அழகாக எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். இது பணத்தைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம். அடுத்து இவ்வளவு பெரிய காகிதப் பணங்கள் எல்லாம் எப்படி புழக்கத்திற்கு வந்தது?
source: http://dhisaikaati.com/blog/