மரண அனுபவங்களின் பயணம்
எனது மாமி ஒருவர் இறந்து போய்விட்டார். நான் சிறுவனாக இருக்கும்போது என்னை தூக்கி வளர்த்தவர் என்று எனது தாயர் கூறி அவரது ஜனாஸா தொழுகையில் பங்கெடுத்துவிட்டு அவரது மறுமை வாழ்கைக்காக ”துஆ” செய்யவேண்டும் என்று கட்டளையிட்டார்கள்.
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ”யார் ஜனாஸாத் தொழுகையில் பஙகேற்கின்றாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு. அடக்கம் செய்யப்படும்வரை கலந்துகொள்பவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது ”இரண்டு கீராத்கள்” என்றால் என்ன? என வினவப்பட்டது. அதற்கவர்கள் ”இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)” என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி. 1325)
நானும் ஜனாஸாவை பின்தொடர்ந்து பள்ளிவாசலில் வைத்து அவருக்காக தொழும் ஜனாஸா தொழுகையில் பங்கெடுக்க மாமுன்களுடன் வரிசையில் நின்றேன். ஜனாஸா தொழுகையை தொழுவிக்க மாமியின் உறவினர் – ஒரு ஆலிம் முன்வந்தார் நான் தொப்பி அனிந்தால் மட்டுமே இத்தொழுகையில் பங்களிக்கமுடியும். என்று என்னை தொழவிடாமல் தடுக்க முனைந்தார்.
தொப்பியை நான் எப்போதுமே விரும்பியது இல்லை தொப்பியை தலையில் மட்டுமே அணிந்து கொள்ள முடியும், வேறு பயண்பாட்டுக்கு பயண்படுத்த முடியாது. அதனால் நான் கைக்குட்டையைதான் பயண்படுத்துவேன். அதிலும் ஒரு சிக்கல் உண்டு, கைக்குட்டையையும் பத்திரமாக இருக்காது, துணிகளில் அதிகமாக கைக்குட்டைதான் வாங்கியிருக்கிறேன்.
நான் தொப்பி அணிந்துதான் ஜனாஸா தொழுகையில் பங்கெடுக்கவேண்டும் என்று கூறிய ஆலிமுக்கு தெரியுமா நான் அந்த ஜனாஸாவிற்கு நன்றிக்கடன். செலுத்தவேண்டியவன் என்பது!
மேலும் உங்கள் வாசிப்புக்கு தவ்ஹீத் ஜமா அத்தை சேர்ந்த ஒரு பெண் ஒருவர் விபத்து ஒன்றில் மரணித்து விட்டார் இவரின் ஜனாஸா தொழுகையில் பங்குபெற வேண்டும் அது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்று நானும் என் சகோதரரும் சென்று இருந்தோம் ஜனாஸா தொழுகை முடித்து விட்டு ஜனாஸாவை பின் தொடர்ந்து பள்ளியின் வெளியில் வந்துப் பார்த்தால் தவ்ஹீத் ஜமா அத்தை சேர்ந்தவர்கள் ஒட்டுமொத்தமாக நின்று கொண்டு இருந்தார்கள் அவர்களிடம் ஏன் நீங்கள் எல்லாம் ஜனாஸா தொழுகையில் பங்கெடுக்கவில்லை என்று கேட்டேன் இந்தப் பள்ளிவாசல் இணைவைப்பு பள்ளிவாசல் அதனால் இங்கு நாங்கள் ஜனாஸா தொழுகையும் கூட தொழமாட்டோம் என்று கூறிவிட்டார்கள்.
மேலே கூறிய இரண்டு பேரும் இச்சமுகத்தில் சாதித்தது என்ன என்று கேள்வியோடு இருந்து வந்தேன்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது;
நாங்கள் (சுமார் நாற்பது பேர்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒரு (தோல்) கூடாரத்தினுள் இருந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்கள் சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியனராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா? என்று கேட்டார்கள். நாங்கள் ஆம் என்று சொன்னோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியனராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்புகின்றீர்களா? என்று கேட்டார்கள். நாங்கள் ஆம் என்று சொன்னோம். அவர்கள் சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக நீங்கள் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றீர்களா? என்று கேட்டார்கள். நாங்கள் ஆம் என்று சொன்னோம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஹம்மதின் உயிர் எவனது கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக? சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். அதற்குக் காரணம், சொர்க்கத்தில் முஸ்லீமானவரைத் தவிர வேறெவரும் நுழைய முடியாது. இணை வைப்பவர்களை ஒப்பிடும்போது நீங்கள் கறுப்புக் காளை மாட்டின் தோலில் உள்ள வெள்ளை முடியைப் போன்றுதான், அல்லது சிவப்புக் காளை மாட்டிலுள்ள கறுப்புப முடியைப் போன்றுதான் இருக்கிறீர்கள் என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரி 6528)
எனது நண்பர் ஒருவர் வயதான தாய் தந்தை ஒருவயது பெண்குழந்தையை விட்டு விட்டு பஜாஜ் M80 யில் இருந்து கிழேவிழுந்து மரணமடைந்து விட்டார் அவரின் குடும்ப நிலைகண்டு நிலைகுழைந்து போனேன் நன்பர் இறந்து ஒருமாதம் ஆகி இருந்த நிலையில் நன்பரின் தகப்பனார் ஒரு துறுப்பு சீட்டில் இறந்துபோன தனது மகனுக்கு நாற்பதாம் கத்தம் ஒதுகிறேன் குடும்பத்துடன் வந்து சாப்பிடுவிட்டு எனது மகனின் மறுமை வாழ்க்கைக்காக ”துஆ” செய்யுங்கள் என்று அதில் எழுதியிருந்தது. நான் அவரிடம் கேட்டேன் ”பணத்திற்கு என்ன செய்தீர்கள்?” ”மகன் எதோ ஒரு இன்சூரன்ஸ் பன்னிவைத்துள்ளான் அதில் ஒரு ஐந்து லட்சம் வந்தது ஒரு லட்சத்தை என்னிடம் தந்தார்கள் அதில் இருந்துதான் இதற்கு சிலவு செய்கிறேன்” என்றார்.
பாக்கி பணத்தை என்ன செய்தீர்கள் என்றேன் மருமகள் இத்தா முடிந்ததும் அவர் சொந்தக்கார பையன் ஒருவருக்கு மறுமணம் செய்து கொடுத்து விடலாம் என்று மருமகள் குடும்பத்தினர் கூறினார்கள் அதற்கு மீதி பணத்தை கொடுத்து விட்டேன் என்றார். உடனே இந்த கத்தம் ஃபாத்திகா விருந்தை நிறுத்துங்கள் என்றேன். இல்லை தம்பி ஆலிம்ஸாமார்கள்தான் சொன்னார்கள், கத்தம் ஓதவேண்டும் என்று! நான் எவ்வாளவோ சொல்லிப் பார்த்தேன் தடுக்க முடியவில்லை. எந்த மன உறுத்தலும் இன்றி மனநிறைவோடு கறியும் சோரும் சாப்பிட்டு விட்டு சென்ற காட்சியை மனம் கனத்து பார்த்துக் கொண்டிருந்தேன். நன்பரின் ஒருவயது மகள் கூட்டத்தை கண்டுவிட்டு அழுது கொண்டிருந்தது. எனதுமகள் அந்த குழந்தைக்கு கூட்டத்தை வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தது.
உக்பா பிர் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது. அல்லாஹ்வின் மீதாணையாக என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணை வைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் பயப்படவில்லை ஆனால் (உலகத்திற்காக) நீங்கள் ஒருவரோடொருவர் (போட்டியிட்டுக் கொண்டு) மோதிக் கொள்வீர்களோ என்று தான் பயப்படுகின்றேன் என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி 4085)
வேலூர் மதரஸாவின் மார்க்கத் தீர்ப்பு
ஜனாஸா தொழுகை என்பதே இறந்தவருக்கு நாம் செய்யும் துஆ பிரார்த்தனை ஆகும் அது புறியாமல் அடக்கம் செய்வதற்கு முன் – பின் ஜனாஸா தொழுதபின், வீட்டிற்கு முன் என துஆ பிரார்தனை புரிவது ‘பித் அத்’- புதிய கலாச்சாரம் – வழிகேடு ஆகும்.
ஜனாஸா தொழுகைக்குபின் துஆ ஒதுவதோ அங்கு நிற்கவோ கூடாது.
அடக்கம் செய்த பின் இறந்தவர் இல்லத்தில் மக்கள் ஒன்று கூடுவது கூடாது.
அடக்கம் செய்தபின் மக்கள் பிரிந்துபோய் தங்கள் அலுவல்களை கவனிக்க ஆரம்பித்து விட வேண்டும்.
இதை செய்யாதவர்களைக் கெட்டவர்கள் என எண்ணுவது பித் அத் ஆகும்.
வேலூர் பாக்கியத்துஸ் ஸாலிஹாத் அரபி மதரஸாவின் ஃபத்வா (மார்கத் தொகுப்பு) நூல்.
அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:
எனது இரட்சகனிட மிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்து ஒரு சுபச் செய்தியை அறிவித்தார். அதாவது ,எனது சமுதாயத்தில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் இறக்கின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார், என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி 1237)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது:
”யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக இறக்கின்றாரோ அவர் நிச்சயமாக நரகத்தில் நுழைவார்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அப்படியாயின்) ,,யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல் மரணிக்கின்றாரோ அவர் நிச்சயமாகச் சொர்க்கத்தில் நுழைவார்,, என நான் கூறுகிறேன். (ஸஹீஹுல் புகாரி 1238)
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்காத நாற்பது பேர் ஒரு ஜனாஸா தொழுகையில் பங்கெடுத்தால் அந்த ஜனாஸாவிற்கு அவர்கள் கேட்கும் துவாவை அல்லாஹ் அங்கிகரிப்பதாக. நமது தாவாவின் நோக்கம் இதுவாகதான் இருக்கவேண்டும் குறைந்தபட்சம் நாற்பது பேரையாவது நாம் இணைவைப்பில் இருந்து ஏகத்துவ பாதைக்கு நாம் அழைக்க வேண்டும்.
source: http://www.kaleel.net.in/2013/07/blog-post_4.html