ஸஃது இப்னு முஆத் ரளியல்லாஹு அன்ஹு
மரணப்போராட்டம்
வரலாற்றில் வரலாறு பதிவு செய்தவர்களை சில நேரம் படிக்கும்போது சிலிர்த்துவிடும்! அவர்களைப் பற்றிய தேடலை நம்மை அறியாமலேயே தொடங்கி விடுவோம். அப்படி நான் தேடியவர்களில் ஒருவரைதான் நாம் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.
மக்காவில் இருந்து பொரும் படையுடன் முஸ்லீம்களை கூண்டோடு ஒழித்து விட வேண்டும் என்று கொடுரமாக தீட்டம் தீட்டிக் கொண்டு அபுஸுஃப்யான் அவர்களின் தலமையில் களம் இறங்க தயாராகி விட்டனர் மதினாவைவந்து தாக்கக் கூடிய அளவிற்க்கு குறைஷிகளுக்கு ஆள்பலம் ஏது?! வரலாற்றை கொஞ்சம் திருப்பிப் பார்ப்போம்.
மதினாவில் அரேபியகள் கொஞ்சமும், கிருஸ்துவர்கள் கொஞ்சமும், யூதர்கள் கொஞ்சமும், இருந்தனர் யூதர்களும். கிருஸ்துவர்கள். பைபிலின் பலய ஏற்பாட்டை நம்பக்கூடியவர்கள்! ஆனால் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனான ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை குறைகூறக் கூடியவர்களாக யூதர்கள் இருந்தனர். இதனால் இவர்கள் ஒற்றுமை இன்றி வாழ்ந்து வந்தனர். இவர்கள் அவ்ஸ் என்றும் கஸ்ராஜ் என்றும் இரண்டு பிரிவுகளாக இருந்தனர் இவர்களுக்கான ஒரு எச்சரிக்கையே கீழே இருக்கக் கூடிய வசனம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெகுவிரைவில் மதினாவில் சந்திக்கவிருக்கும் இஸ்ரவேலர்களுக்கும் திருக்குர்ஆன் 17:76 மக்கத்து மாந்தர்களுக்கும். 17:4 முதல் 8 வரை உள்ள வசனங்கள் மதினாவை சுற்றியுள்ள யூதர்களுக்கும் கிருஸ்துவர்களுக்கும் இறுதி எச்சரிக்கை விடப்படுகின்றன.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதினா வந்த உடன் முஸ்லிம்களுக்கு தலமை பொறுப்பை ஏற்று ஒரு சிரிய அரசையும் நிறுவி செம்மையாக ஆட்சியையும் மார்க்கப் பனியயையும் மேற்கொண்டார்கள். அரசியல் நடவடிக்கையாக மதினாவை எதிரிகள் தாக்க வந்தால், எதிரிகளுடம் போரிட்டு மதினாவை காக்கவேண்டியது. முஸ்லிம்கள், அவ்ஸ்கள், கஸ்ராஜ், ஆகியோரின் பொறுப்பு என்று ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டார்கள். கலங்கள் கடந்தது முஸ்லீம்கள் பலபோர்களை சந்தித்தனர் ஆனல் முஸ்லீம்களை பூண்டோடு ஒழித்து கட்டியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு.
மக்காவிலிருந்து அபூ ஸுஃப்யான் தலைமையில் அரபு குலத்தார் பலருடன் 4000 பேர்களை திரட்டிக்கொண்டு மேந்கிலிருந்த மதீனாவுக்குப் புறப்பட்டனர். இவர்களுடன் ஹுதைல் குலத்தாரும் சேர்ந்து கொண்டனர்.
இங்கே கைபருக்கும் வாதி குராவுக்கும் விரட்டப்பட்ட யூதகுலத்தவர்களான பனூ நளீர் பனூ கைனுகா குலத்தினர் வடக்கிலிருந்து வந்தனர். கிழக்கிலிருந்து கத்பான் தலைமையிலான படையினர் பனூ ஸலீம், புஸாரா, முர்ரா, அஷ்ஜஃ, ஸஅத், மற்றும் அஸத் குலத்துப் படையினர் வந்தனர்.இவர்க ஆறாயிரம் படையினராவர். மொத்தம் 10.000 பேராக அணிதிரண்டு ஒரு சின்னஞ் சிறிய நகரைத் தாக்க வந்தனர்.
ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆலோசனையின் படி அகழ் ஒன்று. பத்து பத்துப் பேர்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுக்களும் 20 முழம் வெட்டவேண்டும் என திட்டமிட்டு அவ்வாறே வெட்டி முடித்தனர். அகழ் 10 முழ அகலம் 8 முழ ஆழம் மூன்றரை மைல் (ஆறரை கிலோ மீட்டர்) நீளத்துக்கு வெட்டப்பட்டது. சுமார் 30.800 சதுர முழம் வெட்டப்பட்டது. ஆறு நாட்களுக்குள் போரிலே ஈடுபட்ட 3000 வீரர்களால் தோண்டி முடிக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஒரு தளபதியாக இல்லாமல் ஒரு சாதாரண தொண்டனாக நின்று அவர்கள் பங்குக்கு அகழ் வெட்டவும் மண் சுமக்கவும் செய்தார்கள். தங்கள் பங்கை முடித்தவர்கள் அடுத்த குழுவிற்குச் சென்று உதவி வந்தனர்.
அகழ்போர் நடக்கும் வேலையில் அவ்ஸ் கூட்டத்தினர் குறைஷிப் படையினர் மதினாவை தாக்க வரவில்லை அவர்கள் முஸ்லிம்களை தாக்க வந்துள்ளார்கள் என்று கூறி அகழ் போரில் பங்கெடுக்காமல் முஸ்லீம்களை தனிமையில் விட்டு விட்டு தங்கள் வீடுகளில் இருந்து கொண்டனர்.
மதினாவில் வசிக்கும் முஸ்லீம்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்ட கஸ்ராஜ் கூட்டத்தினரிடம் குறைஷிய ஒற்றர்கள் ஊடுருவி நீங்கள் எங்கள் உதவி செய்தால் முஸ்லீம்களையும் ஒழித்து! அவ்ஸ் கூட்டத்தாரையும் மதினாவை விட்டு அப்புறப்படுத்தி!? மதினாவில் உங்கள் நிலங்களில் விலையும் பேரிச்சையையும் நல்ல விலைக்கு வாங்கிக் கொள்கிறோம் நீண்ட ஒரு வணிக ஒப்பந்தம் செய்துகொண்டு சுபிச்சமாக வாழ நீங்கள் செய்யும் உதவி புரியும் என்று ஆசைவார்த்தை கூறினார்கள்.
முஸ்லீம்களின் எழுச்சியினால் மனம் வெதும்பி இருந்த கஸ்ராஜ் குழுவுக்கு குறைஷியர்களின் இந்த ஆசைவார்த்தை. அகழ் போரில் முஸ்லீம்களுடன் பங்கெடுக்கமல் அவ்ஸ் கூட்டத்தினர் கூறியது போலவே இவர்களும் கூறி விட்டனர்!? ஆனால் கஸ்ராஜ் போரில் இருந்து விலகிவிட்டாலும். குறைஷியர்களுக்கு ரகசியமாக உதவி புரிய ஆரம்பித்து குறைஷியர்களுடம் இணைந்து முஸ்லீம்களை கருவருக்க காத்து இருந்தனர். ஆனால் அகழ்போரில் முஸ்லீம்களை நிலை என்னவோ வெற்றி அல்லது மரணம் என்பது மட்டுமே குறிக்கோல்? முஸ்லீம்களின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல்! குறைஷிபடையினர் ஓடிவிட்டனர். இந்தப் போரில் முஸ்லீம்களில் ஆறுபேர் ஷஹிதாயினார்கள்! எதிரிப்டையில் பத்துப் பேர்கள் பலியாகினார்கள்.
போர் நடவடிக்கை முடிந்த பின்னர் மதினா அமைதி வாழ்கைக்கு திரும்பிக்கொண்டிருந்தது. போரில் முஸ்லிம்களுடன் அவ்ஸ் கூட்டத்தினர் ஒத்துழையாமை இருந்தது முஸ்லீம்களை தாக்க வருகிறார்கள் என்பதற்கு தானே அன்றி வேறில்லை, மதினாவை தாக்க வந்து இருந்தால் நாங்கள் நிச்சயம் நாங்கள் முஸ்லீம்களுடம் இணைந்து போர்புரிந்து இருப்போம். ஆனால் கஸ்ராஜ் கூட்டத்தினர் அப்படி இல்லை முஸ்லீம்களை ஒழித்து மதினாவை குறைஷியர்கள் கைப்பற்ற ரகசியமாக உதவி புரிந்தவர்கள் அதர்க்கான நேரத்தையும் தாக்க தயர் நிலையிலும் இருந்தவர்கள் அதானால் அவர்கள் மீது போர் நடவடிக்கை குற்றவளிகளாக அறிவிக்கப் பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவ்ஸ் கூட்டத்தினர்கள் குற்றம் சுமத்தினார்கள்.
இதன் அடிப்படையில் பனூ குரைளாக்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டது. அவர் அனைவரையும் கைது செய்யப் பட்டு மக்கள் முன் நிறுத்தி தீர்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் கஸ்ராஜ் விஷயமாக தீர்பளிக்க கஸ்ராஜ் கூட்டத்தினர்களிடம் ஒப்பந்தம் செய்த ஸஅது இப்னு முஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை “அகழ் போரில் காலின் நரம்பில் கடுமையான காயம் ஏற்பட்டு மதினாவிலேயே காயத்தின் காரணமாக தங்கி இருந்தார்கள்” நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அழைக்கப்பட்டார்கள்.
ஸஅது இப்னு முஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்ததும் மக்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு அதே கஸ்ராஜ் கூட்டத்தினர் மீது நீங்கள் போர் குற்றங்களுக்கு தீர்ப்பு வழங்க வேண்டும் இவர்கள் உங்கள் தீர்ப்பை எற்பதாக கூறுகிறார்கள் என்று கோரிக்கை வைத்தனர். அமைதியாக இருந்த ஸஅது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எனது தீர்ப்பு கஸ்ராஜ் (யூதர்கள்) மீது செல்லுபடியாகுமா கேட்டார்கள் மக்கள் ஆம் செல்லுபடியாகும் என்று கூறினார்கள்!. முஸ்லீம்கள் மீதும் நான் சொல்லும் தீர்ப்பு செல்லுமா என்று கேட்டார் மக்கள் ஆம் உங்கள் தீர்ப்பு முஸ்லீம்களையும் கட்டுப்படுத்தும் என்றனர், இங்குள்ள மற்றவர்கள் என்று தமது முகத்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கிக் கேட்டார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நானும் உங்களுடைய தீர்ப்பை ஏற்றுக் கொள்வேன் என்று கூறினார்கள்.
இதன் பின்னர் யூதர்கள் மீது ஸஅது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தீர்ப்பு வழங்கினார்கள் ஆண்களை கொன்று விட வேண்டும் சிறுவர்களையும் பெண்களையும் கைதிகளாக்க வேண்டு இவர்களின் சொத்துக்களை பங்கு வைத்து விட வேண்டும் இதுதான் எனது தீர்ப்பு என்று கூறினார்கள்.
ஸஃது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தீர்ப்பை கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”ஏழுவானங்களுக்கு மேல் இருக்கும் அல்லாஹ்வின் தீர்ப்பை இவர்கள் விஷயத்தில் வழங்கி விட்டீர்கள்” என்றார்கள்.
அகழ்போரில் காயம் அடைந்த ஸஃது இப்னு முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை மேடான பகுதியில் இருக்கு அவர்களின் வீட்டுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலையும் மாலையும் சென்று பார்த்து விட்டுவருவார்கள். இடை சிரமமாக உணர்ந்த சஹாப்பாக்கள்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள்;
அகழ்ப் போரின்போது ஸஃது இப்னு முஆத் ரளியல்லாஹு அன்ஹு கை நரம்பில் தாக்கப்பட்டார். அவரை அருகிலிருந்து நோய் விசாரிப்பதற்கு ஏற்பப் பள்ளிலேயே அவருக்குக் கூடாரம் ஒன்றை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏற்படுத்தினார்கள். அதற்கு அருகில் கூடாரம் அமைந்திருந்த பனூ கிஃபார் குலத்தினருக்கு ஸஃதுடைய கூடாரத்திலிருந்து பாயும் இரத்தம் அச்சத்தை ஏற்படுத்தியது. ‘கூடார வாசிகளே! உங்கள் தரப்பிலிருந்து எங்களை நோக்கிப் பாய்கின்றதென்ன?’ என்று கேட்டக் கொண்டு அங்கே பார்த்தபோது காயத்திலிருந்து இரத்தம் வடிய ஸஃது ரளியல்லாஹு அன்ஹு இருந்தார்கள். அந்தக் காயத்தினாலேயே மரணமும் அடைந்தார்கள். (ஸஹீஹுல் புகாரி ஹதீஸ் 463)
ஒரு நாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பஜ்ர் தொழுகைக்காக தயராகி கொண்டிருந்தார்கள் அப்போது வானவத்தூதர் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து தோழரே நபியே வானத்தில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் துக்கப்பட கூடிய ஓர் ஆட்டு இடையார் இன்று மரணித்து விட்டார் என்று கூறினார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஃது இப்னு முஆத் ரளியல்லாஹு அன்ஹு இறந்து விட்டார்கள் எனக் கருத்தி பார்க்க விரைந்தார்கள் அதை தொடர்ந்து ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தோழரே இவரது மரணத்திற்க்காக அல்லாஹ்வின் அர்ஷே குலுங்கியது என்றார்கள.
ஸஃது இப்னு முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நல்லடக்கம் செய்யும் போது குளிக்குள் ஸஃது இப்னு முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் உடலை வைக்கும் போது!? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுப்ஹானல்லாஹ்! சுப்ஹானல்லாஹ்! சுப்ஹானல்லாஹ்! என்று கூறினார்கள்
சற்று நேரம் சென்றதும் அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! என்று கூறினார்கள்.
அடக்கம் செய்து விட்டு சஹாபாக்கள் அல்லாஹ்வின் தூதரே வழக்கத்திற்க்கு மாறக மூன்று முறை சுப்ஹானல்லாஹ்! என்றும்; மூன்று முறை அல்லாஹு அக்பர்! என்றும் கூறினீர்களே என்று கேட்டதற்கு; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ஸஃதுடைய உடலை கப்ரில் வைத்த உடன் அவரை கப்ர் நெருக்கத் துடங்கியது அப்போது சுப்ஹானல்லாஹ்! என்றேன் பின்பு அவரின் கப்ர் வாழ்க்கைக்காக பூமி விசாலமாகியது; அப்போது அல்லாஹு அக்பர் என்றேன் என்று கூறிவிட்டுக் கூறினார்கள் மனிதனுக்கும் மன்னுக்கும் ஒரு நெருக்கம் உண்டு, கப்ருடைய நெருக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பார் என்றால் அது ஸஃதுதான் என்றார்கள்! (நூல்: அஹமது)
இன்னும் நாம் மார்க்க விஷயம் பற்றி நாம் மேலும் இயங்க வேண்டியது உள்ளது ஸஃது இப்னு முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை பற்றி அறிய முற்பட்டு கிடைத்ததை பகிர்ந்துள்ளேன் இவர்கள் பற்றி அறிய ”ரஹீக்” நூலில் “ஸஅது இப்னு முஆத் (ரழி)” காப்பி பேஸ்ட் செய்து தேடுங்கள்.
source: http://www.kaleel.net.in/2013/07/blog-post_16.html