வருந்தும் நினைவுகள்
இதே ரமலான் மாதம்! அண்ணா எனது அக்கா வெளிநாட்டில். இருந்து இன்னைக்கு காலையில் ப்ளைட் ஏறிட்டாங்கலாம். அவங்க 3 மனிக்கு சென்னை ஏர்போட்டுக்கு, வந்துடுவாங்கலாம். நீங்க கொஞ்சம் போய் அக்காவை ஏர்போட்ல அவங்கள, பத்திரமா!. பாத்துக்குங்க நான் பஸ்ல வந்துக்கிட்டு இருக்கேன், தயவு செஞ்சி ஏர்போட் போங்கண்ணே என்று எஸ். எம். எஸ். மூலம் தம்பியான ஒருவர் கூறினார்? உடனே நான் ஏர்போட் போய் விட்டேன்!.
அங்கு சென்று சகோ சொன்ன அடையாளத்தோடு யார் வந்து. இருக்கிறார்கள் என்று தேடிப்பார்தேன்!. ஒரு பெண்மணியை நாடி விசரித்தேன்?. அமநான்தான், என்றார் வாருங்கள்! முதலில் சாப்பிடுங்கள் என்று ஹோட்டலுக்கு. அழைத்தேன், இல்லண்ணே நான் நோன்பு என்றார். இந்த ஒரு வார்த்தை மட்டும்தான், என்னிடம் பேசினார். அத்துடன் ஒரு ஒரமான இடத்தைப் பார்த்து!. அமர்ந்து கொண்டார்.
நான் அவரின் தம்பிக்கு போன் செய்து எங்க வந்துகிட்டு இருக்கிங்கன்னேன். இன்னும் 3 மனி நேரத்தில் வந்துடுவேன் என்று கூறினார்!. நமக்கும் யாரும் பேச்சி துணைக்கு ஆள் இல்லை இந்தம்மா பாட்டுக்கு ஒரு ஒரமா, போய் உட்கார்ந்து இருக்காங்க. சரி யாருட்டயாவது பேசலாம், என்று என் நன்பன் திருச்சி ஈஸாட்ட, 2 மனிநேரம் போன்ல பேசினேன். அவர் வெறுத்துட்டார்!?.
ஒரு ஐந்து மனி இருக்கும், அப்பெண்ணின் தம்பி வந்துட்டார்! வந்தவர் அவர் அக்காவைப் பார்த்த உடனே, கதறி அழ ஆரம்பித்து, விட்டார், நான் எவ்வளவோ, அவரையும் அவர் சகோதரியையும், சமதானப் படுத்திப் பார்த்தேன், ஒன்னும் ஓய்வதாக தெரியவில்லை, சரி அழுது முடிக்கட்டும்னு நான் சும்மா, இருந்தேன். சகோ அவர் அக்காவை பார்த்துப் பார்த்துப் அழுகிறார், என்ன விஷயம்னு விசாரிச்சேன்.
அண்ணே மச்சான் இறந்துட்டாங்க அக்காவுக்கு இரண்டு பசங்க ரொம்ப கஸ்டப் பட்டுச்சு, அக்காவோட தோழி துபாய்ல வீட்டு வேலை இருக்கு வந்தேன்ன!, பிள்ளைங்கள நல்லாப் படிக்க வச்சிடலாம்னு சொன்னதும், அவங்களோட ஏற்ப்பாட்டுல வேலைக்கு போனாங்க?. அங்க யாரோ ஒரு அரபியோட நாலவது சம்சாரத்துகிட்ட வேலை போல் இருக்கு, அக்கா எந்த வேலை செஞ்சாலும் குறை சொல்லிகிட்டே, இருந்து இருக்காங்க. இதை அக்கா தோழிகிட்ட சொல்லி இருக்காங்க!?. அவங்க போய் கேட்டதுக்கு, சரி நல்லாப் பார்த்துகிறேன்னு சொல்லிட்டு, துணிதேய்க்கும் போது, சரியா தோய்க்கலன்னு சொல்லி, துணிதேய்க்கும், அயண்பாக்ஸ்ஸால, நிறைய இடத்துல சுட்டுடாங்கன்னு, சொல்லி கதரி மறுபடியும் அழுதார். நான் பிச்சை எடுத்தாவது உன் பிள்ளைங்கள, காப்பாத்துறேன்னு, சொன்னேனே அக்கா கேட்க மாட்டம போனியேன்னு, சகோதரியை பார்த்துப் பார்த்து அழுதார்.
காயங்களின் வீரியத்தை அறிய காட்டுங்கள் பார்க்கிறேன் என்றேன், நான் அண்ணிய ஆண் என்று காட்ட மறுத்துவிட்டார், மூன்று வருடங்களுக்கு பின்னர், இன்று காலை போன் பன்னி சகோதரி நலம் விசாரித்தார், நலமுடன் இருப்பதாக கூறினார்!?.
ஒரு முறை கொழும்பு போனேன்! திரும்பி வரும்போது, கொழும்பு ஏர்போட்டில் பயணிகளை அனுப்பும் பகுதியில், ஒரு குடும்பத்தினர் பேசிக் கொண்டு இருந்தனர், யாரையோ அனுப்ப வந்து இருக்கிறார்கள்!?, என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்?. பயாணிகள் விமாணத்தில் ஏறிக்கொண்டு இருக்கிறார்கள், சிலரின் பெயர்களை கூறி அழைத்தார்கள். அதுவரை யாரையோ அனுப்ப வந்து இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.
கூட்டத்தில், இருந்த ஒரு பெண் தனது தாயரிடம் இருந்த குழந்தையை வாங்கி ஏர்போட் என்று கூட பாரமல், குழந்தைக்கு பாலுட்டினார்!. கொஞ்சம்தான் குழந்தை பால் அருந்தியிருக்கும், குழந்தையை! தனது தாயரிடம், கொடுத்து விட்டு. விமாணத்தில் ஏறப்போனார், சட்டென தாயிடம் இருந்து, பிரிந்த குழந்தை வீல் எனகத்தி அழ அரம்பித்தது, குழந்தையை முத்தம் கொடுத்து விட்டு, கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு திரும்பி திரும்பி பார்த்தவாறு!? விடை பெற்றார்.
இதை பார்த்துக் கொண்டு இருந்த நான், உடைந்து அழுது விட்டேன் யா அல்லாஹ்! இது போன்ற சோதனைகளில் இருந்து எமது சமுதாய சகோதரிகளை, காப்பாயாக! என்று அங்கிருந்து கிளம்பினேன், இன்னும் நிலலாடுகிறது, அந்தக் குழந்தையின் முகம்!.
ஒரு முறை வெளிநாட்டு வாழ்க்கையில் மோகம் கொண்ட!, ஒரு சகோவிடம் கேட்டேன், நீங்கள் வெளிநாடு போகும் போது உங்க மணைவி அழுவாங்களா?, என்று கேட்டேன். மாட்டாங்க என்று சொன்னார், இரண்டு நாள் கழித்து நான் தான் அழுவேன்னு சொன்னார்!?. மேலும் கொட்டி கிடக்கிறது இன்னும் வெளிநாட்டில் இருப்பது என் தப்பா!.
source: http://www.kaleel.net.in/2013/07/blog-post_29.html