பணத்தை இறைவனாக்காதீர்
காசு – பணம் விஷயத்தில் கடந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் மிகப் பெரும் பேணிக்கை இருந்ததாக நபிமொழிகளில் நாம் காண்பதுண்டு.
பணத்திற்கு ஆசைப்படாமல், அடுத்தவர் பணம் ‘நமக்கு வேண்டாம்’ என்ற எண்ணத்தில் வாழ்பவர்களும், தனக்கு தேவை இருக்கும் நிலையில் தனது பணத்தை தன்னை விட அதிகம் தேவையுள்ளவர்களுக்கு வாரி வழங்குபவர்களே வெற்றியாளர்கள் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.
قال الله تعلي :وَالَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالْإِيمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ 59:9
முற்காலத்தில் வாழ்ந்த நன்மக்கள் இருவர் குறித்த நபிமொழியும் இதற்கு ஆதாரமே..
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ عَنْ هَمَّامٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَرَى رَجُلٌ مِنْ رَجُلٍ عَقَارًا لَهُ فَوَجَدَ الرَّجُلُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ فِي عَقَارِهِ جَرَّةً فِيهَا ذَهَبٌ فَقَالَ لَهُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ خُذْ ذَهَبَكَ مِنِّي إِنَّمَا اشْتَرَيْتُ مِنْكَ الْأَرْضَ وَلَمْ أَبْتَعْ مِنْكَ الذَّهَبَ وَقَالَ الَّذِي لَهُ الْأَرْضُ إِنَّمَا بِعْتُكَ الْأَرْضَ وَمَا فِيهَا فَتَحَاكَمَا إِلَى رَجُلٍ فَقَالَ الَّذِي تَحَاكَمَا إِلَيْهِ أَلَكُمَا وَلَدٌ قَالَ أَحَدُهُمَا لِي غُلَامٌ وَقَالَ الْآخَرُ لِي جَارِيَةٌ قَالَ أَنْكِحُوا الْغُلَامَ الْجَارِيَةَ وَأَنْفِقُوا عَلَى أَنْفُسِهِمَا مِنْهُ وَتَصَدَّقَا رواه البخاري ومسلم وابو داود والترمذي والنسائي وابن ماجه
இதுவே நமது முன்னோர்களின் நிலைமை. இப்படித் தான் அவர்கள் வாழ்ந்துள்ளார்கள்.
அதிகரித்து வரும் பணத்தின் மீதான பயபக்தி
ஆனால் நிகழ்கால உலகில், பணத்தையும் – உணவையும் மையமாக மையமாக கொண்ட முதலாளித்துவ, கம்யூனிச கொள்கைகளின் தாக்கத்தினால் மனிதர்களின் உள்ளங்களில் பணத்தின் மீதான பயபக்தி அதிகரித்துள்ளது.
பண விஷயத்தில் மனிதர்களிடம் இருந்து வந்த நேர்மை – அச்சம் அகன்று போய், ‘பணம் தான் எல்லாம்’, ‘பணத்திற்காக எதுவும் செய்யலாம்’ என்ற மனநிலை மனிதர்களிடம் உருவாகியுள்ளது.
இதனை முஸ்லிம்களாகிய நாம் மேற்கத்திய கொள்கைகளின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும்.
இஸ்லாத்தின் பண கொள்கை
இறை மார்க்கமான இஸ்லாம் வாழ்க்கைத் தேவைக்காக பணம் சம்பாதிப்பதை ஆதரிக்கவே செய்கிறது.
உழைத்து பணம் சம்பாதிப்பதை கடமை என்று அறிவித்த மார்க்கமும் இஸ்லாம் தான்.
عن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة رواه البيهقي في السنن الكبري
எல்லாவற்றிலும் பணத்தை எதிர்பார்க்கலாமா?
செய்யும் தொழிலில் சம்பள பணத்தை எதிர்பார்ப்பது இஸ்லாத்தில் குற்றமில்லை..
கூலியை உடனே கொடுக்க கட்டளையிடும் இஸ்லாம் வேலை செய்த ஒருவன் அதனை எதிர்பார்ப்பதை நிச்சயம் குற்றமாக கருதாது தான்.
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا وَهْبُ بْنُ سَعِيدِ بْنِ عَطِيَّةَ السَّلَمِيُّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطُوا الْأَجِيرَ أَجْرَهُ قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ رواه ابن ماجه
செய்யும் வேலைக்கு பணத்தை எதிர்பார்ப்பதை குற்றமாக கருதாத இஸ்லாம் எல்லாவற்றிலும் பணத்தை எதிர்பார்ப்பதை ஆதரிக்காது.
ஏனெனில், சில காரியங்களை ஆதாயங்களுக்காக செய்வதைப் போன்று, சில காரியங்களை இலவசமாகவும், சில பணிகளை சேவையாகவும், சில பணிகளை உதவியாகவும் எதையும் எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும். இஸ்லாம் அதனை கட்டளையிடவே செய்கிறது.
ஏனெனில்,பணத்தை எதிர்பார்க்காமல் சில பணிகளை, சேவைகளை, உதவிகளை செய்வது ஒருவன் தனது ஆத்மாவுக்கு அவன் செய்யும் தர்மமாக இஸ்லாத்தில் கருதப்படுகிறது.
حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ ح و حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ وَاللَّفْظُ لَهُ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي مُرَاوِحٍ اللَّيْثِيِّ عَنْ أَبِي ذَرٍّ قَالَ
قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ قَالَ الْإِيمَانُ بِاللَّهِ وَالْجِهَادُ فِي سَبِيلِهِ قَالَ قُلْتُ أَيُّ الرِّقَابِ أَفْضَلُ قَالَ أَنْفَسُهَا عِنْدَ أَهْلِهَا وَأَكْثَرُهَا ثَمَنًا قَالَ قُلْتُ فَإِنْ لَمْ أَفْعَلْ قَالَ تُعِينُ صَانِعًا أَوْ تَصْنَعُ لِأَخْرَقَ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ ضَعُفْتُ عَنْ بَعْضِ الْعَمَلِ قَالَ تَكُفُّ شَرَّكَ عَنْ النَّاسِ فَإِنَّهَا صَدَقَةٌ مِنْكَ عَلَى نَفْسِكَ رواه مسلم
பெருகி வரும் கமிஷன் கலாச்சாரம்
நாகரிக உலகில் முதலாளித்துவம் அறிமுகப்படுத்திய ‘கமிஷன் கலாச்சாரம்’ இன்று மதம், இனம் , நாடு ஆகியவற்றை கடந்து எல்லா மக்களையும் ஆட்டிப் படைத்து வருகிறது.
குறிப்பிட்ட வேலையில் அல்லது பொருளில் சதவீத அடிப்படையில் பணத்தை கமிஷனாக பெறுவதே ‘கமிஷன் கலாச்சாரம்’ ஆகும்.
கமிஷனின் பல உட்பிரிவுகளை இவ்விடம் வரிசைப்படுத்துவோம்.
1. வாங்கும் பொருட்களில் கமிஷன்
முன்பெல்லாம் வீடுகளில் தச்சு வேலைகள் நடக்கும் சமயத்தில், அவ்வேலையில் ஈடுபவர்கள் குறிப்பிட்ட கடையில் நம்மை பொருள் வாங்குமாறு பரிந்துரைந்து விட்டு, நாம் வாங்கிய பிறகு அந்த கடையில் சென்று கமிஷன் வாங்கும் ‘பண்டைய கமிஷன் பழக்கம்’ இன்று எல்லா பொருட்களிலும் வந்து விட்டது.
வீட்டு கட்டுமானப் பொருட்கள் முதல் எலக்ட்ரிகல் – எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வரை இன்று கமிஷன் தலைவிரித்தாடுகிறது.
எதை வாங்குவதற்கும் யாருடைய உதவியையும் நாட முடிவதில்லை. சின்ன உதவிக்கும் கமிஷன் தந்து விட வேண்டும் என்ற நிலைமையே பரவலாக காணப்படுகின்றது.
மனிதநேயம் செத்து விட்டதோ என்னவோ?
இதனால் பாதிக்கப்படுவது நுகர்வோர்களாகிய சாதாரண மக்கள் தான்.
கமிஷன் தொகை வழங்குவதில் வியாபாரிகளிடம் போட்டி ஏற்பட்டு ஏறும் பொழுதும், கூடுதலாக கமிஷன் தரும் கடையை நோக்கி நுகர்வோர் நகர்த்தப்படும் பொழுதும் தேவையற்ற விலையேற்றமும், தரமற்ற பொருட்களை கட்டாயமாக வாங்கும் நிலையும் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது.
வேலைக்காரன் ஒருவன் அவன் வேலை செய்யும் வீட்டுக்காரருக்கு தெரியாமலே அவர் வாங்கும் பொருட்களில் கமிஷன் பெறுகிறான்.
நிச்சயமாக இது பொதுமக்களை ஏமாற்றி சம்பாதிக்கும் மோசடியாகும்.
قال الله تعلي : يَعِدُهُمْ وَيُمَنِّيهِمْ وَمَا يَعِدُهُمُ الشَّيْطَانُ إِلَّا غُرُورًا 4:120
பணிகளில், வேலை வாய்ப்புகளில் கமிஷன்
குறிப்பிட்ட பெரிய கம்பெனி தனக்கு வேலையாட்கள் தேவைப்படும் பொழுது ஏஜென்ட்கள் மூலம் ஆட்களை தேடும் போது ஏஜென்ட்கள் மூலம் கிடைக்கும் ஊழியர்களின் சம்பளத்தை நேரடியாக அவர்களிடம் வழங்காமல் அந்த கம்பெனிகள் ஏஜென்ட்களிடம் தருவதும், அல்லது ஊழியர்களின் மாதச் சம்பளத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையை ஏஜென்ட்களுக்கு வழங்குவதும் தற்காலத்தில் சில இடங்களில் நடந்து வருகிறது. நிச்சயமாக இது வட்டியை விட மிக மோசமான பாவமாகும்.
குறிப்பிட்ட தொகையை தந்துவிட்டு எந்த உழைப்பும் இன்றி மாதம் – மாதம் ஒரு குறிப்பிட்ட ஒரு தொகையை வட்டியாக பெறுவதே தடுக்கப்பட்டிருக்கும் பொழுது நிச்சயமாக இது ஹலாலாக எவ்வாறு ஆகும்?
அடுத்தவனின் சம்பாதித்தியத்தை அவனுக்கே தெரியாமல் உண்டு வாழும் இவ்வாழ்க்கை வட்டியை விட மிக மோசமானதே..
புரோக்கர் கமிஷன்
‘ரியல் எஸ்டேட்’ என்ற நாகரிக வாசகத்தில் சொல்லப்படும் இந்த புரோக்கர் தொழில் இன்று சமுதாயத்தில் விரைவாக செல்வந்தராகும் தொழிலாக பார்க்கப்படுகின்றது.
பண்டைய காலங்களில் மனித நேயமாக செய்யப்பட்டு வந்த உதவிகளுக்கு தான் இப்போது ‘புரோக்கர்’ என்ற பெயரில் கமிஷன் பெறப்படுகின்றது.
வட்டிக்கு கூட முதலீடு இருக்கும் நிலையில், உலகில் முதலீடு ஏதும் இல்லாத ஒரே தொழில் இந்த புரோக்கர் தொழில் தான். வாயில் இருந்து வெளிவரும் வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் இதில் முதலீடாக இல்லை.
முன்பெல்லாம் சாதாரணமானவர்களால் செய்யப்பட்டு வந்த இத்தொழில் இன்று கட்சிக்காரர்களாலும், அமைப்பினர்களாலும் செய்யப்படும் ‘மாபியா’ தொழிலாக மாறியிருக்கிறது.
இத்தனை பேர் இந்த வீடு அல்லது நில விற்பனையில் பங்கு கொண்டுள்ளோம் என்று ‘மிரட்டி பணம் வாங்கும்’ அவலங்களும் ஆங்காங்கே நடக்கின்றன.
இதில் வேதனைக்குரிய விஷயம் தற்காலத்தில் பள்ளிவாசல் நிர்வாகிகள், சில இடங்களில் இமாம்கள், மோதினார்கள் கூட இதில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வீடு, நிலங்களில் கடுமையான விலையேற்றம் ஏற்பட்டதற்கு இந்த புரோக்கர்களும், இவர்கள் உருவாக்கும் போலி டிமான்டுகளும் தான் காரணம்.
பஞ்சாயத்து கமிஷன்
முற்கால இஸ்லாமியர்களிடம் காணப்படாத கமிஷன் தான் ‘பஞ்சாயத்து கமிஷன்’ ஆகும்.
கணவன் – மனைவி அல்லது இரு தரப்பினர் மத்தியில் சுணக்கம் ஏற்பட்டால் இருவருக்குமிடையே பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும், நல்லவர்கள் இதில் ஈடுபட வேண்டும் என்றும் திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.
கணவன் –மனைவி பிரச்சினையில் சமசரசம் செய்து வைத்தல்
قال الله تعلي : ان يصلحا بينهما صلحا والصلح خير 4:128
قال الله تعلي : وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا 4:35
இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட தகராறில் சமரசத்தில் ஈடுபடுதல்
قال الله تعلي : وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِنْ بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِنْ فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ49:9
பொதுவான பிரச்சினைகளில் சமரசம் செய்தல்
قال الله تعلي : إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ 49:10
காசுக்காக நடந்திடும் கட்டப் பஞ்சாயத்து
சமரசம் செய்து வைக்கும் நோக்கில் பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் காசு வாங்கக்கூடாது. ஏனெனில், அதை தொழிலாக கொள்ள ஆரம்பித்தால் ஒரு பக்கச் சாய்வும், ஒரு தலைபட்ச அநியாயம் நடக்கவும் அது காரணமாகும்.
பணத்தை மதிக்காத நபித்தோழர் சயீத் இப்னு ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு.
خبرنا أبو محمد القاسم بن علي بن الحسن الدمشقي إجازة قال: أخبرنا أبي، أخبرنا أبو القاسم علي بن إبراهيم، أخبرنا عبد العزيز الكناني، أخبرنا أبو محمد بن أبي نصر، أخبرنا أبو علي الحسن بن حبيب، أخبرنا أبو يعقوب إسحاق بن إبراهيم البغدادي أخبرنا محمد بن يحيى، أخبرنا عبد الله بن نوح، أخبرنا مالك بن دينار، عن شهر بن حوشب، قال: لما قدم عمر حمص أمرهم أن يكتبوا له فقراءهم، فرفع الكتاب، فإذا فيه سعيد بن عامر، قال: من سعيد بن عامر؟ قالوا: يا أمير المؤمنين، أميرنا. قال: وأميركم فقير؟ قالوا: نعم. فعجب فقال: كيف يكون أميركم فقيراً! أين عطاؤه؟ أين رزقه؟ قالوا: يا أمير المؤمنين، لا يمسك شيئاً، قال: فبكى عمر، ثم عمد إلى ألف دينار فصرها وبعث بها إليه، وقال: أقرئوه مني السلام، وقولوا له: بعث بها إليك أمير المؤمنين، فاستعن بها على حاجتك، قال: فجاء بها الرسول، فنظر إليها فإذا هي دنانير، فجعل يسترجع، فقالت له امرأته: ما شأنك؟ أصيب أمير المؤمنين؟ قال: أعظم، قالت: فظهرت آية؟ قال: أعظم من ذلك، قالت: فأمر من الساعة؟ قال: بل أعظم من ذلك، قالت: فما شأنك؟ قال: الدنيا أتتني، الفتنة أتتني، دخلت علي، قالت: فاصنع فيها ماشئت، قال لها: أعندك عون؟ قالت: نعم، فصر الدنانير فيها صرراً، ثم جعلها في مخلاة، ثم بات يصلي حتى أصبح، ثم اعترض بها جيشاً من جيوش المسلمين، فأمضاها كلها، فقالت له امرأته: لو كنت حبست منها شيئاً نستعين به! فقال لها: سمعت رسول الله ص2 يقول: ” لو اطلعت امرأة من نساء الجنة إلى الأرض لملأت الأرض من ريح المسك. فإني والله ما أختار عليهن ” .( اسد الغابة)
ஆபத்தான ஷிர்க்
பணம் கிடைக்கிறது என்பதற்காக பொய், ஏமாற்று, புரட்டு, மோசடி , பித்தலாட்டம் என எல்லாவற்றுக்கும் இறைவனை அஞ்சாமல் மனிதன் துணிகிறான் என்றால் இவன் பணத்தின் மீதான பயபக்தியினால் அதை மனதளவில் இறைவனாக ஏற்று விட்டான் என்பதே பொருளாகும்.
நிச்சயமாக இவன் அல்லாஹ்வின் அடிமையாக இருக்கவில்லை. மாறாக தன்னை பணத்தின் அடிமையாக ஆக்கியவன். இவனைத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
لعن عبد الدينار ولعن عبد الدرهم رواه الترمذي
பள்ளிவாசல்களில், மதரஸாக்களில், தர்மப் பணத்தில் இயங்கும் அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகளில் ஊழல் நடப்பதும் அவற்றில் கமிஷன்கள் தலைவிரித்தாடுவதும் பணத்தை இறைவனாக தேர்ந்தெடுத்ததின் விளைவாகும்.
தற்காலத்தில் முழுவீச்சில் ஒழிக்கப்பட வேண்டிய ஷிர்க் பணத்தை இறைவனுக்கு நிகராக அல்லது இறைவனை விட மேலாக கருதும் ஷிர்க் தான்.
ஆனால் ஆபத்தான இந்த ஷிர்க்கை யாரும் கண்டு கொள்வதும் இல்லை. சிந்திப்பதும் இல்லை. இதைப் பற்றி பேசுவோர் மிகக் குறைவு தான்.
source: http://vellimedainew.blogspot.in/