திருந்துங்கள்! இல்லையேல் அல்லாஹ் திருப்பி விடுவான்!
நோன்பு திறக்கும் நிகழ்ச்சி என்று வணக்க வழிபாட்டை அரசியல்வாதிகளிடம் அடகு வைக்கும் சமுதாய துரோகிகளை புறக்கணிப்போம்.
ஒருசில தினக்களுக்குமுன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிட்யின் சார்பாக சென்னையில் நடைபெற்ற இஃப்தார் விருந்தில்… கருணாநிதி மற்றும் ஸ்டாலின் உடைய புகைப்படத்துடன் கூடிய கட் அவுட் வாசலை அலங்கோலமாக்கியது.
இனியும் முஸ்லிம்லீக்கை புகழ்ந்து மூஸ்லிம்களை இளிச்சவாயர்களாக்க முடியாது முன்னால் முதல்வரே!
காதர் மொய்தீன் (முஹ்யித்தீன் என்பதே சரியான பெயர்) முஸ்லிம்களின் பிரதிநிதியல்ல. முஸ்லிம்லீகர்கள் அல்லாஹ்விடம் தவ்பாச் செய்துகொள்ளட்டும். இல்லையெனில் இச்செயலுக்காக மறுமையில் அவர்கள் இழிவையும் கடும் தண்டனையையும் அடைவர் என்பதில் சந்தேகமில்லை.
ஏனெனில் நோன்புக்கு அல்லாஹ்வே மகத்தான கூலியை பிரத்தியேகமாக வழங்குவான் எனும் மிக உயரிய அந்தஸ்துக்கு உரிய நோன்பையே கொச்சைப்படுத்தும் இவர்களைப்போன்றவர்கள் மீது அல்லாஹ்வின் கோபப்பார்வை எப்படி இருக்கும் எனும் அச்சம் சிரிதளவும் இல்லாமல் இந்த உலக ஆதாயம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு முஸ்லிம்களை ஏமாற்றும் இவர்களின் இந்த ஈனச்செயலுக்கு இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக தீர்வு கிடைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று நம்பிக்கை வைப்போம்.
அல்லாஹ்வின் திருவேதம் அல்குர்ஆன் குறிப்பிடுகிறது… ”இன்னமல் முஷ்ரிகூன நஜஸுன்” – ”நிச்சயமாக இணைவைப்போர் அசுத்தவான்களே…” (சூரத்துத் தவ்பா) இவர்களைப்போன்ற நஜீஸுகைக்கொண்டா புனித நோன்பை கண்ணியப்படுத்த முனைவது? நவூதுபில்லாஹ்!
காதர் மொய்தீனாகட்டும் அல்லது முஷ்ரிக்குகளையும், காஃபிர்களையும் கொண்டு இஃப்தார் விருந்து நடத்தும் எந்த இயக்கத்தை சார்ந்தவர்களாக இருப்பினும் சரியே… அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்… இல்லையெனில் நீங்கள் எவரை விரும்புகின்றீர்களோ அவர்களுடனேயே மறுமையில் உங்களை அல்லாஹ் சேர்த்துவிடுவான் என்பதை எண்ணி பயந்தாவது பாவமன்னிப்பு தேடி மீளுங்கள்.
தூய்மையான இஸ்லாத்தை அசுத்தமாக்கும் ஈனச்செயலை இனி ஒருபோதும் செய்யாதீர்கள் அல்லாஹ் உதவி புரிவானாக.
ஒரு வாசகரின் உள்ளக்குமறல்
கேடுகெட்ட அரசியல் சாக்கடைகளுக்கு இஃப்தார் விருந்து கொடுக்கும் கண்னியவான்களே!
ஒருவேளை சாப்பாடு கூட இல்லாத நிலையல் கூட கடமையான நோன்பை அல்லாஹ்விற்க்காக நோற்கும் நம் இஸ்லாமிய சொந்தங்கள் உங்கள் பகுதியில் உள்ளவர்கள் உங்களின் கண்களில் படவில்லையா????????