Shaikh Al-Arifi யும், ஷேய்க் அல் அவாஜியும் விடுதலை!
சவுதி ஆட்சியாளர்களின் முடிவில் திடீர் திருப்பம்!!
[ சவுதி அரேபிய ஆட்சியாளர்களை வெகுண்டெழுச்செய்த Shaikh Al-Arifi-ன் உரை உள்ளே!]
சவுதி அரேபியாவின் பிரிபல மார்க்க அறிஞர்களுள் ஒருவரான Shaykh Salman Al Audah அவர்கள் நேற்றைய தினம், சவுதி அரேபிய அரசு Shaykh Al ‘Arifi மற்றும் Shaykh Al’ Awaji யை விடுதலை செய்துள்ளது என அறிவித்துள்ளார்கள்.
மஸ்ஜிதுல் Jami ‘An Nashr. இது ரியாதில் உள்ளது. இங்கு Shaikh Al-Arifi ஆற்றிய உரை சவுதி ஆட்சியாளர்களிற்கு பிரச்சனைக்குரிய விடயமாக தென்பட்டது. இதற்கு முன்னரும் சவுதி அரேபிய அரசு இவரது பிரசங்கங்கள் குறித்து பல முறை உத்தியோகபூர்வ ரீதியில் எச்சரிக்கையை இவருக்கு விடுத்திருந்தது.
இதற்கு நான்கு தினங்களிற்கு முன்னர் Al mujtama ‘As Sa’udi தனது டிவிட்டரில் ஷேய்ஹ் உரைபின் கைது பற்றி தெரிவித்திருந்தது. இவரது கைதிற்கு முன்னர் Shaykh Muhsin Al ‘Awaji அவர்களை சவுதி அரசு கைது செய்திருந்தது. ஆட்சியாளர்கள் பற்றிய இவரது கடுமையான விமர்சனமே இவரது கைதிற்கும் காரணமாக இருந்தது.
சவுதி அரேபியாவின் உயர் நிலை மார்க்க அறிஞர்களின் அழுத்தமே மேற்படி விடுதலைக்கு காரணம் என உள்ளுர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸலபி மார்க்க சிந்தனை பிரிவினராக இனங்காணப்பட்ட இவர்கள் எகிப்தில் மீண்டும் இஹ்வான்களின் ஆட்சி உருவாக வேண்டும் என பிரச்சாரம் செய்தமையானது, ஸலபிகளினுள் இஹ்வான்களின் அரசியல் ரீதியான சிந்தனை தாக்கம் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.
சவுதி அரேபிய ஆட்சியாளர்களை வெகுண்டெழுச்செய்த Shaikh Al-Arifi-ன் உரை இதோ….!!
“சிரியாவில் நடப்பது நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரனிற்கு நிகழ்ந்த கர்பலா போன்றது. அங்கே குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள். பெண்கள் கடத்தப்பட்டு கற்பழிக்கப்படுகிறார்கள். ஆனால் நம் முஸ்லிம் ஆட்சியாளர்கள் இதை பார்த்து கொண்டிருக்கிறார்கள். – Shaikh Al-Arifi”
ஸஃபானின் ஆரம்பத்தில் எகிப்தின் தலை நகர் கெய்ரோவில் உலக இஸ்லாமிய அறிஞர்களின் மாநாடு நடந்தது. இதில் 500 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் பங்கேற்றிருந்தனர். 50 நாடுகளில் இருந்து வருகை தந்திருந்தனர் இவர்கள். அந்த மாநாட்டின் பேசு பொருளாக “சிரிய உள்நாட் யுத்தம்” அமைந்திருந்தது. 65 இஸ்லாமிய அமைப்புக்கள் அந்த மாநாட்டை பிரதிநிதித்துவபடுத்தின.
யூசுப் அல் கர்ளாவியின் IUMS (World Scholars Association), ஷேய்ஹ் முஹம்மத் அல் ஆரிபின் Ittihad ‘Nature Lidhuat (Die Bonding International), ஷேய்ஹ் அல் அமீன் அல் ஹஜ் அவர்களின் Rabithah Muslim Scholars (Deeds of Muslim Scholars) போன்றன இதில் பிரபலமானவை.
இந்தோனேஷியாவில் இருந்து இந்த மாநாட்டிற்கு சென்றிருந்த Zainuddin அது பற்றி விவரிக்கையில், “மாநாட்டில் Shaikh Al-Arifi மிகவும் உணற்ச்சிகரமாக உரையாற்றினார். அரபு தலைவர்களை மிகவும் காரசாரமாக விமர்சித்தார்.
“உங்களால் எம் சிரிய சகோதார்களிற்கு உதவ முடியவில்லையா?, பரவாயில்லை. எம் அராபிய மக்களையாவது அந்த சகோதரர்களிற்கு உதவ அனுமதியுங்கள். நாளை புதைகுழியில் சிரிய மக்களிற்கு உதவ தடை செய்தமைக்காக நீங்கள் துன்புறுத்தப்படுவீர்கள்” என ஆவேசமாக பேசியுள்ளார் அல் ஆரிப். மேலும் அவர் ” சிரிய மக்களிற்கு உதவுதல் என்பது அமெரிக்கா சொல்லித்தரும் வழிகளில் அல்ல. அது உதவியும் அல்ல. இஸ்லாம் சொல்லித்தரும் வழிகளில் அந்த உதவி அமைய வேண்டும்” என விமர்சனம் செய்துள்ளார்.
“முஸ்லிம் ஆட்சியாளர்கள் தங்கள் தேசத்து மக்களை சிரிய முஸ்லிம்களை பாதுகாக்கும் விதமாக ஜிஹாத் பீஸபீல் புரிய அனுமதிக்க வேண்டும். இதில் தாமதம் கூடாது” என வலியுறுத்தியும் உள்ளார்.
“ஆயுதங்களை கையில் எடுத்த நிலையில் முஸ்லிம்கள் சிரிய முஸ்லிம்கள் ஜிஹாத் களத்தை நோக்கி விரைய ஆட்சியாளர்கள் அனுமதிக்க வேண்டும். சிரியாவில் நடக்கும் அநியாயங்களிற்கான பதிலை அந்த முஸ்லிம்கள் அளிப்பார்கள். இஸ்லாமிய சிரிய தேசம் இதில் மலரும்” எனவும் முழங்கியுள்ளார் ஷேய்ஹ்.
இந்த வார்த்தைகளே சவுதி அரேபிய ஆட்சியாளர்களை வெகுளச்செய்தது. அவரை சிறையில் அடைத்தது.
source: http://khaibarthalam.blogspot.in/2013/07/shaikh-al-arifi_22.html