மாற்றம் தேடும் வழி முறைகள்
‘ஷஹாதத் கலிமா’வைச் சுமந்த முன்னோர்,
அளப்பரிய வெற்றிகளோடு உலகை ஆண்டார்கள்.
சகலதையும் சம்மதமாய்ப் பார்க்கும் நாமோ,
சொல்லொனா தோல்விகளால் தொடர்ந்தும் மடிகிறோம்.
குர்ஆன் ஹதீஸாக வாழ்ந்த முன்னோர்,
குவலயம் போற்றும் கோமான்களாய் வாழ்ந்தார்கள்,
குர்ஆன் ஹதீஸின் பெயரால் நாம்,
குரோதங்கள் வளர்க்கும் கொடுமையைப் புரிகின்றோம்!
முஸ்லிமை முகமனோடும், எதிரியை வாலோடும்,
சந்திப்பதே நம் வாழ்வும் வரலாறும்;,
இஸ்லாத்தின் எதிரியை அன்போடு அணைக்கின்றோம்,
ஈமானிய உறவுகளை வெறுப்போடு மறுக்கின்றோம்.
பூரண இஸ்லாத்தில் நுழைந்த முன்னோர்,
பாரெங்கும் பங்காற்றி சாதனைகள் புரிந்தார்கள்.
பாதி இஸ்லாத்தையும் புரியாத நாம்,
பாதையைக் காட்டும் குருடனாய் அலைகின்றோம்.
ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக் கென்றோர்,
அழைப்பாலும் அறப் போராலும் கண்டங்களை வென்றார்கள்,
ஆட்சி யதிகாரத்தை மனிதனுக்குத் தந்து,
எம் தேசங்களிலேயே சிறைப்படுத்தப் படுகின்றோம்.
ஒரு ‘உம்மத்;’ ஒரு ‘கிலாபத்’ கோட்பாட்டை
ஒரு கணமும் மறந்ததில்;லை முன்னோர்கள்.
‘பிளவே எம் பாதை’, ‘பிரிவினையே எம் வேதம்’ என்று
சிதறிய கண்ணாடித் துண்டுகளாக்கியது நம்மவர்கள்.
இறை சட்டங்களால் ஆளப்பட்டதைத் தான்,
‘இகாமதுத் தீன்’ என்றார்கள்,
விஷத்தில் சிறிது பாலிருந்தாலும்,
வாழும் மனிதனுக்கு தீர்வென்கிறோம் நாம்.
கொள்கைத் தெளிவோடும் தெளிவான வழியோடும்
அழைப்புப் பணிக்கு அழகு சேர்த்தார்கள்.
மயக்கமான கொள்கையோடும் மாறும் வழிமுறைகளோடும்,
முழு மனித வீழ்ச்சியின் கர்த்தாக்கள் ஆனோமே!
சுவனத்தை நாடியும் கோட்பாட்டை மதித்தும்
கட்டுப்பட்ட முன்மாதிரிப் படையே முன்னோர்கள்.
ஆட்களை மகிழ்வூட்டி உலகை அடைவதற்காய்,
கூலிக்கு மாரடிக்கும் ஊதியப் படையே நம்மவர்கள்.
மக்களே!
அனைத்து முஸ்லிம்களையும் அணைத்துக் கொள்வோமே.
நம் முன்னோரின் வழியில் முன்னேறிச் செல்வோமே!
செய்த தவறுகளை மீண்டும் செய்யாதிருப்போமே!
இறை கலிமாவை உலகெங்கும் ஓங்கச் செய்வோமே!
மக்களே!
சம்பூரண இஸ்லாத்தை ஏற்கத் தயங்காதீர்!
‘ஷரீஅத்’தில்லா ஆட்சிக்கு வாக்கைத் தராதீர்!
‘கிலாபத்’ தானாய் வருமென்று தட்டிக் கழிக்காதீர்!
‘மஹ்தி’ மீட்கட்டுமே யென்று முடங்கிக் கிடக்காதீர்!
மக்களே!
நபி தந்த வழி முறையை பற்றிக் கொள்ளுங்கள்!
‘இறையாட்சி தான் தீர்வென்று உரத்துக் சொல்லுங்கள்!
படையின் உதவியோடு தீனை நிலை நாட்டுங்கள்!
நபி வழி கிலாபத்தை மீண்டுமாய்க் கட்டி எழுப்புங்கள்!
Thanks to Thalamaithuvam